#தனிக்கச்சேரி பீஹார் தேர்தல் களம் தரும் படிப்பினைகள்

சுவாசிக்கப்போறேங்க தளத்தில் பீஹார் தேர்தல் முடிவுகளைப் பற்றி நேற்று கொஞ்சம் எழுதியிருந்தேன். ஒரிஜினலாக இந்தப் பக்கங்களில் தேர்தல் முடிவுகள்  முழுமையாக வெளிவந்தபிறகு #தனிக்கச்சேரி வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லியிருதேன்.சில சுவாரசியமான விஷயங்கள், தேர்தல் களம் தரும் நல்ல படிப்பினைகளாகவும் இருப்பதை பேசாமல் இருந்தால் எப்படி? ஒரு தேர்தல் தமாஷாக, சிவசேனா, பீஹார் சட்ட சபைத்தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட்டு அத்தனை இடங்களிலும் தோற்றது. NOTAவிற்கு கிடைத்த வாக்குகளை விட மிகக் குறைவான வாக்குகளையே பெற முடிந்த சிவசேனா அடித்துக் கொள்ளும் ஜம்பம்/தம்பட்டம் என்னவென்று தெரிந்தால் வாய்விட்டுச் சிரிப்பீர்கள்! 

If Nitish becomes Bihar CM, credit goes to Shiv Sena: Saamana சிவசேனாவின் அதிகாரபூர்வமான பத்திரிகை சாம்னா பீற்றிக்கொள்வது இது! 


 

The Print தளத்தில் சேகர் குப்தா இந்த 25 நிமிட வீடியோவில் ஒரு ஆறு முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுகிறார் நண்பர்களை இந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். சேகர் குப்தா பட்டியலிடும் அந்த ஆறு படி
ப்பினைகள் என்னென்னவென்று சுருக்கமாகப் பார்த்துவிடலாமா? 

1. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் களத்தில் இன்றும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார்.ஜனங்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் இருக்கிறார்.

2. நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட நிறைய விஷயங்களில் நரேந்திர மோடி மீதான ஜனங்களின் நம்பிக்கை கொஞ்சமும் குறையவே இல்லை. காங்கிரஸ் கட்சி 
தொடர்ந்து நரேந்திர மோடி அரசு மீது அள்ளிவிடும் குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்வாரில்லை என்பது காங்கிரஸ் கட்சி பிரமுகர்களைத்தவிர மற்ற எல்லோருக்குமே புரிந்திருக்கிறது.

3. காங்கிரஸ் கட்சி தன்னால்  நஜீரணிக்க முடியாத அளவுக்கு கூட்டணிக்கட்சிகளிடம் சீட்டுகளைக் கேட்டுப் பெற்றாலும், அவைகளில் கால்வாசி இடங்களில் கூட ஜெயிக்க முடியாத அளவுக்கு பலவீனப்பட்டுப்போய்க் கிடக்கிறது.ராகுல் காண்டி முகத்துக்காகவோ அவர் இன்னாருடைய பேரன் என்பதற்காகவோ ஜனங்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை.ராகுல் காண்டியை ஒரு சீரியசான அரசியல்வாதியாக எவருமே பார்ப்பதற்குத் தயாராக இல்லை.

4. RJD கட்சியின் கூட்டாளிகளாக இந்தத்தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரிகள் சுமார் 16 இடங்களில் ஜெயித்திருப்பது இந்தத்தேர்தலில் இன்னொரு அதிசயம்! 70 இடங்களில் போட்டியிட்டு சென்ற  2015 தேர்தலில் 27 இடங்களில் ஜெயித்த காங்கிரஸ் இப்போது அதே 70 தொகுதிகளில் போட்டி 51 தொகுதிகளில் மண்ணைக் கவ்வியது என்பதோடு  சென்ற தேர்தலில் வெறும் 3 இடங்கள் மட்டுமே ஜெயித்த இடதுசாரிகள் இந்த முறை 16 இடங்களைப்பிடித்திருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸ் எப்படி மரணப்படுக்கையில் கிடக்கிறது என்பதை எளிதில் விளங்கி கொள்ள முடியும்.அதேநேரம்  இடதுகளின் இந்த வெற்றி வேறொரு விஷயத்தையும் கோடிட்டுக் காட்டுவதையும்பார்த் தாக  வேண்டும். பொதுவாகவே கம்யூனிஸ்டுகள் ஜனநாயக நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் நம்புவதெல்லாம் வேறுவிதமான விபரீதம்.

