முந்தைய பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டமே நான் தான் சரியாக விஷயத்தைச் சொல்லவில்லையோ என்ற சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது. அதனால் தன்னிலை விளக்கம் அங்கே கொடுத்ததை இங்கேயும் சொல்ல நினைக்கிறேன். அதற்குமுன்னால் மத்தியப்பிரதேச அரசியல் காமெடிகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்! நேற்றைக்கு கொரோனா வைரஸ் தொற்று பீதியை வைத்து சட்டசபையை வருகிற 26 ஆம் தேதிவரை ஒத்தி வைத்தார் காங்கிரஸ் சபாநாயகர். பிஜேபி தரப்பில் உச்சநீதிமன்றத்துக்கு விஷயத்தைக் கொண்டுபோனதில், வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொல்லப்பட்டது. முதல்முறையாக காங்கிரஸ் தரப்பிலோ மத்தியப்பிரதேச அரசுத்தரப்பிலோ எவரும் ஆஜராகாமல் இருக்கிற உத்தி கடைப்பிடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் ம.பி. முதலமைச்சர், சபாநாயகர் இருதரப்புக்கும் 24 மணிநேரத்துக்குள் பதிலளிக்கும் படி உத்தரவிட்டு பிஜேபி தரப்பு மனுக்களின் மீதான விசாரணை நாளைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்தியபிரதேச ஆளுநர் மறுபடியும் இன்று 17 ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாத தவறினால், அரசு மெஜாரிடியை இழந்துவிட்டதாகக் க்ருத வேண்டியிருக்கும் என்று சொன்னதில் உஷாரான காங்கிரஸ் கட்சி இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் ஆளுநரின் கடிதத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருக்கிறது.கர்நாடகா மாதிரியே விவகாரத்தை இழுத்தடிக்கவும் முடியாமல் காங்கிரஸ் இப்போது உச்சநீதிமன்றத்தில் மறுபடியும் கொட்டு வாங்கித் தலைகுனியப் போகிறது.
ராகுல் காண்டிக்கு 15 வருடமாக மக்களவை உறுப்பினராக இருந்தும் சபை நடவடிக்கைகளும் புரியவில்லை அரசியலும் செய்யத்தெரியவில்லை. துணைக்கேள்வி எப்போதெல்லாம் அனுமதிக்கப்படும்? பப்புவுக்கு திடீரென்று தமிழ்நாட்டின் மீது கரிசனம் பொங்குவானேன்? வயநாடு தொகுதி மக்களுக்குப் புரிகிற மாதிரி சொல்வாராமா?
இன்றைய துக்ளக் அட்டைப்பட நையாண்டி
பின்னே முந்தைய பதிவுக்கான தன்னிலை விளக்கம். அதற்குத்தோதாக இன்று ஹிந்து நாளிதழில் சுரேந்திரா வரைந்திருக்கிற கார்டூன்!
-
-
//ஆனால் வாக்காளர்கள் என்ன முடிவு செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்கிற வாய்ப்பு, வசதி ரங்கராஜ் பாண்டே மாதிரியான திறமைசாலிகளுக்கும் கூட இருக்கிற மாதிரித் தெரியவில்லையே!// அக்ஷர லக்ஷம் பெரும் வார்த்தைகள்.ReplyDelete
மீண்டும் சந்திப்போம்.




மிக நல்ல பேச்சாளர்.
இருவரும் சேர்ந்து நல்ல ஆரம்பத்தைக் கொண்டு வந்தால்
நன்மையே.