Showing posts sorted by date for query கூட்டணி தர்மம். Sort by relevance Show all posts
Showing posts sorted by date for query கூட்டணி தர்மம். Sort by relevance Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தான்! வேறென்ன?!

வெற்றி பெற்ற எந்த ஒரு அரசியல்  தலைவருடைய மிக முக்கியமான துணாதிசயமாகப் பார்த்தாலும்  ஜனங்களுடைய நாடித் துடிப்பை அறிந்து, அதற்கேற்ற மாதிரிக் கொஞ்சம், தங்களுடைய அரசியல் கொள்கையில்  ஒரு தொலை நோக்குப்  பார்வையுடன் கொஞ்சம் என்று ஒரு பக்குவமான கலவையில் ஜனங்களுக்குத் தலைமை தாங்கி நடத்துவதும் தான் என்று சொல்ல முடியும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதைத் தாண்டி ராஜதந்திரி (statesmanship) என்ற நிலைக்கு உயர்கிற தருணம்,  இந்திய அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு இங்கே வாய்த்திருக்கிறது, கொஞ்சம் சொல்லுங்கள்!


    ட்ரம்ப் பேசுகிறார் 25 நிமிடம் 

நேற்று ஹூஸ்டனில்  நடந்த Howdy Modi நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு சராசரி அரசியல்வாதியாக அல்லாமல் ஒரு தேர்ந்த ராஜதந்திரியாக உயர்ந்து வருவது தெளிவாகவே வெளிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்! டொனால்ட் ட்ரம்ப் ஒரு சராசரி அரசியல்வாதியாக, அமெரிக்கஇந்தியர்கள் வாக்குவங்கியைக் குறிவைத்தே இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வார் என்பதுகூடப் பொது வெளியில் தெரிந்த விஷயம்தான்! ஆனால் ஒரு ரெண்டுங் கெட்டான் அமெரிக்க அதிபரை அடுத்த ஆண்டு வரவிருக்கும் அதிபர்  தேர்தலிலும் வழிமொழிகிற மாதிரிப் பேசியிருக்க வேண்டுமா? இந்த ஒரு உறுத்தல் எனக்கும் முதலில் பார்த்த போது தோன்றினாலும், அமெரிக்க அரசியலில் ட்ரம்ப்பின் Republican Party எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான முடிவுகளை எடுத்ததில்லை. டெமாக்ரட்டுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை என்பதைவிட பாகிஸ்தான் அவர்களுடைய செல்லமாக இருந்தது, இன்னமும் இருக்கிறது என்பதை டெமாக்ரட் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பெர்னி சாண்டர்ஸ் மறுபடி நிரூபித்திருக்கிறார்! டெமாக்ரட்டுகளுடைய பரிதாப நிலைமையைப் பார்த்தால் 2020 தேர்தல்களில் ஜெயிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்பதில் டொனால்ட் ட்ரம்பைக் குளிர்விக்கிற மாதிரி  மோடி பேசியது  தவறாகப் படவில்லை. அவரா அங்கே வாக்களிக்கப் போகிறார்? 
      

இன்று காலை காங்கிரசின் இடைக்காலத்தலைவர் சோனியாவும் , மன்மோகன் சிங்கும் திஹார் சிறைக்குப் போய் சீனாதானவை சந்தித்துவிட்டுத் திரும்பிய போது இந்தியன் எக்ஸ்பிரெசுக்காக எடுத்த படமாம் இது! After the meeting, Chidambaram expressed his gratitude towards both the leaders. Through his Twitter handle, which is being handled by his family on his behalf, Chidambaram said, “I am honoured that Smt. Sonia Gandhi and Dr Manmohan Singh called on me today. As long as the Congress party is strong and brave, I will also be strong and brave.” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. 


காங்கிரசின் முக்கியமான பணத் தூண்களில் இருவர் சிறையில் அடைக்கப் பட்டதால், காங்கிரஸ் கட்சி மொத்தமுமே ஊழல்கறை படிந்த கட்சியாக பிஜேபி சித்தரிக்க முயல்வதற்கு மாற்றுச் சித்திரமாக இந்த சந்திப்பு நடந்ததாகச் சொல்கிறார்கள்!  ஊழல் கறை போய்விடுமா என்ன? 

