கேள்வி பிறந்தது அன்று ....!


"கை பரபரக்கிறதே என்று சொரிந்து கொண்டே இருப்பீர்களா? அதுபோல, ஏதோஎழுத வருகிறது என்பதற்காக, எதையாவது எழுதிக் கொண்டே இருப்பீர்களா?"

வலைப் பதிவுகளைப் பற்றி, சமீப காலமாக இதில் ஏற்பட்டு வரும் அபரிமிதமானவளர்ச்சியைப் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு,இதிலெல்லாம் பரிச்சயமும் இல்லை, ஈடுபாடும் இல்லை. சில பிரபலமானவலைப் பக்கங்களைக் காண்பித்தேன். பார்த்து விட்டு இந்த ஒரே கேள்வி தான்கேட்டார்.

இந்தக் கேள்விக்கு, நேர்மையான ஒரு விடையை இன்னமும் அவருக்குச்சொல்ல முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

ஒரு பொதுத்துறை வங்கியில் Scale 3 அதிகாரியாக இருப்பவர் அவர். சிலவருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். அவருடையவங்கியில் தலைமை நிர்வாகியாக இருந்த ஒருவரை, பொருளாதார நிபுணர், [அல்லது அப்படி சொல்லிக் கொண்டவர்], பெங்களுரு வீதியில் இவர்தற்செயலாகச் சந்தித்த போது, எப்படியிருக்கிறீர்கள் என நலம் விசாரித்தபோதுநொந்து கொண்டாராம்:

"நீங்களாவது நினைவு வைத்திருக்கிறீர்களே, இங்கே எவரும் என்னைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை".

நண்பர், கூடவே இன்னொரு தகவலையும் சொன்னார், வங்கியில் இவர் புள்ளிவிவரத் துறையைப் பயன்படுத்திய விதம், இவருடைய வங்கிக்கு, xxx Bankஎன்பதற்குப் பதிலாக Statement Bank என்றே பெயர் வைத்திருக்கலாம் என்றஅளவுக்கு, ஒவ்வொரு மாதமும் அவ்வளவு புள்ளி விவர அறிக்கைகள்! இன்றுகூட அந்த நிலைமை மாறவில்லை, புள்ளி விவரங்களில் காட்டுகிறஅக்கறையை, அந்த வங்கி, வங்கித் தொழிலில் காட்டுவதில்லை!Core Bankingஎன்று முழுமையாகக் கணினிமயமானபின்னாலும் கூட, இந்த வங்கி, மாதத்திற்குஏற்கெனெவே இருப்பதோடு, இன்னமும் நான்கைந்து புள்ளிவிவரஅறிக்கைகளைச் சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறது.


புள்ளிராஜா வங்கி..?!



புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதில் இவ்வளவு அக்கறையோடு இருப்பதால் தமிழில் செல்லமாக, புள்ளிராஜா வங்கி என்று அழைக்கலாமா?

வலைப்பதிவுகளுக்கும், புள்ளிவிவரங்களைத் திரட்டுவதில் புள்ளி ராஜாவாகஇருக்கும் வங்கிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?

இருக்கிறது.

வலைப்பதிவுகளும் சரி, புள்ளிராஜா வங்கியும் சரி ஒரு விஷயத்தில்ஒரேமாதிரித்தான் இருக்கிற மாதிரித் தெரிகிறது.

திருவிளையாடல் படத்தில் சிவாஜி-நாகேஷ் வசனம் வருமே, அந்த மாதிரி!

"
கேள்விகளை நீ கேட்கிறாயா ......அல்லது நான் கேட்கட்டுமா?"


தருமியாக வேடமேற்று நடித்த நாகேஷ் அவசர, அவசரமாக,


"
எனக்கு கேட்க மட்டுந்தான் தெரியும்...........நானே கேட்கிறேன்"

கேள்விகள்! கேள்விகள்!! கேள்விகள்!!!

சிந்திக்கத் தெரிந்த நாள் முதலாகக் கேள்விகள் இருந்து கொண்டுதான்இருக்கின்றன. முதல் கேள்வியே, நாம் விடை தெரிந்து கொள்ளத் தான்கேட்கிறோமா அல்லது, கேள்விகளை அங்குமிங்கும் வீசிவிட்டு அத்துடன்நின்றுவிடுவதையே விரும்புகிறோமா?  


கேள்விகள் கேட்பதோடு மட்டும் நின்று விட்டால், கேள்வி கேட்பதற்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விடுமா இல்லையா?

இதற்கு, ஒரு நாணயமான விடையைத் தெரிந்துகொண்டால் தான் அடுத்தகட்டத்திற்கே போக முடியும்!

சரி, அதற்கும், புள்ளிராஜா வங்கிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?


இருக்கிறதே! அதுதான் பாதிக் கிணறு தாண்டுகிற கதை!

