ஒரு பிராண்ட் உருவாகும் விதம்........!


ஒரு புது விஷயத்தைப் பார்க்கிறோம். அது ஒரு பிராண்டாக மாறுவதற்கு என்னென்ன அவசியம்?

எல்லோருக்கும் அது ஏற்கத் தகுந்ததாக அல்லது ஒத்து வரக்கூடியதாக எடுத்த எடுப்பிலேயே அமைவது மிகவும் அபூர்வம். உண்மையைச் சொல்லப் போனால் அது  அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த ஒரு புதுமையையும் மிகக் குறைந்த சதவீத மக்கள் மட்டுமே உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு பிராண்ட் அல்லது சேவையை அறிமுகப் படுத்தும் போதே அது அத்தனை பேராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கூட ஒரு விதமான தவறான கண்ணோட்டம் அல்லது அடிப்படை உண்மையை.புரிந்துகொள்ளத் தவறுவதால் தான். உண்மையில் அப்படி நிகழ்வதே இல்லை!

அப்படியானால், பெரும்பான்மையான ஜனங்களைக் குறிவைத்து எந்த பிராண்டும் செயல்படுவது இல்லையா? பெரும்பான்மையான ஜனங்களின் ஆதரவு இருந்தால் அல்லவா ஒரு பிராண்ட் நீடித்து நிற்க முடியும் என்று கேட்கிறீர்களா? ஒரு பிராண்டாக உரு மாறுவது என்பது, பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதில் தான் போய் முடிகிறது.

உண்மையைச் சொல்வதென்றால், ஒரு வெற்றிகரமான புது பிராண்டை சந்தைப் படுத்துகிறவர்கள், விளம்பரம் செய்பவர்கள் பெரும்பான்மையினர் கவனத்தை ஈர்ப்பதற்கு உடனடியாக எந்த முயற்சியையும் செய்வதில்லை. புதுமையை விரும்புகிற, ஏற்றுக் கொள்கிற ஒரு சிறு சதவீத மக்களை மட்டுமே குறி வைக்கிறார்கள். அவர்களிடம் தங்களுடைய ப்ராண்டைக் கொண்டு சேர்ப்பதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள்.

அப்படியானால், அந்த பெரும்பான்மை...?

அவர்கள் தானாகவே தேடி வருவார்கள்!

அதை விட்டு விட்டு, எல்லோரையும் ஒரே நேரத்தில் குறிவைத்து செய்யப் படுகிற முயற்சி, நம்மூர் சோஷலிசம் மாதிரி நீர்த்துப் போனதாக அல்லது நீர் மேல் எழுதி வைத்த எழுத்துப் போலத் தான் இருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!



செய்திகள்....பின்னணி விமரிசனத்துடன்! சில வரிகளில்!

பேசு இந்தியா பேசு! அலுப்புடன் எதிரி அவனாகவே ஓடிப்போகும் வரை ....!


காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க ஒரு எட்டு அம்சத் திட்டம், பாது காப்புக்கான அமைச்சரவைக்  குழுவினால் முன்வைக்கப் பட்டுருக்கிறது. முப்பதே நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது.பானா சீனா இதைத் தெரிவித்துப் பேசுகையில், இது விஷயமாக எல்லாத் தரப்புடனும்  அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். கல் எறிந்ததற்காக அல்லது அதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டதற்காகக்  கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்!



சால்வை அழகர் பானா சீனா தலைமை ஏற்றுப்போன குழுவால் என்ன செய்ய முடியும் என்று நேற்றைய  பதிவில் வெள்ளிக் கிழமைக் கேள்வியாக இருந்தது அல்லவா! இதற்கு பதிலாக,  பேசத் தான் முடியும், தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்போம் என்று இந்த அமைச்சர் சிகாமணி சொல்வதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

சால்வை அழகர் சொல்ல விட்டுப் போனதும் ஒன்று இருக்கிறது! தடையை மீறி, ராணுவத்தின் மீது கல் எறிந்தது, வன்முறையில் ஈடு பட்டவர்களை விடுவித்ததோடு, அடுத்த முறை அவர்கள் இதே மாதிரி செயல்களில் ஈடுபடும்போது அரசு செலவிலேயே கல் முதலானவைகள்  வழங்கப்படுமா இல்லையா என்பது தான் அது!





**********

ராணி மகா ராணி! ஊதாரி ராஜ்ஜியத்தின் ராணி!


பிரிட்டிஷ் ராணி எலிசபெத், அரச குடும்பத்தினர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது. இங்கே திராவிட முன்னேற்றக் கழகம் மாநில ஆளுநர் பதவி எதற்கு என்பதை ஆட்டுக்குத் தாடி தேவையா என்று அந்த நாட்களில் கேட்டதைப் போல அல்லாமல் (இப்போது கேட்பார்களா என்ன ?!), பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர், பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு வழங்கப்படும் சலுகைகள்,  பெயரளவிற்கே என்றாலும் கூட அரசின் தலைமைப் பொறுப்பு  எல்லாவற்றையும் ஒழித்து விட வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், பழம்பெருமை பேசுவதிலேயே ஊறித் திளைத்த  பிரிட்டிஷ் மட்டைகள்  மாற்றத்திற்குத் தயாரா இல்லையா என்ற கட்டத்திற்கு இன்னமும் வரவில்லை.

பத்து லட்சம் பிரிட்டிஷ் பவுன்டுகளுக்கு மேல் மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், அரசி தரப்பில் இருந்து , ஏழைகளுக்கு உதவுவதற்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து கொஞ்சம் "நிதி ஒதுக்கீடு"  செய்ய முடியுமா ன்று கேட்கப்பட்ட செய்தி வெளியாகி இருக்கிறது. பிரிட்டிஷ் ராணி அவ்வளவு ஏழையாம்!

அதுபோக பிரிட்டிஷ் ராணிக்கு அரசு அளிக்கும் மானியமான மூன்று கோடியே எண்பத்திரண்டு லட்சம் பவுண்டுகளை எப்படி நிர்வகிப்பது என்பதைக் கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட ஷரத்துக்களைக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தில் ராணி எலிசபெத் கைச்சாத்திட்டு ஒப்புக்கொள்ள  வேண்டி வந்து விட்டதாம்! அரசியும் அரண்மனையும் எந்த அளவுக்கு வரிப்பணத்தை அனுபவிக்கின்றனர் என்பதைக் கூடப்  பொது ஜனங்கள் எவரும் தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்று எவரோ மிகக் கவனமாக இந்த விஷயத்தை மூடி மறைக்க முயன்றிருக்கிறார்கள். நம்மூர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாதிரி ஒன்றினால் விவகாரம் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது!நம்மூர் என்றால், தகவல்தேர்தல் கமிஷன் மாதிரி  அறியும் சட்டத்தையே மூன்று கமிஷனர்கள் போட்டு ஒன்றுமில்லாததாக ஆக்கி வைத்திருப்பார்கள்(இப்போது மூன்று கமிஷனர்கள் என்று இல்லாமலேயே அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது)

இங்கே அதைப் பார்க்க:  Page 1


| Page 2
| Page 3

முதலாம் சார்லஸ் என்ற பிரிட்டிஷ் அரசன் சொன்னானாம்! "அரசர்கள் கடவுளைத் தவிர எவருக்கும்  பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல!"

ஜனங்களுடைய குரலுக்கு செவி சாய்க்காமல் பொறுப்பில்லாமல் இப்படிப் பதில் சொன்னதும் ஜனங்களுடைய கோபம் பொங்கி எழுந்ததில் அவனுடைய தலையே போய் விட்டது என்பதை பிரிட்டிஷ் சரித்திரம் சொல்கிறது.

இந்த செய்திக்குப் பின்னூட்டமாக போனி ப்ளைர் என்ற பெயரில் வந்திருப்பது இப்படிச் சொல்கிறது!

"Conduct a referendum on the monarchy. Those that want the monarchy pay for them.

Other options are:

 
Romanov them i.e. dispose of them as the Russians did.
 

Sell them on e-bay, then they will probably be bought back by their cousins in Germany or some rich American.

Whatever happens we need to reclaim our money from these thieves. "


அங்கே பிரிட்டிஷ் ராணி! இங்கே இந்தியாவிலும் அதே மாதிரி ஊதாரித் தனமாக செலவு செய்யும் அமைப்பும் ஒன்று இருக்கிறது!
************

வெள்ளை யானைக்கும், ராணுவ ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்?


மியான்மரில் இரண்டு நாட்களுக்கு முன்னால் வெள்ளை யானை ஒன்று பிடிபட்டிருக்கிறது! இது இந்தப் பத்தாண்டுகளில்  இப்படி பிடிபட்ட வெள்ளை யானைகளில் ஐந்தாவது ! வடக்கு மூங்டா பிரதேசத்தில் பிடிபட்ட இந்தப் பெண்யானை, தற்போது யாங்கோனில் (ரங்கூன்) உள்ள  விசேஷமான பூங்காவில் வைக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் பத்தாண்டுகளில் தொடர்ந்து ஐந்து வெள்ளை யானைகள் பிடிபட்டிருப்பது நாட்டில் நிலையான அரசு, அமைதி, வளம் நிலவும் என்ற தொண்டு தொட்டு இருந்து வரும் நம்பிக்கையை, மியான்மரில் காட்டாட்சி நடத்தி வரும் ராணுவக் குழு பரப்பி வருகிறது. ஆயிரம் யானைகளில் அதிசயமாக ஒரு யானை முழுக்க முழுக்க வெள்ளையாக இருக்கும். இப்படி வெள்ளையானை இருப்பது நாட்டில் அமைதி, ஸ்திரத் தன்மை, செல்வம் கொழிப்பதற்கு காரணமாக இருக்கும் என்ற நம்பிக்கை, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் முதலான ஆசிய நாடுகளில் பரவலாக இருக்கிறது. இந்த மாதிரி அபூர்வ ரக வெள்ளையானைகளை அரச குடும்பமே பராமரித்து வளர்ப்பதும் உண்டு.