மேலே உள்ள இரண்டு செய்திகளையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்! ஒரு பக்கம் அரசியல் தலைவர் என்பதிலிருந்து உயர்ந்து ஒரு நல்லத்தலைவராக, சிறந்த ராஜதந்திரியாகவும் வளர்ந்து கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடி! உலகின் எந்தப் பகுதிக்குப் போனாலும் மதிக்கப்படுகிறார்! அவர் பேசுவது கூர்ந்து கவனிக்கப் படுகிறது! ராஜீய உறவுகளை மேம்படுத்த அவர் முனைவதில் ஒவ்வொரு நாடும் மகிழ்வோடு பங்கேற்கிறது! 

இன்னொரு பக்கம் தேசத்தை நீண்ட காலம் ஆண்ட ஒரு கட்சி! 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில் அதன் அப்போதைய தலைவரான சோனியா மற்றும் செலெக்டிவாக சீனாதானா  மாதிரியான கைத்தடிகள், கொள்ளை அடிப்பதற்காகவே ஆட்சி என்று செயல்பட்டதும், திமுக மாதிரியான மாநிலக்கட்சிகளுடன்  கூட்டணி தர்மம் என்பது கூட்டுக கொள்ளை அடிப்பதற்காகவே என்றானதையும் அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியுமா? விதைத்ததை அறுவடை செய்தே ஆகவேண்டிய நேரமும் இப்போது வந்திருக்கிறது என்பதில் இப்போது பார்க்கப் போனவர்களும் கூட ஏதோ ஒரு கட்டத்தில் சிறைக்குள் தள்ளப் பட வேண்டிய நபர்களே என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன!!


பிஜேபி ஆதரவாளனாக என்னைச் சிலர் தொடர்ந்து முத்திரை குத்திக் கொண்டிருந்தாலும்  தமிழக பிஜேபியைக் குறித்து எனக்குத் தெரிந்தது மிகச் சொற்பம் தான்! அதுவும் கூட வெளியே சொல்லிக் கொள்கிற மாதிரி நல்ல அபிப்பிராயமும் இல்லை! அவரும் நானும் என்கிற இந்த நிகழ்ச்சியின் வழியாக தமிழிசையைப் பற்றி, ஏதோ கொஞ்சம் நல்லபடியாகச் சொல்கிற மாதிரி ஒரு வீடியோவை பார்த்து, இந்தப் பக்கங்களில் கூட பகிர்ந்திருப்பதாக நினைவு! வானதி சீனிவாசனைப் பற்றியும் கூட எனக்கு அதிகம் தெரியாது! இந்த நிகழ்ச்சி வழியாக அவரை அவரது குடும்பத்தைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரிந்துகொள்கிற மாதிரி இருந்தது அவ்வளவுதான்! 

அபிப்பிராயம்? நான் தனிப்பட்ட குடும்பம், சொந்த விஷயத்தை வைத்து எவர்மீதும் அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்வதில்லை என்பதால், தனி கோஷ்டியாகச் செயல்படுகிறார் என்ற அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளும் அவசியமே எழவில்லை.

மீண்டும் சந்திப்போம்.              

பதிவு #1025 மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் சொல்ல விடுபட்டவை!

அங்கே இங்கே எங்கே சுற்றினாலும் தமிழக அரசியலுக்கு வந்து தானே ஆகவேண்டும்? தமிழக அரசியலில் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயங்களாக, இங்கே சொல்ல விடுபட்டவைகளாக சில செய்திகளைப் பார்க்கலாமா?



இந்த 43 நிமிட விவாதத்துக்கு புதிய தலைமுறை சேனல் வைத்திருக்கிற தலைப்பே கொஞ்சம் காமெடியானது! நிறையவே விஷமத் தனமானது என்பதை தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? தமிழக சோனியாG காங்கிரஸ் தலைவர் நாங்குனேரியில் பேசியதை வைத்துத்தான் இந்த விவாதம் என்பதால் என்னபேசினார் என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள்! செய்தி 9 நிமிடம். 

