புவனேஸ்வரி ஏற்படுத்திய அதிர்வலைகள்....!!



புவனேஸ்வரி ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. எப்போது, என்ன வடிவத்தில் மீண்டும் ஒரு அசிங்கம் வெடிக்கும் என்பது யாருக்குமே தெரியாத நிலையில், அழுகி நாறும் புண்ணுக்குப் புனுகு பூசி மறைப்பது போல, தற்காலிகமான அமைதி மட்டுமே இப்போதைக்கு வெளியே தெரிகிறது.


தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'சிடி' ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.


ந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, 'புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களின் கருத்து கிடைத்தவுடன் நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.”


ப்படி முந்தைய பதிவொன்றில் அப்போதைய நிலவரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். சட்ட நிபுணர்கள் கருத்து இன்னமும் காவல் துறைக்குக் கிடைக்கவில்லை போல!


ரம்பு மீறிய நடிகர்கள் நடிகைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையுமே எடுக்கப் படவில்லை. இருக்காது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் கூட, பத்திரிகையாளர்கள் தரப்பு இதை இன்னமும் விடுவதாக இல்லை. நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடக் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், போலீஸ் கமிஷனருக்கு நோடீஸ் அனுப்பும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது மூன்று நாட்களுக்கு முந்தைய செய்தி என்றாலுமே கூட, பிரச்சினை இன்னமும் கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.


ட்ஸ்தமிழ் செய்தியில் வெளியாகியிருக்கும் செய்தியில் இந்தப் பகுதியைப் பாருங்கள்:


"வீடியோ ஆதாரங்களைப் பெற்ற பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள், நடிகர்களை கைது செய்யக் கோரி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் செய்தனர். ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடு்க்கப்படவில்லை. மேலும் புகாரில் சிக்கிய நடிகர் நடிகைகள் தங்களை ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமாகக் காட்டிக் கொண்டு வந்தனர்."





சாதாரணமாக விபச்சார வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு, பெரிய அளவில் விசாரணை, வாய்தா எல்லாம் இருப்பதில்லை.மற்ற வழக்குகள் போல அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை- அபராதம் அல்லது சிறைத் தண்டனை.


ந்த வழக்கில் மட்டும், ஜாமீன் மனு அரசுத் தரப்பில் இருந்து எதிர்க்கப்படுகிறது. நிரந்தரமான முகவரி இல்லாதவர் அதனால் ஜாமீனில் விடக்கூடாது என்று வாதம். ஜாமீனும் மறுக்கப்படுகிறது. அதே தினம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்படும் தினமலர் செய்தி ஆசிரியர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது, அரசு தரப்பு அதை எதிர்க்காததால், ஜாமீனில் அவரை நீதிமன்றம் விடுவிக்கிறது. வெளியே வந்தவருக்கு, ஏதோ இமாலய சாதனையைச் செய்தவர் மாதிரி மாலைகள் அணிவித்து வரவேற்பு!

ன்ன ஒரு வினோதம்! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
மக்கு விடுதலை கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் தான், சீனா தனது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றது. நம்மை விட, மிக மோசமான சூழ்நிலை. கம்யூனிசக் கூட்டாளியான ரஷ்யா, ஆக்கபூர்வமான திட்டங்களில் சீனாவுக்கு உடனிருந்து உதவாமல் பாதியிலேயே கழுத்தறுத்துவிட்டு வெளியேறிய கசப்பான அனுபவத்தையும் சந்தித்தது. மாசேதுங் தலைமை அவ்வளவு சுறுசுறுப்பாகவும் இல்லை, ஸ்டாலினைப் போலவே, கலாச்சாரப் புரட்சி, களையெடுப்பு என்று சொந்த ஜனங்களையே கொன்று குவித்த அவலமும் உண்டு. கம்யூனிசத்திலும் ஊழல் நிறைய உண்டு.


ப்படி எல்லா வகையிலும் சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த ஒரு நாடு, இன்றைக்கு எவ்வளவு வலிமையான பொருளாதார சக்தியாகவும், ராணுவ ரீதியிலும் வல்லரசாக மாறியிருக்கிறது என்றால், நம்மால் என் அப்படி மாற முடியவில்லை என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது!