மியான்மர் ராணுவ ஜண்டா கூட இந்த பழைய நம்பிக்கையில் இருந்து விடுபடவில்லை! வருகிற நவம்பரில், தேர்தல் நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும், வெற்றி பெறக் கூடிய ஆங் சுயி கட்சியை தடை செய்து விட்டு, தாங்கள் நிறுத்துகிற டம்மிகளைத் தேர்தலில் ஜெயிக்க வைக்கிற வித்தையை ஒத்தி பார்த்த பிறகும் கூட,மியன்மார்  ராணுவ ஜண்டாவுக்கு இந்த வெள்ளையானை ஒரு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது என்று  வேண்டுமானால் சொல்லலாமா!


**********
அப்புறம், காமன் வெல்த் கேம்ஸ் பற்றி மணிசங்கர ஐயர் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்!




மணிசங்கர் ஐயர் வெளிப்படையாகவே ஒரு கேள்வியை கேட்கிறார். இந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றியடையுமா என்பது பிரச்சினையே அல்ல! என்ன செலவு இதற்காக செய்திருக்கிறோம், என்ன முக்கியமான விஷயங்களை அப்படியே விட்டு விட்டு, இந்த "வெற்றியை" சம்பாதித்து எதை வைத்து அளக்கப் போகிறோம்? எழுபதாயிரம் கோடி ரூபாய்களை அள்ளி இறைத்து  என்ன பெறப் போகிறோம்?

கல்மாடி பதில் சொல்ல மாட்டார்! கம்முனு இருக்கும் மன்மோகன் சிங்கும் சொல்ல மாட்டார்!

நீங்கள் தான் சொல்லவேண்டும்! காங்கிரஸைத் தூக்கி எறிந்து, சரியான பதிலைச் சொல்ல வேண்டும்!

ஸ்ரீராம் இது உங்களுக்கும் தான்! கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!




வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! ஒரு இந்தியக் கனவு....!

தேசத் துரோகிகள்! சீறும் தினமணி  தலையங்கம்!

"இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக  புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ  70,000 கோடி விரயமாக்கப் பட்டிருக்கிறது.

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப் போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?

தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.

முதலில்  655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள்  11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார்  17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும் பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ  70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்  961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம்  669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம்  262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம்  149 கோடி என்று ஏறத்தாழ  44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு  85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு  80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.

961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை. அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கின்றன.

இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக் குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே   வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.  70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று?

இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.


எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப் படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின் கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?    இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலை
ழுத்தாகி விட்டது!"


தினமணி தலையங்கத்தில் சீறியிருப்பதில் தவறேதும் இல்லை!

நெஞ்சு பொறுக்குதிலையே-நெஞ்சு
பொறுக்குதிலையே-இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்

என்று பாரதி குமுறியதைப் போல நாமும் ஏன் குமுறவில்லை என்பது தான் இன்றைக்கு  வெள்ளிக் கிழமைக் கேள்விகளில், முதலாவது! முக்கியமானது!

ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின், இந்த இரண்டாவது இன்னிங்ஸில், இரண்டாவது வருடத்தில் நாட்டை எந்த நிலைமைக்குக்  கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!


ஜம்மு காஷ்மீரில் நூறு நாட்களையும் தாண்டி சட்டத்தை மதிக்காமல் கல்லெறிவது, வன்முறையைத் தூண்டுவது, ராணுவத்தை வம்புக்கு இழுப்பது, பிரச்சினையைப் பெரிதாக்கிக் கொண்டே போவது என்று போய்க் கொண்டே இருக்கிறது. அறுபத்து இரண்டு ஆண்டுகளாக  அணைக்கப் படாமல் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையை, சர்வ கட்சிக் குழுவைக் கொண்டு, அதுவும் யார் தலைமையில் என்று நினைக்கிறீர்கள், சால்வை அழகர் பானா சீனா தலைமையிலாம்! 

என்ன முடிவு, என்ன தீர்வு கிடைத்து விடும் என்று நினைக்கிறீர்கள்?

ராஜசேகர ரெட்டி விபத்தில் போய் விட்டார்! மிகவும் தாமதமாக, இந்திரா காண்டி ஃ பார்முலாவைக் கையாள ஆரம்பித்த நேரமும் சரியில்லை! உள்ளூர்த் தலைவர்கள் எவரும் வேர் கொண்டுவிடாமல், மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, செல்வாக்கைக் கரைப்பது, தன்னைக் காப்பற்றிக் கொள்ள
இந்திரா காண்டி கையாண்ட அந்த நாளைய தந்திரம்! சென்னா ரெட்டி முதல் எஸ் எம் கிருஷ்ணா என்று இந்தப் பட்டியலில் கரைந்து போனவர்கள் எண்ணிக்கை ஏராளம்! ரோசையாவை கொண்டு வந்து ஆந்திர முதல் அமைச்சர் க்கினார்கள்! ராசையா நல்லவர், வல்லவர் என்பதற்காக இல்லை! ராஜ சேகர ரெட்டியின் வாரிசுகள், அசைக்க முடியாத சக்தியாக ஆந்திரத்தில் வளர்ந்து விடக் கூடாது என்ற பயத்தில் மட்டுமே என்பது வெளிப்படை.

தெலங்கானா பிரச்சினையில் பானா சீனா தனி மாநில அறிவிப்பை முதலில் செய்து விட்டு, கலாட்டா வந்ததும் ஓடி ஒளிந்து கொண்ட  விளையாட்டில் அது வரை ஆஸ்தானத்தின் அசைக்க முடியாத ஆலோசகராக இருந்த எம் கே நாராயணன்  மேற்கு வங்க கவர்னராகத் தூக்கியடிக்கப் பட்டார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்தத் தலைமைக்கு யார், தெலங்கானா உண்டா இல்லையா என்ற பிரச்சினையில் காங்கிரஸ் செய்த குழப்பத்தில் வீணானது.எம் கே நாராயணன் என்ற பெயராவது எவருக்காவது இப்போது நினைவிருக்கிறதா?


பெயருக்குத் தான் மன்மோகன் சிங் பிரதமர்! பிரதமர் பதவி
வலிய வந்தும் அதை மறுத்த நேரு குடும்பத்துத் தியாக சிகரமான, மேல் நாட்டு மருமகளின் கண்ணசைவுக்கு  ஆடும் வெறும் டம்மிப் பீஸ் தான் என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த சிதம்பர ரகசியமாவது இந்த நாட்டின் பிரதமருக்குத் தெரிந்திருக்கிறதா?

காங்கிரஸ் தொட்ட ஏதாவது ஒரு விஷயமாவது உருப்பட்டிருக்கிறதா? தேர்தல் கமிஷனில் இருந்து, எந்த ஒரு அமைப்பையும் உருப்படியாகச் செயல்
பட விடாத ஒரு கட்சி, தனக்காகவும் புரிந்து கொண்டு பொறுப்பாகச் செயல்படத் தெரியாத ஒரு கட்சி, அதற்கு ஒரு ஆட்சி, இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த தேசத்தின் ஜனங்கள், கைப்புள்ள வடிவேலு மாதிரியே அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தும் வலிக்காத மாதிரி இருக்கப் போகிறார்கள்?

ஊழல் மட்டுமே இங்கே பேசப்பட வேண்டிய விஷயமில்லை! செயல் திறனற்ற, செயல்படாத ஒரு டம்மி ஆட்சி தேவைதானா என்பது தான் இப்போது முக்கியமான கேள்வி!







தொடர்புடைய இன்னொரு பதிவாக ........

கக்கு மாணிக்கம் நேற்றைக்கு இது தொடர்பாக ஒரு பதிவை இங்கே எழுதியிருக்கிறார்!


உங்கள் கருத்தைத் தான் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



 

சண்டேன்னா மூணு! படங்கள்!செய்திகள்!விமரிசனங்கள்!

"நான் என் கண்ணால் பார்த்தேன்!" 

அப்படிக் கண்ணால் பார்த்தது  ல்லாம் நிஜமாகி விடுமா?

உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ன செய்வது?  


"கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரித்து றிவதே மெய்!" என்று   பெரியவர்கள் அதனால் தான் சொல்லி வைத்து இருக்கிறார்கள்! இங்கே கீழே உள்ள படத்தைப் பாருங்கள்! ஒரே ஒரு கண் தானே! அதற்கு இப்போது என்ன வந்தது என்கிறீர்களா?


 

இங்கே க்ளிக்கிப் பாருங்கள்! 

இரண்டும் ஒரே படம் தான்! ஆனால் அந்த ஒரே கண்ணைத் தான் பார்த்தீர்களா அல்லது வேறெதையாவது பார்த்தீர்களா?

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு விளம்பர நிறுவனம், ஜான்சன் அண்ட் ஜான்சனுக்காக இந்த விளம்பரத்தை உருவாக்கியிருக்கிறது! இணையத்தில் உங்கள் குழந்தைகள் என்னென்னவெல்லாம் பார்ப்பார்கள், பெற்றோர்களே கவனம் என்று ஒரு எச்சரிக்கைச் செய்தியாக இந்த விளம்பரம் உருவாக்கப் பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் எச்சரிக்கைச் செய்தியையா பார்ப்பார்கள்..........?!

oooOooo

"தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்"  "தண்ணீரை வீணாக்காதீர்கள்" "தண்ணீரை அசுத்தப் படுத்தாதீர்கள்"  


இப்படியெல்லாம் நிறைய இடங்களில் போர்டு பார்த்தாயிற்று! யாராவது, இந்த போர்டில் எழுதி ருப்பதைக் கொஞ்சமாவது மதித்து, அட்லீஸ்ட் ஒரு சொட்டுத் தண்ணீரையாவது  மிச்சப் படுத்தி ருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்ன!


 
யான் லு டாட் காம் 
இந்த வலைத் தளத்தில் ஒரு தங்க மீனை மிதக்க விட்டு, ஒரு கைகழுவும் தொட்டியை வித்தியாசமாக வடிவு அமைத்து இருக்கிறார்கள்! பாவப்பட்ட மீன் தொட்டி கம் கைகழுவும் டத்தை நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும், நீர்மட்டம் வற்றி அந்த தங்க மீன் இறந்து விடுமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாக இருக்கும் இந்த வடிவமைப்பு, நாம் விரையம் செய்யும் தண்ணீர் எப்படி இந்த உலகில் உள்ள மற்ற ஜீவராசிகளை (சக மனிதர்களையும் சேர்த்துத் தான்) பாதிப்பதாக இருக்கிறது என்பதை யோசிக்க வைக்கிறது!

