உளறுவாயரா அல்லது நாவலரா? எஸ்ரா சற்குணம்! ஆசம் கான்!

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக காவேரி நியூஸ் சேனல் ஒரு தனிப்பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, அதுவும் அப்படிக் கூவுகூவென்று கூவாமலேயே!  தடம் நிகழ்ச்சியில் துணை ஆசிரியர் மதன் ரவிச்சந்திரன் சுபவீ செட்டியாரை, அவருடைய  யோக்கியதை இப்படித்தான் என்று அடையாளம் காட்டுகிற மாதிரி சிலகேள்விகளில் மடக்கினார். சுபவீ, ஆம் நான் தோற்றுத்தான் போனேன் என்று விசனப்பட்டு முகநூல் பதிவொன்றை எழுதினார் என்பது ஒருபக்கம். இன்னொரு பக்கம் நிர்வாக ஆசிரியர் ஜென்ராம், மதனைக் கண்டித்தார் என்பதும்  சக ஊழியர்களில் சிலரே  கறுப்புத் துணி அணிந்து மதனுக்கு எதிராகக் கொடி உயர்த்தினர் என்பதும்  ஊடகங்களில் என்னமாதிரியானவர்கள் ஆதிக்கம் நிலவுகிறது என்பதைப்  படம் பிடித்துக் காட்டியது. எல்லாவற்றையும் விட காவேரி நியூஸ் சேனல் நிர்வாகம் இந்த ஒழுங்கீனத்துக்கு எதிராக உறுதியாக இருந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஜென்ராம் உள்ளிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்கள் அனைவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஊடக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும்.

         
தடம் நிகழ்ச்சியில் மதன் ரவிச்சந்திரன் திமுக ஆதரவு உளறு வாயரான எஸ்ரா சற்குணத்தைக் கொஞ்சம் கேள்வி கேட்பதில், இந்தப்பாதிரி  எப்படித் தடுமாறுகிறார் உளறுகிறார் என்பதைக் கொஞ்சம் பார்க்கும்போதே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.


மேலே ஒரு செய்தியை வைத்து   உங்கள் அரசியல் அறிவைச் சோதிக்கிற மாதிரி ஒரு சின்னக் கேள்வி?! எஸ்ரா சற்குணம் என்கிற இந்தப் பாதிரி, திமுக மேடைகளில் ஏறியேறியே உளறுவாயராக ஆனாரா? OR  உளறுவாயர்கள் தேவைப்பட்டதாலேயே இவர் திமுகவின் மேடைகளில் ஏற்றப்பட்டாரா? ( நாராயணசாமி என்கிற ஒரு  ஆசாமி நெடுஞ்செழியன் என்று பெயர் மாற்றிக் கொண்டார், பேச்சு அத்தனை சுத்தமாக வராது, உளறலாக இருக்கும்!அப்படிப்பட்டவருக்கே நாவலர் பட்டம் கொடுத்தது திமுக என்பது உங்களுக்கான உதவிக்குறிப்பு)  


சிறுபான்மைக்காவலர்களாகக் காட்டிக் கொள்வதில் இங்கே கழகங்கள் எக்ஸ்பெர்ட் என்றால், அதே வேடத்தை காங்கிரஸ் உள்ளிட்டுப் பல கட்சிகளும் அவ்வப்போது செய்வதுண்டு. உத்தரப் பிரதேச அரசியலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதிக் கட்சி அதில் காங்கிரசையே ஓரங்கட்டுகிற அளவுக்கு எக்ஸ்பெர்ட்!  அதன் இஸ்லாமிய முகமாக இருப்பவர் ஆசம் கான்! முலாயம் மந்திரி சபையில் செல்வாக்கு மிகுந்த (என்றால் தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டன்) மந்திரியாக இருந்தவர், இப்போது மக்களவை எம்பி.   சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அவையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் ரமாதேவியைப் பார்த்து கொஞ்சம் தகாத வார்த்தைகளைப் பேசியதற்காக, பெண் உறுப்பினர்கள் கொந்தளித்ததில், பருப்பு இனிமேல் வேகாது என்ற ஒரே காரணத்தால் மன்னிப்பும் கேட்டவர்!

