நிழலும் நிஜமும்! புவனேஸ்வரி புராணம்!



புவனேஸ்வரி விவகாரம் தமிழ்நாட்டில் "தீ"யாக இருக்கிறது!

தீ என்றால் என்னவோ எரிக்கும் நெருப்பு என்று எண்ணிவிடாதீர்கள்! மருதை,  வட்டார வழக்கில் 'மாப்ளே...தீயா இருக்குடா என்றால் சூப்பராக, பரபரப்பாக, முன்னணியில் இருக்கிறது என்று மட்டுமே அர்த்தம்.

காவல் துறைப் புண்ணியவான்கள் எந்த நேரத்தில் புவனேஸ்வரியைக் கைது செய்தார்களோ, அந்த நிமிடத்திலிருந்து   எகிறிய பரபரப்பு, இன்னும் சில நாள் இதே ரேஞ்சில் போனால்,  கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை, பெயர், நபர், படம் எல்லாமே புவனேஸ்வரி என்று ஆக்கி விடும் போல இருக்கிறது! போன வருடம் மூன்று கோடி எண்ணிக்கையில் தேடப்பட்ட நமீதாவை, எல்லா வகையிலுமே பூனைக் கண் புவனேஸ்வரி ஓரங்கட்டி விடுவார் என்றே தோன்றுகிறது.


இன்னொரு தடவை இதே மாதிரி அதிர்வெடியை வெடித்தாரேயானால், நமீதா தன் 'உழைப்புக்கு' வாங்குகிற ஊதியத்தையுமே கூட மிஞ்சிவிடுவார்!

தினமலர் வெளியிட்ட செய்தி இங்கே! எதிரொலிகள் எங்கெங்கேயோ!

நேற்று ஏழாம் தேதி நடிகர் சங்கம் நடத்திய கண்டனக் கூட்டத்தில் அரங்கேறிய காட்சிகளின் செய்தித் தொகுப்பைப் பார்த்தால், க்ளைமாக்ஸ் [உச்சம்] ஆண்டிக்ளைமாக்ஸ்[அபத்தத்தின் உச்சமாகி] ஆகிப்போன பரிதாபம் நன்றாகவே தெரிகிறது.

"தினமலர் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் தரப்பிலிருந்து யாராவது சமரசம் பேச வந்தால் சமாதானமாய் போவது குறித்து முடிவெடுப்போம் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

நடிகைகள் குறித்து தவறாக எழுதி ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய நடிகர், நடிகைகள், இப்போது அவர்களே ஆபாசமாக பேசி புதிய சிக்கலை தாங்களாகவே இழுத்துக் கொண்டுள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் குறித்து தினமலர் செய்தி வெளியிட்ட பிறகு நடிகர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கண்டனக் கூட்டத்தில் முக்கிய நடிகர்- நடிகைகள் ஆபாசமாகப் பேசியது போன்றவை இப்போது அவர்களுக்கே எதிராய் திரும்ப ஆரம்பித்துள்ளது.

விவேக், ஸ்ரீபிரியா, சேரன், சத்யராஜ், செல்வமணி போன்றோர் தரக்குறைவாக, படு ஆபாசமான வார்த்தைகளால் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக்  கேவலமாகப் பேசினர்."

இது தட்ஸ்தமிழ் செய்தி. முழுவதும் படிக்க இங்கே.

தட்ஸ்தமிழ் தளச் செய்தியையே அப்படியே கொஞ்சம் படங்களுடன் போட்டுக் கொண்ட இன்னொரு செய்தி படிக்க இங்கே.

"இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தினமலர் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை கண்டித்துப் பேசினர்.

ஒரு பத்திரிகை தவறான செய்தி வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால் மானநஷ்ட வழக்கு, அவதூறு வழக்கு போன்றவற்றை தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அதற்கு மாறாக காவல் துறையினர், செய்தி ஆசிரியரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்றதல்ல என்றும், இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கூட்டத்தில் பேசிய பத்திரிகையாளர்கள் கூறினார்கள்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட செய்தி ஆசிரியரை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தினார்கள்.

கூட்டத்தில், நடிகர் சங்கக் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீபிரியா, விவேக், விஜயக்குமார் ஆகியோரது பேச்சுக்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

அதில், பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்து அவர்கள் ஆபாசமாக பேசியதைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் கடும் கொந்தளிப்படைந்தனர்.

இந்த நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என அவர்கள் ஆவேசமாக கூறினர்.

நடிகர் சங்கத்தின் நடவடிக்கை மற்றும் செய்தி ஆசிரியர் கைது ஆகியவற்றைக் கண்டித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது".

