இன்றைய செய்திகளும் நாளைய அரசியல் போக்கும்!


 தீதிக்கு தில்  கொஞ்சம் அதிகம் தான்..!
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்துக் கொந்தளித்த மம்தா பானெர்ஜியை, ஐ மு கூட்டணிக் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, கொஞ்சம் சமாதானப்படுத்தி விட்டதாகவே இன்றைய தகவல்கள் சொல்கின்றன. தீதி, கொந்தளிப்பை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்! இன்னொருதரம் பெட்ரோல், டீசல் விலையேற்றம் செய்யப்பட்டால் ஆதரவை நிச்சயமாக விலக்கிக் கொண்டுவிடுவாராம்!

மு கூட்டணிக் குழப்பத்தின் இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பதிமூன்றுதரத்துக்கும் மேல் விலையை உயர்த்தியாயிற்று.எத்தைத்தின்றால் பித்தம் தெளியுமென்று எவர் சொன்னாலும் கேட்காமல், விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துவதற்கு வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதுதான் ஒரே வழி என்று அதையும் பலமுறை உயர்த்தியும் யிற்று! மமதாவுக்கு அப்போதெல்லாம் உறைக்கவில்லை! இப்போது உறைத்திருப்பதும் கூட வேறு உள்மாநில அரசியல் கெடுபிடிகளால்தான் என்பதை அரசியல் தெரியாத பச்சைக் குழந்தை கூட சொல்லி விடும்!தீதி, இன்னொருதரம் விலை ஏற்றும்போது இப்போது சொன்னதை நினைவில் வைத்திருப்பாரா, அல்லது ப.சிதம்பரம் மாதிரி செலக்டிவ் ஞாபக மறதி என்று கதைத்துவிட்டுப் போய்விடுவாரா என்பது இன்னும் கொஞ்ச நாட்களிலேயே தெரிந்துவிடும்! (அடுத்த விலை உயர்வு வந்துவிடும்)
அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டாலும், உன்னை விட மாட்டேன்!
 
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி திரு ஒ பி சைனி ப. சிதம்பரத்தையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்ற வாளியாகச் சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில், ப.சிதம்பரம்-ஆ.ராசா இருவருக்கும்  இடையிலான கடிதப் போக்குவரத்து நகல்களை சுப்பிரமணியன் சுவாமிக்கு விரைவில் கொடுக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ருக்கிறார். இதன் மீது அடுத்த விசாரணை டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வருகிறது. நித்ய கண்டம் -பூர்ணாயுசு என்று சொல்வார்களே, அது மாதிரி!

ப்போது எங்கிருந்து என்ன வருமோ, என்ன செய்யுமோ என்று வாய் அகலம் ரொம்பவே ஜாஸ்தியாகத் திறந்து பேசிக் கொண்டு இருந்தவர், இப்போது வாயை அதிகம் திறக்காமலேயே பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! குச்சனூர் சனி பகவானைக் கும்பிட்டால் எல்லாம் தீர்ந்து விடுமா?

லைவிக்குத்தான் ஏதோ நோய் என்றார்கள்!ஆனால், காங்கிரஸ் கட்சியே கூடப் புற்று நோய் வந்து இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருக்கிற கேஸ் தான் என்று தான் நடப்பு நிகழ்வுகள் சுட்டுகின்றன. இதுவரை விசுவாசமான முகமூடியாக, டம்மிப் பீசாக இருந்த மன் மோகன்  சிங் இந்த வருடக் கடைசி வரையாவது தாக்குப் பிடிப்பாரா என்பதே கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கிறது.அடுத்த டம்மிப் பீசாக, மீரா குமார் பெயர் அடிபடுகிறது!ராவுல் விஞ்சியை அரியணை ஏற்றத் துடிக்கும் சோனியாவுக்கு வேறு ஆப்ஷன்கள் இல்லை போல! காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ராவுல் விஞ்சி நியமிக்கப்படலாம் என்றும், வதந்திகள்! கவனியுங்கள், இதெல்லாம் வதந்திகள் மட்டுமே!

ராஜீவ் காண்டி காலம் வரையிலாவது  நேரு குடும்பப் பெருங்காய வாசனையாவது இருந்தது. இப்போது அதுவும் காணாமல் போய்க் கொண்டே இருக்கிறது. வலுவான அடித்தளம் இல்லாமல், ஒரு கும்பலை மட்டும் வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பது எப்போது சூறைக் காற்றில் குப்பை மாதிரி அடித்துக் கொண்டு போகுமென்று எவராலும் ஊகிக்க முடியாத விசித்திரம்!

நேரு குடும்பம் அரசியலில் இத்தனை நாள் தாக்குப் பிடித்ததே ஒரு விபத்து என்று தான் சொல்ல வேண்டும்!

லைஞரிடமிருந்த உளி, கதைவசனம், உடன்பிறப்புக்குக் கடிதம், கலைத்திறமை எல்லாமே போய்விட்டதா என்ன? அவரும் கூட்டணி தர்மத்தைப் பற்றி நேற்றைக்குப் பேசி இருக்கிறார்! செய்தியைப் பாருங்கள்!

