Friday, May 20, 2011

உலகமகா ஊழல் சாதனை! கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, சிறை!து கொஞ்ச நேரப் பரபரப்புத்தான்! எதிர்பார்க்காதது என்றெல்லாம் எவரும் சொல்ல முடியாது!

கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம், ஒரே வரியில் "நிராகரிக்கப்படுகிறது" என்று சொல்லி, பதினைந்துநாட்களாக நிலவிய சஸ்பென்சை நீதிபதி ஒ பி 
சைனி உடைத்திருக்கிறார்! ஆக, முன்னமேயே திஹார் சிறையில் அடைக்கப் பட்டிருக்கவேண்டியவர் இத்தனை நாட்களுக்குப் பிறகு, இன்றைக்குக் கைது செய்யப்பட்டு, சிறைக்குப் போகிறார். கூடவே கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமாரும்!

சுப்பிரமணியன் சுவாமி முன்னமே சொல்லியிருந்தபடி, மூன்றாவது துணைக் குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாளின் பெயரும் சேர்க்கப்படுமா, கைது செய்யப்படுவாரா என்று அடுத்த பரபரப்பு, ஜூன் மாதம் முழுக்க இருக்கும்!

என்டிடீவீயின்  அர்னாப்,  ராம்ஜெத்மலானியிடம் உங்களுடைய எதிர்வினை(ரியாக்ஷன்) என்ன என்று கேட்டதற்கு, இது எதிர் பார்த்ததுதான், டில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம், நான் என்னுடைய கடமையைச் செய்தேன் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்! இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை சன், கலைஞர் செய்திகளில் இந்த விவரம் அறிவிக்கப்படவில்லை.
 "மனம் விட்டுப் பேச நிறைய இருக்கிறது" என்று கனிமொழி சில நாட்களுக்கு முன் சொல்லியிருந்ததும், கருணாநிதி 'சிறைவாசத்தை நான் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டேன் கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்' என்று பூடகமாகப் பேசியதும், இப்போது கனிமொழி சிறைக்குப் போவதில், இன்னும் என்னென்ன வெளிவரும் என்ற பயம், கலவரம் இன்னொரு குடும்பத்தை ஆட்டிப் படைக்கப்போகிறதா, சமாளிப்பார்களா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

   

இத்தனைக்கும் காரணமாக இருந்த பேரன் என்ன ஆவார்?
6 comments:

 1. இதுல உனக்கு என்னயா ஆனந்தம்..?

  ReplyDelete
 2. பேரனுக்கு அவுங்க ஆப்பு வச்சாங்க,
  பேரன் திரும்ப ஆப்பு வச்சார், ஆப்புக்கு ஆப்பு சரியா போச்சு!

  ReplyDelete
 3. குவாத்ரோச்சி, போபால் போல எல்லாம் ஆகாது என்று என்ன நிச்சயம்? நாடகத்தின் கடைசி காட்சி வரை காத்திருக்கவும்!

  ReplyDelete
 4. வாங்க வால்ஸ்!

  பேரன், குழிபறிக்க ஆரம்பிச்சதாலதான் அவங்க பதிலுக்கு ஆப்பு வைக்கிற அளவுக்குப் போனாங்க! என்ன, கொஞ்சம் ஆசை அதிகமாப் போனதால, வந்தவரை ஆதாயம்னு கண்கள் பனித்தன இதயம் இனித்தது டயலாகோட நின்னது வினையாப் போச்சு!

  இன்னும் இருக்கு! பேரன் திடீர் நடுநிலைவாதியானது இன்னும் கொஞ்சம் விபரீதம்!

  ஸ்ரீராம்!

  நாடகத்தின் க்ளைமாக்ஸ் வரை காத்திருப்பதில் எனக்கு எந்தத்தடையும் இல்லை!ஆனால், இங்கே கதை வேறுமாதிரியான டிவிஸ்டுடன் போய்க் கொண்டிருக்கிறது! ஆடிய ஆட்டம் என்ன....பாட்டு பின்னணியில் ஒலிப்பது கேட்கிறதா?!

  :-))

  ReplyDelete
 5. பேரன்கள் - கே.டி. பிரதர்ஸ் - ரயில் மாறப்போவதாக - அதாவது காங்கிரஸ் கட்சியில் ‘இணையப்போவதாக’ - வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
  நெருப்பு இல்லாமல் புகைவருமா?

  ReplyDelete
 6. அவர்கள் தேர்ந்த வியாபாரிகள்,தங்களைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்தான் என்பதால் இந்த செய்தியில் உண்மை இருந்தால் ஆச்சரியம் இல்லை! ஆனால், கூடுமானவரை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்குப் பங்கே இல்லை என்று உத்தமர் வேடம் போடத்தான் காங்கிரஸ் முயற்சிக்கிறது.திமுகவைக் கழற்றிவிட அதுவே முக்கிய காரணம்.

  கேடி கம்பனி, குறிப்பாக தயாநிதியின் திருவிளையாடல்களைக் காங்கிரஸ் தாங்குமா என்பது, இப்போதைக்குக் கேள்விக்குறிதான்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails