2G ஸ்பெக்ட்ரம்! சி பி ஐ குற்றப்பத்திரிகையும் கூட்டணி தர்மமும்!


டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்திருக்கிறோம்!எப்போது  பார்த்தாலும் எலெக்ஷன், கலெக்ஷன் என்றே தலையைப் பிய்த்துக் கொள்வதில் இருந்து ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக டில்லி பாதுஷா, டில்லி பாதுஷாவைக் கூட ஆட்டிப்படைக்கும் கூட்டணி தர்ம அல்வா கதையைக் கொஞ்சம் மீள்வாசிப்பாகப் பார்த்து விடலாமே!.

டில்லி பாதுஷாவாக இருப்பவர்களுக்கு சுயசிந்தனையே இருக்கக் கூடாது என்பதுதான் முதல் தகுதி என்பதைக் கூட்டணி தர்மம் வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள், அப்போது உண்மை இன்னும் விளக்கமாகத் தெரியும்!


பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அது  நற்செய்தியே கிடையாது என்பது அனுபவிக்கிற ஜனங்களுக்குத்  தானே தெரிய வேண்டும்?ஜனங்களுக்கு அப்படித் தெரிந்து  விடாமல் இருப்பதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத்தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

ந்தேகப் பட்டு சந்தேகப்பட்டு மூளைக்கு வேலை  கொடுக்கிற மாதிரிக் காட்டிக் கொண்டதிலேயே அலுப்பு வந்து விட்டதோ என்னவோ! ஒரு நாளைக்கு, பாதுஷா அக்பருக்கு, அது கனவில் வந்தது! கனவில் வந்த சந்தேகம் கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரியும் இருந்தது, இன்றைக்குத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பீதி அடிவயிற்றைக் கொஞ்சம் பிசைந்து கொண்டிருக்கிறதே அந்த மாதிரி!

புரியாத விஷயங்கள் எல்லாமே பயமுறுத்துபவைதானே!  பாதுஷா மட்டும் விதி விலக்கா?

னவில், தனக்கு ஒரே ஒரு பல்லைத் தவிர மற்ற எல்லாப் பல்லும் விழுந்து விடுகிற மாதிரிக் கனவு வந்தால், குழப்பம் வருமா வராதா? இங்கே ஏதடா சாக்கு என்று எது கிடைத்தாலும், அடிவருடிகளை வைத்துப் பாராட்டு விழா நடத்தி, தானே நம்ப முடியாத படிக்கு  இந்திரனே சந்திரனே மனு நீதி சமூகநீதி சமத்துவம் கண்ட நாயகனே என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப் போடுவேன் என்ற அளவுக்குப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் போல, பாதுஷாவுக்குக் குழப்பம் வந்தால் என்ன செய்வார்கள்?

கூப்பிடு தர்பாரை! உத்தரவு பறந்தது! டில்லி குரல் கொடுப்பதை விட, டில்லிக்குக் குரல் கொடுத்தால் தர்பார் கிடு கிடுக்காதோ!?

னவுக்குப் பொருள் தெரிந்து கொண்டாக வேண்டுமே! நாடி, கைரேகை, ஜாதகம், கிளி, எலி ஜோசியம், முகத்தைப் பார்த்தே ஆரூடம் சொல்லும் ஆரூடக்காரர்கள், சோழியை உருட்டிப் போட்டுப் ப்ரச்னம் பார்த்து பலன் சொல்லிப் பல்லை இளிப்பவர்கள், இப்படி எல்லோரிடத்திலும்  பாதுஷாவுக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாயிற்று!

னேகமாக எல்லோருமே ஒன்று சேர்ந்தார்போல, ஒரே  விஷயத்தைத் தான் சொன்னார்கள். பாதுஷாவின் உறவினர்கள் அத்தனை பேரும், பாதுஷாவுக்கு முன்னாலேயே பரலோகம் போய்விடுவார்கள்!

