என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

.
பிரிட்டிஷ்காரர்களுக்கும் சரி, அதன் கூட்டு நாடுகளான ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கும் சரி, இந்தியா என்றால் கொஞ்சம் இளப்பம் தான்!
 


ந்திய அரசின் இன்டலிஜென்ஸ் பீரோவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு அதிகாரி. கனாடாவில் வாழும் தன்னுடைய மகனுடன் சேர்ந்து இருப்பதற்காகத்  தற்காலிகக் குடியேற்றத்திற்கான விசாவிற்கு விண்ணப்பித்தார். கனடிய தூதரகம் ஒருமுறை அல்ல, இரண்டு முறை அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்தது. சொன்ன காரணம். "அவர் பணிபுரிந்த நிறுவனம், வன்முறையில் ஈடுபடுகிற ஒன்றாம்! கனடிய மக்களுடைய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதாம்."

து ஏதோ ஒரு முறை நடந்த தற்செயலான தவறு மாதிரித் தெரியவில்லை. 


மூன்று ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கும் விசா மறுக்கப் பட்டிருக்கிறது.  ஏ எஸ் பாஹியா என்பவருக்கும் அவரது மனைவிக்கும் விசா மறுக்கப் பட்டதற்குச் சொன்ன காரணம், அவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியவராம்! இவருக்கும் இன்னும் இரண்டு பஞ்சாபி அதிகாரிகளுக்கு விசா மறுக்கப் பட்டதற்கு  சொல்லப் பட்ட காரணம், வேலையில் இருந்த தருணங்களில் மனித உரிமைகளை  மீறிச் செயல்பட்டிருப்பார்களாம்!

தைவிட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையை குறித்தான விமரிசனம்: 'ரொம்பவும் பேர்போன வன்முறை ஸ்தாபனமாம்!'  


செய்தியை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்க இங்கே!  

னடிய ஹைகமிஷனுக்குக் கடும் கண்டனங்களை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். கனடாவின் இந்தப் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற சொல்லிவிட்டு, பத்திரிகைகளில் இந்த விவகாரத்தைப் பெரிதாக ஊதிவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த அமைச்சர் இப்படி ஊடகங்களை வேண்டிக் கொள்வது இது முதல் முறை அல்ல.

னடிய அரசோ, இந்தியாவில் கிளம்பியிருக்கும் இந்தப் பிரச்சினையை பற்றி எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது.


ந்திய அரசியல்வாதிகள் கண்டன அறிக்கைகள் விடுவார்கள், பத்திரிகைகளில் ஓரிரு  நாள் செய்தி வரும்!அப்புறம் இப்படி ஒரு விஷயம் நடந்தது என்பதையே மறந்து போய் விடுவார்கள் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அல்லது இவர்களால் இதற்கு மேல் என்ன செய்து விட முடியும் என்ற திமிரோ எப்படிவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், கனடிய அரசு கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது, இந்திய அரசை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை என்பதைத் தெளிவாகவே சொல்கிறது!

ள்ளூரில் ரொம்பவே  சவடால் பேசும் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு சர்வதேச அரங்கில் எவ்வளவு பலவீனமானதாகப் பார்க்கப் படுகிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.
 

இந்த விஷயம் அம்பலமானதில் இருந்தே மக்களுடைய கோபம் அதிகரித்து வருவதைப் பார்த்த பிறகுதான், உள்துறை, வெளித்துறை எல்லாம் சேர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று உள்துறை செயலர் ஜி கே பிள்ளை வீரமாகப் பேசியிருக்கிறார். பானா சீனாவுக்குத் தோதான செயலாளர் தான்!

முறையான, தெளிவான வெளியுறவுக் கொள்கை ஒன்றை நம்மால் விடுதலை அடைந்து அறுபத்து மூன்று ஆண்டுகளாகியும் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பது  காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிற சாபக் கேடு.

ந்திய அரசு கொஞ்சம் ரியாக்ட் செய்திருக்கிறது. ஆனால், தேசத்தின் தன்மானத்தைக் காப்பாற்றும் விதத்தில் இவை போதாது. 

ந்தியாவுடனான ராஜரீக உறவுகளில், எவ்வளவு அடாவடியாக மேற்கத்திய நாடுகள் நடந்துகொள்ளும் என்பது ஒரு புறம். வெளியுறவுத் துறை அமைச்சர், அல்லது அமைச்சகம் கையாலாகாத் தனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதையே இது மாதிரி, இந்தியா தொடர்ந்து அவமானப் படுத்தப் படுகிற நிகழ்வுகள் எடுத்துச் சொல்கிறது. 


