ஆடாத ஆட்டமெல்லாம்.....? தேர்தல் வினோதங்கள் 2011!





ந்தர்ப்பக் கூட்டணி லட்சியக் கூட்டணியாக மலர்ந்ததில் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இருந்து சில முக்கியமான அம்சங்களைக் குமுதம் ரிப்போர்டரில் வெளிவருகிறதென்று நினைக்கிறேன், (குமுதம் வகையறாக்களைப் படிப்பதில்லை), பதிவர் நண்பர் உண்மைத் தமிழன்,  தன்னுடைய பதிவில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு வருகிறார். தாத்தாவிடம் கோபம் நிறையக் கொப்பளித்தாலும், ஆத்தாவுக்கு அப்படியே சப்போர்ட் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு, கொஞ்சம் அலுப்புடனே தான் எழுதுகிறார். மதிமுக வெளியேறிய போது, கெட்டது குடி என்று தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்த சென்னைப் பதிவர்களில் இவர் முதன்மையானவர்.

நீளமாக, பத்தி பத்தியாக எழுதுவதை விட, சில வலைப்பதிவர்கள் மிக நுணுக்கமாக இந்தத்தேர்தல் கூத்துக்களை, குரும்படங்கலாகத் தயாரித்து வெளியிட்டிருப்பதை இணையத்தில் பார்க்க முடிகிறது. ரியல்டுபுக்கு என்ற பெயரில் வலைப்பதிவர்நல்ல மெசேஜ் ஒன்றைத் தயாரித்து யூட்யூபில்  வலையேற்றம் செய்திருக்கிறார். பாருங்கள்!


"ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்குத்தெரியுமா?"

இந்தத் திரைப்படப்பாடல் வரிகளையே 2011 தேர்தல் கூத்தின் தத்துவமாக யுவசெந்தில்குமார் என்ற நண்பர் எடுத்து வைக்கிறார்!

எல்லாவற்றையும் விட குஜால்காரன் என்ற நண்பர் பழைய கவுண்டமணி ட்ராக் ஒன்றைத்தேடிஎடுத்து, ஓட்டு என்றால் என்ன என்று ஒரு ஓட்டு ஓட்டி விட்டு, "தேர்தலே வேண்டாம் பழையபடி மன்னராட்சி கொண்டு வந்து விடுவோம், நீ ராசா! நான் மந்திரி" என்று சொல்வதை வைத்து ஒரு போடு போட்டிருக்கிறார் பாருங்கள்!


கரடியாய்க் கத்துகிறேன், யாராவது காதில் வாங்கிக் கொள்கிறார்களா பாருங்கள் என்று சொல்வார்கள் இல்லையா? ஒரு கரடி கத்தினால் தானே கேட்கமாட்டார்கள், இரண்டாயிரம் கரடிகள் சேர்ந்து கத்தினால் கேட்காமல் போய்விடுமா என்று நினைத்தாரோ தெரியாது, கரடி 2000 என்ற பெயரில் ஒரு  நண்பர் தமிழருவி மணியனுடைய பேட்டியில் இருந்து ஒரு பகுதியை எடுத்துப் போட்டிருக்கிறார். இதில் நான் உடன் படுகிற ஒரு விஷயம், தேர்தல்களில் ஓட்டுப் போடுகிறவர்கள், இன்னார் வரவேண்டும் என்று ஓட்டுப் போடுவதை விட, இன்னார் வந்துவிடக் கூடாது என்று வாக்களிக்கிற ஒரு விசித்திரம்! தேர்தலை ஒரு வினோதமான கூத்தாகவும், இத்தனை கோளாறுகளுக்கு ஊற்றுக் கண்ணாகவும் இருப்பது இந்த நெகடிவ் மனப் பான்மைதான்!


நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு, இப்போதிருக்கும் தேர்தல் முறைகளில் இல்லை! தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதுதான் இந்தப்பக்கங்களில் மிக அவசியத்தேவையாகப் பல முறை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீர்திருத்தங்களை செய்ய வேண்டியவர்கள், செய்ய மாட்டார்கள் என்பதனால், "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ், ஊழலுக்கு மிகப்பெரிய பரிமாணத்தைக் கண்டு பிடித்தவர்களைப் பதவியில் இருந்து இறக்குவது  முதல் வேலை!