சீனப்பெருமிதத்திற்கு வயது அறுபது என்ற தலைப்பில், இந்த மாதத்தின் முதல் பதிவு இருந்தது. தன்னுடைய அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைச் சீனா எப்படித் திட்டமிட்டு, தன்னுடைய இமேஜை உயர்த்திக் கொண்டிருக்கிறது, தன்னுடைய ஆயுத பலத்தைத் தம்பட்டமடித்துக் காட்டி, பல நாடுகளுக்கு, குறிப்பாக ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கு மறைமுகமாகச் சவால் விட்டுக் காண்பித்திருக்கிறது என்பதை சுருக்கமாக சொல்ல ஆரம்பித்த வேளையில் தான், தமிழகச் செய்திகளில் புவனேஸ்வரி, சொல்லாமல் வந்த ஒரு சூறாவளியாக வந்தபோது, நானுமே கூட, கொஞ்சம் எரிச்சலோடு அந்த விவகாரத்தைப்பற்றியும் மூன்று பதிவுகளாக எழுதினேன்.


தில்.என்னை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்த ஒரு விஷயம் என்னவென்றால், நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்வதை விட, தன்னுடைய குடும்பம், தன்னுடைய பொருளாதாரச் சூழல் இவை எல்லாவற்றையும் விட நடிகைகளின் அந்தரங்கம் தான் தமிழக வாசகர்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்ததென்று, இரண்டாவது பதிவுக்கு ஒரே நாளில் சராசரி வருகையை விட பத்துப் பனிரண்டு மடங்கு வாசகர்களுடைய வருகை சொல்லாமல் சொன்னது. ரொம்ப சைவமாகவே தேர்ந்தெடுத்து, ஒன்றிரண்டு படங்களைப் போட்டபோதிலுமே கூட, அதையும் டவுன்லோட் செய்த மக்களைப் பார்த்தபோது "விதியே!விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?" என்று பாரதி மறுகின மாதிரி,

மறுகி நிற்கவைத்த தருணங்கள்!




காந்தியைப் பற்றிய கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், நேருவைப் பற்றிய அரசியல் விமரிசனங்கள், குறுகிய காலமே பதவியில் இருந்தபோதிலும் கூட, தலைமைப்பண்பை நிலைநாட்டிய லால் பஹதூர் சாஸ்திரியைப் பற்றி இன்னமும் விரிவாகப் பேச வேண்டும் என்ற ஆசை, இந்திய-சீன யுத்தம், இந்திய-பாகிஸ்தான் யுத்தங்கள் அவற்றைத் தொடர்ந்து வந்த பிரச்சினைகள், இன்றைய நிலைமை இவற்றோடு சேர்த்து எழுதவேண்டும் என்ற ஆசையோடு குறிப்புக்களைத் தேடித் தேடிச் சேகரித்துக் கொண்டிருந்த எனக்கு, நிஜமாகவே புவனேஸ்வரி விவகாரத்தில் ஜனங்கள் காட்டிய அதீதமான அக்கறை, என்னை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது.


ரு கட்டத்தில்,வெறும் ஆன்மீகக் குறிப்புக்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்ததில் இருந்து விலகி எல்லா விஷயங்களையும் தொட்டு எழுத வேண்டும் என்று வெளியே வந்தேன். காரணம், ஆன்மிகம் பற்றிப் பேசுகிறவன் எல்லோருமே எல்லாம் தெரிந்தவனாக இருப்பான் என்கிற மாதிரி ஒரு மயக்கம், தவறோ சரியோ இங்கே நிறையப்பேரிடத்தில் இருக்கிறது.


