அவரை விதைத்துத் துவரை விளையுமா...?


நிறையத் தருணங்களில் நாம் சொல்ல விரும்புவதை, சரியான வார்த்தைகளில் எல்லோருக்கும் தெளிவாகப் புரியும்படி சொல்ல முடிவதில்லை என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

விளைவு? 

அந்த மாதிரித் தருணங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறோம். நாம் சொல்ல நினைத்தது ஒன்றாகவும், சொன்னது வேறொன்றாகவும் ஆகிப் போய் விடுகிறது. நம்முடைய விமரிசனங்கள், அசைவுகள், செய்கை எல்லாமே ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்கப் படுவதாகக் கூட சமயங்களில் ஆகி விடுகிறது.

நமது  நம்பிக்கைக்கு உரியவராக, நெருங்கியவராகக் கருதும் ஒருவரிடம் இருந்து இத்தகைய தெளிவற்ற சிக்னல்கள் கிடைத்தால், இங்கே நீதி மன்றங்களில் சந்தேகத்தின் பலனைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளிப்பது போல, " ச்சே!   அவர் அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்க மாட்டார்!" என்று தள்ளி விடுகிறோம். இதுவே, அதிகப் பரிச்சயமோ, நெருக்கமோ இல்லாதவரிடமிருந்து வந்திருந்தால்.......?

ஒரு ஆதாரமற்ற, பரந்த மின்வெளி! இங்கே மின்னெழுத்துக்களால் எங்கெங்கோ இருப்பவரோடும் தொடர்பு கொள்ள முடிகிறது! முகம் தெரியாதவர் கூட, நம்முடைய எழுத்தைப் படித்து விட்டு, தொடர்ச்சியாக ஒரு நான்கு பின்னூட்டம் எழுதியிருந்தால், உடனே அவர் மாப்பு, மச்சி, அண்ணே, தல என்று நெருங்கிய உறவாகி விடுகிறார்.


ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், நாம் நம்முடைய கொள்கையை ஊன்றிப் பிடிக்கிறேன், தாங்கிப் பிடிக்கிறேன் என்ற நினைப்பில், அதை அடுத்தவர் எப்படி எடுத்துக் கொள்கிறார் என்பதைக் கூடச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அவருடைய இடத்தில் போய்க் கொள்கைப் பிரகடனம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்! என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

உதாரணத்துக்கு, இது என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிற இடம். பகிர்ந்து கொண்ட ஒன்றில், உங்களுக்கு ஒரு மாறுபட்ட கருத்து இருந்தால், அதை மிக நளினமாக, நாசூக்காக, இது என்னுடைய கருத்து, உங்களிடமிருந்து இன்ன இடத்தில் இன்ன விதத்தில் வேறுபடுகிறேன் என்று சொல்ல முடியுமானால், மாறுபட்ட கருத்துக்கள் பக்கம் பக்கமாக இருக்க முடியும்!

மாறுபட்ட எண்ணங்களே அப்படி ஒன்றோடொன்று இசைந்திருக்க முடியும் என்றால், மனிதர்களால் முடியாதா?


இப்போது, முதலில் பார்த்தோம் அல்லவா!, நமக்கு மிகவும் வேண்டியவராக இருந்து, ஒரு மாதிரித் தெளிவில்லாத பேச்சை பேசினாலும் கூட, எப்படி அவர் ரொம்ப நல்லவராயிற்றே, அவர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று சந்தேகத்தின் பலனைக் கொடுத்து, அவரிடம், இயல்பாகப் பழக முடிவது போலவே, ஏன் நம்மால் இரண்டாவதாகச் சொல்லப் பட்ட நபர்களிடமும் இயல்பாகப் பழக முடிவதில்லை?

முதல் காரணம், நாம் அதற்கு முயற்சி செய்வதில்லை! அடுத்து, அவர் தவறாகவே பேசியிருந்தாலும், அதைப் பெரும்போக்காக எடுத்துக் கொண்டு, கசப்பை வளர்க்காமல் இருக்க முயற்சி செய்வது. பல சமயங்களில், நாம் அதையும் முயற்சிப்பதில்லை!

அப்புறம் எப்படி நல்லெண்ணம் பரவும்? அதற்கும் நம்முடைய முயற்சி அவசியம் இல்லையா?

