சின்ன விஷயங்களெல்லாம் கூட பெரிய அற்புதங்களாக மாறக் கூடும்


Golden Drops of Light

" All is her play with the Supreme; all is her manifestation of the mysteries of the Eternal, the miracles of the Infinite.
All is she, for all are parcel and portion of the divine Conscious-Force."

Sri Aurobindo
“The Mother”


நமக்கு வெளியே எந்த அளவுக்குப் பிரச்சினைகளும், நெருக்கடியும், துயரமும் இருக்கிறதோ அதே அளவுக்கு நமக்கு உள்ளேயே அதற்கான காரணங்களும் இருக்கும் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை. நம்முடைய தற்போதைய சூழ்நிலைகளை நாமே தான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பது அதன் உட்கருத்து.

நமக்கு இருக்கும் மிகப் பெரிய பலவீனமே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற அற்புதமான வரங்களை அறியாமல் இருப்பது தான். சில சோதனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்த பிறகு தான், நாம் கவனிக்கத் தவறுகிற நிறைய விஷயங்களுக்கு நாம் நன்றி செலுத்த மறந்திருக்கிறோம் என்பதே கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பிக்கிறது. உண்மையில் இறைவன் நமக்கு வேண்டியது அனைத்தையும் கொடுத்திருக்கிறான். நாம் தான், அவற்றின் அருமை தெரியாமல் உதாசீனப் படுத்தி வந்திருக்கிறோம் அல்லது கிடைத்ததன் அருமையை உணராமல், பறப்பதை வேண்டி ஏங்கித் தவித்து, கிடைத்ததையும் நழுவ விட்டிருக்கிறோம்.

இன்று ஒரு ஆங்கில வலைப்பதிவைப் படித்துக் கொண்டிருந்தபோது, நன்றியுணர்வின் மகத்தான சக்தியை பற்றிச் சிந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது.

காலையில், சூரிய உதயத்தின் அழகை ஒரு ஈடுபாட்டோடு ரசித்திருக்கிறோமா? காலை எழுந்தவுடன் காபி வேண்டும் என்கிற நினைப்புத்தான் முதலில் வருகிறதே தவிர, இன்றைய காலைப் பொழுது, நல்லபடியாக விடிந்தது என்று எப்போதாவது இறைவனுக்கு நன்றி சொல்ல முயற்சித்திருக்கிறோமா?

கை, கால், அவயவங்கள் எல்லாம் ஒரு வலி, விபத்து இல்லாமல் இந்த நாட்போது நிறைவு பெற்றதே என்று என்றைக்காவது, ஆண்டவனே உனக்கு நன்றி என்று நினைத்தாவது பார்த்திருக்கிறோமா?

மிகச் சாதாரணமாக நினைத்து அலட்சியப் படுத்தும் சின்ன சின்ன விஷயங்கள் கூட, ஒரு தருணத்தில் எவ்வளவு பெரிய அருட்கொடையாக இருந்திருக்கிறது, எந்த அளவுக்கு நாம் நன்றி மறந்தவர்களாக இருக்கிறோம் என்பதெல்லாம், எப்படி சின்ன விஷயங்களெல்லாம் கூட பெரிய அற்புதங்களாக மாறக் கூடும் என்பதை உணர்த்துகிற தருணமாக இவனது வாழ்வில் நடந்து கொண்டே இருக்கிறது. நோவு தீர்ந்த பின்னும், அசதி கொஞ்சம் இருப்பது போல சில அனுபவங்கள் நடந்து முடிந்த பின்னாலும், அதன் கசப்பு மிச்சமிருக்கத்தான் செய்கிறது.

பழைய பழக்கங்களிலிருந்து முழுமையாக விடுபடும் போது தான் கசப்பும் நீங்கும். முந்தைய பதிவான "கேட்டதும் கொடுப்பவனே" யின் தொடர்ச்சியாக, இது பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போம்:

To sit down in inert passivity and say, "If I am to have faith I shall have it, the Divine will give it to me", is an attitude of laziness, of unconsciousness and almost of bad-will.

For the inner flame to burn, one must feed it; one must watch over the fire, throw into it the fuel of all the errors one wants to get rid of, all that delays the progress, all that darkens the path.

If one doesn't feed the fire, it smoulders under the ashes of one's unconsciousness and inertia, and then, not years but lives, centuries will pass before one reaches the goal.

One must watch over one's faith as one watches over the birth of something infinitely precious, and protect it very carefully from everything that can impair it.

In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer.

The Mother

Col.Works Vol.9 pp352

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!