இல்லை, நான் முழுக்கத் தெரிந்தவன் இல்லை, இன்னமும் சத்தியத்தைத் தரிசனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருப்பவன் மட்டுமே, உண்மையைச் சொல்லப்போனால், ஒரு சராசரிக்கும் கீழே என்பதை ஒரு கேள்விக்குப் பதிலாகச் சொல்லிவிட்டு, வெவ்வேறு விஷயங்களைத் தொட்டுப் பதிவுகள் எழுத ஆரம்பித்ததில், புதிய வாசகர்கள் நிறையப்பேர் கிடைத்தார்கள், ஆனால் தொடர்ந்து படிக்க வருகிறவர்கள் என்று பார்த்தால் ஒரு கைவிரல் எண்ணிக்கைக்கு உள்ளேயே அடங்கிவிடும்.


திலும் ஒருவர் பத்துப்பதினைந்து பதிவுகளைப் படித்திருப்பார் என்று வைத்துக் கொண்டால், இன்னொருவர் ஒன்றோ அல்லது இரண்டு பதிவுகளைக் கூடுதலாகவோ குறைவாகவோ படித்திருப்பார். கருத்துப்பரிமாற்றங்களைத்தொடர்ந்து வேண்டி வந்த போதிலுமே கூட, அதிலும் ஏமாற்றம் தான். என்னுடைய டயரிக் குறிப்புக்களாக மட்டுமே இது இருந்துவிட வேண்டுமென்றால், அதை ப்ளாக்கரில் வேலை மெனக்கெட்டு வலையேற்றம் செய்ய வேண்டியதில்லையே!


ந்தப்பதிவுகளுக்கு வருகிற புதிய வாசகராக இருந்தாலும் சரி, ஏற்கெனெவே கொஞ்சம் பதிவுகளைப் படித்துவிட்டு ஒதுங்கியவராக இருந்தாலும் சரி, என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, சொல்ல முடிந்தால் மகிழ்வேன்!


சொல்வீர்களா?


11 comments:

  1. Yes your view is right. But Indian's are very late pick up. Please wait and see.

    ReplyDelete
  2. உங்கள் படதிவைபடிப்பது இதுதான் முதல தடவை.புவனெஷ்வரி அவர்கள் புண்ணியம்.நீங்கள் எழுதியதைப்படிக்கும்ப்ப்து தான் Suffragette பற்றி படித்துக்கொண்டிருந்தேன்.இந்தபதிவில் நீஙள் கூறியதை ஆமோதிக்கிறேன்.ஏன் நாம் இப்படி இருக்கிறோம்?எப்போது பார்த்தாலும் சினிமவைத்தவிர வேறு ஒன்றுமே இல்லையா?யாஅரிடம் பேசப்போனாலுல் சினிமா தான் பேசுகிரார்கள்.லே இருக்கும்" arswholes "என்ற வார்த்தைசுயகழிவிரக்கத்தை காட்டுகிறது.முன்னஏற யாரும் தடையில்லை.
    நான் பெண்ணிய வாதி எபதில் பெருமை கொள்கிறேன்.அதனாலெயே COMMERCIAL SEX WORK ஐ சட்டபோர்வமாக்க வேண்டுமென்பேன். அப்பொழுது த்தனை கேவலம் இருக்காதில்லையா?BASTARDS என்ற வார்த்தையே பெண்களை இழிவு படுத்துவதுதானே?

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி ஸ்ரீராமன்! மேலோட்டமாகப் பார்க்கும் போது, நீங்கள் சொல்வது உண்மையாகவே படுகிறது. கொஞ்சம் விரிவாகப் பார்த்தோமேயானால், எது முக்கியம் என்பதைத் தெரிவுசெய்வதில், நம்முடைய கல்விமுறையில் இருந்து அரசியல் சூழ்நிலை வரை இங்கே எல்லாமே திசை திருப்புவதாகவே இருப்பதைப் பார்க்க முடியும்.

    ஜனங்களுக்கு, கஷ்டப்பட்டு முயற்சி செய்கிற எதுவுமே, சுயமாக யோசிப்பது உட்பட, வேண்டாம். யாரோ ஒரு இனமானக் காவலரோ, சாதிசங்கத்தலைவரோ, சூப்பர் ஹீரோவோ வந்து உங்களுக்காக எல்லாவற்றையும் செய்துகொடுப்பார்கள் என்ற ஃபாண்டசி உலகத்திலேயே இருக்கத் தான் பிடிக்கிறது.

