ராசி நல்ல ராசி-அப்போது பெயில், இப்போது இடமாற்றமா?

 
"In exercise of the powers conferred by section 9 (6) of the CrPC 1973, the acting Chief Justice and judges of this court (Delhi High Court) have been pleased to order that the trial of the 2G spectrum cases shall be held in Tihar court complex, New Delhi, according to law"

ப்படி டில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்த அறிவிப்பை வாசித்து,வருகிற வியாழக்கிழமை முதல்,ஸ்பெக்ட்ரம் ஊழல்  வழக்கு விசாரணை, திஹார் சிறை வளாகத்திலேயே நடக்கும் என்று சிபி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திரு ஒ பி சைனி அறிவித்த போது,குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் என்று கூடியிருந்த அத்தனை பேருமே அதிர்ந்து தான் போனார்கள்.


ன்ன காரணத்துக்காக, வழக்கு விசாரணை நடக்கும் இடம் மாற்றப்படுகிறது என்பதை இந்த அறிவிப்பு வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், விஐபிக்களின் பாதுகாப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு ஊகம் எழுந்தது.

ந்த வழக்கு விசாரணை கடந்த பதினொன்றாம் தேதி ஆரம்பித்த போது, சந்தைக்கடை மாதிரி ஒரே இரைச்சலாக, யார் என்ன பேசுகிறார்கள், என்னநடக்கிறது என்பதே புரியாமல் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.


குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள், ஒரே புழுக்கமாக இருக்கிறது, குளிர்சாதனம் சரியாக வேலை செய்யவில்லை என்றெல்லாம் நீதிபதியிடம் குற்றம் சொன்னார்கள். நீதிமன்றமா அல்லது வேறு பொது நிகழ்ச்சியா என்பதேகூடத் தெரியாத அளவுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிறையப் பேர் நீதி மன்றத்துக்குள் இருந்தார்கள்.குற்றம் சாட்டப் பட்டவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

த்திரிகைகளும் கூட முதல்நாள் விசாரணையை ஏகத்துக்கும் பரபரப்பாகக் கவர் செய்து செய்திகளை வெளியிட்டன. டிவிட்டரில் வெவ்வேறு தலைப்புக்களில் இந்த வழக்கு விசாரணையின் உடனடி நிலவரம் பரிமாறிக் கொள்ளப்பட்டன. எல்லாம் அந்த ஒரே நாள் முதல் நாள் தான்! அதற்கடுத்த இரண்டாம் நாள், அதற்கடுத்தவாரம், அப்புறம் நேற்றும் இன்றும் என்ன நடந்தது என்பதை எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ப்புச்சப்பில்லாத விசாரணை, சாட்சியம் பதிவு செய்யப்படுகிற சடங்கு மட்டுமே நடந்ததில் பத்திரிகைகளுக்கு என்ன பரபரப்புச் செய்தி கிடைத்து விடும்? கனிமொழியைப் பெரிய வில்லி, சதிகாரியாகச் சித்தரித்த அதே ஊடகங்கள், இப்போது ட்ராக்கை மாற்றி, விஐபி குற்றவாளிகளிடம் நீதிமன்றம் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொள்கிறது, கனிமொழிக்கு ஜாமீன் வழங்காமல் தொடர்ந்து மறுத்து வருவது, அடிப்படை உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம் என்ற ரீதியில் கொஞ்சம் அனுதாபத்தோடு உச்சுக் கொட்டி செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.

னங்களுடைய எண்ணவோட்டமோ வேறு மாதிரியாகத்தான் இருந்தது.ஊடகங்கள் இதே ரீதியில் இன்னும் கொஞ்சம் அனுதாபத்தை வளர்க்க முயன்றிருந்தால், இப்போது கூடங் குளத்துக்கு எதிர்ப்பு என்ற நிலை மாறி, அணு உலைக்கு ஆதரவாகப் போராட்டம் என்று ஆரம்பித்திருக்கிறார்களே அது போல விஐபி குற்றவாளிகளை வெளியே விடாதே என்று போராட்டம் கூட ஆரம்பித்திருக்கக் கூடும்.

ழக்கம்போல, இந்த இடமாற்றத்தை முதலில் எதிர்த்ததும் ஆ.ராசாதான்! "இந்த தேசத்தில் என்ன நடக்கிறது  என்றே புரியவில்லை!" என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்!அவரது வழக்கறிஞர் திரு சுஷில் குமார், குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய கருத்தைக் கேட்டறிந்து, அவர்களுடைய சம்மதத்துடன் தான் இடமாற்றத்தை முடிவு செய்திருக்க வேண்டும், இது முழுக்க முழுக்க  சட்டவிரோதம் என்று கொதித்திருக்கிறார். ஆகக் கலைஞரின் இளைஞன், ரொம்பத்தான் சுறுசுறுப்பாக இருக்கிறார்!  

