அன்னை என்னும் அற்புதப் பேரொளி, பூமிக்கு வந்த நாள் பிப்ரவரி 21, 1878.
பிப்ரவரி பிறந்தாலே,
அன்னையின் அன்பர்களுக்கு ஒரு இனம் புரியாத பரவசம், எதிர்பார்ப்பு மிகுந்து
காணப்படும்.அன்னை சரீரத்தில் இருந்த நாட்களில், அவளது பாதங்களில் விழுந்து
வணங்கி, அவள் தரும் தரிசன நாள் செய்தியுடன், மலர்களைப் பிரசாதமாக
பெறுவதற்காக ஒருவிதத் தவம் ஆரம்பித்து விடும்! அன்னை இன்றைக்கு ஸ்தூல
சரீரத்தில் இல்லை என்ற போதிலும், அவளுடைய சாந்நித்தியத்தை உணருகிற பேறு
அவளது குழந்தைகளுக்கு இன்றைக்கும் கிடைக்கிறது.
நாளைக் காலையில், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் வரிசையில் காத்திருந்து பெறுகிற தரிசன நாள் செய்தியின் முகப்புப் பக்கம் இது!
தரிசன நாள் செய்தியின் உள்பக்கம் இது!
அன்னை-ஸ்ரீ அரவிந்தர் சமாதி மீது வைக்கப்பட்ட மலர்களுடன் அன்பர்களுக்குப் ப்ரசாதமாகக் கிடைக்கும். அன்னையின் ஆசியைக் கோரிக் கடிதம் எழுதுகிறவர்களுக்கும் சில வாரங்களுக்குக் கிடைக்கும்!நேரில் செல்கிற அன்பர்கள், ஸ்ரீ அன்னையின் அறைக்கும் சென்று வர நாளை அனுமதிக்கப்படுவார்கள்.காத்திருந்து, ஸ்ரீ அன்னையின் தரிசனத்தை அனுபவிக்கக் கொடுப்பினை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் அனுபவமே அலாதி!

மா மிரா சரணம் மம! ஸ்ரீ அரவிந்த சரணம் மம!
ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!