தேர்தல் களம் 2011: செய்திகள்,திருப்பங்கள்,கருத்துக்கள்!

பி.ஜே.தாமஸ் நியமனத்தை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ஆணை
புதுதில்லி, மார்ச் 14: மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக (சிவிசி) பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் திங்கள்கிழமை உத்தரவிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.  பிரதமர், உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு சிவிசியாக பி.ஜே.தாமசித் தேர்வு செய்தது. கேரள பாமாயில் இறக்குமதி தொடர்பான ஊழல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் தாமஸ் பெயர் இருப்பதால், அவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.  இந்த நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், பி.ஜே.தாமசுக்கு எதிரான ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகையை உயர்நிலைக்குழு பரிசீலிக்கவில்லை என்று கூறி அவரது நியமனத்தை ரத்து செய்து கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டது.  ஆனால், சிவிசியை நீக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என்றும், குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரில்தான் சிவிசியை நீக்க முடியும் என்றும் பி.ஜே.தாமஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யவும் அவர் திட்டமிட்டிருந்தார். 

இந்த நிலையில், அவரது நியமனத்தை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவையடுத்து, புதிய சிவிசியை தேர்வு செய்யும் நடைமுறைகளை அரசு தொடங்க முடியும்.

என்ன செய்யப் போகிறார் வைகோ?


பீ கேர்புல்...என்னைய சொல்லிக்கிட்டேன்

எவ்வளோ கொடுத்தாலும் வாங்கிப்பாரு...வைகோ ரொம்ப நல்லவருன்னுட்டாங்கய்யா அம்மா!சென்னை, மார்ச் 14: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகள் அனைத்துக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டபோதிலும் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து அ.தி.மு.க. அணியில் இடம்பெற்று வரும் கட்சியான ம.தி.மு.க.வுக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.  ம.தி.மு.க. தரப்பில் தொடக்கத்தில் 35 தொகுதிகள் கொண்ட பட்டியல் அ.தி.மு.க.  நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் 30 தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்கு ம.தி.மு.க. இறங்கி வந்ததாகத் தெரிகிறது. எனினும், அடுத்தடுத்து நடந்த பேச்சுகளைத் தொடர்ந்து ம.தி.மு.க. மேலும் இறங்கி வந்து, 23 தொகுதிகளைக் கேட்டதாகத் தெரிகிறது. 
 
அதிமுக அணியில் ஏழு வருடம் நட்புடன் இருந்து வரும் மதிமுகவுக்கு இது வரை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. எட்டு தொகுதிகள் வரையே அளிக்கப் படும் என அதிமுக கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில் மதிமுக தலைமை மிகவும் சோர்வடைந்துள்ளது.

செய்திகளுக்கு நன்றி: தினமணி நாளிதழ் -இரண்டாவது செய்திக்கு வெளியாகி ருந்த கமெண்டுகளில் பளிச்சென்று தெரிந்தது வலைப்பதிவர் குசும்பனுடையது தான்! 

வைகோ எப்போதும் இலங்கை பிரச்சினைக்காகவே குரல் கொடுத்துவருவதால் அவர் ஸ்ரீலங்கா தேர்தல்களில் ஆர்வம் காட்டுகிறார் என்ற நம்பிக்கையில் அவரை இலங்கை தேர்தலில் போட்டியிடும்படிஅதிமுக தலைமை அவரிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளதாக நம்பகமான தகவல். By குசும்பன்


தினமணி செய்தி இப்படி வருத்தப்பட்டாலும், தினகரன் நாளிதழில் பீட்டர் மாமா சுசி மாமி உரையாடல் சொல்வது இதற்கு நேர்மாறாக இருக்கிறது.

"‘ஏடியெம்கேல 16ம் தேதி டெட்லைனாம்... அதுக்குள்ள முடிக்கறதுக்கு தான் கம்யூனிஸ்ட் கட்சிகள அவசர அவசரமாக கூப்பிட்டு செட்டில் பண்ணிருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘எம்டீயெம்கேவயும் அழைச்சுருக்கா... காலையிலயே ஒரு டீம் போய் வைகோட்ட பேசிட்டு வந்துருக்காம்... டபுள் டிஜிட்டுக்கு ஓகே சொல்லிட்டதா தகவல்... எப்படியும் செட்டிலாயிடும்னு சொல்றா...’’ என்ற சுசி மாமி, ‘‘இதுக்கு இடையில காங்கிரஸ்ல இளைஞர் அணிக்கு கூடுதல் சீட் தரப் போறாளாம்... ராகுல் உத்தரவு..."


