சரியாப் பத்த வைக்கக் கூடத் தெரியலையே, பரட்டை! புது வருடத் தீர்மானங்க‌ள் பத்து!





சரியாப் பத்த வைக்கக் கூடத்  தெரியலையே, பரட்டை! புது வருடத் தீர்மானங்க‌ள் பத்து!


முதல்  மூணும் பாத்தாச்சு  இல்லையா! இப்ப மிச்சமிருப்பது என்னன்னு பாக்கலாம்!


புதுவருடத் தீர்மானம் நம்பர் நான்கு!


இனிமேல் தமிழில் வலைப்பதிவர் யாரையும் வாலைத் தொட்டு, தலையைத் தொட்டு எழுதுவதில்லை! இங்கே கற்றுக் கொள்ள வருபவர்களைவிட, க‌ற்றுக்கொடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பதும், நானும் அதில் சேர்ந்து ஒரு எண்ணிக்கையைக் கூட்டுவானேன் என்பது  மட்டுமே காரணம்.அல்ல.  


இணையம் என்பது மனிதர்களை, மனங்களை இணைக்கிற கருவியாக இருக்கும்போது, கற்றுக்கொள்ள உதவும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பை, அருவருப்பை வளர்க்கிற போக்குகளுக்குத் துணையாக ஆகிவிடக் கூடாது என்பதாலும் தான்!






நல்லதை நானும் கேட்பேன், என்னுடைய நண்பர்களும் கேட்பார்கள், இந்த நாடுமே கேட்கும் என்ற நிலையை உருவாக்கக் கூடிய நல்ல எண்ணங்களாக, நல்ல செயல்களாக ஆரம்பித்து வைப்பது நம்மிடம் இருந்தே தொடங்குகிறது!





புதுவருடத்தீர்மானம் நம்பர் ஐந்து !

சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வு! ஏற்கெனெவே ஒரு பதிவில் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்கக் கூடிய பாலித்தீன் பைகளைத் தவிர்ப்பது, நமக்குத் தெரிந்த நண்பர்களிடமும் எடுத்துச் சொல்வது, தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பொம்மைகளையும் தவிர்ப்பது, அக்கம் பக்கத்தில் குப்பையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் தீ வைத்துக் கொளுத்துவதைத் தவிர்ப்பதும் முடிந்தவரை தடுப்பதும் பற்றிப்  பேசியிருக்கிறோம்.

அதே மாதிரிக் கொசுத் தொல்லை
! இங்கே அரசும் அரசியல்வாதிகளும் வெறுமே பேசிக்கொண்டு மட்டுமே இருப்பார்கள். அரசு மருத்துவ மனைகளில் சிக்குன்குனியா, மலேரியா என்று விதவிதமாய்ப் பரவிக் கொண்டிருந்தபோது அரசு அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்தது. அரசு மருத்துவர்கள் எப்போதும் போலப் பொறுப்பில்லாமலேயே நடந்து கொண்டார்கள். தேவையான மருந்துகள் இல்லை.

சுற்றுப்புறத்தை வியாதிகளைப் பரப்பும் கிடங்காக மாற்றிவிடாமல் இருப்பதில் விழிப்புணர்வைக் கொஞ்சமாவது ஏற்படுத்த முனைவது
. நமக்கு நாமே என்பது வெற்றுவார்த்தை தான்  என்ற அனுபவமிருப்பதால், தன்கையே தனக்குதவி என்பதை உணர்ந்து செயல் படுவது.

புதுவருடத் தீர்மானம் நம்பர் ஆறு!





ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று தீர்மானங்களை, இந்த ஆறோடு  முடித்துக் கொள்ள முடிந்தாலே  நல்லது தான்! நீளம் குறையும்! ஆனாக்க, பத்து இல்லைன்னாப் பத்தாதாமேன்னு தலைப்பே புது வருடத் தீர்மானங்கள் பத்து என்று என்றிருக்கும்போது, இன்னும் கொஞ்சம் சொல்லத் தானேவேண்டியிருக்கிறது!

இந்தத் தொடரும் பதிவைத் தொடங்கிய போதே
, சென்ற டிசம்பர் மாதம், ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடாக மாதம் தோறும் வெளிவரும் மின் இதழ் 





அதன் தலையங்கத்தைத் தொட்டுத் தான் ஆரம்பித்திருந்தேன்!

As the year draws to a close, we at Next Future wonder at what our personal achievements have been. Our main objective is to share some powerful thoughts with our readers. We constantly aspire that the views expressed in the magazine may inspire and motivate others to move closer and closer towards the light. And it is almost an ardent prayer on our part to use the magazine as a platform through which we can offer our best and highest, not just to those who share the moment with us, but to the One who is the source of all our effort and our inspiration.”



இப்படி அந்தத் தலையங்கத்தை எழுதிய குழு, இது வரை என்ன செய்திருக்கிறோம், இன்னும் செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பற்றிய சுய அலசலாக, விமரிசனமாக எழுதியிருந்ததைப் படித்தபோது, அதே மாதிரி சிந்தனையோட்டம் எனக்குள்ளும் ஓட ஆரம்பித்தது.


