தேர்தல் 2011! கருத்தும் கணிப்பும் -2

மம்தா பானெர்ஜி!

திமுகவுக்குப் பல்லக்கோ, மம்தாவுக்கு ஜோல்னாப் பையோ எதைத் தூக்கியாவது மத்தியில் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதைத் தவிரக் காங்கிரசுக்கு வேறொரு லட்சியமோ செயல்திட்டமோ கிடையாது! இவர்களுக்கா உங்கள் ஓட்டு?

இங்கே ஒரு சாம்பிள் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் வாக்குகளை எப்படிப் போடப்போகிறீர்கள் என்பதை சொல்லலாம்! முக்கியமாக, உங்கள் கருத்துக்கள் என்ன என்பதையும் முடிந்தால் ஒரு  நாலுவரிப் பின்னூட்டமாக எழுதுங்களேன்! என்ன குறைந்து விடும்!!
 ம்தா! இந்தப் பெண்மணி உண்மையிலேயே ரொம்ப ரொம்ப வித்தியாசமானவர் தான்! தனி ஒரு நபராக இருந்துகொண்டு, ஆளும் இடது சாரி முன்னணியைக் கதி கலங்க அடித்துக் கொண்டிருக்கிறார். 

சித்தார்த்த சங்கர் ரே போன்ற காங்கிரஸ் பழம்பெருச்சாளிகளாலேயே அசைத்துக் கூடப் பார்க்க முடியாத இடது, இப்போது இடமும் வலமுமாகப் பொறி கலங்கிப் போயிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்டுகள், ஆட்சியைப் பிடித்தவுடனேயே முதலில் செய்ய முற்படுவது நிலச் சீர்திருத்தங்கள் தான்! மேற்கு வங்கத்திலும் நிலச் சீர்திருத்தங்களை ஓரளவிற்கு வெற்றிகரமாகச்செயல்படுத்தியும் முடித்தாயிற்று. 

கேரளாவில், வெறும் பேச்சோடு சரி. சீர்திருத்தங்கள் செய்யப் பட்டனவா, ஜனங்களுக்குப் போய்ச்சேர்ந்தனவா என்பதெல்லாம் கேள்விகள் தான்! பதிலே கிடையாது.ஆரம்ப காலங்களில் கிராமப் புற ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்த நிலச்சீர்திருத்தங்கள், காலவோட்டத்தில் வலுவிழந்தும் போயின.

நிலச்சீர்திருத்தங்களை மட்டுமே பெறும் புரட்சிக்கான முதலீடாக, விதையாக நினைத்திருந்த, முழக்கங்களிட்டுக் கொண்டிருந்த  பொதுவுடைமை இயக்கம், அதற்கப்புறம் என்ன செய்வது என்பது தெரியாமல் திகைத்து நின்றதென்னவோ உண்மை! அப்புறம், அவர்களும், மற்றக் கட்சிகளைப் போலவே ஓட்டுப் பொறுக்கும் கூட்டத்தோடு, அதாவது ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்கள்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இங்கே இந்தியாவில் மத்திய மாநில அரசு
கள் அறிவித்த சலுகைகள் அத்தனையையும் கபளீகரம் செய்த தொழில்துறை, விவசாயிகளுக்குப் பெயரளவுக்கு அறிவிக்கப் படும் மானியங்கள், சலுகைகளையும் தட்டிப் பறித்துக் கொழுத்து வளர்ந்தது. இந்திய முதலாளித்துவம் வளர்ந்த கதை, மற்ற நாடுகளிடமிருந்து  மிகவும் வித்தியாசமானது.உதாரணமாக, விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் என்பது பெயரளவுக்குத் தான்! அதை வாரிச்சுருட்டி வாய்க்குள் போட்டுக் கொண்டது உரத் தொழிற் சாலைகளின் முதலாளிகளும், அரசியல் வாதிகளும் தான்! 

வேலைவாய்ப்பு உருவாக வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில் அல்ல, தொழில் தொடங்க முனைவோருக்கு சிறப்புச் சலுகைகளை, ஒரு விலைபோட்டு விற்பனை செய்வது என்பது இந்திய அரசியலின் சீரழிந்த கதையின் ஒரு அத்தியாயம் தான்!

ப்போது இன்போசிஸ் நாராயண மூர்த்திகளும் இன்ன பிற ஐடி துறை விற்பன்னர்களும், அரசிடமிருந்து இலவசமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுருட்டிக் கொண்டிருக்கிறார்களே அதே மாதிரித் தான்!

