இது கடவுள் வரும் நேரம்!


"அறியாமையும், இருளும் கூடின தொடக்கத்தில், பூரணமான நம்பிக்கையே தெய்வீக சக்தியின் நேரடி வடிவமாக, அறியாமையையும் இருளையும் எதிர்த்து வெல்லும் துணையாக நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்ன உரையாடலின் ஒரு பகுதியை ஏற்கெனெவே எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?…என்ற பதிவில் பார்த்திருக்கிறோம்.

மாற்றத்திற்குப் பயந்து, நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்று பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடும் பலவீனம், முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதையும் முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். இதை ஒப்புக் கொண்ட பிறகும் கூட, பழக்கங்களின் பிடியிலிருந்து விடுபடுவது எவ்வளவு கடினமானது என்பதை நம்முடைய சொந்த அனுபவங்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும், செக்கு மாடு திரும்பத் திரும்ப ஒரே வளையத்திற்குள் சுற்றிச் சுற்றி வருவதைப் போல நாமும் பழக்கங்களின் அடிமையாகவே இருப்பத உணர வேண்டுமானால், உணர்வு விழிப்பு நிலையில் இன்னும் கொஞ்சம் கஷ்டப் பட்டு முன்னேற வேண்டும்.

Emptying the cup என்பதாக ஜென் கதைகளில் படிக்கும் போது, வடிவேலு மாதிரி 'அட, ஆமா இல்லே' என்று நம்மைப் பற்றிய ஞானம் கிடைத்து விட்டதாகத் தோன்றும்.

ஆனால் அது அவ்வளவு எளியது இல்லை.

பழைய பழக்கங்களில் [சங்காத்தங்களில் ] இருந்து விடுபட புதியதாக ஒன்று வேண்டும். அதிலிருந்து விடுபட்டால் ஆசையில் இருந்து விடுபட முடியும். ஆசையிலிருந்து விடுபட்டால், சமநிலை அல்லது சம நோக்கு ஏற்படும். அது ஏற்பட்டால், அதுவே இந்த ஜீவனின் உண்மையான விடுதலை ....ஆஹா,இப்பவே கண்ணைக் கட்டுதே என்று வடிவேலு மாதிரி சொல்லத் தோன்றினால், கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேலே படிக்கலாம்.

சென்ற பதிவில் ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தை தான் புரிந்து கொண்டதாகக் கருதும் இரு எதிர்மாறான போக்குகளை பார்த்தோம். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை இருவரும் வழிநடத்திய பூரண யோகம், அதை எட்டுவதற்கான பரிசோதனைக் கூடமாகவே 1926 இல் ஆசிரமம் உருவானதைப் பற்றியும், திரு. மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய No Imposition என்ற தலைப்பிலான கட்டுரையையும் பார்த்தோமல்லவா? அதில் முத்தாய்ப்பாக திரு மாதவ் பண்டிட் சொல்கிற இந்த வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு மேலே பார்ப்போம்.

“For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”


பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்கிறார்களே அது இது தான். இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தான்.

இறைநிலை நம்முடைய போக்கில் ஒருபோதும் தலையிடுவது இல்லை. ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நேர் எதிரான பாதைகள் பிரிவதை, அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை இறையருள் நமக்கு வழங்கியிருக்கிறது. தேர்ந்தெடுத்தது எதுவோ அதற்குரிய வகையில் அடுத்தடுத்த அனுபவங்கள், படிப்பினைகள் என்று நம்மை, நமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. விளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையை, அதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.

Yahoo! Groups இல் In Search of The Mother என்ற மடலாடற் குழுவைப் பற்றி முன்னமேயே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு நண்பர், அவருக்குக் கிடைத்த ஒரு மின்னஞ்சலை வைத்து ஸ்ரீ அன்னையின் பெயரால் நடத்தப் படும் த்யான மையங்களைப் பற்றி சற்று அதிர்ச்சியோடு எழுதியிருந்தார்.

“After going thru the blog, I was disgusted with the mere thought of
these centers trying to extract money from innocent people in the name
of Mother. It is like a commercial bazaar of give & take of
commodities in the name of spirituality.