   
இந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயரை எப்படி இந்திரா காண்டி, தேர்தல் கமிஷனில் எப்படி ஒரு சில்லறைத்தனமான வேலையைச் செய்து தக்கவைத்துக் கொண்டார் என்ற தகவல் இணையத்திலேயே தேடக் கிடைக்கும். ஆனால் அம்மணியின்  பிரதான குறிக்கோள், மத்தியில் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமே என்றிருந்ததில் படிப்படியாக அதன் தேசியத் தன்மை என்பது நீர்த்துப் போய்க் கொண்டே வந்து ஏதோ ஒருசில மாநிலங்களில் மட்டும் சில MP சீட் கெலிக்கிற, கழுதை தேய்ந்து கட்டெறும்பான  கேலிக்கதை ஆகிப் போய்க் கிடக்கிறது. இந்தப் பின்னணியில் மேலே முதலில் உள்ள விவாதத்தைக் கவனித்துக் கேளுங்கள்! செல்வப் பெருந்தகை என்னதான் முட்டுக் கொடுத்தாலும்  திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் பெரிதாகிக் கொண்டே வருவது நன்றாகவே புலப்படுகிறது. என்ன விரிசல் வந்தாலும் கூட்டணி தர்மம்  கூட்டுக்  களவாணிகளை எப்படி ஒன்றுசேர்க்கும் என்பதும் கூட ஊகிக்க முடிவதுதான்! 


ஊடகங்கள் தேடுகின்றனவோ இல்லையோ, ஊடகங்களைத் தேடித்தேடி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் விசிகவின் திருமாவளவன் என்பது கொஞ்சம் வினோதமாக இல்லையா? லண்டனில் அவர் பேசப்போன இடத்தில் ஒரு இலங்கைத்தமிழர் கரன்சி நோட்டுகளை வீசியெறிந்தார், அவரைப்போன்றவர்களால் தான் ஈழத்தில் இழப்பே, காசுதானே வேண்டும் இந்தா பொறுக்கிக் கொள் என்கிற மாதிரி ஒரு வீடியோ வைரலாகப் பரவியதும், அந்தக் கூட்டத்தில் விசிகவுக்கு நிதியுதவி கேட்டார் என்பதும், சீமான் பிரபாகரனோடு ஆமைக்கறி சாப்பிட்ட கதை மாதிரியே,  திருமாவளவனுக்கு சேரலாதன் என்பவர் வழியாக ஒரு சேதி அனுப்பினார் என்பதும், மூன்றுமாகச் சேர்ந்து ஒரு இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தியிருப்பதில், தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு மனிதர் படாதபாடு படுகிறார். திமுகவோடு இணக்கமா பிணக்கமா என்ற சாதாரணமான ஒரு கேள்விக்குக் கூட கொஞ்சம் முறுக்கிக் கொண்டே பதில் சொல்கிறார் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

உங்களிடம் விடை இருக்கிறதா? இருந்தால்  பதிலைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! 

மீண்டும் சந்திப்போம்.                 
      

தடுமாறும் காங்கிரஸ்-திமுக! முகம் மாறும் காஷ்மீர்!

காஷ்மீர் விஷயத்தில் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கிற அதிரடி முடிவினால் பிஜேபிக்கு நாடெங்கிலும் ஆதரவு கூடி வருவதைக் காங்கிரஸ்காரர்களே நொந்துபோய் ஒப்புக் கொள்கிற மாதிரியான சூழல்! ஆர்டிகிள் 370 மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கிற J&K Reorganisation Bill 2019 மசோதாவை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம் என்று  காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருபகுதியினர் நினைத்ததையும் நேற்றைக்கு ராஜ்யசபாவில் நடந்த வாக்கெடுப்பிலேயே பார்க்க முடிந்தது. கூச்சல்  கோஷங்கள் பெயரளவுக்கான எதிர்ப்பு என்றே வாக்கெடுப்பு நடந்ததில் மசோதா அவையில் 2/3 பங்குக்கும் கூடுதலாகவே ஆதரவைப் பெற்று நிறைவேறியதையும் பார்த்தோம்!


