சண்டேன்னா மூணு! செய்திகள்! படங்கள்! கற்றுக்கொள்ளத் தவறிய பாடங்கள்!


பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனியின் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் ஏப்ரல் இருபதாம்  தேதியில் இருந்து கடலில் கலந்து, மெக்சிகோ வளைகுடா வரை பரவி அமெரிக்கக் கடற்கரை சூழலை மாசுபடுத்தி வருகிறது.மேலே உள்ள படத்திலேயே கச்சா எண்ணெய் கடலில் பரவி இருப்பதை, அங்கங்கே எரிக்கப் படுவதைப் பார்க்கலாம்.


ம்மூர்  செய்தித் தாட்களிலோ , தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலோ உலகம் எந்த திசையில் போய்க் கொண்டிருப்பது என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பதிவுகள் எழுதுகிற பெரும் பாலான நண்பர்கள் கூட ராவணன் படத்தில் ரஞ்சிதா வரும் காட்சிகளில் கைதட்டல், விசில் தூள் பரத்துகிறது என்ற அளவில் நின்று விடவே விரும்புகிறார்கள். 

மானாட மயிலாட, மச்சான்ஸ் நமீதா, ரஞ்சிதா, சுகாசினி, நித்தியானந்தாவைத் தாண்டி விஷயங்களைத் தேட விரும்புகிறவர்கள் மட்டும் .இந்தப் படங்களைப் பாருங்கள்!



டலில் மிதக்கும் எண்ணெயை சுத்தப் படுத்துவது என்பது, கட்டுப் படுத்தக் கூடிய விதத்தில் கடலிலேயே எரிப்பது தான்! இயற்கை வளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டும்போதும், அலட்சியமாகக் கையாளும்போதும் ஒரு தீமையை, இன்னொரு தீமையால் சமாளிப்பது என்பதைத் தவிர நவீன தொழில்நுட்பம் வேறு வழியைச் சொல்வதில்லை. 


ல்லாமே காசுக்குத் தான் என்கிற போது, சேதத்தைக் கட்டுப் படுத்துவதை விட ஆகிற  செலவு தான் இந்த மாதிரிக் கொழுப்பெடுத்த நிறுவனங்களுக்கு முதலில் கண்ணுக்குத் தெரிகிறது.


மேற்கத்திய நாடுகளில் ஒரு நல்ல அம்சம், தங்களுடைய நாடோ, மக்களோ இது மாதிரியான தீமைகளில் சிக்கிக் கொண்டுவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கையோடு  இருப்பது! 

தன் இன்னொரு இருண்ட பக்கமாக, அவர்களைப் பிடித்த சனியனை, இந்தியா மாதிரி துப்புக் கேட்ட அரசியல்வாதிகள் ஆளுகிற நாட்டின் மீதோ, வேறு ஏதாவதொரு ஏழை நாட்டின் தலையிலோ கட்டி விடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ங்கே கூட, ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த பல செனெட் உறுப்பினர்கள் ஒபாமா இப்படி சட்டம் வழக்கு எதுவுமில்லாமல் கையை முறுக்கி நஷ்ட ஈடு கொடுக்க வைத்ததைக் குறை கூறி, பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்திடம் மன்னிப்புக் கோரிய  வேடிக்கை நடந்திருக்கிறது. முந்தைய அதிபரும் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்தவருமாகிய புஷ் குடும்பத்திற்கு பெட்ரோல் வணிகம் உண்டு என்பதும், ஈராக் மீது படையெடுத்தது கூட தங்களுடைய வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தான் என்ற செய்தியை அறிந்தவர்கள், இந்த பெட்ரோ-டாலர்கள் உலக அரசியலில் ஏற்படுத்திவரும் பொருளாதாரச்சிக்கல்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கலாம். 

ப்பட்டமான கார்பரேட் முதலாளித்துவ அமெரிக்காவில் அப்படி நடப்பது சரி!

யூனியன் கார்பைட் செய்த கொலைபாதகத்தில் இருந்து தப்புவதற்கு, காங்கிரசில் யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதைப் பட்டியல் இடுவதை விட, யார் யார் உடந்தையாகவும் ஒத்து ஊதவும் இல்லை என்பதைப் பட்டியல் இடுவது எளிது என்று சொல்கிற இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழின் கட்டுரையைப் படிக்க இங்கே .

