#1130 பழ கருப்பையா! புலி பல்டியும் அடிக்கும்! Sit down!

இங்கே பழ கருப்பையா  மாதிரியானவர்களுக்குக் கூட திடீர் திடீரென புத்திக் கொள்முதல் செய்து கொள்கிற நேரம் வாய்த்துவிடுவதைப் பார்க்கையில்  உண்மையிலேயே சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் சீரழிந்து போன அரசியல் சிரிக்க வேண்டிய விஷயம் தானா? ஜனநாயகம் பற்றி பழ. கருப்பையா சொல்கிற சில விஷயங்களை யோசிக்க வேண்டாமா? செந்தில் பாலாஜி போன்றவர்களைப் பற்றி அவர் சொல்வதில் தவறு இருக்கிறதா?


போகிப்பண்டிகை என்று ஆகாவரிகளைக் கழித்துக் கட்டுகிற மாதிரி அரசியலிலும் ஆகாதவைகளைக் கழித்துக் கட்ட ஜனங்களாகிய நாம் உறுதி கொள்கிற போது, ஜனநாயகம் செழித்து வளர்கிற வாய்ப்பும் கூடவே உருவாகிறது. அரசியலில் களைகளின் ஆதிக்கமே மிகுந்திருக்கிறதென்றால்,குற்றம் நம்முடையதே! பழ கருப்பையாவிடம் இருக்கிற பெரிய கோளாறு என்னவென்றால் கொஞ்ச நேரம் பேசவிட்டால், எங்கெங்கேயோ இழுத்துக் கொண்டு போய் ஆளைவிட்டால் போதும் சாமி என்றாக்கி விடுவார். இதை இந்த 29 நிமிட வீடியோவிலேயே அனுபவிக்க முடியும். அனுபவித்துத் தான் உணரலாமே!


புலிகள் (என்று சொல்லிக் கொள்பவர்கள்) பசித்தால் புல்லும் தின்பார்கள்! பூசாரி உடுக்கடித்தால்  தலை கீழாக பல்டியும் அடிப்பார்கள் என்று நக்கலடிக்கிறார் சதீஷ் ஆசார்யா! சரிதானே என்கிறீர்களா? ஆனால் உடுக்கடிப்பவர் யாரென்று சொல்லவில்லையே! 


மக்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, ராஜ்யசபாவில் ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்தார்களாம்! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி வேறு, மறுபடியும் ஹிந்துத்வ சக்திகள் ஒன்றுசேரவேண்டும் என்று புதுக்கரடியை ஆரம்பிக்கிறார்.

      
R பிரசாத் வரைந்திருக்கிற இந்த கார்டூனோடு பொருத்திப் பாருங்கள்! சிவசேனா  தமாஷா மிக நன்றாகப் புரியவரலாம்! 


இந்தியா உலகின் கற்பழிப்புத் தலைநகரமாக மாறி விட்டது என்று ராகுல் காண்டி உளறியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அப்படிச் சொன்னதற்காக மன்னிப்புக் கோரவும் போவதில்லை என்று சூளுரை செய்திருக்கிறார். திமுகவின் கனிமொழி வந்து வக்காலத்து வாங்குகிற அளவுக்குப் பரிதாபமான நிலையில் இருக்கிற ஒருத்தருக்கு இத்தனை வீம்பு ஆகாதுதான்! என்ன செய்ய? அதலபாதாளத்தில் விழுந்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கிற ஆசாமிகளுக்கு என்ன புத்தி சொல்வது? அதெல்லாம் போகட்டும்! இந்த வீடியோவின் ஆரம்பத்தில் TR பாலு கனிமொழியிடம் உட்காரும்மா என்று சொல்வதும் கனிமொழி அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பேச ஆரம்பித்ததையும் கவனித்தீர்களா?


செய்தியின் முழுப்பரிமாணத்தையும் புரிந்துகொள்ள இந்த 26 நிமிட வீடியோவைப் பார்த்து விடுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

         
  

இங்கிலாந்து தேர்தலும் இளம்பருவக கோளாறும்!

பிரிட்டனில் நேற்றைக்கு ஒரு பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அங்கே 650 இடங்களில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 358 முதல் 368 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று செய்திகள் சொல்கின்றன. போரிஸ் ஜான்சன் ஜெயித்து மீண்டும் பிரதமராகிறார் என்று சொல்வதைவிட ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்று பிரிட்டன் எடுத்த முடிவுக்கு ஆதரவாகவே வெகுஜன ஆதரவு இருக்கிறது என்று மட்டுமே இதை எடுத்துக் கொள்ளமுடியும் என்று சொல்கிறார்கள்.


மெஜாரிட்டியோடு ஜெயித்ததனால் போரிஸ் ஜான்சன் இன்னுமொரு முறை பிரதமராகிறார். ஜெயித்த வேகத்தோடு கிறிஸ்துமசுக்கு முன்னாலேயே Brexit குறித்த தனது தரப்பை நாடாளுமன்றத்தில் மறுபடி முன்வைக்கிற வாய்ப்பு ஜான்சனுக்குக் கிடைத்திருக்கிறது. வெளியிலிருந்து ஆதரவை எதிர் பார்க்க வேண்டிய அவசியமில்லை. Boris Johnson may be prime minister for a long time, but he may be the last prime minister of the UK. என்று   இந்தத் தேர்தல் முடிவுகளைக் குறித்து ஜான் ரெண்டோல் சந்தேகப்படுகிறார்   

பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து நாடாளுமன்ற ஜன நாயகத்தை மட்டும் இரவல் வாங்கினோமா அல்லது அதில் இருந்த குழப்பங்களை மட்டும் சுவீகரித்துக் கொண்டோமா என்ற சந்தேகத்தில் அவ்வப்போது அங்கே நடப்பதையும் இங்கே நடப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கிற கெட்ட வழக்கம் என்னிடம் இருக்கிறது. என்ன செய்வேன்?

  
அம்ரிந்தர் சிங்  மம்தா பானெர்ஜி, பிணரயி விஜயன்  முதலான எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கடைப்பிடிக்கிற மோதல் போக்கு, ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. அதேபோல இங்கே தமிழகத்தில் திமுகவும் ஒரு பப்ளிசிட்டி அடித்துப் பார்த்திருக்கிறது.

   
இந்தமாதிரி இளம்பருவக் கோளாறுகளுக்குச் சரியான பதில் சொல்ல ஆளே இல்லையா? ஏனில்லை? நான் இருக்கிறேனே என்று விவாதக்களத்தில் இறங்குகிறார் மதன் ரவிச்சந்திரன்!

  
இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவித பதட்ட உணர்வைத் தூண்டுவதைத் தவிர இங்கே திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுடைய நோக்கம் வேறென்ன?  விவாத நேரம் 59 நிமிடம். நேரம் ஒதுக்கிப் பாருங்களேன்! 

மீண்டும் சந்திப்போம்.