துப்பில்லாத ஜனங்களுக்குக் கிடைப்பது இது தான்!



தொடர்ந்து அரசியலைப் பற்றியே பதிவெழுதிக் கொண்டிருப்பதில் வெறுத்துப்போய், வேறு உருப்படியான வேலை, படிப்பதைப் பார்க்கப் போகலாம் என்று தான் இருந்தேன்.

ன்றைக்கு சேத் கோடின் மார்கெடிங் துறையைப் பற்றி எழுதிய பதிவொன்றின் முதல் வரி இது:

"People who don't care, selling products to people who care less."

துப்புக் கெட்டவர்களிடமிருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் துப்பில்லாத ஜனங்களுக்குக் கிடைப்பது இது தான்!

பானா சீனாவின் பேட்டியை ஊடகங்களில் படித்த போது சேத் கோடின் மார்கெடிங் துறையைப் பற்றிச் சொல்லியிருந்த வாக்கியம் இப்படித்தான் நினைக்கத் தூண்டியது.  

டகங்களில் போபால் தீர்ப்பும், காங்கிரஸ் அரசின்  மெத்தனமும் கிழி கிழியென்று கிழித்துத் தோரணம் கட்டிச் சிவப்புச் சேலைகளாகத் தொங்க விடப் பட்டுக் கொண்டிருப்பதில், ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 இற்குத் திடீர் சுரணை, சுறுசுறுப்பு வந்து விட்ட மாதிரிக் காட்டிக் கொள்வதற்காக அமைச்சரவைக் குழு அதிக நிவாரணத்தைப் பரிந்துரை செய்திருப்பதைக் கண்டனூர் பானா சீனா 
இன்னமும் மூன்று நாட்கள் அவகாசம் இருந்தும் முன்னாலேயே செய்தியாளர்களிடம் வெளியிட்டிருக்கிறார்.  

னால் அதன் பின்னணிப் பூனைக் குட்டியும் ஊடகங்களில் உடனேயே வெளியே வந்து விட்டதுதான் பரிதாபம்!

நாளைக்கு வாஷிங்டனில் கூடவிருக்கும் இந்திய -அமெரிக்கத்  தொழில் துறை தலைமை நிர்வாகிகளின் கூட்டத்தில் இந்திய அரசு அமெரிக்க மூலதனத்துக்கு எந்த விதத்திலும் இடைஞ்சல், சுமையைத் தராது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிற மாதிரித் தான், இந்த நிவாரணக் கண்துடைப்பு நாடகம் இருக்கிறது. 


த்தன் டாட்டாவின் தலைமையில் பன்னிரண்டு தலைமை நிர்வாகிகள், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

செத்தவர்களுக்குப் பத்து லட்சம், முழுமையாக
ஊனம் அடைந்தவர்களுக்கு ஐந்து லட்சம், அரைகுறை ஊனமுற்றவர்களுக்கு மூன்று லட்சம் என்று நிவாரணம் வழங்க அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.  ராஜீவ் காந்தி போபால் விஷ வாயுக் கசிவு விவகாரத்தில்  எந்த விதத்திலும் சம்பந்தப்படவே இல்லை என்று  சான்றிதழும் கொடுத்திருக்கிறது.  

மைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது ராஜீவ் காந்திக்கு மட்டும் இல்லை போல இருக்கிறது!
 

தாயாருடைய மரணத்துக்குப் பழிதீர்ப்பதுபோல டில்லியிலும் சுற்றுப் புறங்களிலும் அதே நேரம் சீக்கிய மக்கள் பலியாகிக் கொண்டிருந்ததை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்ட ஒரு பிரதமர், போபால் மக்களுக்கு என்ன ஆறுதல் சொன்னார், என்ன நிவாரணம் வழங்க முயற்சித்தார்? 