நிலத்தடி நீர் மட்டம் வேக வேகமாகக் குறைந்து, தண்ணீருக்கே கஷ்டப்படும் நிலையில், இந்த மாதிரி, க்ரியேடிவான சிந்தனைகள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. 


புரிந்தால் சரி!

oooOooo

"நான் இங்கிலாந்தை மூன்றாவது உலக நாடு என்று ஒருதரம் சொன்னால், நூறு தரம் சொன்ன மாதிரி"
என்ற மாதிரி ஒற்றை விரலை நீட்டி நடக்கும் காஸ்பர்


வாய்க் கொழுப்பு என்றால் அதை வாடிகன் ஆ''சாமிகளிடம் தான் நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்! போப் அரசர் இங்கிலாந்து விஜயத்தில் இருக்கிறார்! ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஏற்கெனெவே இங்கிலாந்தில் பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருந்ததை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில்
பார்த்திருக்கிறோம்!

"
போப் பெனடிக்ட் எங்கே போனாலும், வில்லங்கம் அங்கே முன்னால் போய் ஆஜராகி விடுகிறது!


இங்கிலாந்துக்கு இருபத்தெட்டு வருடம் கழித்து, வருகிற செப்டம்பர் மாதம்  ஒரு போப் விஜயம் செய்ய இருக்கும் தருணத்தில், கொஞ்சம் நக்கலும் நையாண்டியும் கலந்தமாதிரியான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யோசனை செய்த விவரம்

, அது வெளியே தெரிய வந்ததும், பிரிட்டிஷ் அரசு வாடிகனிடம் வருத்தம் தெரிவித்ததும் முழு விவரங்களுக்கு  மேலே லின்கைச் சொடுக்கிப் பாருங்கள்!


அப்படி என்ன வில்லங்கமான நிகழ்ச்சி நிரல், யோசனை என்று கேட்கிறீர்களா?

கருச் சிதைவு, ஓரினத் திருமணம் இவற்றை கத்தோலிக்க சர்ச் கடுமையாக எதிர்த்து வருகிறது! 



போப் வரும்போது, ஓரினத் திருமணம் (ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும்) ஒன்றை ஆசீர்வதித்து நடத்துவது, 


போப்  பிராண்டுடன் கருத்தடைக்கான காண்டம்களை வெளியிடுவது, 


ஒரு மருத்துவ மனையில் கருத்தடைக்கான வார்டைத்  திறந்து வைப்பது 


உள்ளிட்ட யோசனைகளை ப்ரெயின் ஸ்டார்மிங் என்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதில், ஒரு அரசு ஊழியர் யோசனைகளாக சமர்ப்பித்த விவரம்  வெளியே கசிந்து, பிரிட்டிஷ் அரசுக்குத் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது! சண்டே டெலிகிராப் பத்திரிகையில் நேற்றைக்கு இந்த செய்தி வெளியானதும், வாடிகனில் உள்ள பிரிட்டிஷ் தூதர் போய் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தாராம்!


போப்பின் வருத்தம் தீர்ந்ததா? அல்லது பாதிரி சில்மிஷப் பிரச்சினை தீர்ந்ததா?"

வாய்க் கொழுப்பு எங்கே வந்தது? போப் விஜயத்தில் அவரோடு கூட வரவிருந்த ஜெர்மானிய கார்டினல் வால்டர் காஸ்பர், "இங்கிலாந்துக்கு வருவது ஏதோ ஒரு மூன்றாவது உலக நாட்டுக்கு வருவதைப் போல இருக்கிறது" என்று உளறப் போக ஏற்கெனெவே அரசு முறை விஜயமாக போப்பை, மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து செலவு செய்து வரவேற்க வேண்டுமா என்று கொதித்துக் கொண்டிருப்பவர்களை இன்னமும் கொதிநி
லைக்குக் கொண்டு போய்விடும் என்று முன்னெச்சரிக்கையாக, "உடல் நலம் சரி ல்லாததால்" காஸ்பர் திட்டமிட்டபடி போப்புடன் கூட வர முடியவில்லையாம்!


பாதிரி சில்மிஷங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகிறார்கள்! உண்மை வேண்டும், நியாயம் வேண்டும், தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வாடிகனை விரல் நீட்டிக் குற்றம் சுமத்துகிறார்கள்
!  செய்தி இங்கே


ரிச்சர்ட் டாகின்ஸ் முதலான நாத்திகர்கள், ஐந்து மாதங்களுக்கு முன்னால், போப் இங்கிலாந்துக்கு வரும்போது மனித இனத்துக்கு எதிராகச் செயல் பட்டதற்காகக் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்

என்ற மாதிரி ஒரு பிரசாரத்தைத் தொடங்கினார்கள்.

போப் விஜயம் மாதிரி, அதுவும் பிசுபிசுத்துப் போய் விட்டதோ என்னவோ தெரியவில்லை!
 

தூண்டிற் புழுக்களும், மிஞ்சினால் கெஞ்சுவதும்....!



 "நான் அப்படியே சாப்பிடுவேன்" "ஐ யாம் எ காம்ப்ளான் பாய்"

இந்த மாதிரிக் குழந்தைகளை மையமாக வைத்து விளம்பரப் படங்கள் நிறைய வளர்ந்திருக்கின்றன
.குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டவை என்றாலும், டார்கெட் ஆடியன்ஸ் நாம் எல்லோருமே தான். அதுவும் தவிர மார்க்கெட்டிங் துறையில், ஒரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி முடிவு, குழந்தைகள் எதை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் முக்கியமான பங்காற்றுவதாகத் தெரிவிக்கிறது. இந்த வலிமையான செக்மெண்டை கவர்வதற்காகவே இன்றைய விளம்பரங்களில் மிகப் பெரும் பாலானவை, குழந்தைகளைக் குறிவைத்து வெற்றி பெற்றவைகளாகவுமே இருப்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
நம்முடைய முடிவுகளை, தீர்மானங்களை, எண்ணங்களை, வேறு யாரோ தான் எப்போதுமே தீர்மானிக்கிறார்கள்!  
கொஞ்சம் நாசூக்காகச் சொல்வதானால், influences, influences all the way! இவைகள் இல்லாமல் நம்மால் சுதந்திரமாக முடிவு எடுக்கவே முடியாதா? அப்படி என்ன முடிவை நாம் சமீபத்தில் எடுத்திருக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடை தேடினோமேயானால், எப்போதுமே நாம் நமது முடிவுகளை அடுத்தவரைச் சார்ந்தே எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வரும்.

இந்த அடிப்படை உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க முனைந்து விட்டீர்கள் என்றால், முதலில் ஒரு சபாஷ்!

இந்தப் பதிவு உங்களுக்காகத் தான்! அடுத்தது என்ன என்பதைக் கொஞ்சம் பேசுவதற்காகத் தான்!


சரி! அப்படி எடுக்கப் படும் முடிவுகள் எல்லாமே, சிறந்தவை தானா? அல்லது, 'ஏதோ பத்துக்கு ஒண்ணு பழுதாகாம இருந்தாலே போதும்' ரகம் தானா?

இந்தக் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால்
, முதலில்,

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
?

அல்லது
, இதையே வேறு விதமாகச் சொல்வதானால்,

யாரைத் திருப்தி செய்ய
, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?


இந்த இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டு பிடிப்பதில் கூட அவ்வளவு சிரமம் இல்லை! அதில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விட்டீர்களேயானால், உங்களை வெல்ல யாருமே இல்லை!


யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
சந்தையில் பொருட்களை வாங்குவதில், பெரியவர்களை விட குழந்தைகள் எடுக்கும் முடிவே அதிகமாக இருக்கிறது என்பதை சர்வே எடுத்துத் தெரிந்து கொண்ட விளம்பர நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை, குழந்தைகளை, இளம் வயதினரை மையமாகக் குறிவைத்தே விளம்பரம் செய்யப் பழகிக் கொண்டு விட்டன. இதை, உங்களுடைய வீட்டில், பல தருணங்களில், சொந்த அனுபவமாகவுமே பார்த்திருக்கலாம்!

இப்படியே, இந்தக் கேள்வியை இன்னமும் விரிவுபடுத்திப் பாருங்கள்! நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், யாராலேயோ தீர்மானிக்கப் படுகிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் அதை உணர்வதே இல்லை, ஆனாலும் பழக்கப் பட்டுப் போய் விட்டது! கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?

ஆனால் அது தான் உண்மை! பிறர் சொல்வதை கேட்க வேண்டாம் என்பதற்காக இல்லைஎதையும் சுயமாக ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம் பாருங்கள், அதைச் சொல்
வது   தான் இது
 
மந்தைத்தனம் என்பது இது தான்! ஆறாவது அறிவு, பகுத்தறிவு என்பதெல்லாம் பெயருக்குத் தான்!
பகுத்தறிவு, இனமானம், சுய மரியாதை என்று சொல்பவர்களே இந்த மந்தைத் தனத்தில் இருந்து உங்களை விலக விட மாட்டார்கள்!

அதனால் தான் வறுமையே வெளியேறு! சிங்காரச் சென்னை மாதிரி வெற்று 
கோஷங்களில் பெரும்பாலான ஜனங்களை நீண்ட காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்க இங்குள்ள அரசியல் வாதிகளால் முடிகிறது. 

டாஸ்மாக் வழியாக உங்களிடமிருந்து பறிக்கப் பட்ட பணம், அங்கே இங்கே என்று போய்வந்த பிறகு, தேர்தல் வரும் நேரங்களில், வாரம் ஐந்து நாளைக்கு அவித்த முட்டை சத்துணவாக அறிவிக்கப் படுகிற விதம் புரிகிறதா? என்றைக்கும் இல்லாத திருநாளாக, அடுத்த வருடம் தேர்தல் வருகிறது என்பதற்காக, சீர்கேடடைந்த ரோடுகளை எல்லாம் வருகிற மார்ச் மாதத்திற்குள் செப்பனிடப் போவதாக அறிவிப்பும் வருகிறது!