புள்ளிவிவரங்களை, தினசரி, வாராந்திர, மாதாந்திர அப்புறம் காலாண்டு,அரையாண்டு, முழு ஆண்டு என்ற அடிப்படையில் சேகரிக்கிறார்களே, அதில்இருந்து என்ன தெரிந்து கொண்டார்கள் என்பது முதலாவது கேள்வி. அடுத்தது,அந்தத் தெரிதலை வைத்துக் கொண்டுஎன்ன செய்ய முடியும், என்ன செய்யப்போகிறார்கள் என்பது. அப்புறம், செய்ததில் என்ன பாடம், குறைநிறைகள்,இப்படி,ஒரு கேள்வி, தொடர்சங்கிலியாகப் போய்க் கொண்டே இருக்கும்.

ஒரு முடிவுக்கு வருகிற வரை, கேள்வி, அதை ஒட்டியோ வெட்டியோ தொடர்கேள்விகள் எழுவதைத் ஆரம்பித்ததையும் ஆரம்பித்ததையும் அல்லதுவெறுமனே கேள்விகள் கேட்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டால், புள்ளிராஜாவங்கி மாதிரி அந்தரத்தில் நின்று தொங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!

கல்லூரிப் பாடமாகப் படித்தபோது கசந்த புள்ளிவிவர இயல், பின்னாட்களில் ஒருதொழிற்சங்கவாதியாக பரிணாமம் அடைந்த கால கட்டத்தில் (?) ரொம்பவுமேபிடித்துப் போனது.


நம்ம காப்டன் விஜயகாந்த் அவர் படங்களில்அள்ளிவிடுவாரே, அந்த ரேஞ்சுக்கு இல்லை என்றாலும், இந்தப் புள்ளிவிவரங்களைஎப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளவோ, அனர்த்தப் படுத்திக்கொள்ளவோ முடியும் என்பதும், புள்ளிவிவரங்களில் என்ன தேடுகிறோம்என்பதைத்தெளிவாக வரையறுத்துக் கொள்ளத் தவறினோம் என்றால், தவறானமுடிவுகளே வரும் என்பதையும் மிக நன்றாகவே அறிந்து கொண்ட நாட்கள்அவை.

ஒரு பௌதீக அல்லது ரசாயனப் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனைகள்நடப்பது போல, மற்ற எல்லாம் நிலையானது என்ற அடிப்படையில், ஏதோஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அது எப்படி மாறுகிறது, மற்றவற்றை எப்படிமாற்றுகிறது என்று ஆராய்ந்து பொதுமைப்படுத்தி முடிவைச் சொல்வது போல,சமூக விஞ்ஞானத்தில், மனிதர்களுடைய இயல்பையும், வளர்ச்சி அல்லது தேய்மானப் போக்குகளை முடிவு சொல்ல முடியாது.

மனிதனின் இயல்பு, வாழ்க்கை என்பது ஓடிக்கொண்டே இருப்பது, மாறிக்கொண்டே இருப்பது. இந்த ஓடிக்கொண்டும், மாறிக் கொண்டும் இருக்கும்இயல்பை ஆராய, இன்னமும் சரியான வழிமுறைகள், கருவிகள் கண்டறியப்படவில்லை. அதனால் தான் இங்கே, உண்டு என்பதை இல்லை என்றாக்கிக் காட்டவும், இல்லை என்பது உண்டு என ஆகிப் போவதுமான விசித்திரங்கள் சாத்தியமாவதை, ஏற்கெனெவே ஒரு காலிப்பாத்திரத்தின் கதை என்ற பதிவில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.



கொஞ்சம் எளிதாகச் சொல்வதானால், வாழ்க்கை என்பது நம்பிக்கை,அவநம்பிக்கை என்கிற இரு வேறுபட்ட கரைகளுக்கு நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி.

இந்த இரு முரண்பாடுகளுக்கிடையில் இயங்கும் ஒன்றை, டாகின்ஸ்மாதிரி மிக எளிதாக இது இப்படித் தான் என்று முடிவு செய்து விடமுடியாது.


இதனால் தான், மேற்கத்தியநாடுகளில் இந்த சிந்தனையோட்டமே இருகூறாகப் பிரிந்து, கருத்து முதல்வாதம், பொருள் முதல் வாதம் என்று வளர்ந்தது. 

இங்கே கீழைய நாடுகளில்,இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, ஒரு பரந்த பார்வையைக் கொண்ட துறையாக, ஆன்மீகத்தை உயர்த்திப் பிடிக்கும் வேதாந்தமாக வளர்ந்தது.

நதியோட்டம் இறுதியில் கடலில் சங்கமிப்பதை போலவே, வாழ்க்கையின் பொருளை அறிந்து கொள்வதிலேயே உண்மையைக் கண்டறிய முடியும்.


இன்னும் பேசுவோம்!





No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!