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றி சீதா! பென்நீயவாதியாக அறிமுகம் செய்துகொள்ளும் நீங்கள் கூட ஒரு பதிவைப் படிக்க வேண்டுமென்றால், இது மாதிரிப் பதிவுகள் போட்டால் தான் முடியும் போல் இருக்கிறது:-)

    புவனேஸ்வரி என்று பதிவு போட்டால் ஹிட்ஸ் கூடக் கிடைக்கிறது. இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டுமா அல்லது என் தலைவிதியை நொந்துகொள்ள வேண்டுமா?

    எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய புதினம் ஒன்றுக்கு "கனவுத் தொழிற்சாலை" என்று தலைப்பு வைத்திருந்தார். பொம்மைகள் அசைகிற, பேசுகிற விந்தையை வாய்பிளந்து வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டத்தில் ஒருவிதமான கனவுகளை விற்றுத் தான் இங்கே சினிமா நுழைந்தது. முந்தைய தலைமுறைக்கு, எம் கே தி. பாகவதர் தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, எவ்வளவு விலை உயர்ந்த வாசனாதிரவியங்களுக்குச் செலவழிக்கிறார் தெரியுமா என்ற ரீதியில் ஆரம்பித்து, இன்றைக்கு நடிகைகளின் படுக்கை அறை அந்தரங்கங்களையும் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இது எந்த வகையிலான இசம் அல்லது ஈயம்?

    சட்டபூர்வமாக்குவதால் மட்டுமே பிரச்சினைகள் தீர்ந்துபோய் விடுவதில்லை என்பது பல நாடுகளின் அனுபவம். இங்கே வேறொரு அபாயமும் இருக்கிறது! இதுவும் கூட "வாரிசுகளின்" தொழிலாக மாறிவிடக் கூடும்!

    பதிவில் உபயோகித்திருக்கும் படங்கள் அனைத்துமே இணையத்தில் இருந்து எடுத்து உபயோகிக்கப்பட்டவை. எங்கிருந்து சிந்திக்கத் தொடங்குகிறோம் என்பதில் இருந்து தான் என்ன தெரியும் என்பதைச் சொல்வதாக இருக்கும் மையக்கருத்துக்காக மட்டுமே குரங்குப் படம் பயன்படுத்தப்பட்டது. தவிர, aasholes, bastards இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தை.இன்னும் அதிக எண்ணிக்கையில் புழங்கினால் கேவலம் போய்விடுமோ என்னவோ?

    தாராளமயமாக்கினதில் வேறென்ன கிடைத்ததோ இல்லையோ, இந்த மாதிரி அமெரிக்க வசவு வார்த்தைகள் நிறையப் புழக்கத்தில் வந்திருக்கின்றன. என்ன சொல்வது? ஷிட்! அவ்வளவுதான்!

    ReplyDelete
  5. புகுட்டி மேட்டர்ல ஆரம்பிச்சு, நைசா சீனா மேட்டரை உள்நுழைத்து மக்களை குழப்புவதால் தான் சரியான பின்னூட்டம் போடாமல் மக்கள் ஓடிப்போகிறார்கள்!

    இந்த பதிவை மட்டுமே மூன்று பதிவாக போட்டிருக்கலாம்!

    உண்மைதமிழனுக்கு போட்டியாக மாறாதீர்கள்!

    ReplyDelete
  6. உண்மைத் தமிழனுக்குப்போட்டியாகவா? நெவர் அண்ட் நோ சான்ஸ்! அவருடைய அனுபவத்திற்கு முன்னால் நானெல்லாம் பச்சா!(பச்சப்புள்ள?)

    அது என்ன புதுத் தமிழ், புகுட்டி? புகுட்டி மாட்டர்ல நைசா சைனா மாட்டரை நான் ஒண்ணும்
    கோர்த்து விடவில்லை! சைனா மாட்டரை, சாஸ்திரியைப்பற்றி நான் பேச ஆரம்பித்தபோது,புவனேஸ்வரி மாட்டர் குறுக்கே வந்து குழப்பியது என்பது தான் உண்மை!

