சும்மா வந்ததில்லை சுதந்திரம்......!

"The best way to express one's gratitude to the
Divine is to feel simply happy.

With my blessings"

The Mother

ஆகஸ்ட் 15!

இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் என்று எல்லோருக்கும் தெரியும்! நாம் மறந்தாலும், குடும்பத் தொல்லைக் காட்சிகளில் நாள் முழுதும் எங்கள் நிகழ்ச்சிகளைப் பாருங்கள், சுதந்திரத்தைப் போற்றுங்கள் என்று கூவிக் கூவி நினைவு படுத்திக் கொண்டிருப்பார்கள். ஞாயிற்றுக் கிழமை பார்த்து வந்து தொலைத்தது, ஒரு நாள் விடுமுறை குறைந்து போயிற்று என்று அலுவலகங்களில் வெட்டி முறிப்பவர்கள் அலுத்துக் கொள்வார்கள்.

சும்மா வந்ததில்லை இந்த சுதந்திரம்!சுதந்திரம் என்பது பிறர் கொடுத்து, இலவசமாக வாங்குவது அல்ல!

சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஆன்மீக ஒளியாகவும் விளங்குகிற ஸ்ரீ அரவிந்தருடைய பிறந்த நாளும் இந்த ஆகஸ்ட் 15 தான்!

ஸ்ரீ அரவிந்தரைச் சரண் அடைகிறேன்! ஸ்ரீ அரவிந்த அன்னையைச் சரண் அடைகிறேன்!



2 comments:

  1. சும்மா வரவில்லை சுதந்திரம்.....சரி, எதைக் கொடுத்து சுதந்திரம் வாங்கி இப்பொழுது எதை இழந்து நிற்கிறோம். சுதந்திர தினத்துக்கு விடுமுறை விடுவதை விட வித்யாசமாக ஏதாவது ஒரு வகையில் கொண்டாட ( கொண்டாட என்பதை விட நினைவில் வைத்துக் கொள்ள) ஏதாவது ஆரம்பம் இருக்க வேண்டும். எந்த அரசாவது செய்யுமா?

    ReplyDelete
  2. வாருங்கள் ஸ்ரீ ராம்!

    ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பம்..?! ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே என்ற பாரதி வாக்கிலேயே அது இருக்கிறது. நமக்குள் ஒற்றுமை நீங்கின ஒரே காரணத்தினால், படையெடுத்து வந்த முஹலாயர்கள், படை எதுவுமில்லாமலேயே வியாபாரிகளாக வந்து நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்கள் என்ற வரலாற்றைப் படித்துப் பார்த்தாலேயே, நமக்குத் தேவை முக்கியானது எது என்பதற்கு விடை வந்து விடும்!

    சமீபத்திய நிகழ்வுகளைப் பார்த்தால், சாதி, இலவசங்கள்,சலுகைகள் என்ற போர்வையில் அதே பிரித்து வைத்து ஆளும் தன்மை தொடர்வதும் புரியும்!

    சுதந்திரம் என்பது, விழிப்போடிருந்து அதைப்பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நீடிக்கக் கூடியது! சுதந்திரம் என்பது தனக்கு மட்டுமே என்றில்லாமல், மற்றவர்களுடையதையும் மதிக்கத் தெரிந்த ஒரு பக்குவம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!