நயன்தாரா-பிரபு தேவா! லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்!நயன்தாரா-பிரபு தேவா! லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்!

இங்க, இன்னைக்கு நம்மை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிற தலைப்புச்செய்தி இது தானுங்களே ! இல்லையா?

ஏமாத்தறதுக்காகத் தலைப்பை இப்படி வைக்கவில்லை, எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியின் தொடர்ச்சியாக, நம்மை நாமே கொஞ்சம் உரசிப்பார்த்துக் கொள்வதற்காக வைத்த தலைப்பு! அடுத்தவன் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கத் தவிக்கும் அதே நேரம், நமக்குள்ளும் கொஞ்சம் பார்க்கக் கற்றுக் கொண்டால், அது எவ்வளவு அருமையான அனுபவமாக இருக்கும்?

பேச்சுப் பேச்சாத்தான் இருக்கணும் மக்களே, மேல விழுந்து பிராண்டக் கூடாது! பகுதி 1

பேச்சுப் பேச்சாத்தான் இருக்கணும் மக்களே, மேல விழுந்து பிராண்டக் கூடாது! பகுதி 2

பேச்சுப் பேச்சாத்தான் இருக்கணும் மக்களே, மேல விழுந்து பிராண்டக் கூடாது! பகுதி 3

உண்மையிலேயே செய்தியைக் கொடுக்கிறீங்களோ, இல்லையோ, தலைப்புமட்டும் இப்புடி, அப்புடி விபரீதமாய்க் கற்பனை பண்ண வைக்கிற மாதிரி, எழுதத்தெரிஞ்சா மட்டும் போதுங்க! நீங்க தான் தமிழ் வலைப்பதிவர்களின் முடிசூடாமன்னன்! இம்சை அரசன்!

பதிமூணு லட்சமென்ன, கோடிகளும் தாண்டி ஹிட்ஸ் கொடுக்கும் [வேறென்ன, இம்சைதான்] வலைப் பிரபலம்!

அது என்ன, பத்து லட்சம் ஹித்சுக்கு மேல் கொடுத்த தனிநபர் வலைத்தளம்னு ஒருத்தர் கேட்டதுக்கு, ஒண்ணுமில்ல,அது வெறும் பத்து நிமிஷ சமாச்சாரம்னு பதில் சொன்ன பதிவரையும் இங்கே பார்க்க முடியும்! ஹிட்ஸ், பிரபலமான பதிவர், பிரபலமான மூத்த பதிவர் என்பதெல்லாம் வெறும் ஜுஜூப்பின்னு அவங்களே கங்கணம் கட்டிக் கொண்டு நிரூபித்து வருகிறார்கள்!

இதைத்தான் நம்ம வால்பையன் ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாச் சொன்னாரே, "பட்ஸ்[Buds] இருந்தாலும் காது குடையலாம். ஹிட்சை[Hits] வச்சி என்ன பண்றது?" அப்படீங்கிற கேள்வியை இந்தப் பதிவர் வட்டத் தொடரின் முதல் பகுதியில் சொல்லியிருந்தேன்!

எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமான வலைப்பதிவரா ஆகுரீங்களோ, அவ்வளவுக்கவ்வளவு உளறலாம்! பினாத்தலாம்! பிராண்டலாம்!
ஜேம்ஸ் பான்ட் படங்களில் வருமே, அந்த மாதிரி:

"Licensed to Kill : 007" மாதிரி Licensed to blab!

இப்படி,பிரபல பதிவர் ஆவது எப்படிங்கிற ஆராய்ச்சி பண்ணப்ப தான், நாம வெறும் சோதா, இங்கே நமக்கு முன்னாலேயே நிறையப்பேரு இதே வேலையா ஆராய்ஞ்சு, பீராய்ஞ்சு சகல கலா டாக்டர் பட்டமெல்லாம் வாங்கி இருக்காங்க அப்படீன்னே தெரிஞ்சது. இங்கே பாருங்க, விக்கினேஸ்வரன்னு ஒருத்தர், பன்னி படமெல்லாம் போட்டு பயமுறுத்திக்கிட்டு இருக்காரு! அவரோட இந்தப் பதிவுல இருக்குற ஒரு படத்தில், எது ஒரிஜினல் பன்னி, எது பகுத்தறிவோட பரிணாமப் பன்னி அப்படிங்கிறதே தெரியலே!