ஆறாவது அறிவு, பகுத்து அறிவது என்பதெல்லாம், கொஞ்சம் சுயசிந்தனை, சுய முயற்சியோடு, எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கிக்  கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றறியேன் என்ற அளவோடு நின்று விடாமல், விடைகளையும் தேட முயற்சி செய்கிறவர்களுக்கு மட்டும்தான்!


அடுத்து, யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?  

இந்த கேள்வியோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் நம்முடைய உழைப்பு, முயற்சிகள் எந்த அளவுக்கு கடலில் கரைத்த பெருங் காயம் போல வீணாகிக்  கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும். மறுபடியும், புள்ளிராசா வங்கியையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்! அங்கே எல்லோரையும் திருப்திப் படுத்தக் கடுமையாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

எல்லோரையும் திருப்திப்படுத்த முயன்று தோற்று, எல்லோருடைய எரிச்சல், வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது மட்டுமே அங்கே நடந்தது. வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று எவரையுமே திருப்திப் படுத்த முடியாமல், ஒரு தலைமை நிர்வாகி புலம்பினாரே, "எல்லாமே இங்கே கம்மி தான்! ஆனாலும் வாங்க யாருமே வர மாட்டேன் என்கிறார்களே" அந்தக் கதைதான்!

எல்லோருக்கும் எல்லாமும்! சோஷலிசம்! கேட்பதற்கும், பேசுவதற்கும் மிகவுமே நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில்....? 


கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுமாம்!  

இது அனுபவத்தில் கண்டு சொன்னவர்கள் சொலவடை! கேள்வி கேட்காமல், ஆராய்ந்து பார்க்காமல், எவரோ எதற்காகவோ சொன்னதை அப்படியே நம்பிவிடுவதும் அப்படித்தான்!


ப்ரீத்திக்கு நான் காரண்டீ என்று அழகாகச் சிரித்துக் கொண்டு ஒரு பெண் சொல்வதை கேள்வி கேட்காமல் பார்ப்பவர் ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்கிற மாதிரித் தான் இங்கே எல்லாமும் இருக்கும்.  
விளம்பரம் என்ற அளவில் சரிதான்! விளம்பரத்தை நம்பி வாங்குகிறவர் அளவில் ....?
சொல்லப் பட்ட மாதிரியே இருந்துதானாக வேண்டும் என்பது இல்லையே!
சொல்லோ, பொருளோ,அரசியலோ, பதிவுகளில் படிக்கும் விஷயங்களோ எதுவானாலும் சோதித்துப் பாருங்கள்!
யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளோடு, இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்!
இவையெல்லாம் உண்மை தானா? நம்புகிறமாதிரிச் சொல்லப் படுபவை எல்லாமே நம்பத் தகுதியானவைதானா?
ஏன், எப்படி, எதற்கு, எதனால், எதற்காக இப்படிக் கேள்வி மேல் கேள்வி கேட்காதவர்களுக்கு வாழ்க்கை இல்லை! வாழ்க்கையில் வெற்றியும் இல்லை!

உங்களுக்குக் கிடைக்கிற யோசனைகள் கூட சமயங்களில்
யாரோ ஏதோ உள்நோக்கத்தோடு எதற்காகவோ போடுகிற 'இலவசங்கள்' தான்! இங்கே சிருஷ்டியில் எதுவுமே இலவசம் இல்லை! 


இலவசமாக வருவதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!

தூண்டிலில் புழுவை வைப்பது மீனுக்கு இலவசம் தானா? மீன்கள் பேரில் கருணை கொண்டா புழுவை, சோளப் பொரியை  அள்ளித் தெளிக்கிறார்கள்?



வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அல்லது இலவசங்களே போதுமா? இந்த மாதிரி இலவசங்களாக வைக்கப் படும் புழுவிற்காக ஆசைப்பட்டுத் தன்னுடைய மொத்தத்தையும் இழந்து விடுகிற மீன்களாக ஆகிவிடப் போகிறோமா என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!

உங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அல்லது என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?


பதிவர் உண்மைத் தமிழனுடைய பதிவைப் படித்து விட்டு எழுந்த சிந்தனையில், ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் சில மாதங்களுக்கு முன் பேசியிருந்தது தான் என்றாலும், கொஞ்சம் யோசித்துப் பார்ப்பதற்காக மீள்பதிவு! நடப்புச் செய்திகளோடு கொஞ்சம் அப்டேட் செய்யப் பட்டது.

****** 
மன்னிக்க  வேண்டுகிறேன்! கொஞ்சம் கண்டுக்காம  விட்டு விடவும் வேண்டுகிறேன்!



பாதிரிமார்கள் பாலியல் வக்கிரம், சில்மிஷங்கள் என்று  கொஞ்சம் அத்து மீறலைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் வேளையில், போப் ஆண்டவர் இங்கிலாந்து விஜயத்தில் இருக்கிறார். பாதிரி சில்மிஷங்கள், சிறுவர்களிடம் செக்ஸ் வக்கிரங்கள் என்று திருச்சபைப் பிரமுகர்கள் மாட்டிக் கொண்ட பிறகு, ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி நாத்திகப் பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமில்லாமல், பாதிரி சில்மிஷங்களில் பாதிக்கப் பட்டவர்களும் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

போப் விஜயத்தில் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பணம் கொடுத்து வாங்க வேண்டிய டிக்கெட்டுக்கள் ஏராளமான எண்ணிக்கையில் விற்பனையாகாமல் தேங்கியிருக்கிற பரிதாபத்தோடு, அரசு வரிப்பணத்தில் இருந்து போப் விஜயத்துக்காகச் செலவு செய்வதா என்ற கேள்வியும் வலுவாக இங்கிலாந்தில் எழுந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன.  
மனோன்மணீயம் நாடகக் காப்பியத்தில் வருகிற கெட்ட மந்திரி குடிலன் குணாதிசயமாகக் "கெஞ்சினால் மிஞ்சுவன்; மிஞ்சினால் கெஞ்சுவன்" என்றபடியே வாடிகனும், எதிர்ப்பு வலுக்கவும் "வருத்தம் தெரிவிக்கிற வேலையை" வேறு வழி  ல்லாமல்,வழக்கம் போல செய்திருக்கிறது.

1510 இல், ஒன்றுமறியாத இளம் துறவியாயிருந்த மார்டின் லூதர்  ரோமா புரிக்குச் சென்றார். பரிசுத்த நகரம் என அவருக்குச் சொல்லப்பட்டிருந்த அவ்விடம், உண்மையிலேயே அசுத்த நரகம் என்பதைக் கண்டு கொண்ட லூத்தரின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை. பாவ மன்னிப்புக்கென்று, பிலாத்துவின் ஏணிப்படிகளில் முழங்கால்களினாலேயே ஏறும்போது “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்ற இடிமுழக்கக் குரல் ஒன்றைக் கேட்டார். 

அந்த நாட்களில், புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புனித பேதுரு பேராலயத்தின் கட்டுமானப்பணிக்கானப் பணத்தேவை மிகவும் பெரிதாயிருந்தது. இதுதான் ‘பாவமன்னிப்புச் சீட்டு’ என்ற பெரிய ஏமாற்றுவேலைக்குக் காரணமாக அமைந்தது.

இந்த ரோமாபுரிப் பயணத்தைப் பற்றிப் பின்னாளில் லூத்தர் இவ்வாறு கூறினார்: “நரகம் என்ற ஒன்று இருக்குமானால்,அதின்மேல்தான் ரோமாபுரி கட்டப்பட்டுள்ளது,” என ரோமாபுரியின் தெருக்களில் மக்கள் பேசிக்கொண்டுசெல்வதை என் செவிகளாலேயே கேட்டேன்.

இப்படிப் பதினாறாம் நூற்றாண்டில் கிறித்தவம் இரண்டாகப் பிளக்கும் அளவுக்கு வாடிகனின் செயல்பாடுகள் இருந்தன. அம்பலப் படுத்தப் பட்டு, அசிங்கப்பட்ட பிறகும் கூட வாடிகன் தன்னைத் திருத்திக் கொண்டதே இல்லை இப்போது கிளம்பியிருக்கும் பாதிரி சில்மிஷங்கள், பாலியல் குற்றச்சாட்டை வாடிகன் தீவீரமாக மறுத்துப் பார்த்தது. எதிர்ப்புக் குரல்கள் வலுக்க ஆரம்பித்தவுடன், இப்போது வருத்தம் தெரிவிக்கும் படலம் நடந்தேறியிருக்கிறது. அவ்வளவு தான்!

 


நிறுவனப் பண்புகள்...!


Organizations, Organizational behaviour  இப்படி ஒரு நிறுவனம், நிறுவனப் பண்புகளைப் பற்றிப் பேசிப் பல  நாட்களாகி விட்டது இல்லையா?

சேத் கோடின் என்ற பதிவர்! இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே அவருடைய பதிவுகளைத் தொட்டுப் பலமுறை பார்த்திருக்கிறோம்! நிறுவனம் என்பது என்ன? நிறுவனப் பண்புகள் என்பது என்ன? இந்தியச் சூழ்நிலைகளில், நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர்மாறாகத் தான்  இவைபற்றிய விவரம், விளக்கம், வியாக்கியானம் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிறுவனப் பண்புகளைக் குறித்த பதிவொன்றை சென்ற மாதம், சேத் கோடின் பதிவுகளில் படித்தது, தொடர் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது.

