Thursday, July 14, 2011

கேணைகள் ஆட்சியில் கிறுக்குப்பய நாட்டாமை! ஐமுகூட்டணிக் குழப்பத்தில்...?


ரொம்பவுமே சீரியசாகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தால் சரியாக இருக்குமா? அதனால்நடுநடுவே கொஞ்சம் ரிலீப் ஆகிற மாதிரி கொஞ்சம் நகைச்சுவைப் பதிவுகளும், பீர்பால் கதைவரிசை மாதிரி எழுதலாமே என்றார் நம்முடைய புள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம், அண்ணாச்சி! இதில் நான் என்ன நகைச்சுவையாக எழுத முடியும்? வேணுமானால் நகைச்சு வையுங்க பாணியில் நாட்டு நடப்பைச் சொல்லலாம்! 
ன்றைய டில்லிப் பாதுஷாக்கள் செய்கிற காமெடியோடு ஒப்பிட்டால், அன்றைக்கு டில்லிப் பாதுஷாக்களும் அரசவைக் காமெடியன்கள்களும் ஒன்றுமே இல்லை, அன்றைய பாதுஷாக்கள் ஒன்றுக்குமே ஆகாதவர்கள் என்ற மாதிரி சித்திரம்தான் கிடைக்கிறது!

டுநிலை என்று சொல்லிக் கொண்டு திமுகவின் விசுவாசமான கூட்டாளியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நக்கீரன் 13-07-2011 தேதியிட்ட வார இதழின் அட்டைப் படம் இது! என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்?

ஐ.மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு இன்றைக்குக் கந்தலாகிக் கிடக்கும் இந்தச் சூழ்நிலையில், கனிமொழி நிஜமாகவே மத்திய அமைச்சராகி விடுவார் என்று நம்புகிறார்களா? அல்லது சந்தடி சாக்கில், ஐயா இத்தனைநாள் உனக்குக் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டிருந்தோம், இனிமேல் அதெல்லாம் வேலைக்காகாது என்று கருணாநிதியை லந்தடிக்கிறார்களா?

ண்டனூர் பானா சீனா வாயை சும்மா வைத்துக் கொண்டிருக்காமல் போன வாரம் தான் இந்தப் பத்தாண்டுகளிலேயே இந்தவருடத்தின் முதல் ஆறுமாதங்கள் எந்தவிதமான அசம்பாவிதமும், வன்முறையும் இல்லாத காலம் என்று சொல்லி வைத்தார்! மனிதனுக்குக் கரிநாக்குப் போல இருக்கிறது! மும்பையில் மூன்று இடங்களில் தீவீரவாதிகள் கை வரிசையைக் காட்டி விட்டார்கள்! பதினெட்டு உயிர்களைக் காவு கொண்டு, நூற்று முப்பத்தொரு பேர் படுகாயம் அடைந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

காங்கிரஸ் ஆளுகிற தருணங்களில் எல்லாம் தொடை நடுங்கிகளாக மட்டுமே இருந்திருக்கிறார்கள் என்பது நேரு காலத்தில் இருந்ததே தொடரும் வரலாறு!  