5. தேஜஸ்வி யாதவ்! RJD கட்சியின் லல்லு பிரசாத் யாதவின் மகன். தந்தையின் கறைபடிந்த அரசியல் பின்னணியிலிருந்து விலகி, கொஞ்சம் வித்தியாசமான அரசியல் செயல்பாடுகளுடன் களத்தில் இறங்கி இருக்கிறார். பீஹார் அரசியலிலும் தேசிய அரசியலிலும் நட்சத்திரமாக வளரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

6.ஹிந்தி பெல்ட்டில் கடைசியாக மிச்சமிருந்த பீஹாரிலும் பிஜேபி வலுவாகக் காலூன்றி இருப்பது இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சம்.தேர்தல்களம் தந்திருக்கும் படிப்பினையும் கூட. கூட்டணிபலம் எதுவும் தேவைப்படாத அளவுக்கு பிஜேபி வளர்ந்திருப்பதை பீஹார் தேர்தல் களம் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறது. நிதீஷ்குமார் பற்றித் தனியாகச் சொல்ல எதுவுமே இல்லை.

அவ்வளவுதானா?  இன்னொரு முக்கியமான படிப்பினையும் கூட இந்தத் தேர்தல்களத்தில் வெளிப்பட்டு இருக்கிறது. சிறுபான்மை மக்களுடைய காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, அவர்களுடைய வாக்குகளை அறுவடை செய்துவந்த செகுலர் கட்சிகளுக்கும் முகத்தில் அறைகிற மாதிரி அசாதுதீன் ஒவைசியின் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

What the Owaisi phenomenon tells us about the Indian Muslim mind & future of ‘secular’ parties என்ற தலைப்பில் ஒரு 24  நிமிட வீடியோவில்  சேகர் குப்தா சொல்வதில் வேறுபல சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன. நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கொஞ்சம் பார்க்கலாமே! 

ஒவைசி கட்சியின் வெற்றி நிறையப்பேரை கலங்க வைத்திருக்கிறது. உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியாமல் குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்த கதையில் வருவதுபோல தப்பும் தவறுமாக பதற ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு NDTV தளத்தில் முகுல் கேசவன் எழுதியிருக்கிற  இந்தக் கட்டுரை.Bihar Result Throws Up A New Fact - How To Ally With Owaisi   

மீண்டும் சந்திப்போம்.    

8 comments:

 1. முழுமையாக கேட்டேன். உண்மை. அருமை. உடல்நலத்தில் கவனம் செலுத்துங்க. தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஜோதிஜி!

   தீபாவளி வாழ்த்துக்கு நன்றி. பதிவில் இரண்டு வீடியோக்களுக்கு இணைப்பு இருக்கிறது. இரண்டாவது இணைப்பு கடைசிவரிக்கு முந்தைய பாராவில் இருக்கிறது அதையும் பார்த்தீர்களா?

   உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனம் கனிந்த தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்! நலமே விளைக!

   Delete
 2. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

   வாழ்த்துக்கு நன்றி.

   உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனம் கனிந்த தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்! நலமே விளைக!

   Delete
 3. எனக்கென்னவோ பாஸ்வான் கூட்டணில இருந்திருந்தால் அர்த்தமுள்ள வெற்றியை பாஜக கூட்டணி பெற்றிருக்கும். இரண்டாவது, ஓவைசி அந்தக் கூட்டணில இருந்திருந்தா, இப்போ உள்ள ரிசல்ட்தான் வந்திருக்கும் (பாஸ்வான் பையன் நிதீஷுடன் கூட்டணில இருக்கணும்). காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் முஸ்லீம் வாக்குகள் அவங்களுக்குக் கிடைக்காமல் போனதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நெ.த. சார்!

   சிராக் பாஸ்வான் நிதீஷ்குமாருடைய ஆணவத்துக்கு சரியான ஆதி கொடுத்திருக்கிறார் என்பதோடு LJP என்கிற உதிரியின் உபயோகம் முடிந்துவிட்டது. மாநிலக்கட்சிகளுடைய வீச்சும் செல்வாக்கும் குறைந்து வருவதை இந்தத் தேர்தல் மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தால் இருக்கிற கொஞ்சநஞ்ச வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும் என்ற களயதார்த்தத்தையும் இந்த பீஹார் தேர்தல் முடிவுகள் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது.

   பதிவின் கடைசிப் பாராக்களில் ஒவைசி factor பற்றி சேகர் குப்தா விளக்கும் ஒரு 24 நிமிட வீடியோவும், ஒவைசியோடு எப்ப்டிக் கூட்டணி சேருவது என்பதை அலசும் NDTV செய்திக்கட்டுரைக்கான இணைப்பும் இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

   Delete
 4. உங்கள் அனைவருக்கும் தீபாவள் நல் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனம் கனிந்த தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்! நலமே விளைக!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!