ஏழு பேர் விடுதலை :: சாத்தியமா? நிஜமாகவே அவசியமா?

நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என்று நம்புகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கையோடு சொன்னாரா? அல்லது நக்கலாகவா?  அது எப்படி இருந்தாலும், ஆகிற கதை மட்டும் இல்லை என்பது இங்கே அரசியல் பழகாதவருக்கும் கூடத் தெரியும். 

இலங்கைத்தமிழர் பிரச்சினையின் மீது ஆரம்ப காலத்தில் எல்லோரையும் போலவே எனக்கும் அனுதாபம் இருந்தது. நாளடைவில் விடுதலைப்புலிகள் மீது மிகைப்படுத்தப் பட்ட  பிம்பங்கள் கலைந்து போனது, ராஜீவ் காண்டி படு கொலை செய்யப்பட்ட அந்தத் தருணம், ஈழத்தமிழர் மீதிருந்த  கொஞ்சநஞ்ச அனுதாபமும் ஆதரவு உணர்ச்சியை அறவே அற்றுப் போகச் செய்தது. ஆனாலும் பொதுவெளியில் என் கருத்தாக எதையும் எழுதியதில்லை. காரணம் ஏற்கெனெவே நொந்து போயிருக்கிற ஈழத்தமிழர்கள் மனம் நொந்துவிடக்கூடாதே என்பது மட்டும்தான்! நான் அறிந்த ஈழத்தமிழர்கள் பலர் தொட்டாற்சுருங்கிகளாக இருந்ததும் ஒருகாரணம்.    



இந்த ஒப்புதல் வாக்குமூலம் எழுத்து வடிவில் KP யின் ஒப்புதல் எல்லாம் ரொம்பப்பின்னாடி. 

ஸ்டேன்லி ராஜன் இன்று முகநூலில் பகிர்ந்திருக்கிற  இந்தப்பதிவு நிறையவே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது:

ராஜிவ் கொலைவழக்கினை விசாரித்தவர்களுக்கும் அந்த குற்றபத்திரிகையினை முழுக்க‌ தெரியும்

பேரறிவாளன் மேல் உள்ள குற்றசாட்டு பேட்டரி வாங்கி கொடுத்தான் என்பது, அதுவும் ரிமோட் கண்ட்ரோலில் மாட்டபடும் சிறிய பேட்டரி வாங்கி கொடுத்தான், அதற்கா தூக்கு என்பது தமிழ்நாட்டில் பலபேரின் நம்பிக்கை.பேரறிவாளன் மேல் ஏகபட்ட குற்றசாட்டுக்கள் உண்டு, யாழ்பாணம் சென்றது , குண்டுவெடிப்பில் கொல்லபட்ட ஹரிபாபுவோடு அவனுக்கு இருந்த தொடர்பு, ஹரிபாபு வீட்டில் கண்டெடுக்கபட்ட ஆதாரப்படி அவன் யாழ்பாணம் செல்ல திட்டமிட்ட விஷயம் என நிறைய உண்டு

ஆம் 1990ல் தன் 16ம் வயதிலே யாழ்பாணம் சென்று பல பயிற்சிகளை பெற்று திரும்பியவன் அவன், அவனோடு அந்த ஹரிபாபு என்பவனும் நெருக்கமான புலி ஆதரவாளனாக இருந்தான். ஹரிபாபுதான் ராஜிவ் கொலையினை படம் எடுத்து சிக்கி செத்தான், இவன் முதலாளிதான் ஸ்டூடியோ அதிபர் சுபா சந்தரம், அவரும் புலி அபிமானி. பேரறிவாளன் சிவராசனுக்கு கவசாகி பைக் வாங்கி கொடுத்தது முதல் நிறைய உதவினான், பேட்டரி என அவன் வாங்கியது பேட்டரி செல் அல்ல, காருக்கான பேட்டரி வகை.

ஆம் , சிவராசன் இயக்கிய வயர்லெஸ் கருவிக்கு தேவையான சக்திவாய்ந்த பேட்டரி. அதை வாங்கி கொடுத்தது ஆதாரமாக சிக்கியது, இன்னும் நிறைய உண்டு.ராஜிவ் கொலை நுணுக்கமாக திட்டமிடபட்டது, சிக்கினால் ஏகப் பட்டோரை இழுத்துவிடும் மர்ம தந்திரம் அது. அப்படித்தான் மரகதம் சந்திரசேகர் வரை சிக்கவைக்கபட்டனர். ஆனால் இந்திய புலனாய்வு துறை எதை வெட்ட வேண்டுமோ அதை வெட்டினார்கள், எதை விடக்  கூடாதோ அதை சரியாக பிடித்தார்கள்.