ஆசம் கானுடைய சாகசங்களைப்  பற்றிச் சொல்வதென்றால் புத்தகம் புத்தகமாக எழுதலாம்! முலாயம்சிங் உ.பி. முதல்வராக இருந்த சமயம், அமைச்சர் ஆசம் கானுடைய பண்ணையில் இருந்த 4 எருமைமாடுகள் காணாமல் போனதில் மாநிலக்காவல் துறை முழுமையாகப் பயன்படுத்தப் பட்டது. நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, அந்த எருமை ஒவ்வொன்றும் இங்கிலாந்து ராணியை விட மதிப்பு மிகுந்ததாக்கும் என்று ஜம்பமடித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது. ஜெயப்ரதாவின் உள்ளாடை கலர் காக்கி என்று சொன்னது சமீபத்தைய திமிர். ஆசம் கானை வெறும் உளறுவாயர் என்று அலட்சியப்படுத்திவிட்டுப் போய்விட முடியாது,

முன்னால் செய்த சாகசங்களுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல வேண்டிய நேரம் ஆசம் கானுக்கு நெருங்கிவிட்டது என்று இந்த 45 நிமிட செய்தித் தொகுப்பில் விவரமாகச் சொல்கிறார்கள்.ராம்பூரில்  விவசாயிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களை வைத்து 5000 ஹெக்டேர் நிலத்தில் பல்கலைக் கழகம் ஒன்றை நடத்திவருவதில் ஒவ்வொரு முறைகேடாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்! புத்தகங்கள் திருட்டு, 11.5 கிலோமீட்டர் பொதுப்பாதையையே சுருட்டியது என்று பலவிதமாக!

முலாயம்சிங் மாதிரிக் காவலர்கள் இருக்கிற தைரியத்தில் ஆசம்கான்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.       
   
             

இன்றைக்கு ஒரு சிறப்பு! #அத்திவரதன்

ஆகஸ்ட் மாதத்துக்கு எத்தனையோ சிறப்புக்கள் இருந்தாலும் இந்த வருட ஆகஸ்ட் முதல் தேதிச் சிறப்பாக. அத்தி வரதர் காஞ்சியில்  இன்று முதல்  நின்றதிருக்கோலத்தில் சேவை சாதிப்பது மட்டுமே இருக்கிறது. ஜூலை மாதத்தின் 31நாட்களிலும் கிடந்த திருக்கோலத்தில் வணங்கமுடிந்த அத்திவரதனை  நின்ற திருக்கோலத்தில்  இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை அன்பர்கள் காணமுடியும் என்பது இந்தநாளின் தனிச்சிறப்பு! இல்லையென்றால் இன்னுமொரு நாற்பதாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்!



தமிழ் சேனல்கள் மீது எனக்கு ஆயிரம் விமரிசனம் மனக்குறைகள் இருந்தாலும் நேரில் சென்று தரிசிக்க முடியாத என்னைப்போன்ற பலருக்கும் இதுமாதிரி, வீட்டிலேயே இருந்து வணங்க ஒரு வாய்ப்பளித்ததற்காக நன்றி சொல்லத்தான் வேண்டும்! நண்பர் VN கேசவபாஷ்யம் முதல் பலநண்பர்கள் இருந்த இடத்தில் இருந்தே  அத்தி வரதனை நிதமும் வணங்குகிற வாய்ப்பை முகநூலில் புகைப்படங்களாகவும், சிறுகாணொளிகளாகவும் பகிர்ந்து, உதவியிருந்தார்கள். அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தே ஆகவேண்டும்! இணையம் என்னைப்போல எத்தனையோ பேருக்கு தேடியதைக் கண்டடைகிற வாய்ப்பைத் தந்திருக்கிறது.  

அத்தி வரதனைக் கண்ட நிகழ்வைப் பேசவந்த பதிவில் வேறு விஷயங்களைக் கலப்பானேன்? இதுவே இன்றைக்குத் தனிச் சிறப்பாக! 

மீண்டும் சந்திப்போம்.