இங்கே பெரும்பாலான நிறுவனங்கள், குறிப்பாக அரசுத்துறை, பொதுத்  துறையில் இயங்குபவை  தங்களை ஒரு கட்டமைக்கப் பட்ட, ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கிற அமைப்பாகவே உணராமல், ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியிலேயே செயல் படுவதையும், என்ன நோக்கத்திற்காக நிறுவனம் தொடங்கப்பட்டதோ அதற்கு எதிராகவே பல தருணங்களில் செயல்படுவதையும் பார்க்க முடியும். ஒரு சரியான தலைமை இல்லாதது, தெளிவான செயல் திட்டம் இல்லாதது, ஒரு தெளிவான பார்வை இல்லாதது இப்படி இந்த அமைப்புக்கள் குறைப் பிரசவங்களாகவே இருப்பதற்குக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சமீபத்தில் சேத் கோடின் பக்கங்களில் கார்பரேட்டுகளுக்கு மனசாட்சி கிடையாது
என்ற தலைப்பிலான பதிவைப் படித்துவிட்டு, இங்கே உள்ள பல நிறுவனங்களுடைய பிரச்சினைகளோடு, குறிப்பாக பொதுத்துறையில் இயங்கும்  ஒரு புள்ளிராசா வங்கியின் தோற்றுக் கொண்டே இருக்கும் இயல்போடு பொருத்திப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தேன். பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு மனசாட்சி மட்டுமில்லை, குறைந்தபட்ச மூளை கூடக் கிடையாது. எல்லாம் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் தான்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை என்பது, நன்றாகவே புரிகிறது.ஆனால் என்ன செய்ய?!

சேத் கோடின் சொல்வதைக் கொஞ்சம் என்னவென்று பார்த்து விடலாம்! அவர் சொல்கிறார், நிறுவனங்களுக்கு மனசாட்சி கிடையாது, அதெல்லாம்  அங்கே உள்ள நபர்களுக்கு மட்டும் தான்!

"நான் என்ன செய்யட்டும், என்னுடைய துறைக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது!", "நான் இங்கே வேலைதான் செய்கிறேன்" , "என்ன பண்ணுவது? இது என்னுடைய வேலை" இப்படிச் சொல்கிறபோதே, உங்களுடைய மனசாட்சியையும் கழற்றி வைத்து விட்டு, உங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்கிறார் சேத் கோடின்


பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, வேறெவர் மீதோ பழியை சுமத்தி விடுவது கொஞ்சம் சிரமமே இல்லாத குறுக்குவழிதான்! எதற்கு? இந்த மாதிரி ஆசாமிகளால் நிரப்பப் பட்ட நிறுவனம் அல்லது பிராண்ட், வேகமாகக் காணாமலேயே போவதற்குத் தான்! 

முந்தைய நாட்களைப் போல அல்லாமல், நிறுவனங்களுக்கு இப்போது அதிக பலம், முதிர்ச்சி இருக்கிறது. எந்த அளவுக்குத் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, திறமையாக, வேகமாகச் செயல் படுகிறார்களோ அந்த அளவுக்கு பொருளாதாரத்தையும் மக்களையும் மாற்றக் கூடிய வல்லமை உள்ளதாக இருக்கிறது.இப்படிச் சொல்கிற சேத் கோடின், ஆகக் கூடி நாம் செய்ய வேண்டியதெல்லாம், தனிநபர்களாகப் பார்த்து,  யாரோ வந்து இதை நீ தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று சொல்கிற வரை காத்திருக்காமல், (அப்படி எவரும் வந்து சொல்லவும் மாட்டார்கள் ) தாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு முழுப்பொறுப்பேற்று செயல்பட்டாகவேண்டும் என்றும் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.

இந்தப் பதிவைப் படித்துவிட்டுக் கொஞ்சம் யோசித்துக் கொண்டு இருந்ததில், ஏன் சில  நிறுவனங்கள், குறிப்பாகப் பொதுத்துறை நிறுவனங்கள், கற்றுக் கொள்ளும் நிறுவனங்களாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறிக் கொண்டே இருக்கின்றன என்பதைப் பார்த்தபோது, அருவருப்பும் ஆயாசமும் தான் மிஞ்சியது.

ஒரு நிறுவனம், கற்றுக் கொள்ளும் நிறுவனமாக, மாற்றங்களுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறனுடையதாக இருக்கிறதா என்பதை எப்படி அளவிடுவது? எதை வைத்துத் தெரிந்து கொள்வது?

எந்த ஒரு நிறுவனமும், ஒரு குறைந்தபட்ச நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் கட்டப் படுகிறது. அந்த நோக்கங்களை நிறைவேற்ற மனிதர்கள்  தேவைப்படுகிறார்கள். அப்படித் தேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்கள், எந்த அளவுக்கு நிறுவனத்தின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு செயல்படுகிறார்களா என்பது முதலில்! 

அதற்கப்புறம், அதை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்குத் திறமை, ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள் என்பது! இந்த இரண்டுக்கும் இடைவெளி எதுவும் இருக்கிறதா என்ற சுய சோதனை, இடை வெளியை நிரப்ப என்ன செய்கிறார்கள் என்பது அடுத்து. ஆக இப்படி  ஒரு நிறுவனம் நல்ல முறையில் இயங்குகிறதா இல்லையா என்பது ஒரு புறம்! காலத்துக்கேற்ற படி, மாற்றங்களுக்குத் தயாராக இருப்பது, மாற்றிக் கொள்வதும் இன்னொரு புறமுமாக, ஒரு நிறுவனம், அதில் உள்ள நபர்கள் பண்புகளை வளர்த்துக் கொண்டாக வேண்டி இருக்கிறது. 

ஆக நிறுவனப் பண்புகள் என்று சொல்லும்போதே, அது அதில் பணியாற்றும் மனிதர்களுடைய ஒட்டு மொத்தப் பண்பை அளவீடாகக் கொண்டு சொல்லப் படுவது என்பது தெளிவு.

எந்த ஒரு நிறுவனமாக இருக்கட்டும், அது ஒரு கற்றுக்கொள்ளும் நிறுவனமாக இருக்கிறதா, வெற்றிகரமாகச் செயல் படுகிறதா என்பதை, அந்த நிறுவனம் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்கிறது என்பதைக் கவனித்தாலே புரிந்து கொள்ளக் கூடியது தான்.

ஒரு பிரச்சினை சவாலை எதிர்கொள்ளும் தருணத்தில் ----

முதலாவதாக, அந்தப் பிரச்சினை அல்லது சவாலைப் புறக்கணிக்கிறார்களா , அதற்குரிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்களா?

இரண்டாவதாக, அடுத்தவர் மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களா?

மூன்றாவதாக, இந்த மாதிரிப் பிரச்சினை, புகார், குறை எப்போதுமே இருப்பது தான் என்ற மாதிரி அதைக் குறித்து ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களா? என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தத் தவறுகிறார்களா?

இந்த மூன்று கேள்விகளில் எந்த ஒன்றிற்கும் ஆமாம் என்பது பதிலாக இருக்குமானால், அந்த நிறுவனம் கற்றுக் கொள்ளத் தவறுகிற, சீக்கிரமே காலாவதியாகிப் போய்விடக் கூடிய நிறுவனம் தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்! அப்புறம், அதில் உள்ள ஆசாமிகளுமே கூட, அதே கதிக்குத் தான் போகவேண்டியவர்கள் என்பது தனியாகச் சொல்ல வேண்டிய ஒன்றா என்ன!

இப்படி இல்லாமல்-----

பிரச்சினைகள், புகார்கள், குறைபாடுகள் எல்லாம் அந்த நிறுவனம் செயல்படும் விதத்தில், பின்பற்றும் நடைமுறைகளில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும், அதே மாதிரி எதிர்காலத்தில் நிகழாமலும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, அந்த நிறுவனத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் பணியாற்றுகிறவர்கள் முன்வந்து ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றிருந்தால், அந்த நிறுவனம் தன்னுடைய அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளக் கூடிய நிறுவனமாக  இருக்கிறது, மாறிவரும் சூழலுக்கேற்றபடி, தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும், தன்னுடைய திறமையைப் பெருக்கிக் கொள்ளவும் தெரிந்த வளரும் நிறுவனமாகவும் இருக்கிறது.

பிரச்சினைகள், அவை விடுக்கும் சவால்கள் என்பவை பயமுறுத்துபவையோ, தலையைச் சீவி விட்டுப்
போகிறவையோ அல்ல! திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கிடைக்கும் அற்புதமான வாய்ப்புத் தான்! பிரச்சினை என்று பார்த்தால், பிரச்சினைதான்! அதே நேரம், அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு, அது ஒரு கற்றுக் கொள்ளும் அனுபவம் மட்டுமல்ல, அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்க்கும் ஏணியாகவும் இருக்கிறது.

இதில் புள்ளிராசா வங்கி எங்கே வருகிறது என்று கேட்கிறீர்களா?

புள்ளிராசா வங்கி,  தலையில் இருந்து வால் நுனி வரை, எவருக்கும் தன்னுடைய பொறுப்பு என்னவென்பதே இன்றைக்கும் தெரிந்து கொள்ளாமலேயே வண்டி ஒட்டிக் கொண்டிருக்கிறது. பிரச்சினைகள், புகார்கள் வெடித்து வெளியே வரும் வரை எவரும் எதுவுமே செய்ய மாட்டார்கள்,   அப்படி வரும் சமயத்தில், எவர் மீதாவது பழியைச் சுமத்தி வெளியே அனுப்பி விட்டால், தலையை சீவ உத்தரவு போட்டு விட்டால்  எல்லாம் சரியாகப் போய்விடும் என்று நம்பி செயல்பட்டுக் கொண்டே புள்ளிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிற பொதுத் துறை வங்கி அது!

அவ்வளவு தான்!



பாரதியும் நினைவுகளும்...! நினைத்துப் பார்க்க ஆயிரம்!




"தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும் மிக மோசமான துர்ப்பாக்கியம், கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாடு முழுதுமையே ஆக்கிரமித்துக் கொண்டு அதைத்  தம் தரங்கெட்ட செல்வாக்கினால் கெடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளும் சினிமாக்காரர்களும் தான். இந்த இரண்டு சக்திகளும் விளைவித்திருக்கும் கலாச்சார, அறிவார்த்த சீரழிவை தமிழ் மக்கள் மிகுந்த ஆரவாரத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்று வருகிறார்கள். வருடங்கள் கழிகின்றன. சீரழிவும் நாளுக்கு நாள் பெருக, அதற்கேற்ப மக்கள் இன்னும் அதிக உற்சாகத்தோடு அதை வரவேற்று மகிழ்கின்றனர்.

