ஸ்பெக்ட்ரம் ஊழல்:பத்துக் கேள்விகளும், பின் தொடரும் நிழலும்!


2ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊழ‌ல் தொட‌ர்பாக ‌முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி‌க்கு 10 கே‌‌ள்‌விகளை அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கே‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

உச் நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று விசாரித்து வரும் சி.பி.ஐ.யின் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

இந் ஊழலையே மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஊழல் இந்திய கணக்கு, தணிக்கைத் துறைத் தலைவரின் கற்பனையில் உருவான கட்டுக் கதை என்றும் குறை கூறியிருக்கிறார் கருணாநிதி. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை நடவடிக்கைகளை, திராவிட அரசியலுக்கு எதிரான மேலாதிக்க சக்திகளின் சதி என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின மகள், குடும்ப உறுப்பினர்களின் மோசமான செயல் பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார் கருணாநிதி. தப்ப முடியாதபடி கடினமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தருணத்தில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கருணாநிதியின் வாடிக்கை! குறிப்பிட்ட எந்தப் பெயரும் சுட்டிக் காட்டப்படவில்லை. தனி மனிதர், தனிப்பட்ட கட்சி அல்லது அமைப்பின் பெயர்கள் குறி வைக்கப் படவில்லை. வெறும் பொதுவான தூற்றுதல் தான்.

ஆனால, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல். கருணாநிதி, அவரது குடும்பத்தினர் இந்த ஊழலில் முழுவதுமாக மூழ்கி இருப்பதால், இந்த ஊழலில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இயலாத காரியம் ஆகும்.

இந் ஊழலில் அடங்கியுள்ள அப்பட்டமான உண்மைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

1)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முதல் செய்திகள், இந்த ஊழலில் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதி ஆ. ராசாவிற்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர்தரப்பு ஊடகங்களிலும் முதன் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வி.யில் தான் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், கருணாநிதியின் பேரன்களில் ஒருவர், 28.4.2011 அன்று நடைபெற்ற தி.மு.க.வின்உயர் மட்டக் குழுகூட்டத்தில் ஊடகங்களை பொதுவாக கருணாநிதி தாக்கிய சமயத்தில் உடனிருந்தார் என்பது தான்.

2) ராச, இதர நபர்களுக்கு எதிரான வழக்குகள் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சா‌ற்றுகளின் அடிப்படையில் சி.பி.ஐ.யினால் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, இந்திய கணக்கு, தணிக்கைத் துறை தலைவரால் இந்திய நாடாளுமன்றத்தில் தகுந்த ஆவணங்களுடனும், வலுவான வாதங்களுடனும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

3) அரசியல ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், தி.மு.க.விற்கு எதிரான கட்சி ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. முக்கிய பங்காற்றுகின்ற, கருணாநிதியின் மகனும், பேரனும் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தான் மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

4)
ஒர வருடத்திற்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த இந்த ஊழல் வழக்கு தீங்கிழைக்கும் கும்பல் கூரை மேல் ஏறி நின்று கூக்குரலிட்டதன் காரணமாக முக்கியத்துவம் பெறவில்லை; உலகின் மிகப் பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய புலனாய்வுத் துறையால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த விசாரணையை உச்ச நீதிமன்றமே முடுக்கி விட்டதன் காரணமாகத் தான் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.

5)
இந் வழக்கில், சி.பி.ஐ. இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இன்னும் நிறைய குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, செவி வழிச் செய்தி அல்லது நாகரிகமற்ற குற்றச்சா‌ற்றுக்களின் அடிப்படையிலோ நடைபெறவில்லை. மாறாக, 80,000 பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின், ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

6)
இந் வழக்கில் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டவர்கள் ஆ.ராசா, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டுமல்ல. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு படைத்த தொழில் குழுமத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர்களும், தலைமை செயல் இயக்குநர்களும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், இந்த ஊழலை மூடி மறைக்கும் விதமாக, “செல்வாக்கு படைத்த ஒரு குழுவினரின் அரசியல் சதுரங்க விளையாட்டு இதுஎன்று அபத்தமாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதி!

நான இப்பொழுது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன். கருணாநிதி அனுமதி அளித்திருந்தால், வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்தக் கேள்விகளை ஊடகங்களே அவரிடம் கேட்டிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

1)
கம்பெனிகள பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 விழுக்காடு பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வி.யில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்? இந்த டி.வி. சேனலில் இந்த அளவிற்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?

2) தனிப்பட் முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

3) 20
விழுக்காட பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வி.யில் எவ்வளவு முதலீடு செய்தார்? இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

4)
கலைஞர டி.வி.யில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சரகம் அனுமதி தராததையடுத்தே, கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?

5)
சர்ச்சைக்குரி2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பயனாளியான டி.பி. ரியால்டி குழுமத்திடம் இருந்து கலைஞர் டி.வி. 214 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. இந்தப் பணப் பரிமாற்றம் ஒரு தடவை நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பல முறை நடை பெற்று இருக்கின்றது. இந்தப் பணம் ஏன் வாங்கப்பட்டது? ராசாவால் விதி முறைகளுக்கு முற்றிலும் முரணாக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதற்கு பிரதிபலனாகத் தான் இந்தப் பணம் கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையெனில், சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப் பட்ட கலைஞர் டி.வி.யில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?

