அழகிரி கோட்டை சரிகிறது!

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?
அழகிரியின் மதுரை சாம்ராஜ்ஜியத்தின்ஊழல், அதிகார வேர்களை தெஹெல்கா வார இதழ் கொஞ்சம் எளிதில் புரிகிற மாதிரி ஒரு சார்ட் தயாரித்து 06-08-2011 தேதியிட்ட இதழில் வெளியிட்டிருக்கிறது. கொஞ்சம் குறைச்சலாகத்தான் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது! 
ஏனென்றால் அடிப்பொடிகளே, ஐநூறு கோடி, ஆயிரம் கோடி என்று சம்பாதித்திருப்பதாகச் சொல்லப்படும்போது  தெற்கு மண்டல சுல்தானுக்கு மட்டும் கம்மியாக இருக்க முடியுமா, சாத்தியமா என்பதை வாசகர்கள் தான் ஊகித்துச் சொல்ல வேண்டும்.

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும் 
பொட்டு சுரேஷுக்கு ஐநூறு கோடி, கோ.தளபதிக்கு நானூறு கோடி, அட்டாக் பாண்டிக்கு முன்னூறு கோடி என்று அடிப்பொடிகள் ஒவ்வொருவருக்கும் உத்தேசமாக எவ்வளவு தேறும் அல்லது தேற்றியிருப்பார்கள் என்று சிறு குறிப்பும் இந்தக் கட்டுரையில் வெளியாகியிருக்கிறது.
இன்றைக்கு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் பங்கையும் தணிக்கைத்துறை நூறுபக்க அறிக்கையில் தெள்ளத் தெளிவாக, எட்டு வகையாகப் பிரித்து வெளியிட்டிருக்கிறது. தனக்கு எந்த சம்பந்தமுமில்லை என்றே பேசி வந்த ஷீலா தீட்சித் இன்றைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்திருக்கிறார். இது பெரிதாக வெளிவந்த அளவுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்னால், இதே தணிக்கைத்துறை, உர மானியங்களில் சுமார் 50587  கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாகத் தெரிவித்திருந்ததை, ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. செய்தி இங்கே.

ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்
'னாதான் என்றாலும், அண்ணன் மதுரையை சுற்றியே தன்னுடைய கோட்டையைக் கட்டிக் கொண்டிருந்ததில், அங்கே அவருக்குப் பிராக்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்த இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா என்ன செய்து கொண்டிருந்தார் என்பதே தெரியாத அண்ணன் மேலேயே முழுப் பழியையும் சுமத்திவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.

ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு! சிக்கல்கள் பெரிதாகிக் கொண்டே வருகிற இந்தத் தருணத்தை விட்டால் பிரதமராகிற
வாய்ப்பு வேறெப்போதும் கிடைக்காது என்று பிரணாப் குமார் முகர்ஜி சில உள்வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.  

மன்மோகன் கழன்று கொள்கிறாரா என்ன!!

கேடி பிரதர்ஸ். பிரணாப் தயவில் மிக சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கலாநிதி மாறன் நாடு திரும்பியாயிற்றா, போலீஸ் சம்மன் என்ன ஆயிற்று என்பதே தெரியாத நிலையில், சன்டீவீ மீது புகார் கொடுத்தவர்கள் எல்லாம், புகாரில் சமரசம் ஏற்பட்டுத் தங்களுக்கு சேர வேண்டியது கிடைத்துவிட்டதாகப் புகார்களை வாபஸ் வாங்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கும் சித்து விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  


இதைத்தான், முந்தைய பதிவில், தாத்தா பேரன்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது என்றும் சொல்லியிருந்தேன்.

சிபி ஐ மூன்றாவது துணைக் குற்றப்பத்திரிகையை எப்போது தாக்கல் செய்யப் போகிறது என்பதோ, எவரெவர் பெயர்கள் அதில் இருக்கும், கைதுகள் இருக்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையில் அழகிரி, அட்டாக் பாண்டி என்று லோகல் ரேஞ்சில் மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டியது
தானா? 

கல்மாடிக்குக் கம்பனி....?
டாட்டா, அம்பானி,ஷீலா தீட்சித், சால்வை அழகர்கள் எல்லாம் திஹாருக்குள் கம்பனி கொடுக்கப் போக மாட்டார்களாமா?








 
பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன?



டம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில்  சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம் எங்கள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் இருந்தால், எதிர்க் கட்சிகளுக்கும் அதே மாதிரித்தானே என்று காமெடி செய்திருக்கிறார்.காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலவீனமே இதுதான்! வாலறுந்த நரிபோல, வால் இல்லாமல் இருப்பதுதான் அழகு என்று மற்ற நரிகளுக்கு உபதேசம் செய்ய முயன்றதைப் போல, தாங்கள் ஊழல் சாக்கடைக்குள் புதைந்து கிடந்தாலும், மற்றவர்கள் மீதும் சேற்றை வாரி இறைத்து அவர்கள் மீதும் சாக்கடை இருக்கிறதே என்று தங்களை உத்தமபுத்திரர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது காங்கிரசின் வழக்கம், பலவீனம். 
காங்கிரஸ் கட்சி இந்த தேசத்துக்கு செய்துவரும் மிகப்பெரிய துரோகம், இவர்கள் பலவீனப்படுகிற தருணங்களில்,இந்த தேசத்தையும் சேர்த்தே பலவீனப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதுதான். அரசு இயந்திரம்,  நிர்வாகம்,நாடாளுமன்ற நடைமுறைகள், நீதித்துறை, ஊடகங்கள்  என்று எல்லாவற்றையுமே காங்கிரஸ் தொடர்ந்து பலவீனப் படுத்திக் கொண்டு வருகிறது. குற்றுயிரும், குலையுயிருமாக இருந்துகொண்டே, இந்திய ஜனநாயகம் அவ்வப்போது சில நம்பிக்கைக் கீற்றுக்களையும் தந்து கொண்டிருக்கிறது என்பது ஒன்று தான் இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