அங்கே அதைப்பாத்துட்டு வேதனையோட, இங்கபாத்தா, கொடுமைகொடுமைன்னு எருமை மாடேறி வெளிச்சம் காட்டிச்சாம்! கிட்டத்தட்ட, இதே மாதிரி கரூர் அரவக்குறிச்சிக்குப் பக்கத்துலேயும் ஒரு இடத்துலயும் நடக்குதுன்னு நினைவு.

இவங்களோட போட்டி போடனும்னா, நம்ம தீராத பக்கங்களில், மாதவராஜ் எழுதினாப்போல, கிளிஞ்சது கிருஷ்ணகிரின்றது வேற மாதிரிப் படிக்கும்படியா ஆயிடும்னு நல்லாவே புரிஞ்சது! இப்படிப் புரிஞ்சா மட்டுமே போதாதே?

ஒரு பிரபல பதிவர், பிரபலத்திலும் மூத்தவரா, இளையவரா, ரெண்டும் கெட்டானா இந்த பதிவுலக நுண்ணரசியல் எல்லாம் தெரியாது, பின்னூட்டமிட வந்த ஒரு பச்சப் புள்ளைய, "இது ரத்த பூமி, இங்கே நீயெல்லாம் எதுக்கு வந்தே, போயிடு, போயிடு"ன்னு விரட்டிக் கொண்டிருந்ததையும் பாத்தபோது, மெய்யாலுமே அடிவயிறு கலங்கிடுச்சு!

"ஆகா, இன்னைக்கு ரத்தம் பாக்காமப் போக மாட்டோம்ல" அப்படீன்னு உதார் விட்டுக் கிட்டே இருந்தாங்களா? சரி வேற ஒண்ணையும் தான் பாக்க முடியல, போனாப் போகுது, ரத்தத்தையாவது பாக்கலாம்னு காத்திருந்து பாத்தேன்.

சத்தம் தான் நிறைய வந்திச்சே தவிர, ரத்தம் எதுவும் வரலை!

ரத்தத்தைப் பாத்தே தீரணும்னு தவிக்கிறவுங்களுக்காக மட்டும் இங்கே.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்னு விசிலடிச்சு உற்சாகப்படுத்தியாவது பாக்கலாமேன்னு விசிலடிக்கப் பாத்தா, அங்கே கூட சத்தம் வரலை, வெறும் காத்து தாங்க வந்தது!

கனக விசயரின் முடித்தலை நெரித்துக் கல்லினைக் கொணர்ந்தான் சேர மகன்னு டி எம் எஸ் மாதிரி பாட வரலைன்னாலும் கூட, மூக்காலே கரகரத்த குரலில் வசனம் பேசவாவது செய்யலாம்னு பாத்தா, அங்கேயும் நமக்கு முன்னால நிக்குது க்யூ! அவங்க எல்லாம் பேசி முடிச்ச பின்னாடித் தான், நமக்கு சான்ஸ் வருமாம்! அவங்கல்லாம் எப்ப பேச்ச முடிச்சு, நாம எப்ப ஆரம்பிக்கிறது? நாம பேச நெனச்சதையே வேற யாராச்சும் பேசிட்டாங்கன்னா..........? ரிப்பீட்டீய்ய்ய்னு நமக்காகக் கோஷம் கொடுக்கக் கூட இன்னும் யாருமே கிடைக்கலையே!