ன நாயக சோஷலிசம் பேசிக் கொண்டு ஜன நாயகக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியுமே கூட, அப்படி ஒரு வெட்கம் கெட்ட நிலையைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அரங்கேற்றி வருவது அம்பலமான பிறகும் கூட, அழுகிய புண்ணுக்குப் புனுகு பூசுவதைப் போலத் தான் இன்னமும் நடந்து கொள்கிறதே ஏன்?

ராஜீவ் காந்திஆண்டர்சன் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தாரா, முடிவெடுப்பதில் தவறு செய்தாரா இல்லையா என்பது உண்மையான பிரச்சினையே அல்ல! ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தால் கூட, தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இருந்தால், மக்களுடைய பிரச்சினையில் அதற்கு அப்புறமாவது அக்கறை எடுத்துக் கொண்டு செயல் பட்டிருந்தால், மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கலாம்.  

னால், செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழியைத் திருப்புகிறார்கள். அர்ஜுன் சிங் தான் தவறு செய்தார் என்று மறைமுகமாகத் தங்கள் கை என்னவோ கரை படியாதது போலக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு கூட பாதிக்கப் பட்ட சொந்த ஜனங்களுக்கு நீதி கிடைப்பதில், நிவாரணம் வழங்குவதில் உண்மையான அக்கறை காட்ட மாட்டேன் என்கிறார்கள்.

மெரிக்காவின்  கையை முறுக்குகிற தந்திரத்தில் செய்து கொள்ளப் பட்ட அணு ஒப்பந்தம், அதைத் தொடர்ந்து அமெரிக்க கார்பரேட்டுகளுக்கு மட்டுமே சாதகமான அணு உலை விபத்துக்கான நஷ்ட ஈடு வரையறை செய்யும் சட்ட முன்வரைவை  நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டுமே, நாளை திங்கள் கிழமை அமைச்சரவைக் குழு, போனால் போகிறதென்று போபால் மக்களுக்கு நிவாரணத் தொகையை இன்னும் கொஞ்சம் கூட்டி கொடுப்பதான முடிவை அறிவிப்பார்கள்.

காங்கிரசிடம் தொடர்ந்து ஏமாறுகிற ஏமாளிகளாகவே இருந்து விடப் போகிறோமா?

காங்கிரஸ் தான் என்னவோ இந்த தேச மக்களுக்கு  ஏதோ பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்கிக் கொடுக்கிற மாதிரி சுதந்திரத்தையும் வாங்கிக் கொடுத்ததாகக் கதைத்துக் கொண்டே,இந்த தேசத்தின் இறையாண்மையையும், இந்த மக்களின் எதிர்காலத்தையும் கொள்ளை லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கார்பரேட் பிணம் தின்னிக் கழுகுகளிடம், மண்டியிட்டு கைமாற்றிவிடப் போகிற அவலத்தையும் சகித்துக் கொள்ளப் போகிறோமா?  

போபால் தந்த பாடத்தில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளத் தெரியாத காங்கிரஸ் மாதிரியே, நாமும் இருந்து விடப் போகிறோமா?

ன்ன செய்யப் போகிறோம்? 

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்! 

 


4 comments:

  1. காங்கிரஸ் செய்யும் ,செய்த காமெடிகள் பல. இன்னும் கொஞ்சம் பேர் காந்தி தாத்தா தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தார் அப்படிங்கிறபோது எனக்கு போகம் பொத்துக்கிட்டு வரும்.எவ்ளோ போராட்டம்,உயிர்சேதம் இதெல்லாம் தாண்டி வாங்குனது. காந்தியை அவர் தகுதிக்கு மீறி நம்மாளுக ஏத்திவிட்டுட்டாங்கெ.நன்றி

    ReplyDelete
  2. எண்ணெய் படலம் பரவுவது மிகவும் கவலையளிக்கும் விசயம், இயற்கையை மனிதன் அளவுக்கு மீறி சோதிக்கிறான். இதன் விளைவு.....

    ReplyDelete
  3. மயில்ராவணன்!

    நான் இங்கே பதிவில் சொன்னது, இங்கே பாடப் புத்தகங்களிலும் காங்கிரஸ் கட்சி வரலாற்றிலும் என்னவோ நேரு மாமாவும், காந்தித் தாத்தாவும், அப்புறம் சாதிக்கொரு தலைவரைத் தேர்ந்தெடுத்து இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் என்னவோ பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்கி வருகிற மாதிரி சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்ததாகக் கிளிப்பிள்ளைகள் மாதிரி சொல்லிக் கொண்டிருப்பதைத் தான்!

    சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு மகத்தானது. தொலை தொடர்பு சாதனங்களோ, இன்றைக்கு மானாட மயிலாடக் காண்பித்துக் கொண்டிருக்கிற ஊடகங்களோ, பெரிய அளவு பத்திரிக்கை பலமோ இல்லாமல், எழுத்தறிவு இல்லாத முப்பது கோடி ஜனங்களும் தங்களில் ஒருவராகக் கண்டுகொண்ட தன்மை காந்தியுடையது. ஜனங்களின் பரிபூரணமான நம்பிக்கையைப் பெற்றவராக மட்டுமல்ல, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதிலும் தெளிவான பார்வையோடு காந்தி இருந்தார்.

    காந்தியின் தலைமைக்கு முன்னால், காங்கிரஸ் முழு விடுதலையைத் தன்னுடைய லட்சியமாகக் கொண்ட ஸ்தாபனமாக எப்போதுமே இருந்ததே இல்லை. பிரிடிஷ்காரர்களுடன் நயந்து பேசி இன்னம் கொஞ்சம் சலுகைகள், உள்ளூர்தலைவர்களுக்கு கொஞ்சம் பதவிகள் என்பதற்கு மேல் காங்கிரசுக்குக் கனவுகள் இருந்ததே இல்லை. இதில் குறிப்பிடத் தகுந்த பதவி மோகம் பிடித்தலைந்த ஒருவர்--மோதிலால் நேரு! தியாகப் பரம்பரை என்று சொல்லிக் கொள்கிறார்களே, அந்த நேரு பரம்பரையின் மூத்த நேரு, ஜவஹர்லால் நேருவின் அப்பா! 1937 இல் காந்தியைக் கை கழுவிவிட்டுவிட்டு, தேர்தலில் நின்று பதவி சுகம் கண்ட காங்கிரஸ் கட்சிப் போக்குக்கு ஒரு சிறந்த உதாரணமாகக் கூட சொல்லலாம்.

    ஸ்ரீ அரவிந்தர், திலகர், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களின் குரலில் பூரண சுதந்திரத்துக்கான அறைகூவல் இருந்தது, ஆனால் ஜனங்களைத் திரட்டுகிற வேலை முழுமையாகவில்லை. அன்றைக்கு ஆயுதம் தாங்கிய போராட்டம், சிறிதளவு வன்முறை இருப்பதாக சந்தேகம் வந்தால் கூட அதை நசுக்கி விடுகிற முனைப்போடு ஆங்கிலேயே அரசு இருந்தது. தன்னுடைய மக்களைப் பலி கொடுக்காமல், அஹிம்சை வழியில் போராட்டத்தை நடத்தி, அடக்குமுறை என்னவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்தோடு போராளிகளைத் தயார் செய்ததும், அவர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் ஜனங்களை ஒரு சத்திய ஆவேசத்தோடு ஒன்று திரட்டியதையும் காந்தி ஒருவரால் தான் சாதிக்க முடிந்தது.

    அவருமே கூட, தான் எதிர்க்க வேண்டியது பிரிட்டிஷ் அதிகார மையத்தைத் தானே அன்றி, ஆங்கிலேயர்களை அல்ல என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். அதனால் தான் அஹிம்சைப் போராட்டத்திற்கு அவ்வளவு மரியாதையை பிரிடிஷ்காரர்கள் கொடுத்தார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

    இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டியிருக்கிறது! என்னதான் உயர்ந்த நோக்கத்தோடு போராடினாலும், எதிர்த்துப் போராட வேண்டியது எதை, எவரை என்பதில் தெளிவு இல்லாமல் போனபோதுதான், கம்யூனிஸ்ட் இயக்கங்களுமே கூட நல்லதை எண்ணி நரகத்துக்குப் போகிற மாதிரி சிதறுண்டு, திசைமாறிப் போன கதையும் நடந்தது. இந்த அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தான் , மகாத்மா காந்தி எவ்வளவு தெளிவாக இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    வாருங்கள் சிவா!

    எண்ணெய்ப் படலம் பரவுவது சின்ன விஷயம் தான்! பதிவு, சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்வதைப் பற்றியது.

    ReplyDelete
  4. உங்க விளக்கங்களுக்கு நன்றி சார்.சென்னை வந்தா கண்டிப்பா தொலைபேசுங்கள்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!