வரலாறே தெரியாத, பாடம் எதையும் கற்றுக் கொள்ளத்  தயாராக இல்லாத கூமுட்டைகளால் நிரப்பப் பட்டதுதான் சோனியாG தலைமையில் இருக்கிற இன்றைய காங்கிரஸ் என்பதற்கு  மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதுரி இன்று சபையில் பேசியதே ஒரு நல்ல உதாரணம்! இந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள்! அருகிலேயே இன்றைய காங்கிரஸ் கட்சியின் முதலாளியம்மா  உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன விஷயம் என்பதோ எதனால் சௌதுரி பேசியதற்கு அவையில் கடும் எதிர்ப்பு எழுந்தது என்பதோ அந்த தற்குறி முதலாளிக்குத் தெரியாது! தெரிந்ததெல்லாம் யாரோடு கூட்டுச் சேர்ந்தால் யாரைக் கவிழ்க்கலாம், யாரோடு கூட்டணி தர்மம் உடன்பாடு  வைத்தால் எத்தனை ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம் என்று மட்டுமே தெரிந்த ஒரு விசித்திரப்பிறவி! வாரிசோ அதற்கும் மேலே! எங்கேயோ பின்வரிசையில்  உட்கார்ந்து ஒரு ட்வீட் போட்டுவிட்டால் வயநாடு தொகுதி MP ஆனதற்குச் சரியாகப்போச்சு!  எம்பியாக்கினது சபைக்கு வந்தும்  பேசாமல்  ட்வீட்டரில் இப்படிப் புலம்புவதற்குத்தானா?  

National integration isn’t furthered by unilaterally tearing apart J&K, imprisoning elected representatives and violating our Constitution. This nation is made by its people, not plots of land. This abuse of executive power has grave implications for our national security.
12:37 PM · Aug 6, 2019Twitter for iPhone



இந்த வீடியோ திமுகவின்  TR பாலு முதுகெலும்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டவிதத்தைச் சொல்கிறது.  இன்றைய அரசியல் காமெடியாக இதைத்தான் சொல்லுவேன்!எதிர்க்க வேண்டும் என்பதற்காக எத்தையாவது வாய்க்கு வந்ததை உளறிவிட்டுப் போக வேண்டியது!  என்ன இருந்தாலும் #தமிழேண்டா இல்லையா? 

  
இந்த 51 நிமிட விவாதத்தில் பானு கோம்ஸ் கொஞ்சம் விஷயம் புரிந்து சில விஷயங்களை சொல்கிறார். புதிய தலைமுறை சேனலுக்கு விஷயம் வேண்டியதில்லை. நாய் எலும்புகடிக்கிற மாதிரி எந்த ஒரு செய்தியையும் கடித்துக் குதறி அரைகுறை விவாதமாக, அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருக்க வேண்டுமென்கிற சேனல் தர்மம் தெரிந்துதான் இவர்கள் நடத்தும் விவாதங்களுக்கு எவரும் பேச வருகிறார்களா?  

காங்கிரஸ் மிக வேகமாக தன்னை தானே குழி தோண்டி புதைத்துக் கொள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
காஷ்மீரை சரியாக கையாளத் தெரியாமல் விவகாரமாக்கி..அதை மேலும் மேலும் பயங்கரவாத களமாக மாற்றிய கட்சி காங்கிரஸ்.
உண்மை இவ்வாறிருக்க..
இன்று..பாராளுமன்றத்தில் ...சிம்லா ஒப்பந்தம், லாகூர் பயணம் என்றெல்லாம் சுட்டிக் காட்டி.. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உரிமை இல்லையா ? என்பதாக கேள்வி எழுப்பி..மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது.
முழுமையான அரசியல் தற்கொலை.


70 வருடங்களுக்கு முன்னாடியே ஆனந்தவிகடனில் காஷ்மீர் பற்றி சரியாகக்  கணித்துக் கருத்துப்படம் வரைந்து விட்டார்களாம்! விகடன் தளம் பீற்றிக் கொள்கிறது! அந்த 100 கோடி, அப்புறம் ஒரு 10 கோடி நட்டஈடு கேட்டு திமுக ஓனர் குடும்பத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்களாமே! ஆனந்தவிகடனில் எப்படிச் சமாளித்தார்களாம்? அதைப்பற்றி ஒருவார்த்தையாவது சொல்லியிருக்கலாம்!  

லோக்சபாவில் உள்துறை அமைச்சர் J&K Reorganisation Bill 2019 மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்! லோக்சபாவிலும் இந்த   மசோதா மூன்றில் இரண்டுபங்கு மெஜாரிடியுடன் நிறைவேறிவிடும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்!    
   
மீண்டும் சந்திப்போம். 

எமெர்ஜென்சி! அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா? யாரிடம் கேட்பது?


