அழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை!

தேநீர்க் கோப்பையில் வந்த சுனாமி, முந்தாநாளே போய்விட்டது! அறிவியலின் அழகான தேடல்கள், இந்தப் பிரபஞ்ச வெளியின் அற்புதத்தை படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள்!

கிரகணம் என்பது என்ன? மேலே பார்க்கிறீர்களே, படத்தில், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் போது ஏற்படுகிற தற்காலிகமான இருட்டுத்தான். சுழற்சிப்பாதையில், பூமியும், சந்திரனும் இயங்கும்போது, கிரகணத்தின் பாதையும், நேரமும் மாறுபடுகிறது!
திடீரென இருட்டுக் கவ்வும்போது, அச்சம் உண்டாவது இயற்கை. ஆதிகாலத்தில், மனிதனும், இப்படித்தான், கிரகண இருட்டைக் கண்டு பயந்தது உண்மை. அதற்கு சமாதானம் சொல்ல நிறைய புனைகதைகளும் வந்தது உண்மை.அதற்காக....? வெறும் கதை கேட்பதிலேயே நின்று விட முடியுமா என்ன? கேள்விகள் ...கேள்விகள்..கேள்விகள்..தொடர்ந்து எழுந்தன. கேள்விகளே, தேடலின் தொடக்கம்! தேடலே, உயிர்மையின் இயக்கம்!

போன பதிவில், அறிவியல் பார்வையோடு பார்ப்பதற்காகக் கொடுத்திருந்த இந்தச் சுட்டியை, நிறையப்பேர் பாத்திருக்கீங்கன்னு புள்ளிவிவரம் சொல்லுது, நன்றி

பாருங்கள், இந்தச் சிறுவர்கள், எவ்வளவு ஆர்வத்தோடு கிரகணத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று!

அறிவியல் உண்மைகளைப் புரிய வைக்கவோ, மூட நம்பிக்கைகளைச் சீர் திருத்துவதற்கோ "உண்ணும் விரதமிருப்பது" பயன்படுமா? இதுக்குப்பேர்தானா, நீங்கள் பேசும் பகுத்தறிவு?
மேலே உள்ள படத்தில், இன்றைக்கு நிகழ்ந்த கிரகணத்தின் பாதையைப் பார்க்கலாம். சமீப காலத்தில் நிகழ்ந்த கிரகணந்களிலேயே , இது தான் மிக நீண்ட நேரம் நீடித்த கிரகணம் என்று சொல்கிறார்கள். அடுத்து இதே போல ஒரு நீண்ட கிரகனத்திற்காக இன்னம் 123 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்!
ஒளியை மறைத்த தடை நீங்கும்போது சில அதிசயங்களைக் காண முடியும்! இங்கேயும் கூட, அப்படித்தான்! அறிவை மயக்கும் சில புனைவுகளும் நீங்கும்போது மனிதன் தனக்குள்ளும் சில அழகான அதிசயங்களைக் கண்டுகொள்ள முடியுமே!
தடுத்து மறைத்தது நடுவில் நின்றாலும், ஒளி அதையும் மீறிப் புறப்படுமே!
ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னாலும், ஒரு பகல் உண்டு! மறைத்து வைக்கவும், மறந்து போகவும் மனிதன் எவ்வளவு முயன்றாலும், மெய்ப்பொருளாய் அது வெளிப்படுமே!
கிரகணத்தின் அதியற்புதக் காட்சி என்று, இதைத்தான் சொல்வார்கள். வைர மோதிரம் என்று வர்ணிக்கப்படும் காட்சி இது!

கவிஞர்-பதிவர் ரிஷான் ஷெரீப் அவர்களே! இருபத்திரண்டாம் திகதி சூரிய கிரகணம், நீங்கள் அஞ்சியது போல எந்தப் பேரழிவையும் கொண்டுவரவில்லை. பிரபஞ்சத்தில் அழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை!

"It is the darkest nights that prepare the greatest dawns - and it is so because it is into the deepest in conscience of material life that we have to bring, not an intermediate glimmer, but the full play of the Divine Light."
-Sri Aurobindo

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! நலமே சூழ்க!
சற்றே
அசைபோட
அருள்செல்வன் கந்தஸ்வாமி அவர்களின் பழைய பதிவு ஒன்று !

4 comments:

 1. கிரகணத்தை பார்க்க தவறியவர்களுக்கு அருமையான படங்களுடன் விளக்கியுள்ளீர்கள் , நன்றி. ஸ்ரீ அரவிந்தரின் பொன்மொழியை தமிழில் மொழிபெயர்த்து விளக்கினால் மகிழ்வேன் .

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி, திரு சுந்தர்
  ஸ்ரீ அரவிந்தரது கருத்தின் உட்பொருளை, படங்களுக்குக் கீழே சொன்ன சில வரிகளிலேயே காண முடியுமே!

  கிரகணத்தைப் பற்றிய நுட்பமான தகவல்களும் படங்களும் இணையத்தில் நிறையக் காணக் கிடைக்கின்றன. சென்ற பதிவிலேயே, திரு பத்ரி சேஷாத்ரியின் பக்கத்திற்குச் சுட்டி கொடுத்திருந்தேனே, பார்க்கவில்லையா?

  ReplyDelete
 3. Nothing in this existence perishes, nor does anything new come into being. Only Forms and appearances changes, The Atma remain the same, the deepest mysteries of life remain ever the same. The Wave form of Every creature comes and goes; and the oceanic form of atma- the soul, remains eternal. Waves in the ocean rise and disappear, but the soul that which is hidden in the individual, in the form of ocean is remains there eternal. This world is filled with full of these forms, wave forms and oceanic form. You and me, including the supreme krshna is subject to these forms.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!