வெங்கட் தாயுமானவன் என்ற இளம் எழுத்தாளர், உதவி இயக்குனர், இப்போது உயிருடன் இல்லை, மின்தமிழ் கூகிள் அலை குழுமத்தில் ஒரு விவாத இழையை ஆரம்பித்து எழுதி வந்தார்.அதில் ஒருவர், கொஞ்சம் கடினமான வார்த்தையை உபயோகித்து விட்டார். விவாத இழை கொஞ்சம் திசை. மாறிப் போயிற்று. தான் செய்யாத தவறுக்காக, இந்த இளம் எழுத்தாளர் மனம் நொந்து, நான் ஏதாவது தவறு செய்து விட்டேனோ, தவறாகப் புரிந்துகொள்ளப் படுவதுபோல எழுதிவிட்டேனோ என்று மறுகினார்.

மின்தமிழ் வலைக் குழுமத்தை நிர்வகித்து வரும் முனைவர் நா.கண்ணன் அவரை, இப்படி  வார்த்தைகளில் தேற்றியதை  ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன். இன்னொரு தரமும், இந்த விஷயத்திற்கு மிகப் பொருத்தமாக இருப்பதால், பார்ப்பது தவறில்லை என்றே நினைக்கிறேன்.

"மின்மடலாடல் என்பது ஒரு கலை. இங்கு தோன்றும் ஒவ்வொரு எழுத்தும் நம்மைநேரடியாக தாக்குபவை என்று கொண்டால் நிற்கவே முடியாது. அவைமினெழுத்துக்கள். மிக மெல்லியவை. அது போல உங்கள் இதயத்தையும் பஞ்சு போல் வைத்திருந்தால் தாக்கமே தெரியாது. ஈகோவை கல்லாக்கி வைத்திருப்பவர்களின் பதில்கள்தான் கல்லில் எறிந்த பந்து போல் வீரியமாக திரும்பிவரும். அதன்வேகத்திலிருந்து குணாதிசயம் புலப்படும். இதைக்கூட எதற்கு சொல்கிறேன் என்றால் இணையம் மனிதக் கண்ணாடி என்று காட்டத்தான். நீங்கள் கவிஞர் புரியும் என்று எண்ணுகிறேன்.”

.........................

“தி.வா, கண்ணன் நடராஜன் சொல்வதை நானும் வழிமொழிகிறேன். நாம் வீசும் சொல் எங்கு போய் எப்படித்திரும்பும் என்று சொல்லவே முடியாது. நாம் ஏதோ சத்தோரி அடைந்துவிட்டது போல் எழுதுவோம். ஒரு சின்ன :-) குறிகூட தோன்றாது. சும்மா எழுதின 'ஏதோ', பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும். புயல், டொர்னேடோ இவைகளை ஆராயும் விஞ்ஞானிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். ஏதோ சின்ன தூசு எங்கோ, ஒரு சூபர் நோவாவிற்குக் கருவாக இருக்கும்.”


முனைவர் நா.கண்ணன், சமீபத்தில், ஒரு விவாதக் களத்தில் வருத்தப்பட்ட ஒருவருக்கு எழுதிய பண்பட்ட வார்த்தைகள் இவை. காயத்திற்கு மருந்தாகவும், அதே சமயம் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்து கொள்வதாகவும் இருக்கும் இந்த வார்த்தைகள், அண்மையில் நான் படித்தவற்றுள், மிக நளினமானவை. நாகரீகமாகவும், பயன் படுவதாகவும் உள்ள எழுத்து."

சொன் ஃபில்! நல்லெண்ணங்களை விதைத்தல்!


இணையத்தில் புற்றுநோய் போல பரவி வரும் வன்முறை, கடுமையான வார்த்தைகளில் பின்னூட்டங்கள், சச்சரவு இவைகளினால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி நவம்பரில் எழுதிய பதிவு இது!

சொன் ஃபில் இயக்கத்தைப் பற்றி ஒரு சின்ன அறிமுகத்தை இங்கே பாருங்கள்! 2009 முடியும் தருவாய் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது வரை எப்படிப் போயிருந்தாலும் சரி, பிறக்கப் போகிற புத்தாண்டிலாவது நல்லெண்ணங்களை விதைக்கும், உற்சாகப் படுத்தும் பதிவுகளைப் பார்க்க முடிகிற இடமாக, தமிழ் வலைப்பதிவுலகமும் மாற வேண்டும் என்கிறவேண்டுகோளோடு!