துவே சீனாவாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்! சீனப் பூச்சாண்டி ஒருபக்கம் இருந்தாலும், சீனாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்பதையும் இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!

சுதந்திரம் பெற்ற பிறகும் வெள்ளைத்துரைமாரிடம்  கை கட்டிப் பவ்யமாக நிற்கிற அசிங்கம், இந்தியாவின் முதல் பிரதமரிடமிருந்தே ஆரம்பித்தது.


ல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்களின் மீது ஏறியே நரகத்துக்கும் போகலாம் என்று தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் சொல்கிற ஒரு ஆங்கில மேற்கோளை இந்தப் பதிவுகளின் பலபக்கங்களில் பார்த்திருக்கிறோம். 

ல்லது என்று நினைத்துக் கொண்டு நேரு ஆரம்பித்து வைத்த நிறைய விஷயங்கள், குறிப்பாக வெளியுறவுக் கொள்கை, இந்த நாட்டைத் தொடர்ந்து நரகத்துக்கே கொண்டுபோனதை, காங்கிரஸ் வாரிசு அரசியல் அந்தத் திருப்பணியை இன்னமும் அதிதீவீரமாகச் செய்து கொண்டிருப்பதை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!



  இந்த மிதப்புத் தானே ஆளைக் கவிழ்த்தது! 
இந்த நாட்டையும் கெடுத்தது!

நேருவின் நல்ல எண்ணங்களின் மீதோ, அவர் இந்த நாட்டை நேசித்ததிலோ எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இருந்ததில்லை. அப்படி ஒரு குற்றச்சாட்டு, விமரிசனத்தை வைத்து இந்தப் பதிவு எழுதப் படவில்லை.

னால் மனிதன் செய்த எதுவுமே இந்த நாட்டுக்கு உபயோகமாக இருந்ததில்லை என்பது ஒருபுறம். இந்தத் தனிமனிதரின் பலவீனம், புகழின் மீதான ஆசை, இந்த நாடு இன்றைக்குச் சந்தித்துக் கொண்டிருக்கும் உபத்திரவங்கள் அத்தனைக்கும் காரணமாக இருந்ததை மறந்துவிட முடியுமா?



"இந்தியா தான் இந்திரா! இந்திரா தான் இந்தியா!

ப்படிக் கூவியே அப்புறம் காணாமல் போன ஒரு கிறுக்கு மாய்க்கானைப் பற்றி இங்கே பார்த்திருக்கிறோம், நினைவிருக்கிறதா?

ன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

பாரதியின் ஆதங்கம் இப்படிக் கவிதை வரிகளில்  வெடித்தது நினைவு வருகிறதா?


பதிவை வலையேற்றம் செய்தபிறகு தான் நினைவு வந்தது. இன்று நேரு மறைந்த நாற்பத்தாறாவது ஆண்டு!

இந்த விஷயம் தொடர்பாக திரு டோண்டு ராகவனும் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அங்கே பின்னூட்டங்களில், இந்தியா அசிங்கப்பட்டதற்காக சந்தோஷப்பட்டு  சிலர் எழுதியிருந்ததையும் பார்த்தேன்.

தமிழன் என்றொரு இனமுண்டு - தனியே
அவர்க்கொரு குணமுண்டு

என்ற நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகளை வேறு விதமாக நிரூபணம் செய்கிற போக்கை என்னவென்று சொல்வது?





8 comments:

  1. //முறையான, தெளிவான வெளியுறவுக் கொள்கை ஒன்றை நம்மால் விடுதலை அடைந்து அறுபத்து மூன்று ஆண்டுகளாகியும் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பது காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிற சாபக் கேடு //

    தவிடு தின்னும் ராஜாவிற்கு ..........................................................??
    முறம் பிடிப்பவனே மந்திரி!!

    இன்னும் சற்று ஆழமாக பாருங்கள். நேருவை இழுத்துவிட்டது காந்திதானே !!
    சர்தார் வல்ல பாய் படேல் போன்ற ஒரு திடமான, தீர்கமான புத்தியுள்ள ஒருவருக்கு வரவேண்டிய
    அந்த சந்தர்பத்தை (கோஷ்டி பூசல் தான் வேறு என்ன வாழ்ந்தது அன்று மட்டும் ) தடுத்து, நேருவை
    முதல் பிரதமராக்க விரும்பினார். அதன் படி ஆக்கப்பட்டார்.