சரியான மாற்று என்று எவருமே களத்தில் இல்லாத நிலையில் சற்றுக் குறைவான கெடுதல் என்ற அளவில்  இரண்டாவது சாய்ஸ் இருக்கிறது அல்லவா, அவர்களைப் பதவியில் அமர்த்துவது அடுத்தது!இப்படிப்பதவிக்கு வருகிறவர்கள் தவறு செய்ய விடாமல் விழிப்போடு கண்காணிப்பதில் தான் ஜனங்களுடைய உண்மையான ஜனநாயகக் கடமை ஆரம்பிக்கிறது.

ஓட்டுப்போடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டது என்றிருக்காமல், சரியாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப்பெறுகிற உரிமைக்காகக் குரல் கொடுப்பது, தேர்தலில் போட்டியிட அரசியல் சாசனம், சட்டங்களில் குறைந்த பட்ச ஞானம் இருப்பதை அடிப்படைத் தகுதியாக்குவது, பெரிய பதவிகளில் ஒரு நபரே  இரண்டுமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப் படுவதைத் தடை செய்வது, மற்றத் துறைகளில் ஓய்வு பெறும் வயது இருப்பதுபோல, அரசியல் வாதிகளுக்கும்  அறுபத்தைந்து வயதுக்குமேல் கட்டாய ஓய்வு கொடுப்பது என்று சீர்திருத்தங்களுக்கான இயக்கம் வலிமை பெற வேண்டும்!

என்ன சொல்கிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



 

3 comments:

  1. ராமகிருஷ்ணன் என்ற பெயரில், தன்னைப்பற்றிய சிறு அறிமுகம் கூட செய்துகொள்ளாத ஒருவரிடம் இருந்து வந்த பின்னூட்டத்தை ஏற்பதற்கில்லை. ப்ரோபைலில் தங்களைப் பற்றிக் கொஞ்சமாவது அறிமுகம் செய்து கொள்ளாதவர்களையும் அனானிகளையும் ஒன்றாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! Sorry!

    ReplyDelete
  2. காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை, இன்றய நிதர்சன உண்மைகள்.

    ReplyDelete
  3. அய்யா, நாங்களெல்லாம் பெரிய அறிவு ஜீவிகள் இல்லை. எதோ இப்போதுதான் தத்துப்பித்துன்னு கூகுள் புண்ணியத்தில் டைப் அடிக்கவே கத்து கொண்டுள்ளோம். மேலும் பேஸ் புக், அது இதுன்கிரதேல்லாம் தெரியாம தவிசுகிட்டு இருக்கோம். என்னைப்போல பலர் இருக்கலாம்.அலுவலகம் முடிந்து வந்து சமூக அவலங்களுக்கெதிரான விழயங்களை படித்து அதன் பின் பின்னூட்டம் இடுவதே என்னை போன்ற சதாரனமானவர்களுக்கு பெரிய வேலை.ப்ரோபைலை பில் செய்வது பற்றி அறிய முயற்சி செய்கிறேன்.அதுவரை நான் அனானி யாகவே இருந்துவிட்டு போகிறேன்.மேலும் தங்கள் பிளாகை நேற்றுதான் முதல் முதலாக பார்ஹ்தேன்.அதை காப்பி செய்து மெயிலில் பத்து பேருக்கு மேலாக அனுப்பி வைத்தேன். அதுவே எனக்கு பெரிய வேலைதான்.ரொம்ப வேவேரவமானவனா இருந்திருந்தா நாங்களும் தொடர்ந்து இந்நேரம் பிளாக் எழுதியிருப்போம்ல .நீங்க பின்னோட்டம் பதியலன்னாலும் பரவாயில்லை.எங்கள் மாதிரி ஆளுங்களை சந்தேகபடுரமாதிரி புலம்பவிடாதிங்க.இட்லிவடையை பாலோ பண்ணுங்க.ஆபாசமா எழுதினா மட்டும்தான் (தட்ஸ் தமிழ் போல) வெளியிடமாட்டாங்க-ராமகிருஷ்ணன்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!