அப்புறம்,  என் ராம் நடத்தும்  ஹிந்து நாளிதழில் வெளியான இந்தத்  தலையங்கத்தையும் பார்த்து விடலாமா?இது இரண்டு நாட்களுக்கு முந்தையது! தலையங்கத்தைவிட அதற்கு வந்த வாசகர் எதிர்வினை, குறிப்பாக,திரு சாபில் அகமது, கே எஸ் ரங்கநாதன் இருவருடையதும் மிகத் தெளிவாக இருந்தது.

The wellspring of judicial activism

"So cynical has the public become about the impartiality and seriousness with which corruption cases against the rich and the powerful are probed, that hardly an eyebrow is raised when the judiciary starts actively monitoring the investigation in such cases. Over the last couple of months, the Supreme Court has assumed a supervisory role in the CBI's investigation of the 2G scam, asking the agency to act against “persons who think themselves to be the law” and demanding to see the charge sheet before it is filed. Earlier this week, in the case relating to black money stashed abroad, another bench of the Supreme Court asked the government to consider invoking terror laws against Hasan Ali Khan. The provocation for such judicial activism lies in the suspicion — most often well grounded — about the lack of good faith in the manner these cases are being probed. An FIR in the 2G scam (against unknown persons and firms) was registered as early as October 2009, but it wasn't until the Supreme Court reprimanded the CBI for dragging its feet that the investigation really moved forward.  

Similarly, the Centre's persistent stonewalling in the black money case led an exasperated Supreme Court to ask: “What the hell is going on in this country?” 

Some of the Court's prodding has been in the form of sharp questions and cutting observations on the investigations. It is hardly a surprise that its display of annoyance has led agencies such as the CBI to interpret oral observations made in the course of the hearing as if they were judicial diktat. Since the mid-90s, the judiciary has tried to strengthen the independence of investigating agencies, a process that both began with, and is highlighted by, the Supreme Court's judgment in the Jain hawala case, which centred on a diary that allegedly recorded the sums of money paid by a money-laundering agent to the country's leading politicians. The Court took the extraordinary step of barring the CBI from furnishing any information on the case to the then Prime Minister P.V. Narasimha Rao. Eventually, it ruled that the superintendence of the CBI in relation to investigations will vest with the Central Vigilance Commission, and not with the Prime Minister's Office which, deplorably, continues to influence investigations informally apart from exercising formal administrative control. In an ideal world, the judiciary would stick to interpreting the law and refrain from treading on the domain of the legislature or the executive. 

But in an environment where justice is constantly being subverted, it is arguable that the courts are left with no choice but to step beyond their traditional domain and prod the executive into discharging its constitutional responsibilities."


தேர்தல் விநோதங்களில், செய்திகளைக் காசு கொடுத்து வாங்குவதும் ஒன்று! இந்தக் கருமாந்தரத்தையும் ஆரம்பித்து வைத்து முன்னணியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான்! 2009 தேர்தல்களில் ஆந்திராவிலும், மஹாராஷ்ட்ராவிலும் காசு கொடுப்பவர்கள் விரும்புகிற விதத்தில் செய்திகளைப் பிரசுரித்த கூத்து இன்னமும் ஈரம் காய்ந்து போய் விடவில்லை.

இதுபற்றி நினைவுபடுத்திக் கொள்வதற்காக முந்தைய பதிவு ஒன்று இங்கே.

செய்திகள், திருப்பங்கள், கருத்து என்றெல்லாம் தலைப்பிட்டுக் கடைசியில் ஒன்றையும் காணோமே என்று தேடுகிறீர்களா?

மிகவும் நல்லது!

இங்கே பேசப்பட்டது மட்டுமல்ல, நீங்கள் பார்க்கிற, கேட்கிற, படிக்கிற அத்தனை செய்திகளுக்குப் பின்னாலும் ஒரு சுயநலம் மறைந்திருக்கிறது. தான் யோக்கியன் போல காட்டிக் கொள்வதற்கு, அடுத்தவனை அயோக்கியன் என்று பெயின்ட் அடித்து விட்டாலே போதும் என்ற முட்டாள்தனத்தை எத்தனைநாள் சகித்துக் கொள்ளப்போகிறோம்?

