கேள்விகளைக் கேள்வி கேளுங்கள்!



ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே 





பனித்திரை  படத்தில் பிபி ஸ்ரீநிவாஸ்-பி சுசீலா டூயட் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது.வலையில் சேத் கோடின் பதிவுகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ரீடரில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னமே வாசித்து விட்டாலும் கூட இந்த இரண்டு வரிப்பதிவு எழுப்பிய ஓராயிரம் கேள்விகளுக்கு இன்னமும் முழுமையான பதில்கள் கிடைத்தபாடில்லை.

சேத் கோடின் சொல்கிறார்.
 
The best creative solutions don't come from finding good answers to the questions that are presented.

They come from inventing new questions.

இரண்டே வரிகள் தான். மிக ஆக்கபூர்வமான தீர்வுகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு நல்ல பதில்களைக் கண்டு சொல்வதில் இல்லை.அவை.இன்னமும் புதிதான கேள்விகளை எழுப்புவதில் இருந்து பிறக்கின்றன என்கிறார்.பதிவின் தலைப்பிலேயே முத்தாய்ப்பாக, கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று சொல்கிறார்.



ஏனாம்?

ஏன் என்ற கேள்வி கேள்வி கேட்காமல்
இங்கு வாழ்க்கையில்லை! 
.........................................................
பகுத்தறிவு பிறப்பதெல்லாம்
கேள்விகள் கேட்பதனாலே!  
.........................................................
உரிமைகளைப் பெறுவதெல்லாம்
முயற்சிகள் செய்வதனாலே!
 

இந்தப் பாடல் வரிகளே, பதிவில் எழுத நினைத்ததன் சாராம்சத்தைக் கொஞ்சம் சொல்லி விடுவதால் இந்த விஷயத்தை நான் நீளமாக எழுதப் போவதில்லை!நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்! 

2 comments:

  1. உங்களிடமிருந்து இப்படி இவ்வளவு சுருக்கமான பதிவா? ஆச்சரியமாக இருக்கிறது.

    //கேட்கப்படும் கேள்விகளுக்கு நல்ல பதில்களைக் கண்டு சொல்வதில் இல்லை.அவை.இன்னமும் புதிதான கேள்விகளை எழுப்புவதில் இருந்து பிறக்கின்றன என்கிறார்.//

    கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாக மட்டும் இருந்துவிடாமல், அது தொடர்பான மேலும் சிந்தனையை கிளர்வதாக இருந்தால், பதில்களும் புதிய கேள்விகளுக்கு வித்திடும். நான் உணர்ந்த உண்மை இது! பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு அப்படியான பதில்களை அளிப்பதில் நான் கவனம் கொள்வதுண்டு.

    ReplyDelete
  2. ஜீவி சார்! நலந்தானே?

    பதிவில் சொல்ல வந்த சாராம்சம் இரண்டாவது வீடியோவில் உள்ள பாடலிலேயே இருக்கிறது. அதனால் தான் கடைசிப் பாராவில் இந்தப் பாடல் வரிகளே, பதிவில் எழுத நினைத்ததன் சாராம்சத்தைக் கொஞ்சம் சொல்லி விடுவதால் இந்த விஷயத்தை நான் நீளமாக எழுதப் போவதில்லை!நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்! என்று சொல்லி முடித்தது. :-)

    இப்போது தலைகீழாக, முதலில் ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்பதில் இருந்து ஆரம்பித்து, சேத் கோடின் சொல்கிற அந்தக் கேள்விகளைக் கேள்வி கேட்பது, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!