வறு செய்தால் தட்டிக் கேட்பான் கம்யூனிஸ்ட் என்பதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய், வெறும் கனவாய்ப் போனது என்று தான் சொல்ல வேண்டும். ஒருபக்கம், தொழிற்சங்கங்களின் ஆதிக்கம், இன்னொரு பக்கம் அதிலிருந்து விலகி இருந்த "கட்சி" இப்படி இடது கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே இரண்டு பிரிவுகள் ஒன்றோடொன்று யுத்தம் செய்து கொண்டிருந்தது. தோழர்கள் தத்துவார்த்தச் சண்டை போட்டதை விட, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு உடைந்து சிதறிப் பிளவு பட்டுப் போன கதை தான் அதிகம்! கேரளா அரசியலில் மிகவும் அப்பட்டமாகவே தெரிந்தது இந்த ஒரு விஷயம் தான். இப்போதைய முதலமைச்சர் வி எஸ் அச்சுதானந்தன் சி ஐ டியு (தொழிற்சங்க) கோஷ்டி! லாவெலின் ஊழல் கேசில் சிக்கிக் கொண்டு, கட்சியையே பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் பினராயி விஜயன், பார்டி அதாவது "கட்சி" (கோஷ்டி) போல, மேற்கு வங்கத்தில் இரண்டு கோஷ்டிகளாக வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இளைஞர் அணி  (DYFI), மாணவர் அணி (SFI) விவசாயிகள் அணி, மாதர் சங்கம்,அது இதென்று அத்தனை பிரிவும் தனித்தனி கோஷ்டியாக, அதிகார மையங்களாகச் செயல்பட ஆரம்பித்து, இன்றைக்கு திருத்தவே முடியாத அளவுக்கு சீரழிந்து கிடந்தாலும், காங்கிரஸ் அங்கே தலைதூக்கவே முடியாமல் போன ஒரே காரணத்தால், வேறு மாற்று எதுவும் ஜனங்களுக்குத் தெரியும்படி இல்லாததால், தட்டிக் கேட்க ஆளில்லாத தம்பி சண்டப்ரசண்டனாக ஆவது போல, இடது ஜனநாயக முன்னணி கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஜெயித்துக் கொண்டே இருந்தது.

டதுசாரி என்றால், ஒரு கொள்கையில் தீவீரமான பிடிப்புடன் இருப்பது என்ற அர்த்தம் மாறி, லெப்டிசம் என்பது  சிபிஎம்மிச
ம் அல்ல என்றாகி விட்டதாம்!

இங்கே மம்தா பானெர்ஜியின் விளக்கம்  இடதுசாரித்தனம் ஒன்றும் மோசமானது அல்ல! ஆனால் சிபிஎம்மிசம் இடதுசாரித்தனம் இல்லை!

ப்படி மம்தா பானெர்ஜி வந்து விளக்கம் கொடுக்கிற அளவுக்கு இடது சாரிகள் அங்கே தரம் தாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

சென்ற டிசம்பரில் எழுத்தாளரும் வரலாற்றாய்வாளருமான திரு ராமச்சந்திர குஹா, கல்கத்தாவில் தன்னுடைய Makers of Modern India புத்தகத்தை அறிமுகம் செய்து பேசுகையில், வங்காளம் உருப்படுவதற்காகவாவது சிபிஎம் பதிவியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் பேசி இருந்ததை முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன்.அதைத்தனிப்பதிவாக  எழுத உத்தேசித்திருந்த தருணத்தில் திருமதி பாப்பா உமாநாத் மரணச்செய்தி வந்து, அஞ்சலிப் பதிவாகிப் போனது.

ளும் தரப்பாகவே இருந்தால் கம்யூனிஸ்டுகளே கடையழிந்து போவார்களென்று ஆகும்போது, பதவி வெறியிலேயே அலையும் நபர்களால் நிரப்பப்பட்ட காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்குச் சீழ் பிடித்து நாறிக் கொண்டிருக்கும்?


ஆரம்பிக்கவே இல்லை! ஆரம்பித்திருந்தால் தானே 'முடிக்காமல் விட்ட' என்று சொல்வதற்கு?

வெறும் பரப்புரை, வசனங்கள் பேசியே  ஆட்சியைப் பிடித்தவர்களான திமுக வகையறா எந்த அளவுக்கு நாட்டைச் சீரழித்திருக்கும்?அதுவும் தொடர்ச்சியாக ஆளக் கிடைத்த இந்தப்பத்தாண்டுகளில் திமுக எப்படி ஒரு  ஆக்டோபசாக வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டாமா?

Anti-incumbency  factor என்று சொல்லப்படும் ஆளும் கட்சிக்கு  எதிரான அதிருப்தி அலை இந்தத்தேர்தல்களில் எந்த அளவுக்கு ஆளும் தரப்புக்கு எதிராக செயல்படப் போகிறது?
 


ரு கேள்வி வரும்! அவங்களும் அப்படித்தானே! 

