பதிவர் வட்டம், பதிவர் சதுரம், முக்கோணம் என்றெல்லாம் நிறையப் படித்திருப்பீர்கள்! இப்போது ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு என்று பதிவர் கூட்டங்கள் நடந்து கொண்டிருப்பதாகத்தெரிகிறது!
கொஞ்சம்பேர், பதிவர் சந்திப்பென்றால், எங்கு நடந்தாலும் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு தவறாமல் ஆஜராகி விடுவதுமுண்டு!
எப்படித்தான் பதிவர்கள் எல்லாம் கூடித் தேர் இழுக்கிறார்களோ அல்லது தெருவோரத்து டீக்கடையில், ஆறிப்போன மசால்வடையும் டீயும் குடித்து விட்டு பதிவர் கடமையைச் செய்கிறார்களோ எனக்குப் புரிவதில்லை, அதிகப் பரிச்சயமுமில்லை!
தமிழோ, ஆங்கிலமோ, உலகமெங்கும் பதிவர்கள் சில விஷயங்களில் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள் போல இருக்கிறது! இருட்டுச் சந்தில் கூப்பிட்டு மூக்கில் குத்துவிடுவதை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்! அது தலைநகரப் பதிவர்களின் தனி ஆட்டை!
மேலே உள்ள படம் சொல்லும் கதையின் நீதியாக என்ன புரிந்து கொண்டீர்கள் என்று அருள் கூர்ந்து சொல்ல முடியுமானால், தொடர்ந்து பேசுவோம் நண்பர்களே!
பேசுவோம் என்பதை மறுபடி அழுத்தியே சொல்கிறேன்! மூக்கில் குத்து வாங்குகிற வயசெல்லாம் தாண்டி விட்டது!
வால்பையன் சொல்கிற, குத்து விடுகிற வயசும் கூட இல்லை!
வால்பையன் சொல்கிற, குத்து விடுகிற வயசும் கூட இல்லை!