6) 2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன், ராசாவை ‌‌சி‌.பி.ஐ விசாரிக்க தொடங்கியவுடன், டி.பி. ரியால்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தைஉத்திரவாதமற்ற கடன்ஆக மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?

7)
திடீரென்ற இந்தக் "கடனை வட்டியுடன்" திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?

8)
ஜெனிக்ஸ எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற போர்வையில்,  தன்னுடன் நெருங்கி பழகியவர்களின் நிறுவனமான துபாயைச் சேர்ந்த இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம், டி.பி. ரியால்டி நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் குழுமத்தில் இடம் பெற்றதற்கு கருணாநிதியின் விளக்கம் என்ன?

9)
கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கும், கருணாநிதிக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றத்தில், ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பரிமாணங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன?

10) "
கனிமொழி என் மகள் என்பதற்காக நான் ஆதரவளிக்கவில்லை; கனிமொழி தி.மு.க.வின் விசுவாசமிக்க உண்மையான தொண்டர் என்ற முறையில்" ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, கட்சியை இழிவுபடுத்த தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி! இறுதி மூச்சுவரை கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள், கட்சிக்காக தங்கள் உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கும் தொண்டர்கள் இது போன்ற பிதற்றலை நம்புவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறாரா?

ஒர லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. ராசாவுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. கலைஞர் டி.வி., கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பின் புகலிடமாக விளங்கும் அய‌ல்நாட்டு வங்கிகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் பணத்தை குவித்து வைத்து இருக்கின்றனர்.

கனிமொழிய மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சி.பி.ஐ. தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உண்டு. அனைவரும் பயனடைந்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், 2ஜி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

இது ஜெயலலிதா தொடுத்திருக்கும் பத்துக் கேள்வி கணைகள்!

இந்தக் கேள்விக்கணைகளுக்கு சிபிஐ தரப்பில் இருந்து கசியும் செய்தியாக, குட்டு அம்பலப்பட்ட பிறகுதான்,முதல் தகவல் அறிக்கை தாக்கலான பிறகு தான் அவசர அவசரமாக  கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம், "கடனாக" மாற்றப்பட்டு, அப்புறம் வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், கலைஞர் டிவியின் வரவு செலவுக் கணக்கில் அறுபத்துச்சொச்சம் கோடி வரவில், செலவு போக வெறும் ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் தான் நிகர லாபமாகக் காட்டப் பட்டிருப்பதும், ஏற்கெனெவே செய்திகளில் கசிந்ததுதான்!

யார் இதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற நினைப்பிலேயே, தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நெஞ்சுரத்தை என்னவென்று சொல்வது?

இது தொடர்பாக நேற்றும் இன்றும் வெளியான இரண்டு செய்திகளைப் பாருங்களேன்! செய்திகளுக்கு தட்ஸ்தமிழ், தினமணி இரு நிறுவனங்களுக்கும் நன்றியுடன்!


டெல்லி: 2ஜி உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கனிமொழி தொடர்புடைய தமிழ் மையம் அமைப்பு பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.


கனிமொழி, தமிழ் மையம் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த மையம்தான், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் சென்னையில் நடத்தி வருகிறது.

2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழ் மையம் அமைப்பின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ் மையம் அமைப்பு, 2ஜி உரிமம் பெற்ற சில தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில், தமிழ் மையம் அமைப்புக்கு அந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நேரடியாகவே நன்கொடைகளை வழங்கியது தமிழ் மையம் அமைப்பின் ஆடிட் செய்யப்பட்ட பாலன்ஸ் ஷீட் மூலம் தெரிய வருவதாக அந்த செய்தி கூறுகிறது. அந்த காலகட்டத்தில்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராசா இருந்தார். அப்போதுதான் 2ஜி உரிமங்களும் அவரால் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய தகவலால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சூடு கூடியுள்ளது.

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி ; 2ஜி வழக்குக்கு பிறகே ஒப்பந்தம்: சிபிஐ தகவல்


புது தில்லி, மே 1: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட பின்னரே கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி அளிக்கப்பட்டது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் இதைத் தெரிவித்துள்ளது.

ஸ்வான் டெலிகாம், டி.பி. ரியாலிட்டி நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியுள்ளது. டிசம்பர் 23,2008-ஆகஸ்ட் 7,2009-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பணம் கைமாறியுள்ளது. இந்தத் தொகை கலைஞர் டி.வி.க்கு அளிக்கப்பட்டது குறித்து அப்போது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை.

 இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அக்டோபர் 21,2009-ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

 இதையடுத்துதான் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 27,2010-ல் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 இந்த வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்து விசாரிக்கத் தொடங்கி, இந்த வழக்கில் தீவிரம் காட்டியதை அடுத்தே பணத்தை கலைஞர் டி.வி. திருப்பி அளித்துள்ளது என்று சிபிஐ குற்றம்சுமத்தியுள்ளது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் கணக்காளர் சதீஷ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மொஹமத் மொரானி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இவர்கள் அளித்த தகவல் மூலமே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.200 கோடிக்கான ஒப்பந்தத்தை கலைஞர் டி.வி. மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தரப்பினருக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மறைமுகமாக லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் உஸ்மான் பல்வா, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன இயக்குநரான மறைந்த சாதிக் பாட்சா ஆகியோர் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியிருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்தப் பணத்தை கடனாகப் பெற்றதாகவும், அதை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் டி.வி. தரப்பில் கூறப் படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிபிஐ தாக்கல் செய்துள்ள துணைக் குற்றப்பத்திரிகையில், 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை "கூட்டுசதியாளர்' என்று குற்றம்சுமத்தியுள்ளது. மே 6-ல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கனிமொழிக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறு மனமே ஆறு! அட! மே 6 ஆம் தேதி நெருங்கி வருகிறதே! அன்றைக்குக் கனிமொழி நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டும் இல்லையோ?!

உச்சகட்ட காமெடி என்னவென்றால், இத்தனைக்குப் பிறகும், நேற்று முன்தினம் ஜெயந்தி நடராஜன், நேற்று ஜி கே வாசன் இன்று எவரோ இப்படிக் காங்கிரசின் சார்பில் ஒவ்வொருவராக திமுக தலைவரை சந்தித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பதும், வெளியே வரும்போது திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்று சொல்லிக் கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் அபசுரமாக கண்டனூர் பானா சீனா மட்டும், கொஞ்சம் உண்மை நிலவரத்தைப் பேசியிருப்பது இன்னொரு காமெடி! அனேகமாக, நாளை அல்லது நாளை மறுநாள் இவரும் கோபாலபுரத்துக்குப் போய் சந்தித்து தேறுதல் சொல்ல வேண்டி வரலாம்! 

மானாமதுரை, மே 1: மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இவர்களுக்கு முன்னாலேயே, காமெடியன் வடிவேலு இந்த வேலையைத் தொடங்கி வைத்ததை இந்தப்பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம்! நினைவுக்கு வருகிறதா!!

1 comment:

  1. மாற‌ன் கால‌த்தில் தொட‌ங்கி, டாடாவுட‌னான‌ இர‌சாய‌ன‌ம் ஒத்துப்போகாத‌‌ குழ‌ப்ப‌ நேர‌த்தில், ம‌துரை தின‌க‌ர‌ன் எரிப்பில் கைமாறி தொலை தொட‌ர்புத்துறை ராஜாவிட‌ம் சிக்கிய‌து. குள‌றுப‌டிக‌ள் ந‌ட‌ப்ப‌து அறிந்தே "யார் யார் த‌லையீடு" (எந்த புற்றில் எந்த‌ பாம்போ)இருக்கிற‌தோ எனப் பிரத‌ம‌ர் வாழாவிருந்திருக்கிறார். ப.சி யோ க‌ளவு போன‌லும் க‌த‌வை மூடுவ‌தில் குறியாய் இருக்கிறார்.
    ஊழ‌ல் க‌சிவு ஊட‌க‌த்தை எட்ட‌, ம‌க்க‌ளின் ஆர்வ‌ம் திரும்புகிற‌து. மத்திய‌ அரசு விசார‌ணைக்குழுவின் உச்ச‌ ப‌த‌வியை(சிவிசி) தொலைதொட‌ர்புத் துறை செய‌ல‌ராய் இருந்து விசாரணைக‌ளை எதிர்த்த‌ தாமஜுக்கு அளித்து பூசி மொழுக‌ப் பார்க்கிற‌து. ஆனால், சிவிஜி எல்லோரையும் அதிர்ச்சி அடையும் வித‌மாய் ஊழ‌லின் இழ‌ப்பை 1.76 லட்ச‌ம் கோடி என்ற‌தும், இத‌ன் தாக்க‌ம் உச்ச‌நீதி ம‌ன்ற‌ம் வ‌ரை இருந்த‌து. (அது வ‌ரை 3000 ஆயிர‌ம் கோடி என்றுதான் ஊட‌க‌ம் சொல்லி வ‌ந்த‌து) உச்சநீதிப‌தியாய் க‌ன‌ம் க‌பாடியாவும், இத‌னை விசாரிக்க‌ நீதிப‌திக‌ள் க‌ன‌ம் சிங்வீயும், க‌ங்குலியும் அமைந்த‌து இந்த‌வ‌ழக்கின் ஓட்ட‌த்தை சீர‌மைத்த‌து. பிர‌சாந்த் பூஷன் ம‌ற்றும் சு,சாமி போன்ற‌வ‌ர்க‌ளின் பொது வ‌ழக்குக‌ளும் இத‌ற்கு மேலும் வ‌லுவூட்டி புதிய‌ கோண‌ங்க‌ளையும் காட்சிப்ப‌டுத்திய‌து.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!