ப்படிப் பலனைக் கேட்டதும் பாதுஷாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதிலேயே சற்றுக் குழப்பம் வந்து விட்டது! தனக்கு முன்னாலேயே, நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் பரலோகம் போய்விடுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதற்காக வருத்தப் படுவதா, இல்லை அது எப்படி இவர்கள் எல்லோரும் தன்னுடைய உத்தரவு இல்லாமலேயே முந்திப் போய்விடுவார்கள் என்பதற்காகக் கோபப் படுவதா? நவரசத்தில் எந்தரசம் இந்த சீனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லையே!

பாதுஷாவுக்குக் கோபம் கோபமாக வந்தது! பின்னே, இவ்வளவு யோசிக்க விட்டால்....! குழப்பம் அதிகமாகுமா இல்லையா?

வராவது இதற்குப் பரிகாரம், மாற்று என்று எதையாவது சொல்லிக் குழப்பத்தைப் தணிவிக்கிறார்களா  என்று அக்பர் சபையின் இரு மருங்கும் ஏற இறங்கி  இப்படி அப்படியும், அப்படி இப்படியுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்! ஒருத்தரும் பதில் சொல்வதாகக் காணோம்!

ன்ன தர்பார் இது! மொத்தமும் தண்டங்கள்! ஒரு குழப்பத்தைத் தீர்ப்பதற்கு யோசனை கேட்டால், இன்னொரு குழப்பத்தைக் கொண்டு வருகிறவனை எல்லாம்தர்பாரில் நிரப்பி....அம்ம்ம்மா!  இப்போதே கண்ணைக் கட்டுகிறதே!

ந்த பீர்பால் இருந்தாலாவது ஏதாவது சொல்லியிருப்பானே! பீர்பாலையும் காணோம்! பாதுஷா இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும் போதே  பீர்பால் சபைக்குள் நுழைந்தார்! அக்பருக்கு, தன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது! தான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா என்று பீர்பாலிடமும் அந்தக் கேள்வியை அக்பர் கேட்டார்.

கொஞ்சம் யோசித்து விட்டு பீர்பால் சொன்னார்: "அந்த ஒரு பல் மட்டும் விழாமல் இருந்ததாகக் கனவு கண்டது,  மற்ற எல்லோரையும் விட நீங்கள் அதிக ஆயுளோடிருப்பீர்கள் என்பது தான் ஹூசூர்! "

பாதுஷாவுக்கு மிகவும் சந்தோஷம்! ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை இந்த பீர்பால் எவ்வளவு சரியாகச் சொல்லி விடுகிறான்! வழக்கம் போல பீர்பாலைப் பாராட்டி விட்டுப் பரிசுகளும் அளித்துவிட்டு, தண்டத்துக்குக் கூடிய தர்பார் கலையலாம் என்று பாதுஷா உத்தரவு போட்டார்! 


ப்படி உத்தரவு போடுவது மட்டும் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

ரண்மனைக்குத் திரும்புகிற சமயத்தில் பாதுஷாவுக்குத் திடீரென்று ஏதோ பொறி தட்டியது மாதிரித் தோன்றியது!

ப்படிப் பொறி தட்டுகிற சமயத்தில் எல்லாம், அடுத்த குழப்பம் தயாராக ஆரம்பித்துவிட்டது என்பது பாதுஷாவின் அனுபவம்!

ற்றவர்கள் சொன்னதைத் தானே, பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னான்! அதெப்படி, மற்றவர்கள் சொன்னபோது வருத்தமாக, கோபமாக வந்தது, அதையே பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னபோது எதனால் சந்தோஷமாக இருந்தது?

மாற்றி யோசிப்பதா? யோசித்து மாற்றுவதா ?

பாதுஷாவுக்கு டுத்த ந்தேகம்  ழக்கம் போயாராகி விட்டது!

கதை கேட்டாச்சா? நடப்பு  நிகழ்வுக்கும் கொஞ்சம் வருவோமா?

 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஒதுக்கப்பட்டதால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் நிறுவனத்தின் உஸ்மான் பல்வா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கில் மார்ச் 31-ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.