    ReplyDelete
  7. //சாஸ்திரியைப்பற்றி நான் பேச ஆரம்பித்தபோது,புவனேஸ்வரி மாட்டர் குறுக்கே வந்து குழப்பியது என்பது தான் உண்மை! //

    சாஸ்த்திரிக்கும், புவிகுட்டிக்கும் என்னாங்க சம்பந்தம்!

    ReplyDelete
  8. கிருஷ் அவர்களே!
    ஏன் இந்த கூக்லி?
    ஹிட் வேண்டியா?
    அரிசி கடையில அரிசி வாங்குவோம்;
    அல்வா கடையில அல்வா வாங்குவோம்
    ஆனா - எங்கேயும் அணுகுண்டு வாங்க மாட்டோம்
    எனக்கென்னவோ இந்த 'மாதிரி' மேட்டருங்கள -போட்டா
    உங்க வலைத் தரம் - தர்மர் தேர்ச் சக்கரம் மாதிரி - கொஞ்சம் கீழிறங்கிவிட்டது போல தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  9. வெளிப்படையான கருத்துக்கு மிகவும் நன்றி திரு.கௌதமன்!

    இது கூக்ளி இல்லை. எதற்குமே உதவாத ஹிட்ஸ் கணக்கை வைத்துக் கொண்டு ஈகோவை வளர்த்துக் கொள்வதற்காகச் செய்யப்பட்ட முயற்சியும் இல்லை. முதல் எட்டு மாதங்களில், எந்தத் திரட்டியிலும் என் பதிவை இணைத்துக் கொள்ளவில்லை, இணைக்கவும் தெரியவில்லை. திரட்டிகளில் இணைந்தது, கொஞ்சம் அதிக வாசகர்கள் வந்தது என்பதெல்லாம் ஜூன் மத்திக்குப் பிறகுதான்!

    என்ன மாதிரியான வாசகர்கள், என்ன எதிர்பார்த்து இந்தப்பக்கங்களுக்கு வருகிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும், ஒரே மாதிரியான விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேசுவதில் இருந்து விடுபடவும் எடுத்த முயற்சி, கொஞ்சம் ஓவராகவே போய்விட்டது போல் இருக்கிறது.

    இந்த மாதிரி விஷயங்கள் இல்லாத போது இந்த வலைப் பக்கங்கள் கொஞ்சம் தரமாக இருந்தது என்று உங்களுடைய கருத்தைப் படிக்கும்போதே, கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. இந்தப் பதிவிலுமே கூட, முதல்பகுதியில் மட்டுமே புவனேஸ்வரி விவகாரம், ஒரு பேச்சுக்காலாக, தொடக்கப்புள்ளியாக இருந்ததே தவிர, எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியோடு அடுத்து எழுப்பிய கேள்விகள், என்னுடைய தடுமாற்றங்கள் இவற்றை வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டதாகவே இருந்தது. அது எடுபடாமல் போனது ஏன் என்பதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    இதுவும் கடந்து போகும்! இல்லையா?

    ReplyDelete
  10. உங்களுடைய கண்ணோட்டம் எனக்கு பிடித்தது. உங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புகிறேன். என் மின்னஞ்சல் drpkandaswamy1935@gmail.com

    P.Kandaswamy

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

    மண்ணை ஆராயும் வேளாண்மை விஞ்ஞானியாக இருந்து, பதிவராக மனித மனங்களையும் ஆராய முனைந்த 'நீங்களும் பிரபல பதிவர் ஆக வண்டுமா" என்ற தொடர் பதிவுகளில் உங்களுடைய எண்ணவோட்டத்தைக் கொஞ்சம் அறிந்து கொண்டேன் ஐயா.

    மற்ற உயிரினங்களுக்கு உணர்வுகள், செயல்கள் என்பன முழுக்க முழுக்க உயிர்வாழ்தலின் பொருட்டே. மனிதனுக்கு மட்டுமே, சிந்திக்கும் ஆறாவது ஆறிவு ஒன்று கூடுதலாக(?) கொடுக்கப்பட்டிருப்பதால், இந்த மாதிரிப் பரிசோதனை விரயங்கள் சாத்தியமாகிறது போல!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!