இதைப் படித்த பிறகு, அந்த வலைப் பதிவையும் பார்த்தேன்

இது ஒன்றும் புதியது அல்ல.
ஆன்மிகம் பேசினால் காசு கிடைக்கும் என்கிற நிலையில், ஆன்மீகத்தைக் கூறு கட்டி விற்பனை செய்யும் ஆசாமிகள் நிறையவே இங்கு உண்டு.
இங்கே மற்றும் இங்கே

சொடுக்கிப் பாருங்கள், என்னவெல்லாம் சொல்கிறார்கள் ?!

எல்லாக் காலங்களிலும், இது மாதிரி போலிகள், இரண்டும் கெட்டான்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். சூரிய உதயம் ஆவதற்கு முன்னால், இருளும் இல்லாமல் ஒளியுமில்லாமல் ஒரு இரண்டும் கெட்டான்தனமான "கருக்கல்" என்று சொல்கிற நிலை இருப்பது போல, இந்த மாதிரி
"ஆர்வக் கோளாறுகள் " இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த மேற்கு மாம்பலம் த்யான மையங்கள் இதே மடலாடற்குழுவில் ஏற்கெனெவே செய்தி எண் 1138, 2153,2155 மற்றும் பல தொடர் செய்திகளில் விளம்பரப் படுத்தப் பட்டது தான். படிப்பினை: இனிமேலாவது இது போன்ற செய்திகள் சரிபார்க்கப் பட்ட பிறகே வெளியிடப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

திரு கர்மயோகி அவர்கள் 1980 களில் அமுதசுரபி மாத இதழில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ
அன்னையைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகு, தமிழ்நாட்டில் பல இடங்களிலும் ஸ்ரீ அன்னை த்யான மையங்கள் என்று ஏற்படுத்தி, கூட்டு தியானம், மலர் வழிபாடு, ஸ்ரீ அரவிந்தர் அன்னை எழுதிய நூல்களைப் படிப்பது என்பது பரவலாகியது உண்மை.

இது fast food காலம், எதுவானாலும் தொடர் முயற்சியோ, பொறுமையோ இல்லாமல், இந்த மாதிரி த்யான மையங்களுக்குப் போனாலே ஒரு அற்புதம் நிகழ்ந்து விடும் என்கிற மாதிரி ஒரு மாயையும் இந்த மாதிரி த்யான மையங்களில் ஏற்படுத்தப் பட்டதும்,. ஆசிரமத்தின் அங்கீகாரம் எங்களுக்குத் தேவை இல்லை என்று வெளிப்படையாகவே இங்கே சில பிரபலங்களால் [?] சொல்லப் பட்டதும் நான் நேரடியாகவே பார்த்த அனுபவம்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.sincere11 என்கிற பெயரில் நிறைய குற்றச் சாட்டுக்களைச் சொல்லுகிற இந்த வலைப் பதிவரிடத்தில் sincerity முழுமையாக இருப்பதாகவும் தெரியவில்லை. இந்தப் பெயரில் blogger இல் இரண்டு வலைப் பதிவுகள் வைத்திருக்கிறார். ஒன்றில் எந்த வலைப்பதிவும் இல்லை. ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மையங்கள் என்ற தலைப்பில் ஒரே ஒரு பதிவு மட்டும் இருக்கிறது. ஒரு மொட்டைக் கடிதத்திற்கும் இந்த வலைப் பதிவிற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னை ஒரு இடத்தில் தன்னுடையஆசீர்வாதம் மிக ஆபத்தானது என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். அது இறைவனது காரியத்தை நடத்துவதற்காகவே, முழு வலிமையோடும் சக்தியோடும் தரப்படுகிறது, வெற்றி தோல்வி என்கிற அளவீடுகள் இல்லாத, ஒரு உள்ளார்ந்த முன்னேற்றத்திற்காகத் தரப்படுவது, எப்படியாகிலும் நன்மையையே அளிக்க வல்லது என்று சொல்கிறார்:

"My blessings are very dangerous. They cannot be for this one or for that one or against this person or against that thing. It is for ....or, well, I will put it in a mystic way:

It is for the Will of the Lord to be done, with full force and power. So it is not necessary that there should always be a success. There might be a failure also, if such is the Will of the Lord. And the Will is for the progress, I mean the inner progress. So whatever will happen will be for the best."