புலனாய்வின் நிலை தொடர்பான அறிக்கை மார்ச் 29-ம் தேதி தாக்கல் செய்யப் படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.  கைது செய்யப்பட்டிருக்கும் ஆ.ராசா உள்ளிட்ட நால்வரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையின் குற்றம் சாட்டப் பட்டவர்கள் வரிசையில் இடம்பெற்றிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் இதில் பதிவு செய்யப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  ஸ்வான் நிறுவனத்தின் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்காட்சியின் சரத்குமார் ஆகியோருக்கு எதிரான குற்றச் சாட்டுகள் குறித்த விவரங்களும் சிபிஐ தயாரித்திருக்கும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு பெரும்பான்மை பங்குகள் இருந்தாலும் அவர் நிறுவனத்தின் செயல்படாத பங்கு தாரராகவே இருந்திருக்கிறார் என்பதால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விவகாரத்தில் கனிமொழியின் பங்கு பற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. 

யூனிடெக் - டாடா நிறுவனம் இடையிலான நில ஒப்பந்தம், ரூ.1600 கோடி கடன் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள் இந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.  இப்போது தாக்கல் செய்யப்பட இருக்கும் குற்றப்பத்திரிகை சிபிஐ விசாரணையில் தெரிய வந்திருக்கும் விவரங்களில் 10 சதவீத தகவல்களைக் கொண்டே தயாரிக்கப் பட்டிருப்பதாகவும் விரைவில் மேலும் சில நிறுவனங்கள், தனி நபர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக மோரீஷஸ், சைப்ரஸ் நாடுகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 1-ம் தேதி புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படித் தினமணி செய்தி இங்கே 

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறிக் கைலாசத்தைப் பார்க்கப் புறப்பட்டானாம்! கைப்புண்ணே கண்ணுக்குத்  தெரியாத சி பி ஐ இந்த வழக்கை எப்படிக் கோட்டை விடும் என்பதற்கும் நிறைய முன்
தாரணங்கள் இருக்கின்றன. அத்தனை மோசமான முன் தாரணங்களுக்குப் பின்னாலும் காங்கிரஸ் கட்சியின் பெருந் தலைகள் இருந்திருக்கிறார்கள், இருந்துவருகிறார்கள் என்பது கண் முன்னால் நடக்கும் சரித்திரம்.

இந்த தேசத்துக்கு விடிவு காலம் காங்கிரஸ் கட்சியையும் ,அதன் கூட்டாளிகளையும் வருகிற தேர்தல்களில் எப்போதுமே தலையெடுக்கவிடாமல் பாடம் கற்றுக் கொடுப்பதில் தான் இருக்கிறது.


நேற்றிரவு முழுவதும், கனிமொழிமீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படும் என்றே  டிவி செய்திகள் ஆங்கில சானல்களில் ஓடிக் கொண்டிருந்தன. டில்லிக்குக் குரல் கொடுத்தார்களோ இல்லையோ, செய்திகள் இப்போது மாற்றி, அடக்கி வாசித்துக் கொண்டிருப்பதில் என்ன பின்னணி என்பதை வாசகர்கள் ஊகத்துக்கே விட்டுவிடுவது உத்தமம்.

என்ன செய்யப்போகிறீர்கள்? அதைக் கொஞ்சம் உரக்கச்  சொல்லுங்களேன்!
 

1 comment:

  1. இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இன்று நாடாளுமன்றத்தில் பிரதமரை ஒரு பிடி பிடித்த எதிர்க் கட்சிகளின் பேச்சுகளுக்கு பிரதமரின் உணர்ச்சிகளைக் காட்டாத முகத்தின் பின்னே மனத்தில் என்ன ஓடியிருக்குமோ... ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் இவர்கள் பெயரும் சேர்ப்பதாகத்தான் சொன்னார்கள். என்னென்ன பேரமோ...இடையில் தினமலரில் சாதிக் மரணம் என்பதையே சந்தேகமாக போட்டிருக்கிறார்கள்... என்னவோ போங்க சார்...ஒண்ணும் சரியில்லை...!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!