1. Basic Concept of Sunfull

'Sunfull' means positive comments. It also means posting encouraging comments on the vicious posts to comfort the writer of original articles. It includes good words and deeds on the Web, stemming from a good heart and soul.

The Sunfull Movement aims to increase awareness of the impact that anonymous derogatory messages have on victims, although healthy criticism is sometimes necessary. Also, it aims to increase the practice of posting positive and encouraging messages on boards to change users' approach to online communications. Positive comments include posts that are: (1) complimentary, (2) encouraging, (3) comforting, (4) thankful, (5) apologetic and (6) forgiving.

2. The Background of Sunfull Movement: Chuimsae Movement

The Sunfull Movement is a social campaign to encourage people to take a harmonious approach to each other. It emphasizes that a positive comment will make the person who wrote it even happier rather than the writer of original article. People who write positive comments for others become happier than the people who receive them. It also teaches that people who bless others are blessed. In fact, it stems from the Chuimsae Movement.

The word, Chuimsae, is derived from an expression used by drummers to encourage singers, as well as to arouse the audience in the Korean traditional form of opera called "Pansori." It is equivalent to "There you go!" or "Attaboy!" The Chuimsae Movement also stresses that people should support others rather than stand in their way. The Sunfull Movement is an online version of the Chuimsae Movement which usually focuses on field-oriented activities.

'Chuimsae' is a Korean call of encouragement, used in a Korean traditional music form called Pansori (a traditional form of opera) where it is used by the drummer to express "Ulsoo", or "Cho-ta" to encourage the singer and arouse the audience."


முழுச் செய்தியையும் படிக்க, இங்கே.

இன்னொரு செய்தி இங்கே




11 comments:

  1. நல்ல கருத்துக்கள். பதிவுலக ஆரம்பத்தில் நானும் இதுபோல கவலைப் பட்டேன். பின்னர் இது அவரின் கருத்து என தெளிந்தேன். மனச்சமாதானம் என்பது நாம் நமக்கு ஏற்ப்படுத்திக் கொள்ளும் மருந்து. நம் மீது தவறு இருப்பின் வெட்கமின்றி ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கோட்டு, நம்மை திருத்திக்கொள்வது நம்மை வளர்க்கும். நம் மீது தவறு இல்லாமல் எழும் விமர்சனங்களைக் கண்டு புலம்பாமல், இது அவரின் கருத்து என ஒதுங்கி விடுவது சிறப்பு. நல்ல பதிவு. அனுபவம் மிக்க வார்த்தைகள் நன்றி.

    ReplyDelete
  2. இந்த விஷயத்தில், என் மனதில் பட்ட சில பொதுவான விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா! இந்தப் பதிவும், இதற்கு முந்தைய மூன்று பதிவுகளும் சில அனுபவங்களைத் தந்திருக்கின்றன. அந்த அனுபவங்களில் இருந்து நான் கற்றுக் கொள்ளக் கூடியது என்ன என்பதைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்!

    இதை உங்களுக்கோ எனக்கோ அறிமுகமான பதிவரைத் தொட்டுச் சொல்லும் விஷயம் என்று எடுத்துக் கொள்ளாமல், சொல்லப் பட்டிருக்கும் விஷயத்தில் இருப்பதை மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். பதிவின் இறுதியில், கொரியாவில், தொடங்கியிருக்கும், இணைய வன்முறை, மனம் சோர்ந்துபோக வைக்கிற பின்னூட்டங்கள், தனிநபர் தாக்குதல்களைக் குறித்துக் கவலையோடு தொடங்கியிருக்கும் சொன்ஃபில் இயக்கத்தைக் குறித்த செய்திகளை, சுட்டியில் படித்துப்பாருங்கள்.

    ReplyDelete
  3. மௌலி! என்ன இது!

    வகுப்பறையில் பிள்ளைகள் அட்டெண்டன்ஸ் அல்லது ப்ராக்சி கொடுக்கிற மாதிரி:-))

    ReplyDelete
  4. அனுபவ வரிகள்.
    நீங்கள் சுட்டிய இடத்தை சொடுக்கியதும் மால்வேர் பயமுறுத்தியதும் ஓடி வந்து விட்டேன்...!
    நான் பேசும்போதும் எழுதும்போதும் மிகக் கவனமாகவே இருப்பேன்...மற்றவர்கள் பேசுவதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டிருக்கிறேன்...இனியும் கடவுள் அந்த வரத்தை எனக்கு அருளட்டும்.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்!