-The Mother,


21 January, 1960

முதலில் சொன்னது போல, ஒரு தரப்பு, தத்துவ விசாரம் செய்து நான் சொல்வது தான் சரி நீ சொல்வது தப்பு என்று அடித்துக் கொண்டிருக்கிற அதே நேரம், மோடி மஸ்தான் தாயத்து மாதிரி, இந்த தாயத்து என் 'குர்நாதர்' கொடுத்த தாயத்து..வாங்கிக் கையிலே கட்டு, நீ நெனச்சதெல்லாம் நடக்கும் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிற ரீதியில் இன்னொரு தரப்பும் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. தொழிற்சங்கம், இடதுசாரித்தனம், நாத்திகம் என்று இருந்தவனை ஒருகட்டத்தில் அதை விட்டு வெளிவரச்செய்தபோது முதலில் ஈர்த்தது இந்த மாதிரிக் கூவி கூவி அருளை வியாபாரம் செய்தவர்கள் தான். "நாங்கதேன் ஒரிஜினல் கம்முனிஸ்டு மத்ததெல்லாம் டூப்பு" இப்படி அடித்துக் கொள்கிறவர்கள் மத்தியில் கொஞ்ச நாள் வாழ்ந்ததாலோ என்னவோ, இந்த மாதிரி தாயத்து விற்கிறவர்களை அடையாளம் கண்டு கொள்வது ஒன்றும் கடினமாக இல்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னை மிகத் தெளிவாகவே சொல்கிறார்:

"முன்னெப்போதும் அறிந்திராத ஒரு விசேஷமான, உன்னதமான தருணத்தில் இருக்கிறோம். ஒரு புதிய உலகத்தின் பிறப்பைக் காணும் தருணத்தில் இருக்கிறோம். அதன் இருப்பை உணருகிறவர்கள் வெகு சிலரே ஆயினும், அது இருக்கிறது. அதை நோக்கிச் செல்வதற்கான பாதையை நாம் கண்டாக வேண்டும், ஏனெனில் இது வரை அதில் எவரும் போனதில்லை, கண்டதில்லை.பாதையை கண்டு பிடிப்பது ஒரு உன்னதமான சாகசம். உங்களில் சாகசத்தை விரும்புகிறவர்கள் இருக்கக் கூடும். அவர்களை நான் அழைக்கிறேன் "ஒரு மாபெரும் சாகசத்திற்கு உங்களை வரவேற்கிறேன்."

The Great Adventure

"We are in a very special situation, extremely special, without precedent.

We are now witnessing the birth of a new world; it is very young, very weak--not in the essence but in its outer manifestation-not yet recognised, not even felt, denied by the majority. But it is here. It is here, making an effort to grow, absoluetely sure of the result. But the road to it is completely new road which has never before been traced out-nobody has gone there, nobody has done that! It is a beginning, a universal beginning. So it is an absolutely unexpected and unpredictable adventure.

There are people who love adventure. It is these I call, and I tell them this: "I invite you to the great adventure."

It is not a question of repeating spiritually what others have done before us, for our adventure begins beyond that. It is a question of a new creation, entirely new, with all the unforeseen events, the risks, the hazards it entails-a real adventure, whose goal is certain victory, but theroad to which is unknown and must be traced out step by step in the unexplored. Something that has never been in this present universe and that will never be again in the same way. If that interests you...well, let us embark. What will happen to you tomorrow-I have no idea.

One must put aside all that has been foreseen, all that has been devised, all that has been constructed, and then...set off walking into the unknown. and-come what may! There."

The Mother,

10, July 1957

CWM Vol. 9 pp 150-151

இது கடவுள் வரும் தருணம். விழிப்பாக இரு என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை

கேள்விகள்-பதில்கள் என்ற தலைப்பில் 1957 ஆம் வருடம் ஸ்ரீ அரவிந்த அன்னை உரையாடல்களின் தொகுப்பில் ஒரு சிறு பகுதியை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோமா?
ஸ்ரீ அரவிந்த அன்னையின் அழைப்பை, அதன் உண்மையான பொருளில் உணர்ந்து கொள்ள ஸ்ரீ அன்னையே, உனது அருளையே வேண்டி நிற்கிறேன்:

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!