    இந்திய சுதந்திரத்திற்கு ஏதோ மோதிலால் குடும்பம் மட்டுமே தியாகம் செய்ததாக காட்டினார்கள்.
    மற்ற தியாக சீலர்கள் புறம் தள்ளப்பட்டனர். அன்று வநத வினைதான். இன்று நாம் பதிவு போட்டு
    புலம்புகிறோம்.

    ReplyDelete
  2. வெறும் அடி வருடிகள், துதிபாடிகள்,ஜால்ரா கூட்டங்கள். கோஷ்டி பூசல்கள்.
    ஆட்சி அமைத்தவுடன் இந்த கருமங்களை தானே சமாளிக்கவேண்டும். இந்த கூட்டங்கள்
    அமைச்சர் அவை அமைத்தால் வேறு என்னத்தை கிழித்துவிடுவார்கள்?

    முறையான , தெளிவான வெளியுறவு கொள்கை - மண்ணாங்கட்டி.

    அன்னை சோனியா வாழ்க, இந்தியாவின் இளவல் ராகுல் வாழ்க வாழ்க !!

    ReplyDelete
  3. எனக்கும் உங்கலின் கருத்தில் உடன்பாடு உண்டு.

    ReplyDelete
  4. திரு வி.ஆர் என்று வெறும் இனிஷியலை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நண்பர் ப்ரொபைல் அல்லது பதிவர் அடையாளம் எதுவுமில்லாமல் ஒரு பின்னூட்டத்தை அனுப்பியிருக்கிறார். தங்களுடைய அடையாளத்தை ஒரு அளவுக்காவது வெளிப்படுத்திக் கொள்ளாமல் பின்னூட்டமிட வருபவர்களை ஏற்பதில்லை என்று ஏற்கெனெவே முடிவு செய்திருப்பதால் அவருடைய பின்னூட்டத்தை நிராகரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.

    ஆனால் அவரது பின்னூட்டத்தில் எழுப்பியிருந்த கேள்விகள் பதில் சொல்லப் பட வேண்டியவையே. என்பதால் அதற்கு பதில் மட்டும்.

    /The same thing or I can say every worse than this incident has happened to Mrs. Parvathi. If you feel this is atrocious from the Canadian Consulate, then how to name the attitude of India? /

    திருமதி பார்வதி வேலுப்பிள்ளை விவகாரத்தை இங்கே உள்ள மாநில, மத்திய அரசுகள் கையாண்ட விதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, விஷயத்தின் தன்மையை விட லோகல் தலைவர்களுக்குள் இருந்த ஈகோ பிரச்சினைதான் முன்னிறுத்தப்பட்டது என்றாலுமே கூட, இதையும் கனடிய அரசு விசாவை நிராகரித்ததும் ஒன்றாக நீங்கள் குழப்பிக் கொள்வதுபோல நான் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை..

    விசா கோரிக்கையை கனடிய அரசு நிராகரித்தது அவர்களுடைய சொந்த விஷயம். அதைப் பற்றியே நான் இந்தப் பதிவில் கேள்வியை எழுப்பவில்லை. ஆனால், தன்மானமுள்ள இந்தியர் எவரும், இந்திய அரசும் அதை சகித்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் இந்தப் பதிவில் முதன்மைப்படுத்தப் பட்டிருக்கிறது.

    அடுத்து ஒன்றைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    /However, I fully agree with your views mentioned in the second part of your article./

    நேரு காலத்தில் இருந்தே முறையான வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் இன்னமும் சரிசெய்யப் படாமலேயே இருப்பதை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருப்பது- இதை இப்படி யோசித்துப் பாருங்கள்!

    இந்த இரண்டாவது பகுதிதான், முதல் பகுதிக்கே மூல வித்து.

    ReplyDelete
  5. மாணிக்கம்!

    ஒரிஜினல் காந்தி மீது ஏற்கெனெவே ஏகப்பட்ட அபாண்டங்கள்! போதாக்குறைக்கு நேருவை இளவரசுப் பட்டம் கட்டி அழைத்து வந்ததே காந்திதானே என்று கேட்டிருக்கிறீர்கள்.