    இந்தப்பதிவில் நான்கு சுட்டிகள் இருக்கின்றன. முதல் இரண்டும் இந்தப்பக்கங்களில் முன்னம் எழுதியது. கடைசி இரண்டு தான் வெளி லிங்குகள். இங்கே நன் சோதித்துப் பார்த்ததில், இரண்டிலுமே எந்த மால்வேர் எச்சரிக்கையுமே வரவில்லை. செய்தி பக்கங்கள் சரியாக லோட் ஆகின்றன. எது என்று, என்ன எச்சரிக்கை செய்தி என்பதை எழுதினால், மறுபடி சோதித்துப் பார்க்க உதவியாக இருக்கும்.

    கூகிள் ஆண்டவரை sunfull என்ற வார்த்தையைத் தேடச் சொல்லுங்கள். இன்னும் அதிகக் குறிப்புக்கள், விவரங்கள் கிடைக்கும்.

    முந்தைய பின்னூட்டத்தில் மதுரையில் வாசகர் வட்டம் மாதிரி ஒன்றைக் குறிப்பிட்டிருந்தீர்கள். மேல் விவரங்கள் தர முடியுமா?

    ReplyDelete
  6. லயன்ஸ் அரவிந்த் கட்டிடத்தில் சூரியநாராயணன் என்ற ஆடிட்டரால் நடத்தப் படுவது. சமீபத்தில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூட சிறப்பு விருந்தினராக வந்து வலைப் பதிவுக் குறும்படங்கள் பற்றிப் பேசியதாகச் சொன்னார்கள்.அடுத்த சந்திப்பு வருகின்ற 27 - 12 - 09 அன்று. அரவிந்த் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த கட்டிடம். உறுப்பினராகச் சேரலாம். ஆறு மாத உறுப்பினர் சந்தா நூறு ரூபாய் என்று அறிகிறேன்.திரு சூரியநாராயணன் அவர்களின் அலைபேசி நம்பர் 9443341623

    கடைசி இரண்டு லிங்குகளும் தான் பயமுறுத்தின. எனக்கு இன்னமும் கூட ஊடகன் உண்மைத்தமிழன் வலைப் பக்கங்களை அணுக முடியவில்லை. என் கணினிதான் பலவீனமோ என்னவோ.....

    ReplyDelete
  7. நீங்கள் முயற்சித்துப் பார்த்தது கொரியன் ஹெரால்ட் பத்திரிகையில் வந்திருந்த செய்தி, மேலே கொரிய மொழியில் பானர் இருப்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Firefox aad on ஆக WOT web of trust என்ற நிரல் கிடைக்கிறது.அதையும், நல்ல ஆண்டி வைரஸ் மென்பொருளையும் வைத்துப் பார்க்கலாமே!

    உண்மைத்தமிழன் புதிய பயனர் கணக்கைத் துவங்கி, அதே பெயரில் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார். பழைய தளம், கூகிள் ஆண்டவர் மனது வைத்தால், மூன்று மாதங்களுக்குள் முள்ளுமுனை நொறுங்காமல் திரும்பக் கிடைத்து விடும் என்றும் தனது பதிவில்எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  8. இப்போது ஊடகனுடைய வலைப்பக்கங்களையும் பார்த்தேன் ஸ்ரீராம்! WOT நிறுவினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரவுசர் popup இல் இன்னொரு தளத்தை திறக்கிறது. இந்த நிரலி அதை ஒரு எச்சரிக்கைச் செய்தியோடு லோட் ஆகாமல் நிறுத்திவிடுவதையும் பார்த்தேன். உங்களுடைய பிரவுசர் செட்டிங்கில் பாப் அப் ஆக வருவதை மாற்றிப்பாருங்கள்!

    ReplyDelete
  9. கண்ணன் ஐயா சொன்னதை எப்படியோ படிக்காமல் விட்டிருக்கிறேன். இந்த இடுகையில் அதனையும் மற்ற நல்ல விசயங்களையும் படிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  10. அட..ஆச்சரியமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!

    உங்களைப்போலவே நானும் சிந்தித்திருக்கிறேனே!

    மிக அழகாக, நேர்த்தியாக தொகுத்துக்கூறியிருக்கிறீர்கள்!

    மிக்க நன்றி சார்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!