தமிழகத் தேர்தலும் இன்னொரு கருத்துக் கணிப்பும்!




ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சி திமுக அணிக்குத்தான் வாய்ப்பு  இருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பை ஓட்டிக் கொண்டிருப்பது, நொந்து நூடுல்சாகிக் கிடக்கும் உடன்பிறப்புக்களுக்குக் கொஞ்சம் தவித்த வாய்க்குத் தண்ணீர் கிடைத்த மாதிரித்தான் இருக்கும்!கனிமொழி விவகாரத்தில் என்ன ஆகுமோ என்று தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் ஆறுதலாக இருக்கலாம்! ஆனால், வழக்கு, விவகாரம் எல்லாம் கையை மீறிப் போய் விட்டதாகவே தான் இருப்பதாகத் தெரிகிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, காங்கிரசுக்கு, கூட்டாளிகளை சிக்க விடுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. கூட்டணி தர்மம் என்பது இதுதான்!

ஏழு சதவீதவாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும் அதிமுக அணிக்கு நூற்றைந்தில் இருந்து நூற்று இருபது இடங்கள் வரை கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதேநேரம், வெறும் மூன்று சதவீதம் மட்டுமே கூடுதலாகப் பெற்று திமுகவுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


அவர்கள் சொல்வதன் படி திமுக அணிக்கு 48 % (45%), அதிமுக அணிக்கு 47% (40%) மற்றவை 5% (15%) என்று தேர்தலுக்குப் பிறகு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளாகச் சொல்கிறார்கள்.அடைப்புக் குறிக்குள் இருப்பது 2006 நிலவரம். அந்த மற்றவை பதினைந்து சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாகக் குறைந்திருப்பதாக சொல்வதில் தான், இந்த கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மை மிகவும் குழப்புவதாக இருக்கிறது.


ஆனால் ஹெட்லைன்ஸ் டுடே-ஒ ஆர் ஜி இணைந்து நடத்திய இந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை குடும்பத் தொல்லைக் காட்சிகளே நம்பவில்லை போல இருக்கிறது. செய்தியை ஸ்க்ரோலில் ஒட்டியதோடு சரி!

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, சிபிஐ எண்பதாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இந்த மாதம் இரண்டாம் தேதியன்று தாக்கல்  செய்த போது, இது குற்றப்பத்திரிகையா அல்லது வெற்றுப்பத்திரிகையா என்று சந்தேகம் எழுகிற அளவுக்குத் தெளிவாக இல்லாமல் சமர்ப்பிக்கப் பட்ட தருணங்களில் இருந்தே "கூட்டணி தர்மத்தில்" புதிய அத்தியாயமாக காங்கிரஸ்-திமுக இடையே  பூனை- எலி விளையாட்டு ஆரம்பமாகி விட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது! 'சட்டம் என் கையில்; என்று ஆரம்பத்தில் வீராவேசமாகக் குதித்தவர்கள், தாங்கள் ஒன்றும் "புலிகள்" இல்லை, வெறும் எலிகள் தான் என்பதைப் புரிந்து கொண்டு சத்தமில்லாமல், சட்டப்படி குற்றச்சாட்டுக்களை சந்திப்போம் என்று தீர்மானம் போட வேண்டிய நிலையையும் நேற்றைக்குப் பார்க்க முடிந்தது.  


பெரிய இடத்தின் மனைவி, மகள் இருவர் பெயரும் கூடுதல் குற்றப் பத்திரிகையில் இடம்பெறும் என்று வேண்டுமென்றே செய்திகள் கசிய விடப் பட்டது.என்ன மாயமோ, என்ன பேரமோ, பெரிய இடத்தின் மனைவி பெயர் மட்டும் இடம் பெறவில்லை! மகள் பெயரை சேர்ப்பதைத் தடுக்க முடியவில்லை!  கூட்டணி தர்மம் அங்கே கொழுந்துவிட்டு எரிந்தது! பாரதத்து தர்மபுத்திரனாகத் தன்னை சித்தரித்துக் கொண்டு, தர்மனுக்கேற்பட்ட சங்கடம் போல இதையும் முறுவலுடன் ஏற்பதாகப் பொருமிக் கொண்டேதான் சொல்ல முடிந்தது!

டில்லியில் இருந்து மட்டுமல்ல, எங்கிருந்து எந்தப் பிரபலம் வந்தாலும் சந்தித்து சால்வை போர்த்தி வணங்கி ஆசி பெற வேண்டிய அளவுக்கு உயர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு நபரை ராகுல் காந்தி சந்திக்கவே இல்லை. அதைப் பெரிய விஷயமாகவும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. தாரை, தப்பட்டைகளோடு  சென்னைச் சங்கமம் தான் நடத்த லாயக்கு, டில்லியை வென்ற சென்னைப் பாதுஷா எல்லாம் இல்லை என்பது வெளியே கசிந்து விடாமல் மறைக்கவும், ஈகோ பன்க்சராகிப் புகைந்ததும் பழைய வரலாறெல்லாம் இல்லை! இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று தான்!