சரி, காத்திருக்கும் நேரத்துல, சேரன் மாதிரி கல்லைக் கொண்டாரத் தான் முடியலை, கொஞ்சம் கல்லை வீசித் தான் பாப்போமே! வாங்க, வம்பான தமிழ் பதிவுலக மக்களே, ஹஜ் யாத்திரை போறவுங்க, யாத்திரைக் கடமைகள்ள ஒண்ணா, சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு இருக்குதாம்! இங்கே கடவுள் தான் இல்லை, சாத்தான்கள் நிறைய உண்டே!

வாங்க! வாங்க! வந்து நிறையக் கல்லெறியலாம்! கல்லடியும் படலாம்!

தமிழ்ப் பதிவுலகக் கடமை அழைக்கிறது! கல்லும் அழைக்கிறது! பதிவர் நானும் அழைக்கிறேன்! வாருங்கள்!

பேச்சுப் பேச்சாத்தான் இருக்கணும் மக்களே, மேல விழுந்து பிராண்டக் கூடாது!

10 comments:

 1. //ஹிட்ஸ், பிரபலமான பதிவர், பிரபலமான மூத்த பதிவர் என்பதெல்லாம் வெறும் ஜுஜூப்பின்னு அவங்களே கங்கணம் கட்டிக் கொண்டு நிரூபித்து வருகிறார்கள்!//

  உண்மைதான்,
  நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்னு அவுங்களே தான் கூவி கொள்கிறார்கள்!

  ReplyDelete
 2. //பேச்சுப் பேச்சாத்தான் இருக்கணும் மக்களே, மேல விழுந்து பிராண்டக் கூடாது! //

  இப்படி சொன்னாத்தான் எல்லாம் நகத்தை தீட்டிகிட்டு வருவாங்க!

  ReplyDelete
 3. கிட்டத்தட்ட தொண்ணூறு பேருக்கு மேல் கமென்ட்ஃபார்மை திறந்துவச்சு ஏதோ சொல்லணும்னு ஆசைபட்டிருக்காங்க! ஆனா,சொல்லாமலேயே போயிட்டாங்க!

  ReplyDelete
 4. வால் இல்லாத எடமே இருக்காது போலயிருக்கு

  ReplyDelete
 5. நயன்தாரா-பிரபு தேவா!

  கிருஷ் சார்.. உங்க லொள்ளு வால்பையன விட ஓவரா இருக்கும் போல

  ReplyDelete
 6. //D.R.Ashok said...

  வால் இல்லாத எடமே இருக்காது போலயிருக்கு//

  எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை!

  ReplyDelete
 7. /வால் இல்லாத எடமே இருக்காது போலயிருக்கு/

  வாங்க அசோக், அவரு இல்லாத பதிவு, பதிவே இல்லன்னு சொல்ற அளவுக்கு எங்கும் இருக்கார்-இங்கும் கூட!

  /உங்க லொள்ளு வால்பையன விட ஓவரா இருக்கும் போல/

  நான் அவர் ரசிகர் மன்றத்துல சேர்ந்திருக்கேன். வேறெப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க!

  ReplyDelete
 8. / வால் இல்லாத எடமே இருக்காது போலயிருக்கு//

  எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை!/


  வாங்க அருண்!

  சும்மா, ஒரு நற்பணி மன்றமோ, ரசிகர் மன்றமோ ஆரம்பிக்க அனுமதிச்சீங்கன்னா, ஒரு ஓரமாப் பொழச்சுக்குவோம்ல :-))

  ReplyDelete
 9. ஆப்பரசன்னு ஒருத்தர் எவண்டா இங்க பிரபலம்னு தேடி தேடி ஆப்பு சொருகுறாராம்!

  நீங்க சொல்றத பார்த்தா அடுத்து எனக்கு தான் போலயே!

  ReplyDelete
 10. நான் ஆப்பு, புட்டு எல்லாம் சொருகுறது..சாரி சுடறது இல்லைங்க..வெறும் ரசிகன் தான்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!