தையாவது நேர்மையாக நெஞ்சைத் தொட்டு எந்தக் காங்கிரஸ் காரராவது சொல்ல முடிகிறதா? அர்ஜுன் சிங், செத்துப் போன நரசிம்ம ராவ், இன்னும் பலர் மீது பழியைத் தள்ளிவிட்டு, ராஜீவ் காந்தி மட்டும் உத்தமர், இதெல்லாம் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதிக்க வேண்டிய அவசியம் என்ன? ராஜீவ் காந்தி பேர் சந்திக்கு வருகிறது என்றவுடனேயே அமைச்சரவைக் குழு அமைக்கப் பட்டு, நிவாரண அறிவிப்பு உடனே வருகிறதே, இதை ஏன் இருபத்தாறு ஆண்டுகளில் எந்த ஒரு தருணத்திலும் செய்ய காங்கிரஸ் ஆட்சியினால் முடியவில்லை?

து போக, நிவாரணம் எதில் இருந்து கொடுக்கிறார்கள் என்று பார்த்தால், இந்திய அரசு வரியாக வசூலிக்கும் பணத்தில் இருந்து தானாம்! செத்ததற்கு நிவாரணம் கொடுப்பது மத்திய அரசின் பொறுப்பாம்! போபால் யூனியன் கார்பைட்
ஆலை வளாகத்தில் கொட்டிக் கிடக்கும் நஞ்சுக் கழிவை அகற்றும் பொறுப்பு மத்தியப் பிரதேச மாநில அரசை சேர்ந்ததாம்! வருகிற இருபத்தைந்தாம் தேதி, அமைச்சரவைக் கூட்டத்தை இது விஷயமாகக் கூட்ட இருப்பதாகவும் பானா சீனா தெரிவித்திருக்கிறார்.

ண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்று எங்கும் எதிலும் ஊழல் செய்து சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைப் பறிமுதல் செய்து, அதில் இருந்து நிவாரணம் கொடுத்திருந்தால் கூடப் போகிறது என்று சொல்லலாம்! உங்கள் சட்டைப் பையில் இருந்தே பிக்பாக்கெட் அடிக்கிற மாதிரி வரி வசூல் செய்து, அதில் கொஞ்சம் ஊழல் போகக் கிள்ளி எடுத்து  உங்களுக்கே நிவாரணமாகக் கொடுப்பது என்றால்.....? பானா சீனா உள்ளிட்ட அமைச்சரவைக் குழு செய்திருக்கும் வேலை அதுதான்!

ழிசடைக் காங்கிரஸ் அதைவிடக் கடையழிந்த கட்சிகளோடு  கூட்டணி சேர்ந்து நடத்தும் குழப்பமான இந்த அரசிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்க முடியாதுதான்! 


சொந்த ஜனங்களை நொந்து சாகவிட்டு,வெள்ளைத் துரைமாருக்கு அடிமைச் சேவகம் செய்கிற குணம் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இன்னமும் இருப்பது கேவலமாகக் கூட அவர்களுக்குத் தான் தெரியவில்லை!

டி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிற ஜனங்களுக்குமா இன்னமும் தெரிந்து கொள்ள முடியவில்லை?

வர்கள் நடத்துகிற அரசியல் கூத்துக்கள், தமிழ் சினிமாவில் வரும் நாட்டாமைகள் சொல்கிற தீர்ப்பு மாதிரியே இருப்பது தான் பெரும் கொடுமை! கற்பழித்துச் சீரழித்துவிட்டான் என்று விசாரணை செய்ய வந்தவர்கள், வெறும் ஆயிரமோ, இரண்டாயிரமோ தண்டம் கட்டி விட்டுப் போ என்று சொல்கிற மாதிரிக் கூட இல்லை! நீ பத்திரமாகப் போய்ச் சேர், தண்டத்தை  நாங்களே கட்டிக் கொள்கிறோம் என்று சொல்கிற மாதிரிக் கேவலத்தைத் தான் கண்டனூர் பானா சீனா, இன்றைக்கு செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ப்படிக் கடையழிந்த காங்கிரஸ் அரசு அணு உலை விபத்து நட்ட ஈடு வரையறை செய்யும் மசோதாவிலும் இந்த மாதிரித் தான் எவனோ வந்து இந்த தேசத்தை சீரழித்து விட்டுப் போவானாம், அவனை ஒன்றுமே செய்யக் கூடாதாம், கட்டுப்படுத்தவோ, நட்டத்தை ஈடு செய்யச் சொல்லிக் கேட்கவோ முடியாதாம்!எல்லாவற்றையும் ஜனங்கள் தலையிலேயே கட்ட முயற்சிக்கிற அயோக்கியத்தனம் அடுத்து, தலைக்குமேல் கத்தி தொங்குவது போல ஒரு சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.


