அறிவின் பயனே மெய்ப்பொருளைக் காண்பது தான்!


அறிவு என்று ஒன்று இருப்பதன் பயனே, மெய்ப்பொருளைக் காண்பது தான்!
தேடல் என்று வருகிறபோதே, தேடப்படுவது ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? மனிதனுடைய நீண்ட பரிணாமத்தைப் போலவே, அவனுடைய தேடலும் மிகப் பழமையானது, ஒரு நதியைப் போலே, தன்னுடைய பயணத்தைத் தெரிந்தோ, தெரியாமலோ நடத்திக் கொண்டே இருப்பது!

சென்ற பதிவில் பராகா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்ததிரு அரவிந்த், கென் வில்பருடைய சிந்தனைகளைத் தொட்டு எழுதியிருந்த இரு பதிவுகளைத் தொட்டுப் பேசியிருந்தேன், இல்லையா? இவர், ஜெயமோகனுடைய வலைப்பதிவிலும் கூட, மிகுந்த ஆர்வத்துடன் கென் வில்பரைப் பற்றி ஒரு கருத்துப் பரிமாற்றம் நடத்தியிருப்பதை, அப்புறம் தான் பார்த்தேன். தொடர்ந்து இங்கே ஒரு கடிதப்பரிமாற்றத்தையும் இது தொடர்பாகப்படிக்கலாம்.

தத்துவ விசாரம் மேம்போக்காகப் பார்க்கையில் மட்டும் தான் கடினம், கொஞ்சம் பழகிப் போய்விட்டால், இதைவிட அருமையான விஷயம் ஒன்றை நீங்கள் காண முடியாது!

பரிணாமவியலை என்னவோ நாத்திகம் மட்டுமே ஏற்றுக்கொண்டு தாங்கிப் பிடிப்பது மாதிரியும், டார்வின் கோட்பாடுகள் மதங்களின் அடித்தளத்தையே அசைத்துப் புரட்டிப் போட்டு விட்டது போலவும் டாகின்ஸ் மாதிரி நிறையப்பேர் தப்பாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். அறிவியலை, நாத்திகம் மட்டுமே தாங்கிப் பிடிக்க முடியும் என்று வாதம் செய்து மட்டுமே, அதை கோயபல்ஸ் மாதிரி உண்மையாக்கிவிட முடியும் என்று நினைக்கிறார்களோ என்னவோ!

ஆனால், உண்மை அது அல்ல!

ஆப்ரகாமைட் மதங்கள், ஆரம்ப காலத்தில் அறிவியலுக்கு, மத நம்பிக்கைகளின் குருட்டுத்தனமான தடையாக இருந்ததென்னவோ உண்மைதான்! அப்படிக் குருட்டுத்தனமான எதிர்ப்பு, தடைவருகிறபோதெல்லாம், இயற்கையே தன்னைப் பார்த்துக் கொள்ளும் என்ற அடிப்படை உண்மை தெரியாமல் போனதேன் என்று புரியவில்லை.

தொழிற்புரட்சியும், அதற்கு முன்னதாக, சர்.ஆலிவர் கிராம்வெல் நடத்திய மக்களுக்கான அதிகாரப் போராட்டமும், வாடிகனுக்கு எதிராக மார்ட்டின் லூதர் நடத்திய இயக்கமும், மதம் எழுப்பியிருந்த தடைச்சுவரை இடித்துப் போட்டு விட்டன. அதற்குப் பின்னால், மதம், அறிவியல் வளர்ச்சியில் பெரிய தடையாக இருந்ததில்லை.டாகின்ஸ் போன்றவர்கள், சௌகரியமாக இந்த உண்மைகளை மறந்து விடுகிறார்கள். கலீலியோவைப்பற்றிப் பேசுவதெல்லாம், சும்மா உளாக்காட்டிக்குத் தான் போல.

இதில், மதங்களுடைய குற்றம் என்பதை விட, பழக்கங்களை அவ்வளவு சுலபமாக விட்டுவிட முடியாத,மாற்றங்களை உடனே ஏற்றுக்கொள்ள மறுக்கிற, மனித பலவீனம் தான் உண்மையான காரணம் என்பதைப் புரிந்து கொண்டோமேயானால், இவ்வளவு வாத-பிரதிவாதங்களுக்கு அவசியமே வந்திருக்காதல்லவா?

திரு. A S தலால் தொகுத்து வெளியான A GREATER PSYCHOLOGY:An Introduction to the Psychological Thought of Sri Aurobindo என்ற புத்தகத்திற்கு திரு கென் வில்பெர் எழுதிய முகவுரையில் இருந்து, சில வரிகள்:

"Sri Aurobindo Ghose was India's greatest modern philosopher-sage, flowing out of a country that is one of the most astonishing and profound geographical sources of spiritual awareness on the planet. But Aurobindo's genius was not merely that he captured the profundity of India's extraordinary spiritual heritage. He was the first great philosopher-sage to deeply grasp the nature and meaning of the modern idea of evolution. And thus, in Aurobindo, we have the first grand statement of an evolutionary spirituality that is an integration of the best of ancient wisdom and the brightest of modern knowledge.