இந்தக் கூத்துக்களைஎல்லாம் மனம் வெதும்பி, வேறு வழியில்லாமல்படித்துக் கொண்டிருந்த போது தான், வழக்கறிஞர் பிரபு ராஜதுரையின் வலைப்பதிவையும் சற்று முன்னர் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.இது அவர் எப்போதோ எழுதிய ஒரு பதிவு, டோண்டு ராகவனின் இந்தப் பதிவில்  இருந்த ஒரு கேள்விக்குப் பொருத்தமாக இருக்கவே, மீள்பதிவாக, அதில் இருந்து ஒரு பகுதி

"அமெரிக்காவில் 1950ம் வருடம் ஒரு பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. அந்த மநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் இந்தியாவில் 1956ம் ஆண்டு இவ்வாறு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சுரண்டுவதை (trafficking) தடுக்கும் எண்ணத்துடன் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் The Suppression of Immoral Traffic Act'1956.
 

எஸ் ஐ டி   சட்டம் என்று நீதிமன்றங்களில் அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் விபச்சாரம் என்பது குற்றமல்ல. ஆனால் விபச்சார விடுதி நடத்துவது, அதற்கு உதவி செய்வது குற்றம்.
....................

அதாவது ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாக தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை. ஆனால் இரு பெண்கள் தங்கியிருந்து தங்களுடைய வருமானத்தைப் பகிர்ந்து கொண்டால் அது குற்றமாகிறது. மேலும் ஒரு விபச்சாரியை அண்டி அவர் விபச்சாரம் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் வாழும் நபர், பதினெட்டு வயது நிரம்பியர் என்றால் அதுவே ஒரு குற்றமாகிறது. இதில் மகன், மகள் கூட அடக்கம்.

இதிலிருந்தே இந்தச் சட்டத்தின் நோக்கம் விபச்சாரத்தை தடுப்பதல்ல மறாக விபச்சாரம் செய்பவரைத் தவிர வேறு நபர்கள் பலனடைவதை தடுப்பதே என்பதை அறியலாம். எனவே நமது பத்திரிக்கைகள் 'விபச்சாரத் தடை சட்டம்' என்று குறிப்பிடுவதே தவறான பதமாகும். ஆங்கில பெயர் அப்படி அர்த்தம் கொள்ளவே கொள்ளாது."

நடிகர் சங்கத்தின் நடிப்புக் கண்டனத்தைப் பற்றி, திரு கோவி.கண்ணன் தனது பதிவில் இப்படி எழுதி இருந்தார்.

"ஒரே முறை தற்கொலை செய்து கொள்ளும் நடிகைகள் பற்றி அலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன, அதுவும் நடிகைகள் மன அழுத்தத்திலிருந்து காத்துக் கொள்ள கவுன்சிலிங்க் கொடுக்கலாம் என்பது போன்ற ஆலோசனைதான், ஆனால் அதே கூட்டத்தில் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்கவோ, எட்டவோ இல்லை. இது போன்று கண்டனக் குரல்கள் யாருக்கான நாடகம் ?"

நடிகைகளுக்குக் கோவில், நடிகர்கள் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம், சதா சினிமா நடிகைகள், நடிகர்களைப் பற்றியே புராணம் எழுதிக் கொண்டிருந்த பத்திரிகைகள், சினிமா க்ளிப்பிங்க்ஸ், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வைத்து மட்டுமே கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் தொலைக் காட்சிகள்.......

இவை எதுவுமே ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடையாளங்கள் இல்லை.

அழுகிப்போன சீரழிவுகளாகவே தெரிகின்றன. பகுத்தறிவு பேசும் நண்பர்களாக இருக்கட்டும், என்றைக்கோ மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று ஆன்மிகம் பேசிக் கொண்டிருக்கும் நண்பர்களாகட்டும், உடனடியாகச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது!

எதை எங்கு வைக்க வேண்டுமோ, அதை அங்கே வைக்கப் பழகிக் கொள்ளுங்கள்!

மலமும் மூத்திரமும் நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளேயும் தான் இருக்கிறது, சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காக, தனியாக எடுத்து வைத்து, சாப்பிடும் தட்டிலும் வைத்துக் கொள்வோமா என்ன?




இரண்டு படம் நடித்து வெளிவந்தது விட்டாலே, இங்கே நடிகனுக்கு நாடாளும் ஆசையும் வந்து விடுகிறது! நடிகைகளுக்கோ கோவில்கள் கட்டப்படுகின்றன!

