கொஞ்சம் செய்தி! கொஞ்சம் அரசியல்! இப்போது வாசிப்பில்!

நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர்  தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்குப் புரிகிற நாகரிகமான வார்த்தையிலேயே பிஜேபியின் சார்பில் பேசிவந்த கரு.நாகராஜன்  திருப்பிக் கொடுத்தது நான்கு நாட்களாகப் பற்றிக்கொண்டு எரிகிறது. காங்கிரசுக்கு வால் அறுந்தது போதாதென்று, கூட்டணியில் இருக்கிற அத்தனை கட்சிகளும் வாலை அறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கோபண்ணா ஒரு அறிக்கை விட்டிருப்பது  ஜோதிமணியையும் மிஞ்சுகிற  செம காமெடி! காங்கிரஸ்காரர்கள் என்றாலே கிறுக்கு  மாய்க்கான்கள் தான் என்பது D K  பரூவா காலத்திலிருந்தே தொடரும் விஷயம்தான்!

 
 
ஒருவிதத்தில் ஜோதிமணி பாவம் தான்! ஆனால் அவரை விட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த கரூர் தொகுதி மக்கள் மிகவும் பாவம் என்று எவருமே சொல்ல மாட்டேன் என்கிறார்களே! இந்திய அரசியலைக் காங்கிரஸ் எந்த அளவுக்குக் கெடுத்துச் சீரழித்திருக்கிறது என்பதற்கு காங்கிரசுக்கு கிடைத்த புது ரத்தம் ஜோதிமணியே ஒரு நல்ல உதாரணம். 


இன்றைக்கு ராஜீவ் காண்டி நினைவு தினமாமே! கருணாநிதி , கொஞ்சம் பொறாமையோடு  ஆனால் 
சரியாகத்தான் அந்த நாட்களிலேயே சொல்லி இருக்கிறார் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது!  


கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லைஎன்று முன் ஒருகாலத்தில் உறுதியாக இருந்ததுண்டு. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு போல அபத்தமான புத்தகம் படித்த  பிறகு  அந்த எண்ணம் மேலும் உறுதியானது. ஆனால் என் மகனுக்கு  அப்படி சங்கல்பமெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு இருபது புத்தகங்களுக்கும் மேல் கிழக்கு வெளியீடுகளாக வாங்கிப் படித்துவிட்டு இங்கே தள்ளிவிட்டிருக்கிறான். அதில் வினய் சீதாபதி எழுதியதன் தமிழ்வடிவமும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு முன்  திருப்பூர் ஜோதிஜி இந்தப்புத்தகம்  பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வரவே நேற்று முன்தினம் வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த நாளைய  அரசியல்  நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டு வாசிப்பு தொடருகிறது. 

என்னமோ ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தை வாசிக்க எடுத்துக் கொண்டதாகப் பீலா விட்டிருந்தது என்ன ஆயிற்று? வெறும் 80 பக்கங்களிலேயே மூடி வைத்தாயிற்று! எங்கள் தொகுதி எம்பி வடித்த காவியங்கள் காவல்கோட்டமும் வேள்பாரியும் எதிரே ஷெல்பில் இருந்தாலும் எடுத்துப்படிக்க இன்னமும் மூடு வரவில்லை! 

மீண்டும் சந்திப்போம்.  
 

சண்டேன்னா மூணு! ரஜனி வாய்ஸ்! ரங்கராஜ் பாண்டே பார்வை! நச்சுன்னு ஒரு கமெண்ட்!

கொரோனா கால அரசியல் மிக விசித்திரமாகத்தான் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது போல! எப்போதாவது செலெக்டிவாக வாய்ஸ் கொடுக்கும் ரஜனி கூட டாஸ்மாக் கடை திறப்பு விவகாரத்தில் லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்ட்டாக ஒரு காமெடி செய்திருக்கிறார். என்ன என்பதை ஒரு 2 நிமிட வீடியோவில் பார்த்து விடலாம்  ரஜனி காமெடியை விட சாணக்யா தளத்தில் வெளியான இந்தப் படம் மிகவும் தெளிவாக நிலைமையைச் சொல்லிவிடுகிறது.