ண்மைதான்!அதிமுகவோ, பாதிய ஜனதாக் கட்சியோ நிச்சயமாக நல்ல கட்சிகள் இல்லைதான்! ஆனால், தற்போதுள்ள விஷ சுரத்துக்கு தடுப்பூசியாக, இவைகளைத்தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழி ல்லை.

டப்புத் தேர்தல் வேடிக்கையாக, இன்று (14.03.2011) பிற்பகல் வரை,அதிமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்  மதிமுகவிற்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்து அறிவிக்கப் படவே இல்லை. இந்த இழுபறியால் அவர்களுக்கு டென்ஷன் அதிகரித்ததோ இல்லையோ, திமுகவிற்கு அதிக டென்ஷனை அளித்தது என்று தான் சொல்ல வேண்டும்.இப்போது தான் அதிமுக கூட்டணியில் இடது கம்யூனிஸ்டுகளுக்கு 12, வலது கம்யூனிஸ்டுகளுக்கு 10 என்று முடிவாகி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 


ங்கே எதுவும் சரியில்லை, அதனால் நான் எதற்கும் ஓட்டுப் போடப்போவதில்லை என்று ஜம்பமாகச்சொல்லிக் கொள்வது ஒரு பேஷனாகிப் போய் விட்டது. சென்ற தேர்தலில் 49 (O), மிகவுமே தம்பட்டமிடப்பட்டது. கொடுமை என்னவென்றால், இப்படி ஒரு ஆப்ஷன் இருப்பது தேர்தல் அதிகாரிகளுக்கே சரியாகச்சொல்லித் தரப்படவில்லை என்பதும், இந்த ஆப்ஷன், ஜனங்கள் நினைத்த மாதிரி ஒரு அற்புதத்தை நிகழ்த்தக் கூடியதாக இல்லைஎன்பதும் தான்!

தற்கும் கொஞ்ச காலத்துக்கு முன்னால், the right to recall என்று ஜனங்களுடைய எதிர்பார்ப்புகளுக்குத்தகுந்தமாதிரி செயல்படாத பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும்  உரிமை பரபரப்பாகப் பேசப்பட்டது. படித்த, நடுத்தர மக்களுக்கு வாயை மெல்லுகிற அவல் மாதிரியாகிப் போன இந்த செய்தி, பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை என்பதோடு, கிளம்பிய வேகத்திலேயே அமுங்கியும் போனது.

ணக்கன் கட்டுரைகள் என்ற தலைப்பில் தினமணி நாளிதழில் அதன் அன்றைய ஆசிரியர் திரு ஏ என் சிவராமன் எழுதிய கட்டுரைகள், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக முறைகளைப் பற்றிச்சொல்லி, வாக்குச்சீட்டுகள் மூலம் எப்படி மாற்றத்தை சாதிக்க
முடியும், தற்போதுள்ள தேர்தல் முறையில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்பதை சிந்திக்கும் வண்ணம் தொடர் கட்டுரைகளாக எழுதி, பின்னாட்களில் தினமணி கதிர் பிரசுரமாகப் புத்தக வடிவிலும் வந்தது.
 

வர் ஒருவரைத் தவிர, தற்போதுள்ள தேர்தல் முறைகளில் செய்யb வேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றிக் கொஞ்சம் அழுத்தமாகவே பேசியவர் வேறு எவருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்!

ப்போதுள்ள தேர்தல் முறை அயோக்கியர்களுக்கு  மட்டுமே துணை செய்வதாக இருக்கிறது.  


டிச்சது லாட்டரி என்று கொள்ளையை ஏகபோகமாக செய்வதற்கு இந்த முறை உதவியாக இருப்பதால், அரசியல் கட்சிகளை நம்பித் தேர்தல் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று ஜனங்கள் எதிர் பார்க்கவும் முடியாது. அப்படியானால்,வேறு வழியே இல்லையா?

நேற்றைக்கு முன்னாள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய  திரு நரேஷ் குப்தா சென்னையில்
எக்ஸ்னோரா
இயக்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

"வாக்குச்சீட்டு விற்பனைக்கல்ல!" "தன்மானம் விற்பனைக்கல்ல" என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அறிமுகம் செய்து வைக்கப் பட்டிருக்கிறது.
வாக்குச் சீட்டுக்கள் விற்பனைக்கல்ல! தன்மானம் விற்பனைப் பொருள் அல்ல!

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!

அவர்களுக்கும் கேட்கட்டும்! தேர்தல் 2011 உங்கள் ஓட்டு யாருக்கு?

 
  
  text-align: left;"> 
 
 
       
 •        
             
     
 •        
             
     
 •        
             
     
 •        
             
     
 •         
             
     
 •        
             
       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!