மெரிக்காவில், இதே யூனியன் கார்பைட் தனது ஊழியர்கள் நச்சுத் தன்மை கொண்ட வேதியியல் பொருட்களால் பாதிக்கப் பட்டபோது வழங்கிய ஈட்டுத் தொகை இரண்டாயிரத்து இருநூறு கோடி டாலர்கள்!  அங்கே உயிர்ச் சேதமோ, போபாலில் நடந்த மாதிரிப் பேரழிவோ இல்லை.

ந்திய உயிர்கள்  அவ்வளவு கேவலமா? அமெரிக்க உயிரை விட இந்திய உயிர் எந்த விதத்தில் தாழ்ந்து போய்விட்டது?




தற்கான ஒரே பதில், துப்புக் கெட்டவர்களை ஆட்சியில் அமர்த்திய ஒரே குற்றத்திற்காக இந்திய மக்கள் சர்வதேச அரங்கில் கேவலப் படுத்தப்பட்டு வருகிறோம். வெள்ளைத் துரைமாருக்குத் தலை வணங்கும் அடிமைகளுக்கு, நாம் அடிமைகளாக ஆக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

விடுதலை நம் கைகளில் மட்டுமே இருக்கிறது! துப்புக் கெட்ட
அரசியல்வாதிகளிடம் நம்முடைய விடுதலையையும் தொலைத்து விட்ட துப்புக் கெட்டவர்களாக ஆகிவிடாமல் பாதுகாத்துக் கொள்வதும் நம்மிடமே இருக்கிறது.

ன்ன சொல்கிறீர்கள்?

ன்ன செய்யப் போகிறீர்கள்?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்கள்!






8 comments:

  1. என்ன சொல்றது, அதான் அடுத்து ஒரு ஒப்பந்தம் மூலம் மொத்த இந்தியாவையும் சுடுகாடாக்க திட்டம் தீட்டிடாங்களே!

    ReplyDelete
  2. not only india- who ever depends america, like this only will happen.
    america will make boneless politicians.

    why ?

    they need big market .

    arms sales , consumer products , american partners in well going companies, like that.

    they will bother their people only.

    let us create awareness to people.

    they will WAKE -UP ONE DAY

    ReplyDelete
  3. வால்ஸ்!

    ஜனங்கள் இடம் கொடுத்ததால் தானே தலையை மொட்டையடிக்கிறார்கள் என்ற கேள்வியை தொடர்ந்து இந்தப் பக்கங்களில் எழுப்பிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏன் இடம் கொடுக்கிறீர்கள், அல்லது எப்படி நீங்களும் உங்களுக்கு வேண்டியவர்களும் மொட்டையடிக்க முனைகிறவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்!

    வாருங்கள் திரு.பாலு!

    தொழில்மயமான எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் சந்தைகள் தேவைப்படுகிறது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு சந்தையும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பது சீன அனுபவத்தில் மிக விரிவாகவே பார்க்க முடியும்.

    "சீனாவின் உள்ளூர்மயமாக்கப் பட்ட கம்யூனிசம், கலாச்சாரப் புரட்சி என்று சொந்த மக்களையே லட்சக் கணக்கில் கொன்று குவித்தது, மார்க்சீய தத்துவம், சோஷலிசம் எல்லாம் இப்போது எங்கே போனது என்றே எவருக்கும் தெரியவில்லை. ஒரு உறுதியான தத்துவம், கொள்கைப் பிடிப்பில் அங்கே கம்யூனிசம் எவரிடத்திலும் இல்லை. அதைப் பற்றி அங்கே எவரும் கவலைப்படுவதாகக் கூடத் தெரியவில்லை!

    ஆனால் டெங் சியாவோ பிங், காலத்திற்கேற்ற மாதிரி வரட்டுத் தத்துவம் பேசிக் கொண்டிருந்தால் மக்களுக்குச் சோறு கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு செய்த சீர்திருத்தங்கள், தங்களுடைய நாட்டு நலனை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காமல், அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்குக் கதவைத் திறந்து விட்டதும், வேலை வாய்ப்புக்களைப் பெருக்கியதும், சீனாவை இன்றைக்கு வலிமையான அரசாக மட்டும் அல்ல, வலிமையான பொருளாதார சக்தியாகவும் உயர்த்தியிருக்கிறது."

    முப்பதே வருடங்களில், சீனா அமெரிக்கப் பூச்சாண்டியைப் புறந்தள்ளிவிட்டு, தானே பெரிய பூச்சாண்டியாக உருவாகியிருக்கும் சூழ்நிலையை இந்தப் பக்கங்களில், சீனா அறுபது, சீனப் பூச்சாண்டி என்ற குறியீட்டுச் சொல்லில் தேடினீர்களானால் கொஞ்சம் அதிகப் படியான விவரங்களைப் பார்க்கலாம்! சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது என்பதை பல இடங்களிலும் சொல்லியிருக்கிறேன்.

    காங்கிரஸ்காரர்கள் அப்படி முதுகெலும்போடு நிமிர்ந்து நிற்க முடியாமல், துரைசானிமாருக்கு முன்னால் மண்டியிட்டு நிற்க வேண்டிய நிர்பந்தம் எங்கிருந்து எப்போதிலிருந்து ஆரம்பித்தது, ஏன் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!

    பிரச்சினைக்கான தீர்வு, காங்கிரசைத் தூக்கி எறிவதில் இருந்து ஆரம்பிக்கிறது!

    ReplyDelete
  4. இலங்கை தமிழர்களுக்காக் அப்ந்த் என்ற பெயரில் ஆளுங்கட்சி செய்த கூத்தின் போது குறுந்தகவல் வழியாக 200 பேருக்கு அரசின் கேலிக்கூத்தை விளங்கசெய்தேன், இம்முறை களப்பணியில் இறங்கலாம் என உத்தேசம்!, இனி வரும் தேர்தல் மட்டுமல்லாது எந்த தேர்தலிலும் ஈரோட்டில் காங்கிரஸிற்கு வாய்ப்பில்லை!.

    ReplyDelete
  5. At the end of this article you asked many questions....for this can we have any democratic soulutions?...all the parties in India is shaking hands with USA & UK (who ruled us for more than 200 yesrs). Hence we can have these questions as remain questions only and no answers. for the questions what you asked should have been asked by the Bhopal people who still look @ central govt.(which is ruled by Congress). Everybody knows that we need change but nobody wants to be the change. This is the situation in our country.

    ReplyDelete
  6. வால்ஸ்!

    நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் களப்பணி ஒரு சிறு ஆரம்பம் தான்! பிரச்சினையின் உண்மையான தன்மையை ஜனங்களுக்கு விளங்கிக் கொள்கிறமாதிரி எடுத்துச் செல்வதே, காங்கிரஸ் கழுதை போய், ஒரு பிஜேபி கழுதை வந்தாலும் தடுத்து நிறுத்துகிறமாதிரியான வலிமையை உருவாக்கும்.

