சனிக்கிழமை #இட்லிவடைபொங்கல்

சாதி ஒழிப்பு சாதிமறுப்பு என்பதெல்லாம் பகுத்தறிவு #திராவிடங்கள் செய்கிற கண்துடைப்பு வேலைதான் என்பதை திமுக தலைவர் கருணாநிதி  மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில்  எத்தனைபேர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை சாதிவாரியாகப் பட்டியலிட்டு அறிவித்திருக்கிற செய்தி இங்கே  அரசியல்வாதிகளுக்கு  செலக்டிவாக அம்னீஷியா -ஞாபகமறதி வந்து விடுவதை  ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக தினமணி நாளிதழில் அடடே!மதி வரைந்த பழைய கேலிச்சித்திரம் இங்கே!

கருணாநிதி அறிவித்திருக்கிற 60 மாவட்டச்செயலாளர்களில் முக்குலத்தோர் 14 கொங்குவேளாளர், வன்னியருக்குத்தலா  8, நாயுடு முஸ்லிம் 4 முதலியார் 3, உடையார்,பிள்ளைமார், ரெட்டியார், மீனவர், எஸ்சி  சாதியினருக்குத் தலா இரண்டு அப்புறம் செட்டியார்,   யாதவர், நாடார், கிறித்துவ நாடார், கவுடு,,மருத்துவர் , முத்தரையர் சாதிகளுக்குத் தலா 1 ஆக மொத்தம் அறுபதில் ஒரே ஒரு பெண் அப்புறம் முதல் முறையாக  2 ஆதிதிராவிடர்கள் மாவட்டச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்களாம். #திராவிடங்கள் #சாதிஒழிப்பு பற்றி வாய் கிழியப் பேசுவார்களே தவிர சாதிபார்த்துத்தான் எல்லாக் கணக்குகளும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் வேறென்னவாம்? 

இந்த அறிவிப்பில் சொல்ல மறந்தது போட்டி வருமென்கிற இடங்களில் புதுமாவட்டங்களாகப் பிரித்துப் போட்டியாளர்கள்அத்தனை பேருக்கும் இடம் கொடுத்ததும், மாசெக்கள் மாற்றப்படுவார்கள் என்று சொல்லப் பட்டதில் பழைய மாசெக்கள் கைகாட்டினவர்களே வந்திருக்கிறார்கள் என்பது. முக ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை என்றானதில் அழகிரி தவிர, ராசியான மகளுமே கூட சோகத்தில் பெருங்கோபத்தில் என்பதுமே சொல்லப்படாத ஆனால் அத்தனைபேருக்கும் தெரிந்த ரகசியம்!
   
*********


2014 ஆம் வருடம் முழுக்க முழுக்க நரேந்திரமோடியின் வருடமாகவே ஆகிப் போனது.பிறந்திருக்கும் இந்த 2015 ஆவது ராவுல்பாபாவுக்கு ஆறுதல், உற்சாகம் அளிக்கும் வருடமாக இருக்குமா என்பதையே இங்கே 
சந்தேகப்படுகிறார்கள். 1998 இல் காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் அடைந்த தோல்விக்குப் பொறுப்பாக்கி சீதாராம் கேசரியைக் கதறக் கதற வெளியே தள்ளிவிட்டு சோனியா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல ராவுல்பாபாவுக்கும் ஆகிவிடலாம் என்று ஒரு ஊகம். ஆனால் #பாசமலர் பியங்கா தயாராக இருக்கிற மாதிரித் தெரியவில்லை.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி நீண்ட காலமாகிவிட்டது. இன்னும் தேய்ந்து என்னவாகப் போகிறார்கள் என்பது தெரியாமல் சென்ற டிசம்பர் 29 ஆம் தேதி 130வது துவக்க தினத்தைக் கொண்டாடிய காங்கிரஸ்காரர்கள் தவிப்பு. ஆளும் கட்சியாகவேஇருந்து சகல சௌகரியங்களையும் அனுபவித்தவர்கள் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவதெப்படிஎன்பது புரியாமல் தவிப்பதும் இதர உதிரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தும் கூட ஒரு நிலையான உருப்படியான எதிர்க்கட்சியாக உருவாகாமல் இருப்பது அவ்வளவு நல்ல அறிகுறியல்ல. 
******


#PK  அமிர்கான், அனுஷ்கா,சஞ்சய் தத் நடித்து சென்ற மாதம் வெளியான படம்.கடவுள் பெயரைச் சொல்லி எப்படி ஏய்த்துப் பிழைக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் படம் நன்றாகத்தான் இருக்கிறது பாக்ஸ் ஆபீசிலும் முதலிரண்டு வாரத்துக்குள்ளேயே இந்தியாவில் ரூ.278 கோடி வசூலைக் குவித்திருக்கிறது. சிலபல கலாசாரக் காவலர்கள் இது இந்து மதத்தினரைப் புண்படுத்துகிறது அதனால் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் அங்கங்கே கொதித்துக் கொண்டிருக்கிறார்கள், எரிகிற தீயில் எண்ணெய்  ஊற்றுகிற மாதிரி உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்தப் படத்துக்குக் கேளிக்கை வரிவிலக்குப் பொங்கல்  என்பதை விட, படத்தை இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து பார்த்ததாகச் சொல்லியிருப்பதுதான் உச்சபட்சக் கொளுத்தல். இவர் மட்டும் டவுன் லோடலாம் ஜனங்கள்மட்டும் காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்! இந்த 
சிக்குலர்சிங்கங்கள் அடிக்கிற கூத்து இருக்கிறதே.....!


யாரோ புண்ணியவான் யூட்யூப் தளத்திலேயே முழுப்படமும் பார்க்கிற மாதிரி அப்லோட் செய்திருக்கிறார். இன்றைக்கு சனிக்கிழமை! இட்லிவடைபொங்கல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!