இன்று ஆகஸ்ட் முதல் தேதியன்று நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர், 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் புயல்  காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதற்கொண்டு நடந்த எக்கச்சக்க ஊழல் சூறாவளியுடன் தொடங்க இருக்கும் தருணத்தில் மன்மோகன் சிங்குடைய இந்த வசனம், 'போனால் போகட்டும் போடா' என்ற விரக்தியின் வெளிப்பாடாகவே இருக்கிறது.  சோனியா குடும்பத்தின் முகமூடியாக, ஊமையாகவே இத்தனை நாள் இருந்ததில் மன்மோகன் சிங்குடைய மிஸ்டர் கிளீன் இமேஜ் சரியான அடி வாங்கியிருக்கிறது. நேற்றைய நாட்களில், இந்த மனிதரின் மீது இருந்த பரிதாபம் இன்றைக்கு  இந்த மனிதர் டம்மியாகவேனும் பிரதமர் பதவியில் இருக்க ஆசைப்பட்டே இத்தனை மோசடிகளுக்கும் உடந்தையாக இன்னும் இருக்கிறார் என்ற அளவுக்கு வெகுஜன அபிப்பிராயமாக மாறியிருக்கிறது.

ஜனங்களுடைய குரலுக்கு செவிசாய்க்காத 'ஜனநாயகப் பண்பு' காங்கிரசுடையது!காங்கிரஸ் மட்டுமில்லை, வாரிசு, குடும்ப அரசியலில் சிக்கியிருக்கும் அத்தனை கட்சிகளுமே, காங்கிரசுக்கு இணையானவைதான்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் இந்தவாரம் மூன்றாவது துணைக் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டி
ருக்கிறது.இதில் என்னென்ன வரும், அல்லது என்னென்ன கோக்குமாக்குகள் நடக்கும் என்பது இந்தவாரம் முதற்கொண்டு பூனைக்குட்டிகள் வெளியே வருவதுபோல, ஒவ்வொன்றாக வெளியே வந்துதானாக வேண்டும். என்னென்ன அப்படி வெளியே வர ருக்கிறது என்பதை சென்ற மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையே இந்தப்பக்கங்களில் ஒரு கோடி காட்டப்பட்டிருந்தது.

பூனைக்குட்டி ஒன்று வெளியே வந்த கதையாக, கூடா நட்பு என்று தான் விமரிசித்த காங்கிரஸ் கட்சி, அதிமுக உறவுக்காக ஏங்கித் தவித்ததற்கு, இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று கருணாநிதி நேற்றைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால், வெறும் அறிக்கைகளிலேயே காலத்தை ஓட்ட வேண்டிய கட்சியாகத்  திமுகவும் ஆகிவிடும் போலிருக்கிறது!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் புகாருக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதுபோலவே, தமிழ்நாட்டில் நி
அபகரிப்புப் புகார்களில் சிக்கிக் கொண்டு திமுக தவியாய்த்  தவிக்கிறது. பொய் வழக்குப் போடுகிறார்கள் என்று தங்களுடைய குடும்பத் தொல்லைக்காட்சிகளில் கூவிக் கூவி முரசொலித்தாலும், அது அவர்களுடைய கட்சிக்காரர்களே நம்புகிற மாதிரி இல்லை என்பது, உளியின் ஓசை வசனகர்த்தாவின் இன்றைய பரிதாபம்!
மகளை ஜாமீனில் கூட எடுக்க முடியாமல், காங்கிரஸ் கட்சிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று பொருமுவதைத்  தவிர, பாவம் என்ன செய்துவிட முடியும்!!  



இத்தனை அமளிதுமளிகளுக்கும் இடையில் கேடி பிரதர்ஸ், சத்தமே இல்லாமல் காய் நகர்த்திக் கொண்டிருப்பது! கலாநிதி மாறன் புகார் கொடுத்தவரிடமேசமரசமாகிக் கொண்டு போலீஸ் சம்மனில் ஆஜராகாமல் தப்பித்து வருவதும், சன் டிவி கொஞ்சம் நல்ல பிள்ளையாக அடக்கி வாசித்துக் கொண்டிருப்பதும், பேரன்களிடம் இருந்து தாத்தா  கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதாகவே காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆ.ராசாவோ, மாப்பிள்ளை கணக்காகக் கச்சிதமாகக் காங்கிரஸ் ஆட்சியையும் சேர்த்துக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் என்று தைரியமாக தன்னுடைய வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார். அடுத்து இருவருடைய வாதங்களும்,ராசா வகுத்த வழியிலேயே, டம்மிப் பீசை ரொம்பவுமே நெளிய வைத்திருக்கிறது. டிபி ரியாலிடி, வினோத் கோயங்காவும் அதே நிலையை எடுத்து விடாமல் இருக்க சரத் பவாரின் ஆட்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.இந்த வாரம் அந்தக் கூத்தும் அம்பலத்துக்கு வரும்.

சும்மா வேடிக்கை பார்ப்பதோடு நமுடைய பொறுப்பு முடிந்து விடுகிறதா?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!