 
அப்புறமும் என்ன பஞ்சாயத்து? வாய்ஸ், சவுண்ட் உடறது?   
 
கேட்டுக்கு வெளியே வந்து நிருபர்களிடம் பேசவில்லை. சும்மா ட்வீட்டரில் ஒரு கீச்சு! அவ்வளவுதான்! அதற்கே தராசு ஷ்யாம் லபோதிபோவென அடித்துக் கொள்கிறார் கொரோனா விபத்தில் நீண்ட தூக்கத்திலிருந்து ரஜனிகாந்த் இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறாரா என்பது ஷ்யாம் வெளிப்படுத்தியிருக்கிற சந்தேகம். ஆக ரஜனி என்ன பேசினாலும் எதிர்ப்பது என்று ஒரு கும்பல் அலைவது தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.ரஜனியும் சரி, எதிர்க்கிற கும்பலும் சரி கஜானாவை நிரப்ப வேறு நல்ல வழிகள் எவை என்பதைச் சொல்ல ஒரு சின்ன முயற்சிகூடச் செய்ய முடியவில்லை என்பது தமிழக அரசியல் களத்தின் ஆகப்பெரிய பரிதாபம்! குறைகளைமட்டுமே ஊதிப்பெரிதாக்குவோம் என்று அலைகிறவர்களிடம் நேர்மறையான சிந்தனை செயல்களை எதிர் பார்க்க யூடியுமா என்ன?


பாண்டே பார்வை என்கிற தலைப்பில்  இந்த 31 நிமிட வீடியோவில் ரங்கராஜ் பாண்டே அதிமுக - பாஜக உறவில் விரிசல் ஆரம்பம் என்று விரிவாகப் பேசியிருக்கிறார். எனக்கு வருகிற சந்தேகம் எப்போது இந்த இரண்டுகட்சிகளுக்கும் சுமுகமான உறவு இருந்தது என்பது தான்! காரியத்துக்காக பரஸ்பரம் சொறிந்து கொண்டதையெல்லாம் சுமுக உறவு என்று எடுத்துக் கொள்ள முடியுமா? 



ரசனிகாந்து வாய்ஸ் கொடுத்துவிட்டார்! ரங்கராஜ் பாண்டேவும் தன்னுடைய எக்ஸ்பெர்ட் கருத்தை நீட்டி முழக்கிச் சொல்லிவிட்டார் என்பதெல்லாம் சரி! ஆனால் மேலே ஜயகாந்த் என்றொருத்தர் நச்சுன்னு ஒரு கருத்தைச்  சொல்லி  முடித்துவிட்டாரே, அதற்கென்ன சொல்வீர்களாம்?

மீண்டும்  சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா அரசியல்! சீனத்துச்சண்டியர் முண்டா தட்டுகிறார்!

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முடிகிறதோ இல்லையோ அதைவைத்து படு கேவலமாக அரசியல் செய்வதில் இங்கே கழகங்களுக்குத் தாங்களும்  சற்றும் இளைத்தவர்களில்லை என்று சீனத் தம்பட்டங்கள் கிழிந்து தொங்கிப் போனபிறகும் கூட விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிற வேடிக்கை,  விசித்திரத்தைக் கவனிக்கிறீர்களா? 

 

அதென்னவோ டூத் பேஸ்ட் விளம்பரங்களாகட்டும், அந்தநாளைய ராம்ஜேத் மலானிகளாட்டும், இன்று சீனாவாகட்டும் பத்து இல்லையென்றால் பத்தாது போலிருக்கிறது! கேப்டன் அமெரிக்கா என்னவானார் என்பதுள்ளிட்டு ஒரு பத்துக்கேள்விகளை  அமெரிக்காவிடம் கேட்கிறதாம் சீனா! வீடியோ 4 நிமிடம். 



