"முட்டாள்களோடு பயணம் செய்வது எனக்குப் புதிய அனுபவம் ஒன்றுமில்லை!"


சுவாமி விவேகானந்தர் வெளிநாட்டில் சொற்பொழிவுகள் நிகழ்த்திக் கொண்டிருந்த நேரம். ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். உடன் பயணம் செய்த வெள்ளைத்தோல் மாந்தருக்கு, கூடப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருஇந்துத் துறவியைப் பார்த்து இளப்பம்- மிக ஏளனமாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். காவித்துணி அணிந்தவருக்கு எங்கே ஆங்கிலம் புரியப் போகிறது என்ற அலட்சியம் வேறு.

சிறிது நேரம் கழித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் சுவாமியின் தோற்றத்தின் வசீகரத்தினால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் உரையாடி விட்டு சென்றார். உடன் பயணம் செய்து, சுவாமியை ஏளனம் செய்தவர்களுக்கோ திகைப்பு-ஒரு பக்கிரி இவ்வளவு கண்ணியமான ஆங்கிலத்தில் உரையாடுகிறாரே என்று.

"சுவாமி, உங்களுக்குத் தான் ஆங்கிலம் தெரியுமே, அப்புறம் ஏன் நாங்கள் உங்களை ஏளனமாகப் பேசிய போது, அமைதியாக இருந்தீர்கள்?" என்று வினவினார்கள்.

சுவாமி புன்முறுவலோடு விடையளித்தார்:

"முட்டாள்களோடு பயணம் செய்வது எனக்குப் புதிய அனுபவம் ஒன்றுமில்லை!"

இன்று சுவாமி விவேகானந்தர் அவதரித்த நாள்.

இந்திய அரசு வங்காள மக்களைத் திருப்தி செய்ய, சுவாமி விவேகானந்தருடைய பிறந்த நாளை, தேசீய இளைஞர் நாளாக அறிவித்ததோடு சரி. வங்காளத்தில் பிறந்த இந்த ஞான சிம்மம், இந்த தேசத்திற்கு என்ன செய்தியைத் தாங்கி வந்தார் என்பதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

ஏதாவது செய்யப் போய் , மதச் சார்பின்மை அலங்காரம் கலைந்து விடாதா?

ஜாதி வோட்டு வேண்டுமென்றால், ஒரு தபால் தலை வெளியிடுவது, ஜாதித்தலைவர் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிப்பது, செத்தவர் சிலையை முச்சந்திக்கு முச்சந்தி வைத்து அவர் பிறந்த நாள், இறந்த நாள் இப்படி ஏதாவது ஒரு நாளில் ஊர்வலமாகப் போய், மாலை போட்டு, மறக்காமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்து, செய்திகளில் விளம்பரம் தேடிக் கொள்கிற அரசியல் வியாதிகளை விட்டுத் தள்ளுங்கள்!

விவேகானந்தருடைய நேரடி வாரிசாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்கிற சில நபர்கள் செய்வதாவது, சுவாமிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
ஞான சிம்மமாகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர் சொன்னதில் ஒன்றிரண்டு மேற்கோள்களைப் பார்ப்போமா?

“It is our own mental attitude which makes the world what it is for us. Our thought make things beautiful, our thoughts make things ugly. The whole world is in our own minds. Learn to see things in the proper light. First, believe in this world, that”

"“The moment I have realized God sitting in the temple of every human body, the moment I stand in reverence before every human being and see God in him - that moment I am free from bondage, everything that binds vanishes, and I am free.”

அடுத்தவர் என்ன செய்கிறார் என்பது நமக்குத் தேவையில்லாத ஒன்று. நாம், ஞான சிம்மமாக ஆன்மீக ரகசியங்கள் அனைத்தையும், மிக வெளிப்படையாகவும், தெளிவாகவும் உரைத்த சுவாமி விவேகானந்தருக்கு செய்கிற மிகப் பெரிய அஞ்சலி, அவர் உபதேசங்களை, உள்வாங்கிக் கொள்வது தான். மாற்றம் நம்மிடத்தில் இருந்து தான் தொடங்கியாக வேண்டும்.

“YOU know, I may have to be born again, you see, I have fallen in love with mankind.”

இவ்வளவு கருணையுடன் நமக்குச் சொன்னவர் வேறு யார் உளர்?

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!