உள்ளூரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அ'லெக்சாண்டர்களுக்கு, ராகுல் காண்டி கொஞ்சம் புகைச்சலாகத் தெரிவதில் வியப்பு இல்லை என்று பாதுஷாக் கனவுகளைப் பற்றி சொன்னது நினைவிருக்கிறதா?

சுப்பிரமணியன் சுவாமி சொன்னது நிஜமாகிவிடும் போலத்தான் இப்போதைய நிலவரம் இருக்கிறது!

ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில், முதலில் ஒன்றுமிருக்காது! அப்புறம் கனிமொழி பேர் சேர்க்கப்படும்,அப்புறமாக தயாளு அம்மாள், அதற்கப்புறம் கருணாநிதி பெயரும் சேர்க்கப்படும் என்று மனிதர் நிஜமாகத்தான் சொன்னாரா, அல்லது நக்கலுக்காகச் சொன்னாரா என்பது தெரியாது.

" I fully endorse and welcome the draft Report of the Public Accounts Committee prepared under the Chairmanship of the former Union Minister Dr. Murli Manohar Joshi
 

 The principal conclusions of the draft PAC Report are –



(1) that the bureaucrats of the PMO failed to keep the Prime Minister in the loop on the process of decision making by the Ministry of Communications & IT; 

(2) the Finance Minister (Mr. P. Chidambaram) and the Telecom Minister (Mr. Raja) erroneously decided the price of Spectrum at the very low price of 2001, and that it is a complex subject and hence in future it should be left to the TRAI; 

(3) that the Government should cancel all the 2G licenses so far allotted to nine companies since January 10, 2008.



These three conclusions are what I had argued in the Supreme Court  wherein I held the Prime Minister as a powerless person but not culpable in the 2G Scam; (2) that Mr. P. Chidambaram is as culpable in causing the loss to the nation of Rs.l.76 lakh  crores as Mr. Raja was and who has already been indicted for and is in prison; (3) that all the 2G licenses should be cancelled forthwith and fresh auction be held for the same." இது டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் அறிக்கை!

அப்புறம் மனிதர் இன்னொரு ஆரூடமும் சொல்கிறார் பாருங்கள்!அது கூடப் பலித்துவிடுமோ என்கிற மாதிரித்தான் நிலைமை இருக்கிறது!

"தமிழ்நாட்டில் எவர் ஜெயித்து வந்தாலும், 2013 வரை கூடத் தாக்குப் பிடிக்க முடியாது.நாடாளுமன்றத் தேர்தலுடன் மறுபடி தேர்தலை சந்திக்கும்படியாகத் தான் இருக்கும்!"






2 comments:

  1. அனிலும், டாடாவும் க‌ம்பிக்குள் செல்லும் கால‌ம் விரைவில் வ‌ரும் என்கிறார்.
    உச்சநீதிப‌திக‌ளின் வேக‌ம் ஆச்ச‌ரிய‌ம‌ளிக்கிற‌து. சிபிஐயின் அறிக்கையின் ப‌க்க‌ எண்க‌ளைக் குறிப்பிட்டு, கேள்விக‌ள் கேட்கிறார்க‌ள். என்கிறார். நாம் முட்ட‌ள்த‌ன‌மாய் தேர்ந்தெடுத்த‌ நம் பிர‌திநிதிக‌ளும், அவ‌ர்க‌ள் தேர்ந்தெடுத்த‌ அதிகாரிகளும் ந‌ம்க்கு எதிராய் செய்யும் குற்ற‌ங்க‌ளை, பாவ‌ம் இந்த‌ நீதிம‌ன்றம் க‌வ‌லையுட‌ன் எதிர்கொள்கிற‌து. மீடியாக்க‌ளும் கொஞ்ச‌ம் ஒத்தாசை செய்கிற‌து. பார்ப்போம் கிளைமாக்ஸ் எப்ப‌டி, எப்போ வரும் என....

    ReplyDelete
  2. வாருங்கள் திரு வாசன்!

    இந்த நேரத்தில் நீதிமன்றங்கள் மட்டும் தான் இந்திய நாட்டை, ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அவ்வப்போது தருகிறமாதிரித்தான் இருக்கிறது.

    ஊழலுக்கெதிரான ஜனங்களுடைய எழுச்சி மட்டும் தான் நிரந்தரமான தீர்வை உருவாக்க முடியும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!