வடகொரிய அதிபர்கிம் ஜாங் உன்  உயிரோடிருக்கிறாரா என்பதையே கேள்விக்குறியாக்கி கண்காது மூக்கெல்லாம் வைத்து பரபரப்புச் செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் கடந்த மூன்று வாரங்களாக ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமாக கிம் கிறுக்கன் பொது மக்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டாராம்! தவறான அறுவைச் சிகிட்சை, மூளைச்சாவு, அடுத்துப் பதவியேற்கப்போவது யார், கொரிய தீபகற்பத்தில் போர் மூளுமா இப்படிச் செய்திகளை தந்தி மாதிரி முந்திக்கொண்டு தந்ததெல்லாம் பொய்யாகிப்போய்விட்டது. ஏற்கெனெவே கொரோனா வைரஸ் தொற்றைப் பரவவிட்டதில் உலகாநாடுகளிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் சீனா, கிம் ஜாங் உயிரோடிருப்பதில் கொஞ்சம் நிம்மதிப்பெருமூச்சு விடுகிற மாதிரி! என்னதான் சீனா ராணுவ ரீதியில் பலசாலிதான் என்றாலும், சீனப் பொருளாதாரம் செம அடி வாங்கியிருக்கிற சூழலில் ஒரு போரையும் சமாளிக்கவேண்டுமென்றால் மெத்தக்கனம் தான்! ஆனாலும் தென்சீனக்கடலில் தன்னுடைய முழு ஆதிக்கத்தைக் காட்டிக் கொள்வதற்காக, மலேசியா அருகே அமெரிக்கக் கடற்படைக் கப்பலொன்றை சீனக்கடற்படை வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. 

 

சீனத்துச் சண்டியர் எதைப்பற்றியும் கவலைப்ப்டாமல் தொடர்ந்து முண்டா தட்டுகிறார்!  டிஜிட்டல் கரன்சியை பரீட்சார்த்தமாக வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். பிட் காயின் பற்றிக்  கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ப்ளாக் செயின் டெக்னாலஜி பகுறி இந்தப்பக்கங்களில் முன்னர் எழுதியது நினைவு இருக்கிறதா? டிஜிட்டல் கரன்சிக்கு மாறுவது உட்பட பிளாக் செயின் டெக்னாலஜிக்கு  மாறுவது பற்றி ஷி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி ப்ளீனத்தில் பேசியத்தைக் கூட முன்பு  எஹுதியிருக்கிறேன். இந்த 25 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள். சிலவிஷயங்கள் புரியவரலாம். 

மீண்டும் சந்திப்போம்.   

இட்லி வடை பொங்கல்! #69 கொரோனா அலப்பறைகள்! ரங்கராஜ் பாண்டே! ராஜசங்கர்!

கொரோனா தாக்கமும் கூட ஒரு மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போய்க்கொண்டிருப்பதில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதிலேயே பெருங்குழப்பம் ஏற்பட்டிருந்தால் அதில் ஆச்சரியப் பட ஒன்றுமே இருக்காது. ரங்கராஜ்  பாண்டே மாதிரி குழப்பங்களைக் கூடச் செய்தியாகத் தருகிற கலை தெரிந்தவர் இப்போது என்ன சொல்கிறார்? வீடியோ 34 நிமிடம் 

 

ஒன்னு ராணுவத்தையும் மத்திய ரிசர்வ் போலீஸையும் இறக்கி மாநில ரிசர்வ் போலீஸையும் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து ஊரடங்கை அமல் படுத்தி வெற்றிகரமாக கொரோனா வை கட்டுப்படுத்தியிருக்கவேண்டும். அது செய்ய முடியவில்லையா சரி இனிமே மாநில அரசுகள் பிரச்சினை எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி கை கழுவியிருக்கவேண்டும்.

இரண்டும் செய்யாமல்

மத்திய அரசு திட்டமிடும் உத்தரவு போடும் ஆனால் மாநில அரசுகள் செஞ்சால் செய்யலாம் செய்யாவிட்டால் இல்லை என்றால் இந்த ஊரடங்கு தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பு மத்திய அரசுமீது தான் விழும்.

எதுக்கு இந்த மே 4க்கு அப்புறம் செய்யவேண்டியதை மத்திய அரசு அறிவிக்கவேண்டும்??
மாநில அரசுகளே செய்து கொள்ளலாம் என விட்டுவிடவேண்டியது தானே? ரயில் விமானப் போக்குவரத்தையும் மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் இயக்குவோம் என சொல்லி முடித்திருக்கவேண்டியது தானே?

