தேர்தல் களம்: நேற்றைய கூட்டாளிகள், இன்றைய பலியாடுகள்!


நெருக்கடி ! "சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது".  -தினமலர் செய்தி

வேறு எது எதில் இருக்கிறதோ இல்லையோ, இந்திய ஊழல் விவகாரங்கள் மட்டும் நாளுக்கு நாள் முதிர்ச்சி அடைந்து வருவதாகத் தான் தோன்றுகிறது!

நேற்றைய கூட்டாளிகள், இன்றைய பலியாடுகள்! 


புலனாய்வுத் துறை கொஞ்சம் பொறுப்பு, விழிப்புடன் செயல் பட்டிருந்தால்....அது இது என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள்!

சுப்ரீம் கோர்ட் வேறு நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் மடக்கி மடக்கிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச் கடைசித் தேதிக்குள் குற்றப்பத்திரிகை, முதல்தகவல் அறிக்கை, முதல்கட்ட விசாரணை விவரம் எல்லாவற்றையும்  கோர்ட்டில் சமர்ப்பித்தாக வேண்டும்! அவர்கள்தான் என்ன செய்வார்கள் பாவம்!!

செய்தியைப் படித்தீர்களா, உச்சுக் கொட்டி
னீர்களா  என்றெல்லாம் உங்களைக் கேட்கப்போவதில்லை!

சர் ஐவர் ஜென்னிங்ஸ் என்றொரு சட்ட வல்லுநர். அரசியல் சாசனங்கள்,  நாடாளுமன்ற நடைமுறைகள் இவற்றைக் குறித்து நிறையப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசியல் சாசனம் பற்றி சர் ஐவர் ஜென்னிங்ஸ் எழுதிய ஒரு புத்தகத்தில், ஒரு அற்புதமான சிந்தனை இழையை சமீபத்தில் ஒரு நண்பரின் இம்சை தாங்க முடியாமல் படிக்க வேண்டி வந்தது.(பக்கம் 196).

அவர் அதில் சொல்கிறார்:"நம்முடைய விடுதலைக்கான சாதனமாக சட்டங்களோ நிறுவனங்களோ இருக்க முடியாது. சுதந்திரத்திற்கான வேட்கை கொண்ட மனங்களில் தான் அது இருக்கிறது."

"விடுதலை என்பது ஒரு முன்னுதாரணத்தில் இருந்து இன்னொரு முன்னுதாரணத்திற்கு  விரிவடைந்துகொண்டே இருக்கிறது."

சுதந்திரம்,ஜனநாயகம் என்பதெல்லாம் அதைப் பாதுகாத்துக் கொள்ளத்தெரிந்த மக்களுக்கு மட்டும் தான் சாத்தியம்!

என்ன சொல்கிறீர்கள்?என்ன செய்யப் போகிறீர்கள்?






2 comments:

  1. ஒன்றும் சொல்வதற்கில்லை. எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை அல்லது கொலை ஒரு முடிவு கிடையாது, மேலும் சில பிரச்னைகள் அதிலிருந்து தோன்றும். மான அவமானத்திற்கு அஞ்சுவோர், எந்த செயலையும் செய்வதற்கு முன்பே நன்கு ஆலோசித்து பிறகு செயலை செய்திருக்கவேண்டும். எண்ணித் துணிக கருமம் .....

    ReplyDelete
  2. சி.பி.ஐ. காரர்கள் சொல்கிறார்கள், பாட்சா தங்களின் விசாரணையின் பொது முழு ஒத்துழைப்பு தந்ததாக.மேலும் ஊடகங்கள் எல்லாமே ராஜாவையும் அவருக்கு பின்னால் செயல்பட்ட குடும்பத்தவர்களையும், மண்ணு மொக்க சிங் மற்றும் கார்பரேட் தலைகள் போன்றவர்களையுமே வறுத்து எடுத்தன. பாட்சாவின் அறிமுகம் அவரின் விசாரணைக்கு பின்னர் முடிந்துவிட்டது.ஆனால் செத்துப்போனது மட்டும் இவர்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!