"நாடகம்" ஒருவழியாக முடிந்தது! கரு "நாடகம்"

கர்நாடக அரசியல் குழப்பங்களுக்கு ஒருவழியாக இன்று ஒரு 9முடிவு எட்டப்பட்டு விட்டது என்பதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தபோது, இது எத்தனை நாளைக்கு என்றொரு கேள்வியும் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்பார்த்தபடியே தோற்று விட்டது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிர்த்து 105 வாக்குகளும் பதிவாகி, ஆளுநரிடம் குமாரசாமி தன்னுடைய ராஜினாமாவை சமர்ப்பிப்பதற்காக, புறப்பட்டுக் கொண்டு இருப்பதையும் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 
20 சமஉ க்கள் சபைக்கு வரவில்லை. மரபுப்படி சபாநாயகர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 


14 மாதங்களாக முட்டலும் மோதலுமாகத் தொடர்ந்த JDS -- காங்கிரஸ் பொருந்தாக்கூட்டணி ஒருவிதமாக முடிவுக்கு வந்துவிட்டாலும், இப்போது எடியூரப்பா தன்னுடைய அரசை எப்படி அமைக்கப்போகிறார், என்னென்ன சமரசங்களுக்கு BJP தன்னை உட்படுத்திக் கொள்ளப்போகிறது என்றெல்லாம் ஆட்டக்களம் அப்படியே மாறுகிறது. இந்தப் பதிவில் சொன்ன மாதிரி  கர்நாடக அரசியலில் இதுவரை நாலே நாலு பேர்கள் தான் முழுமையாக 5 ஆண்டுகள்+ என்று ஆண்டிருக்கிறார்கள். துல்லியமாகச் சொல்லப்போனால், அதிலும் தேவராஜ் அர்ஸ், சித்தராமையா இந்த இருவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்தாண்டுகள் முழுதாக ஆட்சி செய்திருக்கிறார்கள். மற்ற இருவரும் பிட்டுப்பிட்டாக 5 ஆண்டுகளைத் தாண்டியவர்கள். கர்நாடக அரசியலை ஒக்கலிகர், லிங்காயத்துக்களே மாறிமாறி டாமினேட் செய்து வந்ததை சித்தராமையா வேறொரு சாதீயக்  கணக்கில் மாற்றிக் காட்டியிருந்தார். 


பெங்களூரு தவிர சொல்லிக் கொள்கிற மாதிரி தொழில்வளர்ச்சி கர்நாடகாவில் வேறெங்கும் இல்லை என்பது, எடியூரப்பா இன்று விவசாயிகளுக்கு ஆதரவான அரசை அமைப்பேன் என்று சொன்னதில் வெளிப்பட்டிருக்கிறது.

ஆக, ஆசைப்பட்டபடி, எடியூரப்பா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தாலும், அது முள்படுக்கை மீது அமர்ந்திருக்கிற மாதிரித்தான்! ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுக்கிறாரா என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெளிவாகிவிடும். 

மீண்டும் சந்திப்போம்.
     
             

வாலு போயிக் கத்தி வந்தது! டும் டும் டும்! இது வேற!

இது கர்நாடக அரசியல் பற்றிய பதிவில்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுவது நல்லது! காரணம்,1001 இரவுகள் அரேபியக் கதையில் வருகிற மாதிரி கர்நாடக அரசியல் குழப்பங்களை நாற்காலிமீது ஆசை அதிகம் கொண்ட காங்கிரசும் அதன் கூட்டாளி தேவே கவுடாவின் ஜனதாதளமும் கதைக்குமேல் கதையாகப் பேசியே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருவதில் இங்கே நண்பர்கள் பலருக்கும் ஆர்வம் அதிகமில்லை போலத் தெரிகிறது என்பதால் அல்ல. எனக்கே அதில் கொஞ்சம் அலுப்பும் தலைசுற்றலும் வந்துவிட்டது வந்துவிட்டது என்பது உண்மை. 



ஆனால், பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்! போகட்டும் விட்டுவிடு! என்று போகாமல் டொனால்ட் ட்ரம்ப்  பேசியதற்கெல்லாம் மோடி வந்து தான் நேரில் விளக்கம் சொல்ல வேண்டும் என்று  லோக்சபாவில் கூச்சல் வெளிநடப்பு ராஜ்யசபாவில் ரகளை என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எல்லாம் கச்சைகட்டிக் கொண்டு சபை நடவடிக்கைகளை கேவலப்படுத்த முயற்சிப்பது என்னவகையான  ஜனநாயகம்,அரசியல்? சொல்லுங்களேன்! 


மேலே வீடியோவைக் கொஞ்சம் பார்த்தாலேயே, இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை இழுத்துவிட வேண்டுமென்கிற முனைப்பில் பேசுவதைக் கவனிக்க முடியும்.  இங்கே ட்ரம்ப் உளறியதற்கு அமெரிக்க தரப்பிலேயே ஆதரவில்லை என்பதோடு, கடுமையான விமரிசனங்களும் வந்திருக்கின்றன. இங்கே நம்மூர் அரசியல்வாதிகளும் கூட தினத்தந்தி பாணியில் அந்தந்த நேரத்துப் பரபரப்பு, சதக் சதக் ரகத்திலேயே அரசியல் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. 

இவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர். நம்மூர் லோக்சபா  மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! இந்த twit செய்திக்குப் பின் தொடரும் கீச்சுக்கள் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக டொனால்ட் ட்ரம்ப்பின் அரசியல் அறிவை விமரிசனம் செய்கின்றன. நம்மூர் காங்கிரஸ் கழகக் குஞ்சுகள், அதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். மோடி பெயரை சொல்லிவிட்டார்களா? எத்தையாவது சொல்லி டேமேஜ் செய்ய முடியுமா என்று அவதூறான  செய்திகளை சதக் சதக்கென்று சொருகு! இந்த விஷயத்தை பெங்களூரு தெற்குத் தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா அம்பலப் படுத்தினால் என்ன? மொதல்ல சொன்னது கொஞ்சமாச்சும் நிக்கும் இல்ல!

  • Unfortunate that a sitting Minister of a state government does not even give benefit of doubt to his own country's Prime Minister. Gone are the days of spineless leadership of the Congress era, Sir. If you haven't realized yet, it's PM Sri who is leading us today
    Quote Tweet
    ·
    Either US President is lying or the @narendramodi is. Difficult call. twitter.com/devirupam/stat…
    12:37 AM · Jul 23, 2019 · Twitter for Androi  
        

    ஒரு பழைய  வேடிக்கைப் பாட்டு ஒன்றுண்டு! வாலுபோயிக்  கத்தி வந்தது டும் டும் டும்! கத்தி போயி  என்று ஒவ்வொன்றாகப் போய்க்கொண்டே இருக்கும். முந்தைய நாட்களில் நண்பர் வால்பையன் (எ) அருணுக்காக இதே தலைப்பில் பதிவொன்றை எழுதியது நினைவிருக்கிறது. இப்போது அதே தலைப்பை எடுத்துக் கொண்டது வேறொரு கேள்விக்காக.   

    காங்கிரஸ் கட்சி இன்னபிற உதிரிகளை முற்றொட்டாக கழித்துக் கட்டாமல் விட்டோமேயானால் இந்த தேசமே அப்படி ஒரு வேடிக்கைப் பாட்டாகிவிடும் என்பது ஏன் இன்னமும் நமக்கு உறைக்கவே மாட்டேன் என்கிறது? என்னுடைய கேள்வி, ஆச்சரியம் எல்லாம் இது ஒன்றுதான்!

    மீண்டும் சந்திப்போம்.