எதுக்கு இந்த வேண்டாத வெளங்காத வேலை?

சரி அப்படியே திட்டம் போட்டு காட்டினார்கள் சரி எப்படி அதை செய்வது?
பைக்கிலே ஒருவர் மட்டும் போலாம் என சொன்னால் எப்படி அதை செய்வது?
போலீஸை பார்த்தபின்னர் ஒரு ஆள் இறங்கி கொண்டால் என்ன செய்வீர்கள்?

நம்மாட்கள் ஸ்பீடு பிரேக்கர் வைச்சாலே அல்லையிலே போகும் ஆட்கள், அவிங்க கிட்டே போயி இதெல்லாம் சொன்னால் நடக்குமா?

சினிமா, பார்க்கு பீச்சு மூடியது ஓக்கே. அதென்னா ஜிம், ஓட்டல், டீக்கடை எல்லாம்?

மக்கள் வேலைக்கு வரனும் ஆனால் சோறு திங்க ஓட்டல் இருக்காது, பஜ்ஜி வடை திங்க டீக்கடை இருக்காதுன்னா எப்படி செய்யறது?
மக்கள் வேலை செய்யலாம் அதுவும் விவசாய வேலையும் செய்யலாம் ஆனால் பஸ் இருக்காது அவிங்க அவிங்க வண்டியிலே போய் செய்யலாமின்னா

அப்படி எத்தினி பேருப்பா வண்டியிலே போயி கூலி வேலை செஞ்சுட்டு வர்றாங்க? அவிங்க சம்பாதிக்கறது அந்த பெட்ரோலுக்கு கட்டுமா?

என்ன இதுன்னே தெரியல இவிங்களோட திட்டம் எல்லாம்.

ம்ஹூம்.

இதிலே ஆங்காங்கே தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளிகளை ஊருக்கு அழைத்து போகவும் திட்டமாம். எப்படி? உற்பத்தி செய்யலாம் ஆனால் வெளிமாநில தொழிலாளிகளை ஊருக்கும் அனுப்பிடலாம்.

இதிலே வேற கொரோனா கேஸ் எல்லாம் பூஜ்ஜியம் வந்தாத்தான் அது கீரீன் சோனுக்கு வருமாம்.

எப்படி எப்போ நடக்கும் அது? பூஜ்ஜியம் ஆவது இன்றைக்கு அல்ல இன்னும் 10 வருடம் ஆனாலும் நடக்காது.

மலேரியா கேஸை பூஜ்ஜியம் ஆக்கவே இன்னும் முடியல. இதிலே கொரானா உடனே பூஜ்ஜியம் ஆகனுமா?

இந்த திட்டம் எல்லாம் போடும் அறிவாளி யாருன்னே தெரியல.

இதுல கோடிக்கணக்கிலே சாவாங்க என உருட்டு வேற. கொரோனா கொடிய நோய் தான் அதைப்பத்தி தனியா எழுதறேன் ஆனா அதுக்கு முன்னாடி பசியிலே உசிரு போனா?

இங்கே மாநில அரசு செய்யும் தப்புக்கும் மோடிக்குத்தான் திட்டு விழப்போவுது.

சரி சரி சொல்லி வைப்போம். தாமரை மலர்ந்தே தீரும்.

நண்பர் ராஜசங்கர் தெளிவான விளக்கவுரையை முகநூலில் ரங்கராஜ் பாண்டேவுக்கு முன்னாலேயே எழுதிவிட்டார். இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்காகவே கடைசிவரியை எழுதியிருப்பார் போல! 



உங்கள் ஏரியா என்ன வண்ணத்தில்? எதற்கெல்லாம் யெஸ்ஸு எதற்கெல்லாம் தடா என்று சார்ட் போட்டே சொல்லியிருக்கிறார்கள். கொரோனா அலப்பறைகள் எல்லைகடந்து போய்க்கொண்டு இருப்பதாக  உணர்கிறீர்களா? சகித்துக்கொண்டு நாட்களைக் கடத்துவதன்றி வேற்றுவழி இல்லை! 


மீண்டும் சந்திப்போம்.