    மதுரைக்காரத் தம்பி!

    முதல் முறையாக இந்தப் பக்கங்களுக்கு வருகிறீர்கள் போல! இந்தப் பதிவின் கடைசியில் எழுப்பியிருக்கும் ஏராளமான கேள்விகள் புதிதல்ல. ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் தொடர்ந்து எழுப்பப் பட்டுக் கொண்டிருப்பவை தான். ஜனநாயக ரீதியாகவே தீர்க்கப் படக் கூடியவைதான்!

    முதல் தேவை Winner takes all என்ற பிரிட்டிஷ் காரர்களிடமிருந்து சுவீகரித்துக் கொண்டிருக்கும் வெஸ்ட் மின்ஸ்டர் தேர்தல் முறையைக் கை கழுவிவிட்டு, ஒவ்வொரு கட்சியும் பெறுகிற வாக்கு விகிதத்துக்குத் தகுந்த மாதிரி உறுப்பினர்களை நாடாளுமன்றம்/சட்டமன்றத்துக்கு அனுப்புகிற மாதிரி ஒரு மாற்றம்.

    இரண்டாவதாக, வேலை செய்யாத, ஜனங்களுடைய எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய முடியாத பிரதிநிதிகளைத் திரும்பப் பெரும் உரிமை.

    மூன்றாவதும் முக்கியமானதுமான தேவை--ஒரு அட்டெண்டர் உத்தியோகத்துக்குக் கூடக் குறைந்தபட்சத் தகுதியை நிர்ணயிக்கிற மாதிரி, அரசியலில் ஈடுபடுகிரவர்களுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன், அடிப்படை சட்டம், அரசியல் சாசனம், மக்கள் பிரதிநிதிகளாகச் செயல் படுவதில் கொஞ்சம் பயிற்சி, அப்புறம் அறுபது அறுபத்தைந்து வயதுக்குமேல் பதவியில் இருக்க முடியாதென்று ஒய்வு, இரண்டு முறைக்கு மேல் அமைச்சராகவோ அதற்கும் மேலான பொறுப்பிலோ இருக்க முடியாது என்று வரம்பு விதிப்பது என்று தேர்தல் முறைகளில் கொஞ்சம் காலத்துக்குத் தகுந்த மாற்றங்கள்!

    கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்! முப்பத்துமூன்று வருடங்களுக்கு முன்னாள் தினமணி நாளிதழில் அதன் ஆசிரியர் திரு ஏ என் சிவராமன் அவர்கள், தேர்தல் முறையில் தேவைப்படும் சீர்திருத்தங்களைக் குறித்து ஒரு தொடராக எழுதி, பின்னால் அது தினமணி கதிர் வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

    போபால் துயரத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் பெரும்பாலோர் என்று இருந்தாலும் அரசு தொடர்ந்து அளித்துவரும் ஏமாற்றங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நினைக்கிற மாதிரி, அரசு சொல்வதை, அல்லது செய்வதை அப்படியே நம்பி விடுகிற ஏமாளிகளாக இல்லை. இணையத்தில் தேடினாலே, நிறையத் தகவல்கள் கிடைக்கிறது.

    ReplyDelete
  7. சவுக்கடி....சரிதான்!

    ஆனால் யாருக்கு என்பதைக் கொஞ்சம் யோசியுங்களேன்! கல்லுளி மங்கன் என்று தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்டு கையேந்துபவர்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    இங்கே அரசியல் கல்லுளிமங்கர்கள் ஜனங்களை சவுக்கால் அடித்துக் கொண்டே அதே நேரம் ஓட்டுக்காகக் கையேந்திப் பிச்சையும் எடுக்கிறார்கள். அடிவாங்கிக் கொண்டே ஜனங்களும் ஓட்டைப் போட்டு விடுகிறார்கள் என்பதாவது புரிகிறதா?!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!