இன்றைக்குத் தகப்பன் பேர் தெரியாத பையா என்று எந்தப் பத்திரிகைக்காரனைத் திட்டினார்களோ, அதே பத்திரிகைக்காரனைத் தேடிப்போய்த் தனது கவர்ச்சி ஆல்பத்தை வெளியிடக் கவரில் தனியாக அன்பளிப்பும் வைத்து அலைந்தவர்கள்இதே நடிகைகளும், நடிகர்களும் தானே!

அதே மாதிரி, இவர்களிடம்போட்டோ , பேட்டி என்றே பக்கங்களை நிரப்பி வயிறு வளர்த்தவர்கள் பத்திரிகையாளர்களும் தான்! இன்றைக்கு ஈயம், பித்தளையைப் பார்த்து இளிப்பது என்ன வேடிக்கை?!

சினிமா பிடித்திருந்தால் ஒருமுறைக்கு இருமுறை வேண்டுமானால் பாருங்கள், தவறில்லை! அதற்காக, அவர்கள் என்னவோ நம்மை மீட்க வந்த ரட்சகர்கள் என்ற கற்பனையை உடைத்துத் தள்ளுங்கள். ஜனங்கள் இப்படி இளிச்சவாயர்களாக இருப்பதனால் மட்டுமே, மார்க்கெட் போன நடிகன், நடிகை எல்லாம் கலைச் சேவை செய்ய முடியாதபோது, அரசியலிலும் நுழைந்து ஆட்சிக் கனவில் மிதக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
 

யோசித்து, விடுபட வேண்டிய நேரம் இது!
 


11 comments:

  1. A word of caution!

    By reproducing the concerned Dinamalar page, you can be accused of committing the same crime, with which Dinamalar is accused of!

    ReplyDelete
  2. உண்மைதான்! பழைய திரைப்படம் ஒன்றில் என் எஸ் கிருஷ்ணன், மதுரம், டி ஆர் ராமச்சந்திரன் மூவரும் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சி ஒன்றில் வருவது போல, ராஜாவுக்குக் காது, கழுதைக் காதாக இருக்கலாம்! ஆனால் அதைச் சொல்வது மட்டும் ராஜ துரோகக் குற்றம் ஆகிவிடும். Transmitting is crime, but not so well defined in law!

    வருகைக்கும், ஆதரவான எச்சரிக்கைக்கும் நன்றி.

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை. ஆனால் இது போன்ற நிகழ்வுகள் மூலம்தான் நம் மக்களுக்கு திரையுலகத்தின் மூடு மந்திரங்களும் தெரியவரும். நம் மக்களுக்கும் தெளிவு பிறக்கும். மேசமான பத்திரிக்கைகளும் தரமில்லாத திரையுலகமும் தான் நம் கலாச்சாரத்தின் இழுக்கு என புரிந்துகொண்டால் சரி.

    ReplyDelete
  4. பிரச்சினையை நீங்கள் தலைகீழாக, அல்லது பொருந்தாத ஒரு கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்று எனக்குப் படுகிறது.

    இங்கே எது குற்றம் அல்லது எது குற்றம் இல்லை என்பதிலேயே தெளிவான நிலை, சமுதாயமாக நமக்கோ, நம்மைக் "கவனித்து" கொள்ளும் சட்டங்களுக்கோ இல்லை என்பது முதலாவதாகச் சிந்திக்கப்படவேண்டியது. காலம் மாறிக்கொண்டு வருவதற்கேற்ப சட்டங்களை பரிசீலனை செய்து, மறுவரையறை செய்வது என்பது இந்த நாட்டில் இன்னமும் பெயரளவுக்குத் தான் இருக்கிறது என்பது இந்த மாதிரி முட்டல்கள் மோதல்களுக்கு வழிகோலுகிறது.

    சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே மானாட மயிலாட என்று ஆட விட்டு, கூடச் சேர்ந்து போட்டோவும் எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம், எனக்குப் புரியவில்லை!

    வழக்கறிஞர் திரு பிரபு ராஜதுரை இது விஷயமாக மீள்பதிவாகச் சொல்லியிருக்கும் விஷயத்தை, ஹைபர்லிங்க் அவரது பெயரிலேயே இருக்கிறது, மறுபடி படித்து, யோசித்துப்பாருங்கள்.

    உங்கள் வாதத்தின் படி, கெட்டுத் தான் ஞானியாக வேண்டும் என்றால், இங்கே ஒருவருமே மிஞ்ச மாட்டோம்! கெடுவதற்கு முன்னாலேயே விழித்துக் கொள்ளுங்கள் என்பது தான் நான் மறுபடியும் அழுத்தம் கொடுத்துச் சொல்ல விரும்பும் செய்தி!