What I am doing here? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்? சிந்தனையின் மையப்புள்ளியாக இந்த ஒரு கேள்வி தான் இருக்கிறது.
7. ஒரு வங்கியில், வியாபாரத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஐந்தொகை எனப்படும் லாப நஷ்டக்கணக்கைப் பார்ப்பது போலவே, வாழ்க்கையின் சில தருணங்களில் நாம் யார், இங்கு எதற்காகப் பிறந்தோம், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாகவே கேட்டுக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது

8. வாழ்க்கையில் எதுவுமே நஷ்டக்கணக்காகவோ, மீள முடியாத திவால் நிலையாகவோ இருந்துவிடுவதில்லை, ஒவ்வொரு அனுபவமுமே, அது மிகக் கசப்பானதாக இருந்த போதிலுமே கூட, அடுத்தபடிக்கு உயர்த்தும் உன்னதமான தருணமாகவும் அனுபவமாகவும் இருக்க முடியும்

9. இதை வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கும் போதேஇதன் அனுபவங்களையும் ஒரு கட்டத்தில் அலசிப்பார்த்தாக வேண்டியிருக்கிறது

10. ஒன்றோ இரண்டோ, அல்லது பத்தோ, உண்மையான சாரம் என்னுடைய தீர்மானங்களில் மட்டும் இல்லை, வெறும்  எண்ணிக்கையில் மட்டும் இல்லைஒவ்வொரு அனுபவத்திலும் நான் என்ன கற்றுக்கொண்டு வருகிறேன் என்பதே ஒரே மையக் கருத்து

இதை வைத்து மட்டுமே என்னுடைய தீர்மானங்களும், தொடர்ந்து வரும் செயல்களும், விளைவுகளும் இருக்கும்! அதில் இருந்து அடுத்து வேறொன்றில் மையம் கொண்டு இதே தேடல்தொடரும்!



என்னவோ எதிர்பார்த்து, எப்படியோ முடித்திருப்பதில் ஒன்றிரண்டு நண்பர்களுக்குக் கொஞ்சம் சுவாரசியமே இல்லாமல் போய்விட்டதாகத் தோன்றலாம். கொஞ்சம் சொந்த அனுபவங்களைக் கவனிக்கப் பழகுங்கள்! வாழ்க்கை மிக அற்புதமானது 

முடிவே இல்லாததுபோல ஒரு பக்கம்,என்ன என்று கேட்பதற்குள் முடிந்து போய்விடுகிற இன்னொரு பக்கம் ஆக இரண்டு நிலைகளுக்கும் இடையில், அனுபவங்களே கடந்துபோகிற பாலங்களாக, கூடவே வருகிற துணையாக, சகபயணிகளை நேசிக்கும் இயல்பாக, நம்முடைய மனப்பக்குவத்திற்கு ஏற்றபடிமாறிமாறி வந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்!

'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

கவிஞர் கண்ணதாசனுடைய இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது, அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே நன்றாகப் புரியும்!



6 comments:

  1. நான்காவது தீர்மானம் தான் அசத்தல்!

    ReplyDelete
  2. சில சமயங்களில் என்ன செய்யலாம் என்று தீர்மானங்கள் போடுவதை விட, என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதையே தீர்மானமாக்கி விடலாம்...!

    ReplyDelete
  3. //8. வாழ்க்கையில் எதுவுமே நஷ்டக்கணக்காகவோ, மீள முடியாத திவால் நிலையாகவோ இருந்துவிடுவதில்லை, ஒவ்வொரு அனுபவமுமே, அது மிகக் கசப்பானதாக இருந்த போதிலுமே கூட, அடுத்தபடிக்கு உயர்த்தும் உன்னதமான தருணமாகவும் அனுபவமாகவும் இருக்க முடியும். //

    அதென்னவே சரி தான், கடந்த காலம் எங்கும் சென்றுவிடாது அனுபவமாக கூடவே இருக்கும்.

    ReplyDelete
  4. நான்காவது தீர்மானம்,அசத்தப்போவது யாரு போட்டிக்காக வரவில்லை. சில விஷயங்களைப் பார்த்துப் பார்த்து,அயர்ந்து போனதில் வந்தது.

    @ஸ்ரீராம்!
    ஏற்கெனெவே இங்கே நிறையப்பேர் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்! Jokes apart, தீர்மானங்கள் என்பது மிக அவசியம். ஒன்றே ஆனாலும் பலவானாலும், எந்த அளவு விசுவாசமாக அதை நிறைவேற்றப் போகிறோம் என்பது தான் முக்கியம். ஜெயிப்பது தோற்பது, அடுத்த வருடத்திற்குத் தள்ளிக் கொண்டு போவது எல்லாம் அப்புறம் தான்!

    @கோவிகண்ணன்!

    காலம் (concept of time) பற்றி ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் எழுதிய புத்தகம் படித்திருக்கிறீர்களா? அனுபவம் என்பது கூடக் காலத்தைச் சுருக்கி வைத்திருக்கும் ஒரு விஷயம்தான்!

    ReplyDelete
  5. //நான்காவது தீர்மானம்,அசத்தப்போவது யாரு போட்டிக்காக வரவில்லை. சில விஷயங்களைப் பார்த்துப் பார்த்து,அயர்ந்து போனதில் வந்தது.//

    அறிந்ததால் தான் அசந்தேன்!

    ReplyDelete
  6. //என்னவோ எதிர்பார்த்து, எப்படியோ முடித்திருப்பதில் ஒன்றிரண்டு நண்பர்களுக்குக் கொஞ்சம் சுவாரசியமே இல்லாமல் போய்விட்டதாகத் தோன்றலாம். கொஞ்சம் சொந்த அனுபவங்களைக் கவனிக்கப் பழகுங்கள்! வாழ்க்கை மிக அற்புதமானது!//

    இது நான் எதிர்பார்த்ததுதான் :))

    வலைப்பதிவை பொழுதுபோக்கும் இடமாக என்னால் பார்க்க முடியவில்லை, ஒன்று எனக்கு உபயோகமாக ஏதேனும் கிடைக்கவேண்டும்,

    அல்லது நான் பிறர்க்கு தொந்தரவாக இல்லாமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!