எமெர்ஜென்சி! அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா? இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி தர்மம் என்ற பெயருடன் கூட்டணியாகச் சேர்ந்திருக்கிற திமுகவின் இசுடாலினிடமும் கேட்டுப் பாருங்களேன்! மம்தாவுக்கு 2019 நாடாளுமன்றத்தேர்தலில் வாங்கிய அடி, 2021 சட்டமன்றத் தேர்தலில் இன்னமும் பலமாக விழுமோ என்ற பயம், கவலையில் கடந்த 5 ஆண்டுகளில் சூப்பர் எமெர்ஜென்சி இருந்ததே என்று வாய் கூசாமல் உளறி இருக்கிறார்! 

1974 இல் பீஹார் இயக்கம் என்று இந்திரா காண்டிக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய ஜனநாயகப் போராட்டத்திற்கு  ஜெயப்ரகாஷ் நாராயணனை தலைமை தாங்க அழைத்துவந்த லல்லு பிரசாத் யாதவ் ஊழல் செய்ததற்காக இன்றைக்குச் சிறையில் இருக்கிறார். அவரைக் கேட்டால்  மம்தா பானெர்ஜியை விட அதிகம் கூவுவார். ஆக, ஆக என்றே வாய்க்கு வாய் சொல்லி  ஆரம்பிக்கிற இசுடாலின் மட்டும் என்ன சொல்லிவிடப் போகிறார்? 

2011 இல் எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட அந்த இருண்ட நாட்களைப் பற்றி எழுதிய பதிவுக்கு ஒரே ஒரு பின்னூட்டம் கேள்வியாக வந்தது.

  1. நேரு பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன். ரஷ்ய எழுத்தாளர் எழுதிய புத்தகம் இது. நீங்க என்ன வேண்டுமானாலும் நேரு, இந்திரா காந்தியை குறை சொன்னாலும் இப்போதுள்ள காங்கிரஸ் மக்கள் ஒப்பிடும் போது இவரை குறை சொல்ல என்னால் முடியவில்லை.
    ReplyDelete
  2. *இதுக்கு அதுவே தேவலைங்கிறது மாதிரி* இப்போதுள்ள காங்கிரஸ்காரனுக்கு நேரு எவ்வளவோ தேவலை என்று சொல்கிறீர்களா ஜோதிஜி? நேருவை நேரு காலகட்டத்தோடு தான் ஒப்பிட வேண்டும்.தவிர ரஷ்ய எழுத்தாளர்கள் பார்வையைவைத்து, நேரு, இந்திரா பற்றி எந்த உண்மையையுமே அறிந்து கொள்ள முடியாது.

    ஒருவகையில் காங்கிரஸ் நேரு அபிமானிதான்! என்றாலும் ராமச்சந்திர குகாவின் இந்தியா: காந்திக்குப் பின் புத்தகத்தை, ஆங்கில மூலத்திலேயே படித்துப் பாருங்களேன்!

  



இன்றைக்கு ஜெயலலிதாவைக் கேலி செய்கிறார்களே! அன்றைக்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது, இந்திரா எதிரே உட்கார தைரியம் இருந்ததா? 
 
INDIRA Gandhi suspended constitutional guarantees and imposed Emergency at midnight on June 25, 1975. This will be discussed yet again on Saturday in seminar halls across India. However, the equally important international context of the landmark event is not viewed as seriously.

Seen from the perspective of India’s internal dynamics, the day marks the 36th year since she put many of her opponents in jail. To heighten the irony or to perhaps flaunt feigned even handedness, she also incarcerated members of smuggling and assorted underworld syndicates.

Some newspapers held their ground for a while by leaving yawning white spaces instead of accepting censored news. But by large the media “crawled when they were asked to bend”. Mrs Gandhi’s political targets included ideologues of the Hindu, Sikh, Muslim right as well as Gandhian socialists. Some communists were jailed but several others supported her short-lived and miscalculated authoritarianism.

2011 இல் இப்படி சொல்லியிருப்பது டான் என்ற பாகிஸ்தான் நாளிதழின் டில்லி நிருபர்! ஜாவேத் நக்வி என்று பெயர்.