நிச்சயமாக அடுத்த வருடம் ஜூலை பதின்மூன்றாம் தேதியன்று ஒரு மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தி அணிவகுப்பு நடத்திக் காட்டி விடுவார்கள். முந்தைய மும்பைத் தாக்குதலின் ஆண்டு விழாவைக் கொண்டாடின மாதிரி! இவர்களால் வேறென்ன செய்துவிட முடியும்? அப்சல் குரு, அஜ்மல் கசாப் முதலான தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவீரவாதிகளை இன்னமும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து பாதுகாத்துக் கொண்டிருக்கிற இவர்கள் பதவியில் நீடிக்கும் வரை மும்பைவாசிகள் செத்து செத்துப் பிழைக்க வேண்டியதுதான் போலிருக்கிறது.
மாவோயிஸ்டு தீவீரவாதிகளை ஒழிப்பேன் என்று இவர் சூளுரைத்த சிலநாட்களிலேயே மாவோயிஸ்டுகள் எழுபத்தாறு சி ஆர் பி எப் வீரர்களைக் கண்ணிவெடி வைத்துக் கொன்றதும், தலை குனிந்து பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று முனகிய பழைய கதை நினைவிருக்கிறதா? 2009 டிசம்பரில் தனித்  தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்! ஆந்திராவே தீப்பற்றி எரிய ஆரம்பித்தது! தனித் தெலங்கானா என்ற வாக்குறுதியில் இருந்து பின் வாங்கினார்! இவருடைய அறிவிப்புக்குப் பலியானது, அசைக்க முடியாதவராக இருந்த எம் கே நாராயணன்!

சோனியாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த இந்த மலையாளி, வாலை சுருட்டிக் கொண்டு மேற்கு வங்க கவர்னராக அதிகார இறக்கம் செய்யப் பட்டார்.பானா சீனாவுடனான தனிப்பட்ட விரோதம் தான் இதற்குக் காரணமா என்று கேட்டதற்கு, "உளறிக் கொண்டிருக்காமல்  வாயை அடைப்பதற்காக அவரை (பானா சீனா) யாராவது கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும்" என்று  அமெரிக்கத் தூதரிடம் சொன்னது விக்கிலீக்ஸ் கேபிளில் பதிவாகியிருக்கிறது.

சால்வை அழகரின் வாய்க் கொழுப்பு இன்னும் என்னென்ன அனர்த்தங்களைக் கொண்டு வரப்போகிறதோ?

மும்பை மீது குறிவைத்துத்தாக்குவது தொடர்கதையாகிக் கொண்டிருப்பது, ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைத்தான் காட்டுகிறது. தீவீர வாதத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் காங்கிரஸ் கூட்டணிக்கு எந்தக் கொள்கையுமில்லைதைரியமுமில்லை.எல் கே அத்வானி மும்பைத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பது அரசின் கொள்கையில் உள்ள ஓட்டைகளினாலேயே என்று சொல்லியிருப்பது நியாயமானதே.

பானா சீனா இந்தத் தாக்குதல் குறித்து உளவுத்துறை எந்த விதமான முன்னெச்சரிக்கையும் தரவில்லை; அதனாலேயே இது உளவுத் துறையின் தோல்வி என்று சொல்லிவிடமுடியாது என்று சொல்லி இருக்கிறார். உளறுவாய் என்பதற்கு இதற்குமேல் சாட்சியம் வேண்டுமா என்ன? உளவுத்துறையின் தோல்வி அல்லது வெற்றி என்பது இங்கே முக்கியமில்லை. ஆளுகிறவர்களுடைய தொடைநடுங்கித்தனம் என்பதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை!
காங்கிரசின் புதிய முகமாக சித்தரிக்கப்படும் ராகுல் காந்தி 99 சதவீத தீவீரவாதிகள் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக புதுக் கதை ஒன்றை அளந்து விட்டிருக்கிறார். பானாசீனாவின் அபத்தமான உளறலை விட இது மிகவும் அசிங்கமாக இருக்கிறது.


 
ஐந்துவருடங்கள் ஆன பிறகும் கூட, மும்பை ரயில்களின் மீது தீவீர வாதிகள் நடத்திய தாக்குதல்களில் இறந்த 188 பேர்கள், எண்ணூறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததில், நிவாரணம் வழங்கத் துப்பில்லாத ஐமுகூட்டணிக் குழப்பத்தின் கையாலாகாத கதையை இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.

என்ன செய்யப்போகிறோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
 1 comment:

  1. பானா சீனா பற்றி குரிய கருத்து உண்மை. இந்த ஆளை வேருபேத்த 21 பேர் உயிரை விட்டாங்க ..

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails