இந்த வருஷம் கொஞ்சம் விசேஷம் தான்...! தகவல் விசித்திரங்கள்!

சின்ன விஷயம் தான்!

இந்த அக்டோபர் மாத காலண்டரைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்!

1,8,15,22,29 என்று ஐந்து வெள்ளிக் கிழமைகள்!

2,9,16,23.30 என்று ஐந்து சனிக் கிழமைகள்!

3,10.17.24,31 என்று ஐந்து ஞாயிற்றுக் கிழமைகள்!

சரி இதிலென்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா?

இந்த வருடம் ஜனவரி மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்து வெள்ளி, சனி ஞாயிறு என்று ஒரே மாதத்தில் ஐந்து தரம் வந்ததை, இப்போது கவனித்திருப்பீர்கள் இல்லையா!  

அப்புறம் மார்ச் மாதம், மே மாதம்,  ஜூலை மாதம்,ஆகஸ்ட் மாதங்களில் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்து தரம் வந்தது.
 
இந்த வருடம் டிசம்பர் மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்துதரம் வரப்போகிறது!

சரி, எதற்கு இந்தக் கதை இப்போது என்கிறீர்களா?

வெள்ளி, சனி, ஞாயிறு இப்படி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஒரே மாதத்தில் மறுபடி வர 823 வருடங்கள் ஆகுமாம்!

ஆனால், அப்போது கூட இங்கே உள்ள காங்கிரஸ் காரனுக்கு சொந்தபுத்தி வரவே வராது!








9 comments:

  1. என்ன காங்கிரஸ்காரங்களுக்கு சொந்த புத்தி இல்லையா!
    அப்புறம் எப்படி சார் இவ்ளோ நாளா ஆட்சி பண்ணிகிட்டு இருக்காங்க!

    உண்மையில் மூளை இல்லாதவங்க ஓட்டு போடுறவங்க தான்!

    ReplyDelete
  2. வாங்க வால்ஸ்!

    காங்கிரஸ்காரன் ஆட்சி செய்யும் லட்சணத்தைப் பார்த்த பின்னாலும் கூட சொந்த புத்தி இருக்கிறது என்று சொல்கிறீர்களா என்ன!!

    ReplyDelete
  3. இந்தியாவை ஆள புத்திசாலிகள் தேவை இல்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று.
    இது தெரிந்தவர்கள் எல்லாமே புத்திசாலிகள்தான். காங்கிரஸ் காரர்கள் புத்திசாலிகள்தான் என்பதில்
    என்ன சந்தேகம் உங்களுக்கு?

    ReplyDelete
  4. அப்படியா சொல்கிறீர்கள் மாணிக்கம்!

    எனக்கென்னவோ, ஆ! ராசா என்று வாய் பிளக்கக் கூட சக்தியில்லாத, தங்களுக்குள் மட்டும் அடித்துக் கொண்டு வேட்டி கிழிப்பு, நாற்காலி எறிதல் முதலான வீர தீரச் செயல்களை செய்யத் தெரிந்தவர்கள், தானாகவும் தெரியாது, எடுத்துச் சொன்னாலும் புரியாது ரகம் தான் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  5. இந்தியாவுக்கு ஒரு அரசாங்கமே தேவை இல்லை என்று கூட வைத்துக் கொள்ளலாமே மாணிக்கம்!

    இல்லாமல் இருந்தால் இப்போதிருக்கும் துயரத்தைவிடக் கொஞ்சம் கம்மியாகத் தான் இருக்கும் என்று கூடத் தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, இவர்கள் வேலை செய்து கொண்டிருந்ததற்கும், வேலை நிறுத்தம் செய்ததற்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே தெரியாமல் இருந்தது வெளிச்சத்துக்கு வந்த மாதிரி!

    ReplyDelete
  6. காங்கிரஸ் காரனுக்கு புத்தி வராது என்கிறீர்கள் சரி , அது அப்போது ஆளும் கட்சியாக இருக்குமா, அல்லது எதிர்க் கட்சியாகவா..? அதைச் சொல்லவில்லையே..!!

    ReplyDelete
  7. ஒரு தரகரிடம் மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்தார்களாம். முப்பத்திரண்டு குணங்களில் ரெண்டே ரெண்டுதான் குறைச்சல், மற்றப்படி சொக்கத் தங்கம் என்று தரகர் சொன்னாராம். அதை நம்பிக் கல்யாணமும் முடிந்தது. பார்த்தால், மாப்பிள்ளை சுத்தக் கிறுக்கு! தரகரிடம் கேட்டதற்கு, நான் தான் அப்பவே சொன்னேனே, ரெண்டே ரெண்டு குணம் தான் குறைச்சல் என்று! தானாவும் தெரியாது, அடுத்தவர் எடுத்துச் சொன்னாலும் ஏறாது! இந்த ரெண்டும் தான் குறைச்சல் என்றாராம்.

    அந்த மாதிரிக் காங்கிரசுக்கு ரெண்டே ரெண்டு கல்யாண குணம் தான் குறைச்சல்! அவர்களுக்காக,ஆளவும் தெரியாது, அடுத்தவர்களை ஆளவிடவும் தெரியாது இந்த மாதிரி ரெண்டும் கெட்டான்களைக் கட்டிக் கொண்டு அறுபத்துமூன்று வருடங்களாகப் பார்த்துக் கொண்டு, அதற்கு அப்புறமும் இந்தக் கேள்வியை கேட்கிறீர்களே ஸ்ரீராம், இது நியாயமா!

    ReplyDelete
  8. சூப்பர், சொந்த புத்தி மட்டுமல்ல, பங்காளிச் சண்டையும் தீராது.

    ReplyDelete
  9. ஈழப் பிரச்சினையைத் தொட்டு டயஷா என்ற பெயரில் வந்த ஒரு பின்னூட்டம் இந்தப்பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் மட்டுறுத்தப் பட்டிருக்கிறது.

    காங்கிரஸ்காரர்களை இங்கே இந்தியாவில் இந்தியர்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!