மாற்றுவெடிகுண்டாக வந்த ஆதிரையே விடுவிக்கபட்டபொழுது பேரறிவாளன் ஏன் விடுவிக்கபடவில்லை என்றால் விஷயம் அவனின் பிடிவாதம்.இன்றுவரை புலிகளுடனான தன் தொடர்பை அவன் ஒப்புக் கொள்ளவில்லை, அவன் செய்த புலி ஒத்துழைப்பை எங்குமே ஏற்கவில்லை. விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, அவனிடம் பெரும் பிடிவாதமும் இன்னும் பிடிக்கும் வீண் அடமும் உண்டு. சரி அவன்மேல் குற்றம் இல்லை என்றால் புலிகளால் வஞ்சகமாக ஏமாற்றப் பட்டேன் என் ஒருவார்த்தை சொன்னானா?

இல்லை, அவன் சொல்லவில்லை சரி, அவன் தாயான அற்புத நடிகையான அற்புதம்மாளாவது சொன்னாளா?

இல்லை. பின் எங்கிருந்து விடுவார்கள்?

இதில் சிலர் உடனே சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி என பொங்கலாம். ராஜிவ் கொலைக்கு பின் காங்கிரஸ் இந்நாட்டை 20 வருடம் ஆண்டது, என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? சரி, சு.சாமி சந்திராசாமியினை விசாரித்து உள்ளே போடவேண்டுமென்றால் வை.கோப்பால்சாமியினை என்ன செய்யவேண்டும்?

"திமுக ஆட்சியும் அவர்கள் ஒத்துழைப்பும் இருந்திராவிட்டால் ராஜிவ் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை" என சொன்ன ஜெயின் கமிஷன் அறிக்கைபடி என்ன செய்யலாம்? ராஜிவ் கொலைக் கைதிகள் 7 பேரில் 3 பேரே இந்தியர்கள் நால்வர் இலங்கையர்கள், நாடுவிட்டு நாடு கொல்லவந்தவர்களை விடுவி என்பது முட்டாள் தனமானது. மீதி மூவரில் நளினி கடைசி வரை முழு உண்மையினை சொல்லவில்லை, காதலனை காப்பாற்ற சில உண்மைகளை சொன்னாளே தவிர இன்னும் முழு அப்ரூவர் ஆகவில்லை. குறைந்த பட்சம் தான் செய்தது தவறு என்று கூட சொன்னதில்லை

இந்த பேரறிவாளன் சாதாரண நபர் அல்ல, 16 வயதிலே இலங்கை சென்றவன், இந்திய ராணுவத்துக்கு எதிராக சாத்தானின் படைகள் எனும் புத்தக தயாரிப்பில் முழுக்க உதவியன். ராஜிவ்கொலையில் பிடிபடாவிட்டால் அவன் இலங்கைக்கு தப்பியிருக்கும் அபாயமும் உண்டு.

பேரறிவாளன் இன்னும் உண்மையினை ஒப்புக் கொள்ளாதவன், இவ்வளவு நடந்தபின்னும் அவன் மேலான புலிதொடர்பு ஆழமாக நிரூபிக்கபட்டபின்பும் இன்னும் தான் அப்பாவி என சொல்லி கொள்ளும் ஒரு குற்றவாளி. முதலில் அவன் தன் தவறை ஒப்புக் கொள்ளட்டும்,  16 வயதில் மகனை தறுதலையாக்கி தேசவிரோதியாக்கிய அந்த அற்புதம்மாளும் தன் தவறை ஒப்புகொள்ளட்டும். அதன்பின் அடுத்த காட்சியினை பார்க்கலாம்

மேலே பகிர்வின் சுட்டியில் பின்னூட்டங்கள் இன்னும் அதிகத் தகவல்களைக் கொட்டுகின்றன. நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதும், எழுவர் விடுதலையும் ஆகிற கதை போலத் தெரியவில்லை என்றாலும், என்னமோ உடனே  சாதித்துக் காட்டப்போகிறமாதிரி என்னமாய் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!! 