இந்த இரண்டு சக்திகளும் நாட்டைக் கெடுக்கின்றன. தம் சுய நலத்தைப் பேணுவதும் தம் பிம்பத்தைப் பூதாகாரமாக வளர்த்துக் கொள்வதுமே இவர்களது நோக்கம். இந்த நோக்கம் கலப்படமற்றது.  

இவர்கள் நாட்டைச் சுரண்டுகிறார்களே தவிர சமூகத்திற்கு இவர்கள் ஏதும் கொடுப்பதில்லை. பாமரத்தனமும் இரைச்சலிடும் பாசமும் நிறைந்த இந்த சமயத்தில், தன் அறிவார்த்த தைரியத்திற்கும், எந்த அபத்தத்தையும் எக்காரணம் தொட்டும் சகித்துக்கொள்ளாத புரட்சியாளனுமான, 1889-ல் பிறந்த வ.ரா. என்னும் எழுத்தாளனின் நூறாண்டு நினைவு தினம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், யாராலும் கொண்டாடப்படாமலும் வந்த சுவடு தெரியாமல் கழிந்து விடும். இன்றைய தமிழ் சமூகத்தின் குணத்தை நாம் நன்கு அறிந்திருப்போமானால், வ.ரா. வை தமிழ் சமூகம் நினைவு கொண்டிருந்தால் மட்டுமே நாம் ஆச்சரியப்படவேண்டியிருக்கும்.

சுப்பிரமணிய பாரதியை ஒரு கவிஞராக மட்டுமே அவரது நெருங்கிய நண்பர்கள் அறிந்திருந்த காலத்தில், வ.ரா. பாரதியை வியந்து போற்றியவர். பாரதி இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பத்துக்களில் (1910 களில் )  புதுச்சேரியில் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பி வாழ்ந்து கொண்டிருந்த போது, பாரதிக்கு உதவியாயிருந்த இளைஞர் அப்போதைய வ.ரா. பாரதியையின் வாழ்க்கையை எழுதிய முதல் புத்தகமே வ.ரா.வினது தான். அது வெற்று வரலாறோ விமர்சனமோ அல்ல. பாரதி என்ற ஆதர்சத்தின் மதுவுண்ட பரவசம் அது. பாரதியின் தேச பக்திப் பாடல்களுக்காகவே கவி என்ற இடத்தை அவருக்குக் கொஞ்சம் யோசனையோடு பாரதியை சிலர் அங்கீகரித்த காலம் அது. அந்தச் சூழலில் வ.ரா. பாரதி என்னும் கவிஞருக்காகப் போராடியதும் விவாதித்ததும் தேவையான ஒன்றாகத் தான் இருந்தது. எனவே அது உணர்ச்சிவசப்பட்டது! சண்டைத் தொனி மேலோங்கியது!

வ.ரா. பேசக் கிடைத்த மேடைகளில் எல்லாம், இருபதாம் நூற்றாண்டின் மகா கவி பாரதி என ஸ்தாபிப்பதில் தீவிரமாக இருந்தார். இன்று அந்த விவாதங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, இந்த விஷயத்திற்கு இவ்வளவு போரும் புழுதி கிளப்பலும் தேவையாயிருந்ததா என்று ஆச்சரியப் படத் தோன்றும். தேவையாகத்தான் இருந்தது அந்தச் சூழலில்.

வ.ரா. பிறந்தது ஒரு பிராமணக் குடும்பத்தில். அதிலும் மற்ற பிராமணர்களை விட தாம் தான் உயர்ந்தவர் என்று தீவிரமாக நம்பும் வைஷ்ணவ குலத்தில் பிறந்தார் அவர். ஆனால் அவர் ஆஸ்திகரும் அல்ல. நாஸ்திகரும் அல்ல. அது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத மனப்போக்கு உள்ளவர். சாதி, மத வித்தியாசங்கள் பற்றிய பேச்சு எழுந்தாலே முள்ளம் பன்றி சிலிர்த்தெழுவது போல சீற்றம் கொள்பவர்".

இப்படி தமிழின் மிகச் சிறந்த விமரிசகரான திரு வெங்கட் சாமிநாதன். வ.ரா என்கிற வ.ராமஸ்வாமியைப் பற்றி எழுதியிருந்த இந்தப் பகுதியை வ.ரா அவர்கள் பிறந்த  நூற்றாண்டுத் தருணத்தில்(1989),  அதாவது இருபத்தோரு வருடங்களுக்கு முன்னால் மறக்கப் பட்ட ஒரு எழுத்தாளனை நினைவு கூர்ந்த கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்தது. அதற்கு  சிறிது நேரத்திற்கு முன்னர் தான், மின்தமிழ் கூகிள் குழுமத்தில் தமிழக முதல்வரைப் பாராட்டுவது ஏன் என்ற இழையைப் படித்துவிட்டு எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையில் இருந்த சமயம், தற்செயலாக இந்த விக்கிக் கட்டுரையைப் பார்க்க நேர்ந்தது.


வ.ரா வைப்பற்றிய இன்னொரு செய்தியைப் படிக்க இங்கே


oooOooo 

 

பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம்

( 'மகாகவி பாரதி வரலாறு ' நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்

சீனி. விசுவநாதன்



பாரதிக்குப் பற்பலரும் வரலாறுகள் எழுதியுள்ளனர்.

பாரதி வாழ்ந்த காலத்தில், அவருக்கு உற்றுழி உதவி, உறுபொருள் கொடுத்த உத்தமர்களில் பலரும் தங்கள் சொந்தப் பாங்கான அனுபவங்களைப் பின்னொரு காலப்பகுதியில் கட்டுரைகளாக வடித்தனர்; நேர் உரைகளாகப் பேட்டி கண்டவர்களிடம் சிலவற்றைப் பதிவும் செய்தனர்.

வேறு சிலர், பாரதியின் கவிதா சக்தியைப் பற்றியும், கவிதையின் அழகு, இனிமை, எளிமை ஆகியவற்றைப் பற்றி மட்டுமே வியந்து போற்றி எழுதினர்.

பாரதிக்கு மிக அணுக்கமானவர்கள் எல்லோருமே வரலாற்று நூல்கள் எழுதாமல், துண்டு துணுக்குகளாகவோ, கட்டுரைகளாகவோ, கவிதைகளாகவோ வரலாற்றுத் தொடர்பான செய்திகள் சிலவற்றை வழங்கினர்.

பாரதியை நன்கு புரிந்துகொண்டவர்களும், தெரிந்து வைத்திருந்தவர்களுங்கூட ஓரளவே வரலாற்றுக் குறிப்புக்களை வரைந்தனர்.

பாரதிக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய புலமைக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் உரிய - உயரிய புகழும், பாராட்டுதல்களும் கிடைக்கவே செய்திருக்கின்றன.

அவர் காலத்தில் மூன்று கட்டுரைகள் அவரைப் பற்றிப் பிரசுமாகி இருப்பதாக நான் அறிகிறேன். கர்மயோகி (1910), தேசபக்தன் வருஷ மலர் (சித்தார்த்தி - தை மாதம் 30 ஆம் தேதி - 1919) ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும், New India (1919) என்னும் ஆங்கில நாளிதழிலும் பாரதி பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

பாரதியின் கர்மயோகி மாதப் பத்திரிகையில் திரு.லக்ஷ்மண சங்கரன் என்பவர் தமிழ் ஸாஹித்யத்தில் நவமார்க்கம் என்கிற கட்டுரையில் பாரதியின் பாவன்மையை வியந்து பாராட்டியும், கதை நூலைப் புகழ்ந்து பேசியும் எழுதி உள்ளார்.

தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த தேசபக்தன் வருஷ மலரில் திரு. எ.எஸ். நாகரத்தினம் என்பவர் தமிழ்நாடும் ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் - ஓர் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் ஓர் அரிய கட்டுரையே எழுதி இருக்கின்றார்.

நியூ இண்டியா (New India) என்னும் ஆங்கில நாளிதழில் திரு. ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் Subramania Bharati and his genius என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

இப்படி இன்னும் பல கட்டுரைகள் அக்காலத்தில் வெளிவந்திருக்கலாம்.

நானறிந்தவரை, அக்கட்டுரைகள் பாரதியின் கவித்திறத்தையும், மேதைமையையும், அவர் கையாண்ட புதிய உத்திகளையும் சிறப்பித்துப் பேசும் தன்மையனவாகவே அமைந்துவிட்டன என்பேன்.

ஆம்; அவை வாழ்க்கைச் சரிதக் குறிப்புகளாகவோ வாழ்க்கைச் செய்திகளை இனங்காட்டுவனவாகவோ அமையவில்லை.

பாரதி தன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தனியே எழுதா விட்டாலுங்கூட கனவு என்ற காதற்கவிதையிலும், பாரதி அறுபத்தாறு என்னும் முற்றுப் பெறாத பாடல் தொகுதியிலும், சின்னச் சங்கரன் கதை என்னும் முற்றுப் பெறாத கதைப்பகுதியிலும், சித்தக் கடல் என்ற வசனப் பகுதியிலும், கவிதா தேவி அருள் வேண்டல் போன்ற சில பாக்களிலும் தம் வாழ்வுத் தொடர்பான சில பயனுள்ள செய்திகளை ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார் என்பதும் நம் கவனத்துக்குரியது.

பாரதி 1921 செப்டம்பர் 12 இல் (செப்டம்பர் 12, 1921 அதிகாலை 1 மணிக்கு பாரதி உயிர் நீத்தார். - பி.கே. சிவகுமார்) மரணம் அடைந்த பின்னரே சரிதச் சுருக்கங்களும், வாழ்க்கைக் குறிப்புக்களும், வரலாற்று நூல்களும் வெளிவரலாயின.