DMK Monday ruled out quitting the Congress-led UPA government on petrol price-hike issue, saying it has always followed the "coalition dharma." "We had expressed our views that the hike would cause great hardship to people... we will follow the coalition dharma as we have been doing all along," party chief M Karunanidhi told reporters here.He refused to comment on the Centre's assertion that it would not reduce the hike and BJP chief Nitin Gadkari's condemnation of the price revision.

காங்கிரசோ திமுகவை வேண்டாத சுமையாகத்தான் இன்னமும் கழற்றிவிடத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.எப்படிக் கழுத்தறுத்தாலும் போகமாட்டேன் என்று ஒட்டிக் கொண்டு இருக்கிற சுயமரியாதை மிகுந்த ஒரு கட்சியை வேறென்ன தான் செய்வது?

மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில், மிகவும் மரியாதைக்கு ரிய தலைவராகவும், கூட்டாளியாகவும் இருந்த கருணாநிதியின் இன்றைய நிலைமை, கனிமொழிக்காக ஜாமீன் கேட்பதோடு குறுகிக் கூன் விழுந்துபோய் விட்டது என்பது காலத்தின் இன்னொரு வேடிக்கையான கட்டாயம்!

வெர்ஷன் இரண்டு ஓபனாக ஆரம்பித்த தருணம் தாங்கள் கேட்ட இலாகாக்கள் தரவில்லை என்றால் வெளியே இருந்து ஆதரவு என்று அறிவித்து விட்டு சென்னை திரும்பிய வேகத்திலேயே ஓடிவந்து சமாதானம் செய்தார்களே, அதெல்லாம் ஆறிப்போன பழங்கதை மட்டும் தானா? கனிமொழிக்கு டில்லி உயர்நீதி மன்றத்திலாவது ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறார் என்று அந்த செய்தி மேலும் சொல்கிறது.

ருணாநிதி வயதில் பாதிகூட இல்லாத  மம்தா பானெர்ஜிக்கு சாமர்த்தியம், தெனாவட்டு, தில் நிறையவே இருக்கிறது என்பதை அம்மணி இந்த செய்தியில் நிரூபித்திருக்கிறார்! இந்த மாதிரி அரசியல் வியாதிகளைத் தாங்கிக் கொள்கிற தில் நம்மிடம் இருக்கிறதா? ஒரு முதலமைச்சர் செய்கிற  வேலையா இது!!

ஜெயலலிதாவின் அராஜகத்தையும் மீறி திமுகவுக்கு 30 சதவீத ஓட்டுகள் கிடைத்தது- என்று மு.க. ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்! கட்சித் தலைவரையும் மீறி, மனைவி, துணைவி குடும்பத்து வாரிசுகள், மருமகன்கள் குடும்பம் எல்லோரும் சேர்ந்து செய்தவைகளைத் தெரிந்து கொண்ட பிறகும் கூட திமுகவுக்கு இந்த அளவு ஓட்டு விழுந்திருக்கிறதே என்றல்லவா ஆச்சரியப் பட்டிருக்கவேண்டும்!

ஸ்டாலின் இப்படித் தலைகீழாகப் புரிந்து கொண்டு காமெடி செய்து கொண்டிருக்கிறார் என்றால்,நடந்து முடிந்ததேர்தல்களில் செல்லாக் காசாகி நிற்பது கூடத் தெரியாமல் பாமக, விசி, சிபிஎம்  போன்ற கட்சிகளோ, தங்களுடைய அஸ்திவாரமே கரைந்தது கூடத் தெரியாமல் சாணக்கியர்கள் மாதிரி அடுத்தவர்களுக்கு அரசியல் உபதேசத்தை அள்ளி வீசிக் கொண்டிருப்பது இன்னொரு வேடிக்கை!

நாடும் நடப்பும்! எத்தனை கூத்துக்கள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்கிறீர்களா?  

இந்தக் கூத்தாடிகளிடமிருந்து இந்த தேசத்தைக் காப்பாற்ற என்ன செய்வதாக உத்தேசம்?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!

3 comments:

  1. ந‌ல்லா தொகுத்து இருக்கீங்க‌ !!

    ReplyDelete
  2. தன்னம்பிக்கையுடன் ஒரு தைரிய பதிவு ......... வாழ்த்துக்கள்.......

    இந்த பக்கத்தையும் பாருங்க http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html#comments

    ReplyDelete
  3. வாருங்கள் ரா.சி!

    தொகுக்கப்பட்டதன் ஊடே என்னுடைய கருத்துக்களும் இருக்கின்றனவே!அத்துடன், வாசிக்கும் நண்பர்களுக்கு ஒரு கேள்வியும் இருக்கிறதே, கவனித்தீர்களா?

    ஸ்பார்க் கார்த்தி!

    இந்த வலைப்பதிவைத் தொடங்கிய நாள் முதல், அதற்கு முன்னாலும் கூட என்னுடைய தன்னம்பிக்கை, தைரியம் இரண்டுக்கும் ஒரு குறைவும் இருந்ததில்லை!உங்கள் பதிவுக்கு கூகிள் ப்ளஸ்ஸில் என்னுடைய ஆதரவைத் தெரிவித்தாயிற்று!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!