மீண்டும் சந்திப்போம் .

ஒரு புதன்கிழமை! செய்திகளின் அரசியல் கொஞ்சம் சுருக்கமாக!

முதலில் இந்தியர்களாக நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள வைக்கும் ஒரு செய்தியைப் பார்த்து விடுவோம்! சீனாவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்தியர்கள்


கடந்த 12 மாதங்களில் 43% இந்தியர்கள், சீனப்  பொருட்களை புறக்கணித்துள்ளனர்! லடாக்கில் (Ladakh) உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley)  இந்திய மற்றும் சீன படையினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு தொடங்கியது. அந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பல சாமானிய மக்கள், சீன தயாரிப்புகளை புறக்கணிக்கத்  தொடங்கினர் (Ban China Products).அதே சமயத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியர்கள், தற்சார்பு பொருளாதாரத்தை (Atmanirbhar Bharat) நோக்கிய பயணத்தை, ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு பல திட்டங்களை வகுத்தது. கூடுதலாக உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது.

இதனால் கடந்த 12 மாதங்களில், 43% இந்தியர்கள் சீன பொருட்களை (Made in China) புறக்கணித்துள்ளனர். கிட்டத்தட்ட 60% பேர் சீனாவில் தயாரித்த பொருட்களை தொடர்ந்து வாங்குகின்றனர் ஆனால், அவர்கள் கூட இந்த காலகட்டத்தில் 1-4 பொருட்களே வாங்கியுள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால், நுகர்வோரின் விழிப்புணர்வு (consumer awareness) இந்த ஓராண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது! #GalwanValleyClashes #china #madeinchina என்கிறது - சாணக்யா செய்திக்குழு -


மருது பாண்டியர்கள் என்றழையிக்கப்பட்ட மருது சகோதரர்கள் இன்றைக்கு 220 ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலை முழக்கம் செய்தநாள் ஜூன் 16 கவிஞர் கண்ணதாசன் சொந்தமாகத் தயாரித்த சிவகங்கைச் சீமை திரைப்படம் மருது பாண்டியர்கள் வரலாற்றைச் சொன்ன காவியம். நேரம் ஒதுக்கிப்பாருங்களேன்!  


டில்லியில் 962 கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை 13500 கோடி ரூபாய் வீண் ஆடம்பரச் செலவு என்று கூவிய இடதுசாரிகள், கேரளாவில் ரூ. 56443  கோடி செலவில் காசரகோடு - திருவனந்தபுரம் ரயில்பாதை அமைக்கும் திட்டத்தைப் பற்றி எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருப்பதேன்? யாராவது fevicol போட்டு ஒட்டி விட்டார்களா என்ன?


நாளை மாலை பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார் என்பதைக் குறித்து ஏகப்பட்ட அலப்பறைகள் கிளம்பியதில் ஸ்டேன்லி ராஜனுடைய நச்சென்ற பகிர்வு. சந்திப்பில் முக்கியமான விஷயம் முதல்வருடன் செல்கிறவர்கள் பட்டியலில் நிதியமைச்சர் இல்லை, ஆனால் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இருக்கிறார். டாட்.


வீசுவது கறித்துண்டு பொறை பிஸ்கட் எதுவானாலும் நேரத்துக்கு வரவில்லையென்றால் இப்படித்தான்! அதனால் விகடன் திருந்திவிட்டது என்றா சொல்லிவிட முடியும்?  #முன்களப்பிணி 



கோவிலை  நிர்வகிப்பதைக்குறித்து ஆகமங்களில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆகமங்கள் தான் கோவில் நிர்வாகத்துக்கான அத்தாரிட்டி! HR &CE அல்ல. 


அயோத்தி ராமஜென்மபூமி நிலம் வாங்கியதில் மோசடி என்று உத்தரப்பிரதேச அரசியலில் கிளப்பி விடப்பட்ட வேகத்திலேயே, கிளப்பியவர்கள் முகத்தில் கரிபூசிக் கொள்ளவேண்டி வந்தது. எப்படி என்பதை கோலாகல ஸ்ரீனிவாஸ் விவரிக்கிறார். வீடியோ 18 நிமிடம்.

மீண்டும் சந்திப்போம்.