It wasn't that other great thinkers had not seen that evolution is basically Spirit-in-action (it was obvious to Schelling and Hegel, for example). Nor was Aurobindo necessarily the most enlightened spirit in modern India (many would point to the illustrious Sri Ramana Maharshi in that regard). But nobody combined both philosophical brilliance and a profoundly enlightened consciousness the way Aurobindo did. His enlightenment informed his philosophy; his philosophy gave substance to his enlightenment; and that combination has been rarely equaled, in this or any time. There is no question about it: the modern world has irreversibly discovered the fact that the world evolves—matter evolves, life evolves, mind evolves. And Spirit evolves… or, we might say, Spirit is the entire evolutionary process of its own unfolding, from matter to life to mind to the higher and superconscient realms of Spirit's own being. This evolutionary unfolding of Spirit—as it plays out in psychology, anthropology, religion, politics, psychology, the arts, and spiritual practice itself—is the central message of Aurobindo's voluminous writings.

As such, Aurobindo's message is still far ahead of its time. The world remains, to speak in very general terms, divided into two highly contentious camps: those who believe in the ancient wisdom traditions (and therefore tend to completely distrust the modern notion of evolution), and those who believe the modern scientific view of evolution (which completely dispenses with any notions of Spirit). Both of those views are terribly partial and fragmented, even though both claim to have the inside track on truth. But as Aurobindo saw—probably more clearly than anybody before or since—the scientific account of evolution, which relies on nothing but frisky dirt, dynamic matter, and process systems (e.g., chaos theories, far-from-equilibrium dissipative structures, autopoiesis, etc.) cannot even begin to explain the extraordinary series of transformations that brought forth life from matter and mind from life, and that is destined to bring forth, in just the same way, higher mind and overmind and supermind: Spirit alone can account for the astonishment that is the glory of evolution.

Likewise, there is nothing that authentic religion should fear in the notion of evolution. Real spirituality is not a theory about how to make the beans grow, nor is it an empirical account of anthropological data. It is not about whether or not Moses actually parted the Red Sea. It is about whether or not you can awaken to the Spirit in you which is beyond you, and that therefore plugs you straight into the Source and Suchness of the entire Kosmos. That you can develop your own contemplative abilities to recognize this Spirit is only to say that you can evolve into your own highest Estate—and that is yet another example of Aurobindo's message of evolutionary spirituality.

Aurobindo thus stands as one of the great founders of integral spirituality and integral practice. All subsequent attempts at such integrative efforts must, I believe, at least acknowledge Aurobindo's enduring genius and in many ways still unsurpassed efforts."

A GREATER PSYCHOLOGY—An Introduction to the Psychological Thought of Sri Aurobindo, edited by A. S. Dalal, Tarcher/Putnam (December 2000).


நன்றி: http://www.integralworld.net/Dalal.html

தொடர்ந்து கொஞ்சம் நீளமான பதிவுகளையே பார்த்துச் சலித்து விடாமல் இருப்பதற்காக, இந்தத்தலைப்பில் பேசுவதைக் கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் வைத்துக் கொள்ளலாம்! ஸ்ரீ அரவிந்தஅன்னை அருளிய ஒரு பிரார்த்தனையோடு, மெய்ப்பொருளைத் தொடர்ந்து தேடுவோம்!

" EVERYTHING works together to prevent me from remaining a creature of habits, and in this new state, in the midst of these circumstances, so complex and unstable, I have never before so completely lived Thy immutable peace or rather the “I” has never before disappeared so completely that Thy divine peace alone is alive there.

All is beautiful, harmonious and calm, all is full of Thee.

Thou shinest in the dazzling sun, Thou art felt in the gentle passing breeze, Thou dost manifest Thyself in all hearts and live in all beings. There is not an animal, a plant that does not speak to me of Thee and Thy name is written upon everything I see.

O my sweet Lord, hast Thou at last granted that I may belong entirely to Thee and that my consciousness may be definitively united with Thine? What have I done to be worthy of so glorious a happiness?
Nothing except to desire it, to want it with constancy — that is very little.

But, O Lord, since now it is Thy will and not mine that lives in me, Thou wilt be able to make this happiness profitable to all; and its very purpose will be to enable the greatest possible number of beings to perceive Thee.

Oh, may all know Thee, love Thee, serve Thee; may all receive the supreme consecration!

O Love, divine Love, spread abroad in the world, regenerate life, enlighten the intelligence, break the barriers of egoism, scatter the obstacles of ignorance, shine resplendent as sovereign Master of the earth."

-The Mother, in 'Prayers and Meditations'

Karaikal, April 13,1914

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!