பாரதி 'விண்ணவருக்கு விருந்தானார் ' என்ற செய்தியை 13-9-1921ஆம் தேதிய இதழில் வெளியிட்ட சுதேச மித்திரன் பத்திரிகையானது பாரதியைப் பற்றிய விவரங்களைத் தந்ததுடன் 'அவரது சரித்திரச் சுருக்கம் வேறிடத்தில் பிரசுரம் செய்யப்படுகிறது ' என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அப்படியொரு சரித்திரச் சுருக்கம் சுதேச மித்திரன் இதழில் நான் பரிசோதித்துப் பார்த்த அளவில் கண்ணில் படவில்லை.
சுதேச மித்திரனில் தனியே பாரதியின் சரித்திரச் சுருக்கம் பிரசுரமானதை அறிந்துகொள்ள முடியாத காரணத்தால், அவரது சரித்திரம் எந்தமாதிரியான செய்திகளைக் கொண்டு இருந்தது என்பதை அறிய முடியாமலே போய்விட்டது.

பாரதி அமரரானவுடனேயே முதன்முதலாகத் திரு.எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி - சில குறிப்புகள் என்ற தலைப்பில் சுதேச மித்திரன் 17-9-1921ஆம் தேதியிட்ட இதழின் வழியாக அரிய கருத்துச் செல்வங்களை வழங்கினார்.

இப்பெருமகனாரைத் தொடர்ந்து பாரதி பற்றிய வரலாற்றுச் செய்திகளை வழங்கியவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
 
1922 ஜனவரியில் பாரதி ஆச்ரமத்தார் பாரதியின் கவிதைச் செல்வங்களைத் தொகுத்து, சுதேச கீதங்கள் என்னும் தலைப்பெயருடன் இரு பகுதிகளாக வெளியிட்டனர். முதல் பகுதியில், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியார் - சரித்திரச் சுருக்கம் என்றும், இரண்டாம் பகுதியில் திரு.சக்கரை செட்டியார் The Political Life of Sri Subramania Bharathi என்றும் தம் நினைவுக் குறிப்புக்களை ஒழுங்குபடுத்திக் கோவையாக எழுத்தில் வடித்துக் கொடுத்தனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் தம் கட்டுரையில் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களையும் நிகழ்ச்சிகளையும் சுருக்கமாகத் தந்ததுடன், பாரதியின் புலமை, ஒருசில கவிகள் எழுந்த சூழல், குணநலன்கள், தமக்கிருந்த நட்புமுறை ஆகியவை பற்றியும் விரித்துரைத்தார்.

திரு. சக்கரை செட்டியாரோ மிக விரிவாகப் பாரதியின் அரசியல் பிரவேசம், அரசியல் ஈடுபாடு ஆகியன குறித்து எழுதியதோடும் நில்லாமல், தமிழ்மக்கள் அமர கவி பாரதிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஆக, நமக்கு 1921 செப்டம்பரிலிருந்து 1922 ஜனவரிக்கும் உள்ளாகப் பாரதி வாழ்க்கை பற்றிய குறிப்புகளும், சரித்திரச் சுருக்கங்களும், அரசியல் ஈடுபாடு பற்றிய செய்திகளும் ஓரளவு கிடைக்கத் தொடங்கி விட்டன.

இந்த வகையில் திருவாளர்கள் ராமாநுஜலு நாயுடு, சோமசுந்தர பாரதியார், சக்கரை செட்டியார் ஆகியோரை முன்னோடிகள் என்றே கொள்ளல் வேண்டும்.


இச் சான்றோர்களுக்குப் பின்னர்தான் மண்டயம் சீனிவாஸாச்சாரியார், குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், சுந்தரேச ஐயர், சாம்பசிவ ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, நாராயண ஐயங்கார், நாகசாமி, பாவேந்தர் பாரதிதாசன், பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரும் இன்ன பிறரும் பாரதியைப் பற்றிப் பத்திரிகைகளில் எழுதினர்; தம் நண்பர்களிடமும் பாரதி பற்றிய பசுமை நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மேற்குறித்த பெருமக்களின் கருத்துரைகள் எல்லாம் பாரதி வரலாற்றுக்குப் பேருதவியாய் அமைந்தன என்று சொல்லும் போழ்தில், அவை தனி நபர்களின் இளமைக்காலப் பசுமை நினைவுகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

துரதிருஷ்டவசமாகப் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பாரதியைப் பற்றிய செய்திகளைப் பின்னிட்டுத் தான் பதிவு செய்திருக்கிறார்; அதே போல, பாரதியின் முதற் பதிப்பாளராகிய பரலி நெல்லையப்பரும் தம் நினைவுக் குறிப்புக்களைப் பிற்காலத்தில்தான் பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டார்.

பாரதியிடம் நெருங்கிய உறவு கொண்டு பாரதிக்குத் தாசனாக வாய்த்தவரும், பாரதியாலே மிக்க அன்புடன் 'தம்பி ' என்று அழைக்கப்பட்ட பேறு பெற்றவரும் சுருங்கிய முறையில்கூட வரலாற்று நூல் வரையாமல் போனது நம்முடைய பாக்கியக் குறைவே.
 
1928ஆம் ஆண்டில் பாரதி பாடல்களில் ராஜத் துரோகக் கருத்துக்கள் இருப்பதாகச் சொல்லி, பிரிட்டிஷ் அரசு சுதேச கீதங்கள் என்னும் கவிதை நூல் தொகுதிகளைப் பறிமுதல் செய்தது. இதனால் நாட்டில் கிளர்ச்சிகள் எழுந்தன.

அச்சமயம் மீண்டும் திரு. எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் தாம் அப்போது ஆசிரியர் பொறுப்பு வகித்த அமிர்த குண போதினி மாத இதழில் சென்றுபோன நாட்கள் என்ற பொதுத் தலைப்பில் ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி என்று குறுந்தலைப்பு அமைத்துத் தொடர் கட்டுரைகள் எழுதி வெளியிடலானார்.

இத்தொடர் கட்டுரைகளில் முன்னர் - அதாவது, பாரதி மரணமடைந்த போது, தாம் எழுதிய குறிப்புக்களுடன், அந்த நாள் வரை எவரும் சொல்லாத - எழுத்துருவில் வடிக்காத பற்பல புதிய செய்திகளை எழுதி, பாரதி வாழ்க்கை வரலாற்று ஆய்வுப் பரப்பை ராமானுஜலு நாயுடு விரிவாக்கினார்.

திரு.நாயுடு அவர்கள் எழுதியளித்த அரிய செய்திக் குறிப்புகளில் பலவும் 1928 தொடக்கம் 1947 வரையிலான கால எல்லையில் பிரசுரமான பாரதி வரலாற்று நூல்களில் போதிய அளவு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியின் மூத்த மகள் தங்கம்மாளும், இளைய மகள் சகுந்தலாவும் மற்றும் பலரும் அவ்வப்போது பத்திரிகைகளில் பாரதி பற்றி எழுதவே செய்தனர். என்றாலும், இவையெல்லாம் சற்று காலங்கடந்த நிலையில் வெளிப்பட்டனவாகும். தமிழ்ப் பத்திரிகைகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதி தொடர்புடைய செய்திகளை வெளியிடவே செய்தன.

காலப்போக்கில், கட்டுரை வடிவில் வெளிவந்த செய்திகளையும், நினைவுக் குறிப்புக்களையும், சொந்தப்பாங்கான அனுபவங்களையும் கொண்டு பற்பலர் நூல்களை எழுத முனைந்தனர்.
 
1928இல் பாரதி பிரசுராலயத்தார் பாரதியார் சரித்திரம் என்ற பெயரால் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டனர். இது புதிய நூல் அன்று; என்றாலும் பாரதியார் சரித்திரம் என்ற தலைப்பில் வெளியான முதல் தொகுப்பு நூல் இதுவேயாகும்.
 
1922இல் பாரதி ஆச்ரமத்தார் பிரசுரித்திருந்த சுதேச கீதங்கள் கவிதைத் தொகுதிகளில் இடம் பெற்றிருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய பாரதியாரின் சரித்திரச் சுருக்கமும், சக்கரை செட்டியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமான 'ராஜீய வாழ்வும் ', பரலி நெல்லையப்பர் எழுதிய 'பாரதியாரின் தமிழ்ப் புலமை ' என்னும் கட்டுரை ஒன்று சேர்க்கப்பட்டு இந்தப் பிரசுரம் வெளியானது.
 
1929ஆம் ஆண்டிலே பாரதியின் இளைய சகோதரர் திரு. சி. விசுவநாதன் ஆங்கிலத்தில் Bharati and his works என்றொரு நூலைப் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களும், பாரதி நூல்களின் மதிப்பீடும் சேர்ந்திருந்த முறையில் எழுதி வெளியிட்டார். இந்த நூலானது, பெரும்பகுதி பாரதி படைப்பு இலக்கியங்களுக்கான கருவி நூலாகவே அமைந்துவிட்டது.
 
1936இல் ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற தேசபக்தர் கவிச்சக்கரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் என்ற நூலை வெளிப்படுத்தினார்.

இதனிடையில் வ.ரா. என்று சுருக்கப் பெயரால் அழைக்கப்பெறும் வ. ராமஸ்வாமி அவர்கள் காந்தி இதழில் 1935-1936 இல் பாரதி வாழ்க்கைத் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளே 1944இல் மகாகவி பாரதியார் என்ற பெயருடன் நூலாக உருப்பெற்றன.
 
1937இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் பாரதி விளக்கம் என்ற நூலை ஆக்கி அளித்தார்.

இந்த நூலின் முற்பகுதியில் பாரதி வாழ்வும், பிற்பகுதியில் பாரதி பாடல்களின் அருமை பெருமைகளும் விளக்கப்பட்டன.
 
1938இல் சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்கள் பாரதி லீலை என்றவொரு நூலை எழுதி வெளியிட்டார். (இந்த நூல் 1950இல் மறு அச்சாக வெளியானபோது, பாரதியார் என்று தலைப்புப் பெயர் மாற்றங் கண்டது.) இந்த நூலில் பாரதி சரித்திரச் சுருக்கத்துடன், அவருடைய வாழ்வில் நிகழ்ந்தனவாகக் கருதப்பட்ட நிகழ்ச்சிகளும் சொல்லப் பட்டன.
 
1940இல் தி.ஜ.ர. அவர்களின் புதுமைக்கவி பாரதியார் என்னும் நூல் வெளிவந்தது. (இந்த நூல் 1946இல் மறுபதிப்பான நிலையில், அதில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டன.)
 