ப்புறம் மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஷாஹித் பால்வாவின் வழக்கறிஞர் மேமன், இது தகுந்த காரணமே இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். இந்த இட மாற்றம், இப்போது அவர்கள் அனுபவித்து வரும் சுதந்திரக் காற்று, தகவல் பரிமாற்றங்கள், இன்ன பிற விஷயங்கள் எல்லாமே அடை பட்டுப் போய்விடும் என்பது மிகவும் வெளிப்படை.

கனிமொழி, தனக்காகக் கூடக் கவலைப்படவில்லையாம்!  


ழக்கறிஞர்கள் அங்குமிங்கும் அலைந்து சிரமப்படவேண்டி இருக்குமே என்று தான் கவலைப்பட்டாராம்! திஹார் சிறைக்குள், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களைத் தவிர, பத்திரிகையாளர்கள் உட்பட வெளியாட்கள் எவரையும் அனுமதிக்க ப்போவதில்லை. ஆக, நீதிமன்ற வளாகத்துக்குள், முன்புபோல உறவினர்கள், ஆதரவாளர்கள் எவரும் பக்கத்தில் அமர்ந்து ஆதரவாக அரட்டை அடிக்க முடியாது. ஆர்ப்பாட்டமாக வெளியே வந்து பேட்டியும் கொடுக்க முடியாது. கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும், என்ன செய்ய?

யர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து நாளை உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி திரு ஏ.கே சிக்ரியிடம்   முறையிட்டு, இந்த மாற்றத்துக்குத் தடை கோர இருப்பதாக செய்திகள் மேலும் சொல்கின்றன.ஆனால், இந்த அறிவிப்பை மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் உண்மையிலேயே கம்மிதான்! இதில், குற்றம் சாட்டப் பட்டிருக்கிறவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆதாயம், ஊடகங்களில் பரபரப்புக்காக, இப்படி அல்லது அப்படி என்று ஊகங்களை அள்ளி இறைத்து வருகிற கற்பனைகள் இனிமேல் குறையலாம்!

"துவரை, தலைவர் டில்லிக்குப் போனார், மகளைப் பார்த்தார் ஜாமீன் மட்டும் தான்கிடைக்கவில்லை! இப்போது தளபதி போனார், சகோதரியைப் பார்த்தார், விசாரணை நடக்கும் இடமே மாறி விட்டது!ஆதரவாளர்கள், கட்சி எம்பிக்கள் கூட்டம் கூட்டமாகப்போய் ஆதரவு தெரிவிக்க இனி அங்கே போக முடியாது. இப்போது திமுகவின் நேரம் என்ன நேரமோ தெரியவில்லை, என்ன செய்தாலும் தலைவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது!" நேற்றைய பதிவைப்பார்த்துவிட்டு ஒரு வழக்கறிஞர் நண்பர் வருத்தப் பட்டுச் சொன்னது இது.வருத்தப்பட்டது எதற்காக  என்றால், அவர் ஒரு தீவீர உடன்பிறப்பு!!

வரால், அவரது கட்சித்தலைமையின் இன்றைய நிலைமையை பார்த்து வருத்தப்படத்தான் முடியும்.

வருத்தம் தந்த செய்தி ஒன்று    இரண்டு 


ஜெயிலா பெயிலா அப்டேட்ஸ்! 23.11.2011 11.10 am

யுனிடெக், ஸ்வான் டெலிகாம், அணில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் மூன்று பேர், ஆக மொத்தம் ஐந்துபேருக்கு மட்டும்  உச்ச நீதிமன்றம் இன்று காலை ஜாமீன் வழங்கி இருக்கிறது.


இது முதல் இன்ஸ்டால்மென்ட் தானா? இன்னும் வருமா?

அடுத்த (கனிமொழி, சரத்குமார்) இன்ஸ்டால்மென்ட் டிசம்பர் ஒண்ணாந்தேதி விசாரணைக்கு வரும்போது தெரியும்!

2 comments:

  1. "இதுவரை, தலைவர் டில்லிக்குப் போனார், மகளைப் பார்த்தார் ஜாமீன் மட்டும் தான்கிடைக்கவில்லை! இப்போது தளபதி போனார், சகோதரியைப் பார்த்தார், விசாரணை நடக்கும் இடமே மாறி விட்டது.....
    enjoyed this lines..... GOOD.

    ReplyDelete
  2. செந்தமிழன் பதிவு உங்களுடையதுதானா, பெஞ்சமின்? நீங்கள் என்ஜாய் பண்னுகிற அளவுக்கு அந்த வார்த்தைகளில் அப்படி என்ன இருந்தது?திமுக காரர்கள் என்றால் சென்டிமென்டே இருக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!