#தமிழகஅரசியல் தேர்தல்களம் எப்படி இருக்கிறதாம்?

இந்திரா சௌந்தரராஜன்! திகம் விரும்பி வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர். அதில் சந்தேகமே இல்லை! ஒரு தேர்ந்த அரசியல் விமரிசகராகவும், வருகிற தேர்தல்களத்தைப் பற்றிய கணிப்பைச் செய்கிறவராகவும் இந்த 21 நிமிட வீடியோவில் காட்சி அளிக்கிறார்.


பெரிய தலைகள் எதுவும் இல்லை. ஆதரவு அலை என்று இல்லாத தேர்தல் இது. அதனால் வெற்றி இன்னாருக்கு என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை என்று சொன்னதாலோ என்னவோ, நான் பார்க்கிற தருணம் வரை வெறும் 430 பார்வைகள் மட்டுமே காண்பித்தது.

ரங்கராஜ் பாண்டே ஒருவழியாகத் தனது தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை இன்று நடத்தி முடித்துவிட்டார்! அதிமுக கூட்டணிக்கு 97 இடங்கள் திமுக கூட்டணிக்கு 111 இடங்கள் மீதம் 26 தொகுதிகளில் இழுபறி என்பதாக முடித்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே மாதிரி அனுபவம் மிகுந்த ஊடகக்காரர்கள் சொல்வதைக் கவனிப்பதோடு சரி! அதற்குமேல் முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு ஒத்துவராத, உடன்பாடில்லாத விஷயம். 

புதிதாக யாராவது சொல்லும்போது அது இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது என்பதாலேயே இந்திரா சௌந்தர ராஜன் சொன்னதையும் காதில் வாங்கி கொண்டேன்! அவ்வளவுதான்!

கருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும் என்ற தலைப்பில் இன்றைய தினமணி நாளிதழில் வ மு முரளி என்பவர் ஒரு விரிவான, விவரமான செய்திக் கட்டுரையை எழுதி இருக்கிறார். நண்பர்களுக்கு அதைப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.        

2 comments:

  1. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் எத்தனை முறை சரியாக இருந்திருக்கின்றன?    யாருடைய கருத்துக் கணிப்பு அதிக அளவில் நெருங்கி வருவது போல இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. முதலில் கருத்துக்கணிப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்டாகவேண்டும் ஸ்ரீராம்! முறையாக நடத்தப்பட்டால், கணிப்புகள் தவறுவதே இல்லை!

      அனால் இப்போது கருத்துக்கணிப்பு என்ற பெயரில் நடப்பவை பெரும்பாலும் கருத்துத் திணிப்பாகாவே ஒருதரப்புக்குச் சாதகமாகவே இருப்பதும் கண்கூடு. இதைக் கொஞ்சம் சிந்திப்பதற்காகத்தானே, இருவேறு கணிப்புக்களைசுருக்கமாகச் சொல்லி விட்டு, தினமணியில் வெளியான கட்டுரை ஒன்றையும் பரிந்துரை செய்திருக்கிறேன்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!