"இனி என்ன நடக்கும்?"


In Search of The Mother என்ற தலைப்போடு சில அன்பர்கள் கூடி யாகூ குழுமத்தில் ஒரு ஆன்மீகக் கலந்துரையாடல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக, இந்த மடலாடற்குழுவில், மிக அருமையான பதிவுகள், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை குறித்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. Huta Hindocha என்கிற ஒரு அடியவர், தன் இளம் பிராயத்திலேயே ஸ்ரீ அன்னையிடம் ஈர்க்கப் பட்டு, அன்னையின் அருட் குழந்தையாக ஆனவர். அவருடைய ஓவியங்களையும், எழுத்துக்களையும், சித்திர வடிவில் Salutations series என்ற தலைப்பில் இந்த மடலாடற்குழுவில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது வரை 10 பதிவுகள் இந்த வகையில் வெளியாகி இருக்கிறது.

எந்த ஒரு விஷயத்தையும், அதன் தன்மை, தரத்திற்கேற்ப உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்றாகப் பிரித்துச் சொல்வது அனேகமாக நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.தன்னலமில்லாத, தன்முனைப்பில்லாத செயல்கள் எல்லாவற்றையும் உத்தமமாக, ஆன்மீக நெறி நமக்குச் சொல்கிறது.
கொஞ்சம் சுயநலம், தன் விருப்பங்கள் நிறைவேறுவதற்காக என்று, அதனால் பிறருக்கு ஒரு தீமையும் இடையூறுமில்லாத செயல்களை மத்திமம் என்றும், தன்முனைப்போடு, பிறருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்யப் படுகிற செயல்களை அதமம் என்றும் அறநெறி நமக்குப் பலப்பல வழிகளில் உணர்த்துகிறது.
பஸ்மாசுரன் என்றொருவன், எவரும் மேற்கொள்ளமுடியாத கடுமையான நியமத்தோடு நீண்ட காலம் தவம் செய்தான். இறைவனும் அவனுக்கு வரம் கொடுக்க முன் வந்தான். தன் கையை எவர் தலை மீது வைத்தாலும், அவர்கள் பிடி சாம்பலாகிப் போய் விட வேண்டும் என்பது அவன் வேண்டிய ஒரே வரம். அவனது கடுமையான முயற்சிக்குப் பலனை அளித்தாகவும் வேண்டும், அதே நேரம் அவனது கெட்ட எண்ணம் அவனுக்கே ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொண்டான்.
வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்து, பெற்ற வரத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைஅவனுக்குள் தோற்றுவித்தான். கடைசியில், தான் பெற்ற வரமே அவனை பிடி சாம்பலாக்கியது.
"வரமே சாபமாகிற நிலை" என்பது இது தான்.
You are
what your deep, driving desire is.
As
your desire is, so is your will.
As
your will is, so is your deed.
As
your deed is, so is your destiny. “
(Brihadaranyaka Upanishad, 4.4.5)

ஒருவனை, அவனது ஆழ்ந்த உள்ளுணர்வுகளே உருவாக்குகிறது.அப்படிஎழும் ஆசையின் தூண்டுதலில் இருந்து எண்ணம் உருவாகி, எண்ணம் எப்படியோ அதன்படியே செயல்களுமாகி, அந்தச் செயல் வழியே விதியாக உருவாகிறது. என்று பிரகதாரண்ய உபநிஷத் மிகத் தெளிவாகச் சொல்கிறது.
"எண்ணம் போல் வாழ்வு" என்று சித்தர் மரபில் குறிப்பிடுவது இதைத்தான்.
கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை அல்ல மனிதன்.
இப்போது நம்மைச் சுற்றிக் கொழுந்து விட்டெரியும் பிரச்சினைகளைப் பாருங்கள்.
தன்னுடைய மத நம்பிக்கைகளை ஏற்க மறுப்பவர்களை அழிப்பதே புனித யுத்தம் [ஜிகாத்] என்று ஒரு புறம்,
தங்கள் மேல் ராக்கெட் வீசித் தாக்குவதை நிறுத்த வேண்டும் ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதன் மூலமே அதை சாத்தியமாக்க முடியும் என்று காசா பகுதியில் கொலைவெறித் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிற யூதர்கள் ஒரு புறம். [பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் தேர்தலை ஒட்டியே, இஸ்ரேல் அரசு, இந்த வீர சாகசங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.]
தங்களுடைய உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல், இந்தியா மீது வெறுப்பையும், பயங்கரவாதத்தையும் தூண்டுவதன் மூலமே பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிற பாகிஸ்தான், வங்காள தேசம், மியான்மார், நேபால், போன்ற தோற்றுப்போன அரசியல் குழப்பங்களும் [இவற்றை ஒரு அரசு என்ற கட்டமைப்பாகச் சொல்ல முடியாது]
எதிரி யார், எங்கே பலவீனம் இருக்கிறது என்பது தெரிந்தும் கூட, தங்களுடைய சுய லாபங்களுக்காக, ஓட்டுப் பொருக்குவதற்காகவும் கூட, கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கிற இந்திய அரசை நடத்திக் கொண்டிருக்கிற கட்சிகளும்,
பேராசையினாலேயே மிகப் பெரிய பொருளாதாரச் சரிவுகளை ஏற்படுத்திய அமெரிக்க வங்கிகளும், திவாலாகிப் போக வேண்டிய நிறுவனங்களை மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்துக் காப்பாற்றமுயலுகிற அமெரிக்கப் பொருளாதாரச் சரிவும், உலகெங்கும்அதன் தாக்கமும்
இப்படிப் பலதிசைகளிலும் இப்போது மிக அதிகமாக எழும் ஒரே கேள்வி:
"இனி என்ன நடக்கும்?"
http://blog.360.yahoo.com/blog-mW9mlZY6aa8IAGvA4oby77T8vlT5gobS?p=713
செப்டம்பர் 13, 2006 இல் yahoo.360 இல் அன்னையின் உரை ஒன்றைப் பதிவு செய்ததை இப்போது மீண்டும் பார்க்கலாமா?

The Decisive Turning Point

At the moment we are at a decisive turning point in the history of the earth, once again. From every side I am asked, "What is going to happen ?" Everywhere there is anguish, expectation, fear.
"What is going to happen?"
There is only one reply: "If only man could consent to be spiritual­ised."
And perhaps it would be enough if some individuals became pure gold, for this would be enough to change the course of events..it We are faced with this necessity in a very urgent way.
T'his courage, this heroism which the Divine wants of us, why not use it to fight against one's own difficulties, one's own imperfections, one's own obscurities? Why not heroically face the furnace of inner purification so that it does not become necessary to pass once more through one of those terrible, gigantic destructions which plunge an entire civilisation into darkness?

This is the problem before us. It is for each one to solve it in his own way.

The Mother, CWM Vol.9. pp.74
உண்மையான வீரம், தனக்குள்ளே இருக்கிற பலவீனங்களை, அழுக்கை எதிர்த்துப் போராடுவதில் தான் இருக்கிறது. தன்னை மாற்றிக் கொள்ள முடியாத கோழைகள் தான், உலகை மாற்றம் செய்யப் போகிறேன் என்கிற பெயரில் யுத்தங்கள், மதத்தின் பெயரால் நிகழ்த்தும் வன்முறைகள் இப்படிப் பட்ட செயல்களில் ஈடுபடுவார்கள்.

Golden Drops of Light


“There are two powers that alone can effect in their conjunction the great and difficult thing which is the aim of our endeavor,- a fixed and unfailing aspiration that calls from below and - a supreme Grace from above that answers”

Sri Aurobindo
”The Mother”

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!