"தங்கள் பொருளை விற்பனை செய்வதற்குப் போட்டியாளரின் தயாரிப்பில் அதிருப்தி அல்லது சந்தேகத்தை எழுப்புகிற உத்தி......." இந்த அபத்தமான உத்தி பற்றிப் புரிந்துகொள்ள பிராண்டுகள், பிராண்ட் இமேஜ் பற்றி எழுதிய முந்தைய பதிவு ஒன்று இங்கே

முக்கியமான முதல் செய்தி, அதுவே கடைசிச்செய்தியின் கருவாகவும் இருக்கிறது. இங்கே நம்முடைய அரசியல் வாதிகள், அரசு இயந்திரம் எதுவானாலும் சரி, ஓங்கி ஒரு கொட்டு  வைத்தால் ஒழிய, எந்த ஒரு விஷயத்திலும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதில்லை. இப்படி ஒவ்வொரு  விஷயமாக எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்காகவும் கொட்டுவதை விட, வருகிற தேர்தலில் வைக்கிற கொட்டு கொஞ்சம் பலமாக, இன்னும் கொஞ்ச நாள் நீடித்திருப்பதாக இருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

எல்லோருமே அயோக்கியன் தான், அதனால் எவனுக்கும் என் ஒட்டு இல்லை என்று சொல்ல வேண்டாம்! இப்போது தவறு செய்து கொண்டிருக்கும் தரப்புக்கு ஓங்கி ஒரு கொட்டு வையுங்கள்!தவறுகளைத் தொடர்ந்து செய்ய, நீங்கள் அளிக்கும் லைசன்சாக உங்கள் வாக்குகளை அரசியல்வாதிகள் எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்காதீர்கள்!

அடுத்ததாக, இந்திய அரசியலில் எந்த ஒரு தேர்தலிலுமே பிரதானமாக இரண்டே அணிகள் தான் மோதுகின்றன. மூன்றாவதாக, நான்காவதாக என்று நீங்கள் உங்கள் சாய்சைத் தேர்ந்தெடுத்தால், அது இப்போது ஆளும் தரப்புக்கு சாதகமாக மட்டுமே ஆகிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம். அதனால், மூன்றாவது அணி, சாய்ஸ் என்று இல்லாத பிள்ளைக்குப் பெயர் வைத்து உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள்!

காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் தூக்கி எறிவதில் தான் இந்த தேசத்தின்விடிவுகாலம் இருக்கிறது!

என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!


2 comments:

 1. எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த கன்றாவிகளை எல்லாம் படித்து விட்டு அலசி ஆராய உங்களுக்கு டயம் இருக்கிறதே!
  மாறு பட்ட பதிவு. ஆனால் யாருக்கும் புரியபோவதில்லை. இங்கே எல்லாம் மங்குனி களாகவே இருகிறதே!!:)))

  ReplyDelete
 2. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை, மாணிக்கம்!

  மாணவனாக இருந்த நாட்களிலேயே அரசியல் ஆர்வம் கிளப்பிவிடப்பட்டதாலோ என்னவோ, இது வழக்கமான, தெரிந்த கண்ணராவி தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியவில்லை.

  அப்புறம் அந்த அலசி ஆராய்கிற.....! அதற்கெல்லாம், அவசியமே இல்லாமல் ஈயமும் பித்தளையுமாக ஒவ்வொரு கட்சியும் மற்றதைப்பார்த்து இளித்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது கூடத் தேவையா என்ன! கோட்டை, கொத்தளம்,கூட்டணி என்று எதுவுமே நிரந்தரமில்லை என்பதைக் காட்டுகிற தேர்தல் கூத்து இது.

  தேர்தல்களை விட, தேர்தல் முறையில் உள்ள குறைகள்,அதைக் களைவதற்காக தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் முன்வைத்த சில கருத்துக்கள், இவற்றை அடியொற்றியே எழுதுவது தான் இந்தப்பதிவுகளின் உண்மையான நோக்கம்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!