"கேட்டதும் கொடுப்பவனே! கிருஷ்ணா! கிருஷ்ணா! கீதையின் நாயகனே!"


TMS இன் கணீரென்ற குரலில் இந்தப் பழைய பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கேட்டேன். யோசித்துப் பார்க்கையில் கொஞ்சம் சிரிப்புத் தான் வந்தது.

கேட்டவுடன் கொடுத்து விட வேண்டும் இல்லையென்றால் கடவுள், கடவுளாக இருக்க முடியாது. கொஞ்சம் விவகாரமான கவிஞரிடம் மாட்டிக் கொண்டால், அவர் இப்படி சாபம் கொடுத்து விடக் கூடும்:

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்

காதலித்து வேதனையில் வாட வேண்டும்"

ஒரு துறுதுறுப்பான சிறுவன். அரவிந்த் என்று பெயர். ஒரு நாள் அவனிடம் கொஞ்சம் கடுமையாக அதட்ட வேண்டியிருந்தது. பொடியனுக்கு வேகம் அதிகம். "பார், பார், எங்க அப்பா கிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பார்" என்று சவால் வேறு. உண்மையில் "அவங்க அப்பா புகாரை கேட்டு அப்புறம் என்ன செய்வார்" என்றெல்லாம் யோசிப்பதில்லை.கைக்குழந்தையாக இருக்கும் போது, தாயாரின் புடவை பக்கத்தில் இருந்தாலே, தாயார் பக்கத்தில் இருப்பதாக சமாதானம் கொள்ளும். பொடிசாக இருந்தால், "எங்க அம்மா கிட்டே அல்லது எங்க அப்பா கிட்டே சொல்லி...."இப்படி டயலாக் விட்டே ஆறுதல் கொள்ளும்.

ஆனால், வளர்ந்த பிறகும் கூட நம்மில் பலர் இப்படிப் பொடியனின் மனப் பக்குவத்தில் தான் இருக்கிறோம். கடவுளிடத்தில் நாம் வைக்கும் வேண்டுகோள் பலவும், ஒரு பிரார்த்தனையாக இல்லாமல், பேரம் பேசும் சடங்காகவே மாறிப்போவதை நாம் உணர்வதே இல்லை.

வீட்டுப் பிள்ளைக்குத் தேர்வு நெருங்குகிற நேரம். பிள்ளைக்குப் படபடக்கிறதோ இல்லையோ, பெற்றவர்களுக்கு வந்து விடும். கோயிலென்றால், குறிப்பிட்ட சாமிகளுக்கு மவுசு வந்து விடும். தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் போய், கொண்டைக் கடலை மாலை, அர்ச்சனை இப்படி உபசாரங்களோடு வேண்டுகோள் வைக்கப் படும். இயேசு அழைக்கிறார், இயேசு என்னோடு வாக்கிங் வருகிறார், இயேசு என்னோடு பேசுகிறார் என்கிற மாதிரியான கூட்டங்களில் பிள்ளைகள் பரீட்சையில் கவனமாக இருக்க விசேஷ ஜெபங்கள் செய்யப் படும். இதில் எந்த விதமான முதலீடும் இன்றி ஆதாயம் பெறுவது தேங்காய் பழம் விற்பவரும், அர்ச்சகரும், ஜெபக்கூட்டங்களை "ஊழியமாகவே" நடத்துபவர்களும் தான் என்பது கூட உரைக்காத அளவுக்குத் தான் நம் விழிப்பு இருக்கிறது.

அப்படியானால், ஒரு பலனை உத்தேசித்துச் செய்யப் படும் வேண்டுகோள்கள், பிரார்த்தனைகள் வேண்டுமா,வேண்டாமா? அவை பலன் தருமா, தராதா?

ஆரம்ப நிலையில், ஒரு காரியத்தை அல்லது பலனை எதிர்பார்த்துச் செய்யப் படும் வேண்டுகோள்கள் சரிதான். ஆனால், ஒரு கட்டத்தில், தன்னுடைய விருப்பத்திற்காக என்பது போய் தெய்வ சித்தத்தின் படியே என்று உயர வேண்டும்.

ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் எதை எதையோ வேண்டி வரும் அன்பர்களுடைய அபிலாஷைகள் வெகு சீக்கிரமாகவே நடந்தேறிவிடும் என்பது அனுபவம்.

ஒரு அடியவர் ஸ்ரீ அன்னையிடம் இப்படி குறைப் பட்டுக் கொண்டாராம்:

"அன்னையே! நீங்கள் வருகிறவர்களுக்கெல்லாம் அவர்கள் கேட்டதை உடனேயே கொடுத்து விடுகிறீர்கள்."

ஸ்ரீ அரவிந்த அன்னை அந்த அன்பருக்குச் சொன்னாராம்:

"அப்படியாவது நான் அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிற தெய்வீக அருளை நாடி வர மாட்டார்களா என்று தான்அவர்களுடைய அபிலாஷைகளை உடனே நிறைவேற்றுகிறேன் ."

Golden Drops of Light

Question: Does the intervention of the Grace come through a call?

The Mother: When one calls?

I think so. Anyway, not exclusively and solely. But certainly, yes, if one has faith in the Grace and an aspiration and if one does what a little child would when it runs to its mother and says: "Mamma, give me this", if one calls with that simplicity, if one turns to the Grace and says "Give me this", I believe it listens. Unless one asks for something that is not good for one, then it does not listen. If one asks from it something that does harm or is not favourable, it does not listen.

(CWM - Vol. 5, pp. 367-68)


Courtesy and thanks to www.searchforlight.org


ஸ்ரீ அரவிந்த அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இது குறித்துச் சொல்வதை இன்றைய த்யானத்திற்கு எடுத்துக்கொள்வோமா!


If behind your devotion and surrender you make a cover for your desires, egoistic demands and vital insistences, if you put these things in the place of true aspiration or mix them with it and try to impose it on the Divine Shakti, then it is idle to invoke the divine Grace to transform you.

If you open yourself on one side or in one part to the Truth and on another side are constantly opening the gates to hostile forces, it is in vain to expect that the divine Grace will abide with you.
You must keep the temple clean if you wish to install there a living Presence.”


-Sri Aurobindo, in the first letter on “The Mother”

[Two powers: Aspiration and Grace)

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!