1941இல் பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் அவர்கள் பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்கள் கூறுகிற மாதிரியில் தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் என்னும் பெயரில் அமரகவியின் வரலாற்றைச் சமைத்தளித்தார். (இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1945இல் வெளி வந்த சமயத்தில் பாரதியார் சரித்திரம் என்றே நூல் தலைப்பு மாற்றங் கண்டது; சில புதிய செய்திகளும் கொண்டமைந்தது.)

1942இல் நாரண துரைக்கண்ணன் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டுத் தேசிய கவிஞர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் என்ற சிறுநூல் வெளி  வந்தது.

1946இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய கவிக்குயில் பாரதியார் என்ற நூல் வெளிவந்தது.

இதே 1946இல் கப்பலோட்டிய தமிழர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பெறும் வ.உ. சிதம்பரனார் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களைக் கொண்டு வி.ஓ.சி. கண்ட பாரதி என்ற தலைப்பில் சிறுநூல் ஒன்றை திரு. வ.உ.சி. சுப்பிரமணியம் பதிப்பித்து வெளியிட்டார்.

தங்கம்மாள் எழுதிய அமரன் கதை (1946), பாரதியும் கவிதையும் (1947), பிள்ளைப் பிராயத்திலே (1947) ஆகிய நூல்களும், திரு. ரா. கனகலிங்கம்என் குருநாதர் பாரதியார் (1947) என்ற நூலும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக அமைக்கத் துணை புரிவனவாகும். இந்த நூல்கள் யாவும் பாரதியின் குணச் சித்திரத்தையும், கவிதை பிறந்த கதையையும் தெரிவிக்கின்றன.

ஆக, உண்மையில் 1928-1947க்கும் உட்பட்ட காலப்பகுதியில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நூல்களே வெளிவந்தன.

இது பாரதிக்கு வரலாறு எழுந்த பின்னணிச் சரித்திரமாகும்.

பாரதி அமரரான 1921ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு முடிய வெளியிடப்பட்ட பாரதி வரலாற்று நூல்களிலும், வரலாற்றுத் தொடர்பான நூல்களிலும் காணப்பெறும் செய்திகள், குறிப்புக்கள் ஆகியன சற்றே குழப்பத்தை உண்டுபண்ணக் கூடிய அளவில் சிக்கல்கள் நிறைந்தனவாக உள்ளன; முன்னுக்குப் பின் முரண் பட்டனவாகவும் உள்ளன. நூலுக்கு நூல் மாறுபாடு கொண்டன- வாகவும் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், காலப்பிழைகளும், கருத்துக் குழப்பங்களும் மேற்குறித்த நூல்களிலே இடம் பெற்றுள்ளன.
பாரதிக்கு வரலாற்றை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பாலோர், தெரிந்த செய்திகளுடன் சில நண்பர்கள் வழியாக அறிந்து கொண்டவற்றையும், பாரதி குடும்பத்தவர் தெரிவித்த சம்பவங்களையும், நினைவுக் குறிப்புக்களை வைத்துக் கொண்டும், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டும், சொந்தப்பாங்கான அனுபவங்களைக் கொண்டும், சிற்சில நூல்களில் இடம் பெற்றிருந்த செய்திக் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் நூல்களை எழுதினர்.

வெளிவந்த நூல்களில் சந்தேக நிவர்த்தி செய்து கொள்ள நினைத்தும், சந்தேகத்துக்கான விளக்கம் கிடைக்காத நிலையில், வருடக் கணக்கைத் தெரிவிக்கும் செய்திகளில் தவறுகள் நேர்ந்துவிட்டன. 

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையோ, நிகழ்ச்சி ஆண்டுகளையோ உறுதி செய்து தெரிவிக்கக்கூடிய நிலையில் பலரும் அந்த நாளில் இல்லை என்பதும் வேதனை தரக்கூடிய செய்தியாகும்.

இத்துணைக்கும் மேலாக அந்தக் காலத்திலேயே - பாரதிக்கு மிக நெருக்கமானவர்களும், உள்ளன்புடன் பழகியவர்களும், உறவினர்களும் வாழ்ந்த காலத்திலேயே - பாரதியைப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் பற்பல கற்பனைக் கதைகள், கட்டுக்கதைகள், தவறான செய்திகள், வருஷப் புள்ளிகளில் தவறுகள் ஆகியன எல்லாம் பத்திரிகைகளிலும், நூல்களிலும் இழைய முற்பட்டுவிட்டன என்கிற பேருண்மையையும் முன்கூறிய நூல்களின் முகவுரை - பதிப்புரைகளால் அறிந்து கொள்கிறோம்.

பாரதியையே அறியாதவர்கள், அவரைப் பார்ப்பதற்கே பயந்தவர்கள் உட்படப் பற்பலரும் 'புரளிக் கதை 'களைக் கடைவிரிக்க ஆரம்பித்து விட்ட கொடுமையையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஆக, ஆரம்ப நாளில் பாரதிக்கு வரலாறு கண்ட யாவரும் சான்றுகளின் துணைகொண்டோ, பாரதி ஆசிரியராய் இருந்த - தொடர்பு கொண்டிருந்த - நடத்திய பத்திரிகைகளின் துணைக்கொண்டோ, பாரதியே அவ்வப்போது பலருக்கு எழுதிய கடிதங்களின் உதவி கொண்டோ, ஆவணச் செய்திகளின் தன்மையை உறுதி செய்துகொண்டோ நூல்கள் எழுத முற்படவில்லை என்பது வெளிப்படை.

ஒவ்வொரு நூலாசிரியரும், ஒவ்வொரு கோணத்தில் பாரதியைக் கண்டு, தெளிந்து, தத்தம் படைப்புகளைப் படைத்தளித்தனர். இதன் காரணமாக, அந்நூல்களில் வரலாற்றுச் செய்திக் குழப்பங்களும், காலக்குறிப்புப் பிழைகளும் நேர்ந்தன.


மற்றும், காலந்தாழ்ந்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுதுவதில் ஏற்படும் தவறுகளும் வரலாற்று நூல்களில் இடம்பெற்று விட்டன.
பாரதிக்கு வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களோ, வரலாற்றுச் சுருக்க நூல்களோ இல்லாத நிலையிலும், இன்றுள்ள நவீன வசதிகள் எவையும் வாய்க்கப் பெறாத சூழ்நிலையிலும், தத்தமக்குக் கிடைத்த செய்திகளையும், குறிப்புக்களையும் திரட்டி, நினைவுகூர்ந்து பாரதிக்கு வரலாறு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஈடுபட்ட பெருமக்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்; மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டுவது நமது நன்றிக் கடன் ஆகும். 'நன்றி மறப்பது நன்றன்று '.

ஆகவே, பாரதிக்கு வரலாறு கண்ட முன்னோர்களின் பணிகளுக்கு நாம் தலைவணங்குவோமாக!


முன்னாளில் உருவான நூல்களில் கண்டுள்ள மாறுபட்டனவும், முரண்பட்டனவுமான செய்திகளைக் களைந்தும், காலக்கணக்கீட்டுப் பிழைகளை நீக்கியும், 'புரளிக்கதை 'களைப் புகவிடாமலும், கற்பனை வளத்திற்கு இடங்கொடாமலும் இயன்றவரை ஆதாரபூர்வமான நூலைப் பாரதிக்கு ஆக்கி அளிக்க வேண்டும் என்று சி.விசுவநாத ஐயர் துடியாய்த் துடித்தார்.


அவ்வப்போது பாரதி வரலாற்று நூலுக்குத் துணைசெய்யும் வகையில் ஆதாரபூர்வமான - நம்பகமான - பல பயனுள்ள செய்திகளைத் தாங்கி ஒருசில நூல்கள் வெளிவரத்தான் செய்தன.

'உலகம் சுற்றிய தமிழர் ' என்ற பெயரால் அழைக்கப்படும் திரு.ஏ.கே. செட்டியார் தமது குமரிமலர் இதழ் வழியாகச் செய்த பாரதி சேவையை யாரும் மறக்க முடியாது.

குறிப்பாகவும், சிறப்பாகவும், பாரதி வாழ்க்கை வரலாற்றுக்குத் துணை செய்யும் நூல்கள் எழுதிய திருவாளர்கள் ரா.அ. பத்மநாபன், பெ. தூரன், தொ.மு.சி. ரகுநாதன், பெ.சு. மணி, கோ. கேசவன் ஆகியோர் பாரதீய உலகின் நன்றிக்குரியவர்கள் ஆவர்.

ஆனாலுங்கூட, திருத்தமான வரலாறு என்று கூறும்படி நூல் ஒன்று வரவில்லை என்ற குறை இருந்து வந்தது.

என் அளவில் நான் பாரதிக்கு முழுமையான ஆதாரங்களோடு கூடிய வரலாற்றை எழுதி முடிக்கும் பணியைப் புனிதமான தேசியத் திருப்பணி என்பதாக உணர்ந்தேன்.


பாரதியின் வரலாற்றை எழுதி முடிக்கும் பணியை நான் தேசியத் திருப்பணியாக எண்ணிய காலத்தில், நானே வரலாற்றை எழுதி முடிப்பேன் என்று கனவிலும் கருதவில்லை.
சீனி விசுவநாதன் 

நன்றி: மகாகவி பாரதி வரலாறு - சீனி. விசுவநாதன் - 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை - 600 035.

தொலைபேசி:  044-24315757 


பின்குறிப்பு: சீனி. விசுவநாதனை தொடர்புகொள்ள விரும்புபவர்கள் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.




பாரதி இயலை கற்பனைகளின் மைதானமாக ஆக்கிவிடும் நிலையிலிருந்து மீட்டு, ஆரோக்கியமான ஆய்வுகள் மிகுவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியதில் பெரும் பங்கு திரு சீனி. விசுவ நாதனுடையது.என்றுசீனி விசுவநாதனுடைய நூல் தொகுப்பு ஒன்றைப் படித்தான் பரிந்துரையாக ஸ்ரீ ரங்கம் வி மோகன ரங்கன் எழுதிய கட்டுரையை வாசிக்க இங்கே