இந்திரா காண்டி 1975 ஆம் வருடம் ஜூன் மாதம் 25 ஆம் தேதி நள்ளிரவு,நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி,அரசியல் சாசனம் வழங்கியிருந்த அடிப்படை உரிமைகளை ரத்து செய்தார். அவரை எதிர்த்தவர்கள் மட்டுமல்ல,எதிர்ப்பவர்கள் என்று கைகாட்டப் பட்டவர்களும் சேர்ந்தே நள்ளிரவுக் கைது நடவடிக்கையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
  
வேடிக்கை என்ன என்றால், இங்கே மதுரையில் தீப்பொறி ஆறுமுகம் என்று ஒரு ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர்! திமுகவில் இருந்து ஸ்தாபன காங்கிரசுக்கு வந்த, கொச்சையாக, ஆபாசமாக அரசியல் மேடைகளில் பேசுகிறவர். திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியே வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆபாசப் பேச்சாளர்களைச் சார்ந்தே இன்றைக்கும் இருந்து வருகிறது.(நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலு என்று ஒருத்தர், இந்த மாதிரி வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கொண்ட கதையாகிப் போனாரே, நினைவுக்கு வருகிறதா?)

மதுரையைச் சேர்ந்த ஆர் வி சாமிநாதன் என்று ஒரு மத்திய இணை அமைச்சர்! அவரிடம் எவரோ போட்டுக் கொடுத்தார்கள், ஐயா, இந்த மாதிரி ஒருத்தர் அன்னை இந்திராவை ஆபாசமாகப் பேசுகிறார்....என்று! அவ்வளவுதான்! உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்ட  மிசாவின் (Maintenance of Internal Security Act)  கீழ் தீப்பொறி ஆறுமுகத்தைப் பிடித்து உள்ளே போட்டார்கள். தீப்பொறி ஆறுமுகத்தோடு கூடவே, திமுகவில் இன்னொருத்தர்! பாண்டியன் என்கிற தெருச் சண்டியர்!அவரையும் மிசாவில் பிடித்துப் போட்டார்கள், வெளியே வந்ததும் அவர் "மிசா" பாண்டியனாகிப் போனார்! 

ஆக, மிசா, எஸ்மா, அது  இது என்று ஏகதடபுடல்களுடன் தம்பட்டம்அடிக்கப்பட்ட சட்டங்கள் கேணத்தனமாகத்தான் பயன் படுத்தப் பட்டன.கேவலம் தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆசாமிகளால் உள்நாட்டுப் பாதுகாப்பு குலைந்துவிடும் பிடித்துப் போடு உள்ளே என்று ஒரு அரசு செயல்படுமானால்,அது ஒன்று கோழையிலும் கேடுகெட்ட கோழைத்தனம் உள்ளதாக இருக்கவேண்டும்! 

அல்லது கேணைகள், கிறுக்கு மாய்க்கான்களால் நடத்தப் படுவதாக இருக்க வேண்டும்! எமெர்ஜென்சியில் இரண்டு விதமாகவும் இருந்தது என்பதுதான் வரலாறு!

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்! நேரு குடும்பம் பல்கலைக் கழகமல்ல! பலவிதக் குழப்பம்! கலப்படம்!
 
திமுக என்னமோ மிசாவை எதிர்த்துப் பெரிதாகக் கிளர்ச்சி நடத்தியதாகக் கதை சொல்லுவார்கள். சென்னையில் முக ஸ்டாலின், சிட்டி பாபு இருவர் மீதும்அடக்குமுறை மிகக் கடுமையாக இருந்தது. மற்றப்படி எமெர்ஜென்சியின் முழுவீச்சையும், வெறித் தனமான ஆட்டத்தையும் தமிழ்நாடு முழுமையாகத்தெரிந்து கொள்கிற மாதிரி பெரிதாக இல்லை. பத்திரிகைகளின் வாய்க்குப் பெரிதாகப் பூட்டுப் போடப்பட்டது. தணிக்கை அதிகாரிகள், அரசையும் இந்திராவையும் எவராவது விமரிசிக்கத் துணிகிறார்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டுதணிக்கை செய்தார்கள். 

அந்தத் தணிக்கையையும் தனக்கே உரித்தான துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரே பத்திரிக்கை சோ நடத்திய துக்ளக் ஒன்று தான். அடுத்து, திரு ராம்நாத் கோயங்காவின் வழிநடத்தலில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகைக் குழுமம் எமெர்ஜென்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தது. குல்தீப் நய்யார் சொல்கிறபடி,கொஞ்சம் வளைந்துகொடு என்று இந்திரா சொன்னவுடன், ஜனநாயகத்தின்நான்காவது தூண் என்று தங்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும்பத்திரிகைகள்,மண்டியிட்டுத் தவழ ஆரம்பித்த விநோதத்தை என்னவென்று சொல்வது?

