நண்பர் ஒருவர் கூகிள் ப்ளஸ்ஸில் எழுதிய மாதிரி, ஜெயந்தி நடராஜன் காங்கிரசை விட்டு வெளியேறுகிறேன் என்று பேட்டி கொடுத்து அதுவும் பரபரப்புச்செய்தியான பிறகுதான் காங்கிரஸ்கட்சி இன்னமும் இருக்கிறது என்ற நினைப்பே இங்கே நிறையப்பேருக்கு வந்ததாம்!
என்ன இது? முன்னாள் நீதிபதியாக இருந்தவர், எந்த ஒரு விஷயமானாலும் விவரத்தோடு பேசுகிறவர் மார்க்கண்டேய கட்ஜுவா இப்படிப் பேசியது என்று கேட்கிறீர்களா? கட்ஜு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாசியா இல்மியின் அழகை வர்ணித்து எழுதியுள்ளார். அதில், கிரண் பேடியை விட ஷாசியா இல்மி அழகு என்றும், அவரை முதல்வராக நிறுத்தியிருந்தால் பா.ஜ.க வுக்கு அழகால் வெற்றி உறுதி என்றும் ட்வீட் செய்துள்ளார். #வடபோச்சே அப்படியா, நான் பாக்கலியே என்று மறுகுகிறவர்களுக்காக
சொல்லி வைத்த மாதிரி எல்லாப்பழியும் ராவுல்பாபா மீதே சுமத்தப் படுவதுதான் ஒரு தனிநபர் மீதே கட்டமைக்கப்படும் வாரிசு அரசியலின் ஆகப்பெரிய பரிதாபமாக இருக்கிறது.
சோனியா அல்லது வாரிசுகள் தவறே செய்யாதவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. அவர்கள் தலையிலேயே எல்லாப் பழிகளையும் சுமத்திவிட்டு ஆ.ராசா, தயாநிதிமாறன், அல்லது இப்போது இந்தப் பழிசுமத்தும் பட்டியலில் புதிதாகச்சேர்ந்திருக்கும் ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தப்பித்துக்கொண்டுவிட முடியாது என்று தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.
2014 ஜனவரி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி எழுப்பிய #ஜெயந்திடாக்ஸ் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று காங்கிரஸ்கட்சி இப்போது சொல்கிறது. குற்றம் செய்தது உண்மையானால் தூக்கில் போடுங்கள் என்று #தூக்குமேடை வசனம் பேசுகிறார் முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தி. இந்த மாதிரி ஊழல் பேர்வழிகளை சீனாவில்செய்தது மாதிரி #தூக்கில்போடப்போவதுயார் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. நிலக்கரி சுரங்க அனுமதிகளில் நடந்த ஊழல் எப்படி 2G ஸ்பெக்ட்ரம் திமுகவை விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டிருக்கிறதோ அதே மாதிரிக் காங்கிரஸ் கட்சியையும் விடாமல் துரத்த ஆரம்ப முகூர்த்தம் மன்மோகன் சிங்கை சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்ததில் ஏற்கெனெவே நடந்தேறியாகிவிட்டது. சிபிஐ விசாரணை வளையத்துக்குள் சிக்குவோம் என்ற பயமே ஜெயந்தி நடராஜன் இப்படிப்பேசுவதாக காங்கிரஸ் கட்சி சொல்கிறது. இதற்குமேலும் எழுத ஆரம்பித்தால் இட்லி அம்மிணி சைசுக்குப் பெரிதாகிவிடும் என்பதால்ஒரு சின்ன ப்ரேக்.
******
நல்ல நாளிலேயே நாயகம்! இவரது நாக்கும் நக்கலும் அத்தனை கூர்மை! அதனாலேயே காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்துக் கொண்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கட்சியில் மிகப்பெரிய இடத்துக்கு வரமுடியாமல் போனாலும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கிடைத்த இடங்களில் கத்திபோடுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார். பொங்கல் அதுவும் ஈரோட்டுப் பொங்கல் என்றால் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கும் என்பதை சமீப காலங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன்.நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
1960களில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் முதல்வராக இருந்த பக்தவத்சலத்தின் பேத்தி ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த உடனேயே உங்கள் தாத்தா அரிசி பதுக்கிய கதை தெரியாதா என்று பதிலடி கொடுத்ததில் ஆகட்டும், அப்பனும் மகனுமாக இன்னுமிரண்டு பேர் கூடவே வெளியேறினால் காங்கிரஸ்கட்சி இன்னும் கொஞ்சம் தூய்மை அடையுமென்று ப.சிதம்பரத்தையும் வாரிசு கார்த்தி சிதம்பரத்தையும் தொட்டு வாரின விதம் ஆகட்டும், ஈரோடு என்றால் பகுத்தறிவு வெங்காயம் என்று தானே அறிந்திருப்பீர்கள், அதையும் மிஞ்சுகிற விதமாக! ஆனால் பிரச்சினை காலைச்சுற்றின பாம்பாகக் கடிக்காமல் விடாதென்று சோனியா நினைத்தாரோ என்னவோ, இளங்கோவன் அப்படிப் பேசியதில் அதிருப்தியைத் தெரிவித்தாராம்! இதைவிட சூப்பர் பொங்கல் வேறெவரும் வைத்துவிடமுடியுமா என்ன? !!
******
என்ன இது? முன்னாள் நீதிபதியாக இருந்தவர், எந்த ஒரு விஷயமானாலும் விவரத்தோடு பேசுகிறவர் மார்க்கண்டேய கட்ஜுவா இப்படிப் பேசியது என்று கேட்கிறீர்களா? கட்ஜு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாசியா இல்மியின் அழகை வர்ணித்து எழுதியுள்ளார். அதில், கிரண் பேடியை விட ஷாசியா இல்மி அழகு என்றும், அவரை முதல்வராக நிறுத்தியிருந்தால் பா.ஜ.க வுக்கு அழகால் வெற்றி உறுதி என்றும் ட்வீட் செய்துள்ளார். #வடபோச்சே அப்படியா, நான் பாக்கலியே என்று மறுகுகிறவர்களுக்காக
எல்லாம் வயதான தோஷம்தான்! கல்கியின் பார்த்திபன் கனவு கதையில் வரும் வரி, அத்தியாயத்தலைப்பு இது!
==