    கோட்சேயின் துப்பாக்கி குண்டு மகாத்மாவின் உயிரை ஒரே ஒருதரம் தான் சாகடித்தது. காங்கிரஸ் கட்சி, அதற்கு முன்னாலேயும் சரி, விடுதலைக்குப் பிறகும் சரி, ஒவ்வொரு அபத்தமான காரியத்திலும் அதைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

    காந்தி எதையும் பிறர் மீது தன்னுடைய கருத்தை வலுக் கட்டாயமாகத் திணிக்க முற்படவே இல்லை. ஒரு பொதுவான கருத்தொற்றுமை மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண, தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் முயன்று கொண்டிருந்தார். நிறையத் தருணங்களில், தன்னுடைய நண்பர்களாலேயே கைவிடப்பட்டுத் தனித்துவிடப் பட்ட சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. நேரு, படேல் பிரச்சினை கூட அதில் அடக்கம்.

    காந்தியைப் பற்றி மேலோட்டமாகப் பேசுவதற்கு முன்னால், ஒரு விஷயத்தைத் தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    காங்கிரஸ் கட்சி எப்போதுமே முழு விடுதலையை வேண்டி நின்ற இயக்கமாக ஆரம்பத்திலிருந்தே இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சி வேண்டியதெல்லாம், கொஞ்சம் சலுகைகள், கொஞ்சம் உள்ளூர் மக்களுக்குப் பதவிகள் அவ்வளவு தான்! பிரிடிஷ்காரர்களுடன் இணக்கமாகப் போவதிலேயே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் குறியாக இருந்தார்கள். நேருவின் தந்தை மோதிலால் நேரு அதில் மிக முக்கியமானவர். பதவிப் பித்து என்பது காங்கிரசின் அடிப்[படைக் குணமாக மாற்றியதில் நேரு பரம்பரைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு..

    ராமச்சந்திர குஹா எழுதிய காந்தி, அல்லது ஜெயமோகன் எழுதிய இன்றைய காந்தி இந்த இரண்டு புத்தகங்கள் இந்த அம்சத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவும்.

    ReplyDelete
  6. திரு ஜெயக்குமார்!

    கருத்தில் உடன்படுவதைக் குறித்து மகிழ்ச்சி! விஷயம் உடன்படுவது, ஆதரித்துப் பின்னூட்டமிடுவது என்பதோடு முடிந்து விடுவதில்லையே? அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?

    ReplyDelete
  7. இந்தியர்கள் பல மற்றும் பலான குறுக்கு வழிகளை மற்ற நாடுகளின் விசா பெறுவதற்கு, குடியுரிமை பெறுவதற்கு பயன் படுத்துகிறார்கள்.
    இந்திய அரசியல்வாதிகலுக்கு அனைத்தையுமே உதிர்த்து விடும் பழக்கம்.(மண்ணில் கோழி விழுந்து எழுவது போல). இந்திய அரசியல்வாதிகளின் இந்த கொள்கை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஒரே மாதிரியாக உள்ளது.

    ReplyDelete
  8. விசா பெறுவதற்குக் குறுக்குவழிகள்! இந்தியர்கள் மட்டும் தானா?

    தவறு இருக்கும் இடத்தில் கண்டிப்பதும் தண்டிப்பதும் தவறே இல்லை. ஆனால்,ஒரு கூடை செங்கல்லும் பிடரி என்று முத்திரை குத்தும் போக்கு தவறு இல்லையா? இன்னொரு நாட்டியன் உள்விவகாரங்களில் தலையிடுவது அப்பட்டமான மீறல் இல்லையா?

    கனடிய அரசு இந்தியர்களுக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டுப் போகட்டும்! அதைப் பற்றி இங்கே பதிவில் பேச வரவில்லை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அத்து மீறி மூக்கை நுழைக்கும் ராஜதந்திரத்தின் மூக்கை உடைத்து வெளியே அனுப்ப வேண்டிய தைரியமும் பொறுப்பும் இந்திய அரசுக்கு இருக்கிறதா, இல்லையா? இது தான் பதிவின் முக்கிய விஷயம்!

    இந்திய அரசியல்வாதிகள் என்று பொத்தாம்பொதுவாகப் பேச என்ன இருக்கிறது?

    வெளியுறவுக் கொள்கைகளில் இருக்கும் அத்தனை ஓட்டையும் காங்கிரஸ் கட்சியின் முதிர்ச்சியில்லாத் தன்மையில் வந்தவை தான்!

    இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவருக்கு அந்தத் துறையைப் பற்றி என்ன தெரியும், என்ன அனுபவம் இருக்கிறது, குறைந்தபட்சம் அமைச்சராக ஆனா பிறகாவது என்ன கற்றுக் கொண்டார் என்பதைச் சொல்ல முடியுமா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!