நீதித்துறைக்கு மட்டும் முதுகெலும்பு  இருந்ததா? இந்திராவின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள எந்த நீதிபதியுமே தயாராக இல்லை! எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர, அரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதுகிற தைரியம் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் எவருக்குமே இல்லை! அரசு அதிகாரிகள் கூழைக் கும்பிடுபோட்டு, ஜனங்களை இன்னமும் கசக்கிப் பிழிந்தார்கள். முதுகெலும்போ சுயசிந்தனையோ இல்லாத அரசியல், அதிகார வர்க்கம் இந்திராவின் துதிபாடிகளாக இருப்பது மட்டுமே பிழைக்கும் வழி என்பதைக்கண்டுகொண்டார்கள். காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களின் கட்சியாக மாறிக் கொண்டே வந்தது. 

அன்றைக்கு தேவ காந்த பரூவா என்ற ஒருத்தர் மட்டுமே அறியப்பட்ட காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கானாக இருந்தார்! இன்றைக்குப் பரிணாமவளர்ச்சியில் திக் விஜய்சிங், அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் என்று ஒருபெரிய பட்டாளமே உருவாகிக் குழப்பிக் கொண்டிருக்கிறது!

கேரளாவைப் பொறுத்தவரை, எமெர்ஜென்சி தருணத்தில் அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம் தான்! அதையும் மீறி நடந்த ஒரே ஒரு  விஷயம் ராஜன் என்ற மாணவரை போலீசார் தீவீரவாதி என்று கைதுசெய்து சித்திரவதை செய்ததில் அந்த இளைஞன் இறந்தே போனான்.அவனுடைய தந்தை, ஈச்சரவாரியர் நடத்திய தனிமனிதப் போராட்டம், எமெர்ஜென்சி நேரத்து அத்துமீறலைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியது;கேரளாவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்த, இந்திரா காந்திக்கே சவால் விடக்கூடியவர் என்று  சொல்லப்பட்ட கருணாகரனுக்கு மட்டுமே ஏழரை பிடித்தது.

எமெர்ஜென்சி கொடுமைகளை விசாரிக்க ஷா கமிஷன் என்று ஒரு விசாரணைக் கமிஷன்! தங்களுடைய குற்றங்களை அம்பலப்படுத்தும்ஷா கமிஷன் அறிக்கையைக் காணாமல் போகச் செய்த மாயம்காங்கிரசுடையது! கூட்டணி தர்மத்தை ஒட்டி, திமுக தலைவர் தன் மீது குற்றச்சாட்டுக்களை விசாரித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையையும் காணாமல் போகச் செய்த மாயமும் இங்கே நடந்தது.

எமெர்ஜென்சியின் கடுமை ஹிந்தி பெல்டில் மட்டுமே அதிகமாக பாதித்தது என்று சொன்னால் இன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. எமெர்ஜென்சி அடக்கு முறை அதிகமாக வெளிச்சம் போடப்படாத பகுதிகளில் காங்கிரஸ் 1977 தேர்தலில் அதிக சரிவை சந்திக்கவில்லை என்பதை சேர்த்துப் பார்த்தால் நிலவரம் புரிய வரும்.

ஜாவேத் நக்வி இந்தியர்களாகிய நம்மை வெட்கித் தலை குனிய வைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்கிறார். எமெர்ஜென்சி ஆட்டங்களை நினைவு வைத்திருக்க வேண்டியவர்கள் மறந்தே போய் விட்டோம்!வழிநடத்த வேண்டியவர்கள் தடம் மாறிப் போய் விட்டார்கள்! 

ஆக, தெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசே மேல் என்று இந்திரா காங்கிரஸ் என்று அறியப்பட்ட நாசகார பூதத்திடமே தலையைக் கொடுத்துவிட்டு, அதன் கருணைக்காகக் காத்திருக்கிறோம். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?

ஜார்ஜ் ஆர்வெல் என்பவர்  அனிமல் பார்ம் என்று ஒரு அரசியல் நையாண்டிக் கதையை எழுதினார்.  பல மிருகங்களும் கூடி வாழ்கிற ஒரு பண்ணையில்,பன்றிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுகின்றன. அதிகாரத்துக்கு வந்ததும், பன்றிகள் ஒரு பிரகடனம் செய்கின்றன. "எல்லாப் பன்றிகளும் சமம்! ஆனாலும், சில பன்றிகள் மற்றவற்றை விட அதிக சமம்!" கம்யூனிஸ்ட் கட்சி மீது அதிருப்தியில் எழுதப்பட்ட இந்தக் கதை, கம்யூனிஸ்டுகளுக்குப் பொருந்தியதை விட, இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகப் பொருந்துகிறது என்பதை இந்திரா காண்டி ஆள ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இன்று வரை தொடர்கிற அவலம்.

ஜாவேத் நக்வி தன்னுடைய நக்கலை மறுபடி, அனிமல் பார்ம் நாவலில்,ஜார்ஜ் ஆர்வெல் சொல்கிற ஒரு வரியை வைத்தே முடிக்கிறார்.

Reminds you of the famous lines from George Orwell’s Animal Farm? 

“The creatures outside looked from pig to man, and from man to pig, and from pig to man again; but already it was impossible to say which was which.”

வெளியே இருந்து பன்றிகளிடமிருந்து மனிதனை, மனிதனிடமிருந்து பன்றிகளை,மறுபடியும் பன்றிகளிடமிருந்து மனிதன்-மனிதனிடமிருந்து பன்றிகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எது (பன்றி) எது (மனிதன்) என்று பிரித்துப் பார்க்க இயலாமலே போய் விட்டது! ஆம்! 

ஜெயப்ரகாஷ் நாராயணன் என்ற பழுத்த காந்தீயவாதி நடத்திய சம்பூர்ண கிராந்தி என்ற ஊழலுக்கெதிரான போராட்டம், இரண்டாவது விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்ததில் கவரப் பட்டு, அதில் முன்னணி வகித்ததுடிப்பான இளைஞர்களாக உருவான ஜார்ஜ் பெர்னாண்டஸ்,ராம் விலாஸ் பாஸ்வான், நிதீஷ் குமார் இப்படி எவருமே, ஜெயப்ரகாஷ் நாராயணன் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. அது மட்டுமல்ல, ஊழலுக்கெதிரான ஜேபியின் போராட்டக் களத்தில் உருவான இவர்களே, பின்னாட்களில் பதவி சுகத்தைப் பார்த்ததும், ஊழல்வாதிகளாகவும் ஆனார்கள் என்பது கசப்பான படிப்பினை.

ஒன்று சொல்ல மறந்துபோய் விட்டேனே! எமெர்ஜென்சி தருணங்களில் ஒழுங்காக ஆபீஸ் நேரத்துக்கு வந்தவர்கள் அரசு ஊழியர்கள்! வேலை செய்தார்களா என்று மட்டும் கேட்காதீர்கள்! 
எமெர்ஜென்சி தருணங்களில் நெஞ்சம் நிறைய அச்சத்தோடு வேலைக்கு வந்த ஒரே பிரிவு அரசு ஊழியர்கள் தான்! 

எமெர்ஜென்சிக்கு முன்னாலும் சரி, அதற்குப் பின்னாலும் சரி,அரசு ஊழியர்கள் அப்படி பன்க்சுவலாக அலுவலகம் வந்ததும் இல்லை! ஏதோ தேறினவரைக்கும் சரி என்று  லஞ்சத்தை, இப்போது கறாராகக் கசக்கி வாங்குவது போல அல்லாமல் கொஞ்சம் தணிந்தே வாங்கினார்கள் என்பது எமெர்ஜென்சியின் ஒரே நல்ல அம்சம்.

அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தாறாவது நினைவு ஆண்டான இன்றைய தினத்தை மறக்க முடியுமா? மறந்து இருந்து விட முடியுமா?

எமெர்ஜென்சி, அதன் தழும்புகள், கற்றுக் கொள்ளத்தவறிய பாடங்கள் என்று தொடர்ந்து பேசுவோம்!

தொடர்புடைய பதிவு ஒன்று இங்கே 

*மீள்பதிவுதான்! முன்னுரையாக நடப்பு அரசியலோடு சேர்த்து எழுதப்பட்டது  சமீபத்தைய வரலாறு கூடத்  தெரியாமல் இருக்கிற தமிழ் சமூகத்துக்கு  சமர்ப்பணம்.