    ReplyDelete
  5. பிரச்சனையை தலை முதல் கால் வரை அலசியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  6. ஏகப்பட்ட ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க போல?
    நிறைய லிங்க்ஸ் குடுத்துயிருக்கீங்க...

    ReplyDelete
  7. இங்கே அலசினது ஆராய்ஞ்சது எல்லாம் இருக்கட்டும், ஏகப்பட்ட லிங்க் இருக்கே, அதைப் படிச்சீங்களா, படிச்சப்பறம் உங்களுக்குன்னு ஒரு கருத்து இருக்குமே, அதை மட்டும் என் சொல்ல மாட்டேங்கறீங்க!

    ஒரு பயனுள்ள விவாதக் களத்தை உருவாக்க வேண்டுமென்றால், நிறைய வாசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும், யோசித்ததில், நல்லதென்று படுவதை வெளிப்படையாகவும் சொல்ல வேண்டும்.

    என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  8. //ஒரு பயனுள்ள விவாதக் களத்தை உருவாக்க வேண்டுமென்றால், நிறைய வாசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும், யோசித்ததில், நல்லதென்று படுவதை வெளிப்படையாகவும் சொல்ல வேண்டும்.//

    இங்க விவாதம் பண்ண என்ன சார் இருக்கு!
    அவர்கள் சுதந்திரம் அவர்களுக்கு நம் சுதந்திரம் நமக்கு!
    தப்பு, ரைட்டு சொல்ல நம்ம யாரு!

    ReplyDelete
  9. /இங்க விவாதம் பண்ண என்ன சார் இருக்கு!/

    அப்படியானால் எதற்கு, உங்களுக்குப் பிடித்த வலைப்பக்கங்களில் தொடர் பின்னூட்டங்களாகக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

    தமிழ் ஓவியா எதற்காக, டோண்டு ராகவன் பதிவிலும் கூட கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்து பிட் நோடீஸ் ஒட்டிக் கொண்டிருக்கிறார்?

    இப்படியெல்லாம் நான் கேட்கப்போவதில்லை!

    காரணம், குறைந்த பட்சமாக இங்கே, அது அவர்கள் சுதந்திரம், அதைக் கேள்வி கேட்பதற்கு நாம் யார் என்ற அளவிலாவது உங்களுடைய மன ஓட்டம், கருத்து வந்திருக்கிறதே அதற்காக!

    எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கப் புள்ளி இருக்கிறது!அப்புறம்,உங்கள் கேள்விக்கான விடை இந்தப் பதிவின் கடைசி இருபத்தைந்து வரிகளில் இருக்கிறது.

    ReplyDelete
  10. //உங்களுக்குப் பிடித்த வலைப்பக்கங்களில் தொடர் பின்னூட்டங்களாகக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?//

    நீங்கள் கொடுத்த சுட்டிகளில் முக்கால்வாசி பதிவுகளில் என் கேள்வி இருக்கு! நீங்கள் தான் லேட்டு, அதனால் இங்க கேள்வி கேட்க என்ன இருக்கு!?

    நீங்க புதுசா எதாவது விசயத்தை எடுத்து பேசுங்க! அரைச்ச மாவே அரைக்க கஷ்டமா இருக்குல்ல!

    ReplyDelete
  11. திரு. அருண், உங்களுடைய பின்னூட்டங்கள் இங்கே வரவில்லை என்று குறைப்பட்டு நான் எழுதவில்லை. தவிர, என்னை யோசிக்க வைத்த விஷயங்களை மட்டுமே தொட்டு எழுதுவதால், எத்தனை பேர் வந்தார்கள் என்றோ, எத்தனை பின்னூட்டங்கள் வந்தன என்றோ கணக்குப் பார்த்தோ எழுதியதில்லை.

    எந்த இருவரும் ஒரே வானவில்லைக் காண்பதில்லை என்கிறது அறிவியல். அதே மாதிரி, எந்த ஒரு இருவருமே ஒரே மாதிரி சிந்திக்கவோ, முரண்படவோ கூட இயலாது.

    புதிதாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லி ஆலோசனை தந்திருக்கிறீர்கள். நன்றி. முந்தைய பதிலில் என்னுடைய பதிவின் சாரமே கடைசி இருபத்தைந்து வரிகளில் தான் இருக்கிறது என்று சொல்லியிருந்தேனே! அதற்குப் பிறகு கூட, பதிவை நீங்கள் முழுமையாகப் படிக்க முயற்சிக்கவில்லை. போகட்டும்!

    புதிதாக எடுத்துச் சொன்ன விஷயம் அங்கே இருக்கிறது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!