வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! பதில் எங்கே?

நம்மூரில் ஊடகங்கள் பொய் சொல்வதையே முழுநேரப் பிழைப்பாக வைத்திருப்பது அடிக்கடி அம்பலப்பட்டுக் கொண்டே வந்தாலும் அதற்குமேல் ஒன்றுமே நடப்பது இல்லையே! ஏன்? என்று எப்போதாவது யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா? நேற்று முன்தினம் எழுதிய இந்தப்பதிவில் முதல் வீடியோ உங்களுக்கு   யோசிக்கக் கொஞ்சம் உதவியாக இருக்கும்! கட்டுப்பாடற்ற, எல்லையற்ற சுதந்திரம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று இந்தப்பக்கங்களிலேயே பலமுறை AG Gardiner எழுதிய The Rule of the Road கட்டுரையை மேற்கோள் காட்டி மாதொரு பாகன் புத்தக சர்ச்சையின் போதும், அதற்கு முன்னாலும் எழுதியிருக்கிறேன்.

1 நிமிட வீடியோ 

மும்பை உயர்நீதி நீதிமன்றம் சமீபத்தில் கோரேகான் என்ற இடத்தில் வெடித்த கலவரம் குறித்தவழக்கில் குறிப்பிட்டுச் சொன்னது தோல்ஸ்தோய் எழுதிய போரும் அமைதியும்  நாவல் பற்றி அல்ல! உள்ளூர் ஆசாமி ஒருத்தர் எழுதிய War and Peace in Junglemahal என்ற தடைசெய்யப்பட்ட புத்தகத்தைப் பற்றித்தான்  என்று தெளிவாகச் சொன்ன பிறகும் கூட எந்த ஊடகமாவது பொய்ச் செய்தி பரப்பியதற்கு தவறுக்கு    வருந்துகிறோம் என்று திருத்தம் வெளியிட்டார்களா? பார்த்த நினைவாவது இருக்கிறதா? 


இந்த 32 நிமிட வீடியோ விவாதம் காஷ்மீரில் இருந்து கோரேகான் வரை பொய்ச்செய்திகளில் இந்தியா கேவலப் படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை முன்வைத்து! ஊடகம் தனக்கேற்ற சாயத்தைத் தானே தேர்ந்தெடுக்கும் என்பதை நினைவு வைத்துக் கொண்டு விவாதத்தைப் பாருங்கள்!   

மீண்டும் ரங்கராஜ் பாண்டே! வீடியோவில்  தன்னுடைய சிங்கப்பூர் அனுபவத்தைச் சொல்கிற பகுதியை மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு, உங்களுடைய கருத்தை மனம் திறந்து  பகிர முடியுமா? சுதந்திரம் உட்பட எதுவுமே இலவசமோ கட்டுப்பாடுகள் அற்றதோ இல்லை! 


திருமாவளவனும் கூட, நான் உண்மையைச் சொன்னாலும் ஊடகங்கள் வெளியிடுவதில்லையே என்று குறைப் பட்டுக் கொளகிறார்! இங்கே கிடைத்தது கிடைத்தபடி வெளியிட்டாயிற்று. திருமாவளவன் உண்மைதான் சொன்னாரா, கொஞ்சம் கூட்டிக்குறைத்துச் சொன்னாரா என்று நீங்கள்தான் இந்தச்  செய்தியின், சொல்பவரின், நம்பகத் தன்மை பற்றி முடிவு செய்துகொள்ளவேண்டும்! செய்தியின் வேரைப்பிடித்து, உண்மையைப் புரிந்து கொள்ள வேறெப்படி முயற்சி செய்வதாம்? வீடியோ 13 நிமிடம்.     
    

முன்பெல்லாம் காங்கிரசுக்குள் நடக்கிற வேட்டி கிழிப்பு முதலான விஷயங்களை ஊடகங்கள் பெருந்தன்மையாக வெளியிடாமல் இருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதோ? முன்னமிருந்த மறைமுகமான Carrot & Stick இப்போது இல்லை  என்பதாலா? அல்லது நிஜமாகவே திருந்தி வருகிறார்களா? உங்களுடைய ஊகம், பார்வை என்ன?  

  
இந்தச் செய்தி குறித்து நான் ஒன்றும் சொல்வதாயில்லை! நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல! XXXX படிதாண்டாப் பத்தினியுமல்ல என்று கம்பரசம் எழுதிய சி என் அண்ணாதுரை என்பவரை,  அவரை அடியொற்றி அரசியல் செய்பவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்! இவர் நேருவை இந்தவிஷயத்தில் மட்டும் பின்பற்றியிருக்கிறார் என்ற மாதிரி   சொல்கிறார்கள். திருப்பூர் ஜோதிஜி இதற்கென்ன சொல்வாரோ? இதற்குமேல் எழுதினால் எங்கள் Blog ஸ்ரீராம் வந்து ஒட்டுமொத்தப் பதிவையுமே மஞ்சப்பத்திரிகை ரகத்தில் சேர்த்துவிடுவார்!😀😂🙏🙏   

மீண்டும் சந்திப்போம்.  

    
     

திருப்பூர் ஜோதிஜிக்கு சில சுவாரசியமான செய்திகள்!

தேவியர் இல்லம் பதிவர் நண்பர் திருப்பூர் ஜோதிஜி எழுதுவதில் நிறைய ஆர்வம் உள்ளவர். எழுதுகிற எவருக்குமே விரிவாக வாசிக்கிற வழக்கம் இருந்தாக வேண்டுமில்லையா! அவருக்கும் அப்படி ஒரு வாசிப்பு இருக்கிறது. இந்திய அரசியல் விவகாரங்களில் என்னைப்போலவே அவருக்கும் ஒரு ஆழ்ந்த வாசிப்பு இருக்கிறது. என்னைப்போலவே அவரும் நரேந்திர மோடியின் பல அரசியல் நடவடிக்கைகளில் ஆதரவு நிலை எடுத்து, பதிவுகள் எழுதி வாசிக்க வருகிற பலரிடம் வாங்கியும் கட்டிக் கொள்கிறார்! இங்கே பின்னூட்டங்களில் அர்த்தமுள்ள உரையாடலை நடத்த முன்வருகிற ஒருசிலரில்  அவரும் ஒருவர் என்பதால்,இன்றைய பதிவில் அவருக்கும் சுவாரசியமான தகவல்களைச் சொல்கிற சாக்கில் ஒரு சில காணொளிகள், செய்திகள், அவற்றின் மேல் வழக்கம்போல என்னுடைய சிறு விமரிசனக் குறிப்புகளோடு வாசிக்கவரும் எல்லோருக்குமாக!


        
இந்த 12 நிமிட வீடியோவில் காங்கிரஸ் ஆதரவாளரான சேகர் குப்தா, ராகுல் காண்டிக்கு நரேந்திர மோடியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்களாக, முக்கியமாக, எந்த சந்தர்ப்பத்தில் என்ன பேசவேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும் என்று சொல்கிறார்! நேருவாவது அடுத்தவர் சொல்வதைக் காதுக்கொடுத்துக் கேட்பதாக பாவனை செய்தார்! இந்திரா முதற்கொண்டு வாரிசுகளில் எவரும் அந்த பாவனையைக் கூடப் பின்பற்றியதில்லை! நான் என்ன  உளறினாலும் அது கட்டளை அதுவே என் சாசனம் என்பது தான் அவர்கள் சொல்லிக் கொள்கிற நேரு பாரம்பரியம்.அந்த மாதிரி ஆசாமிகளுக்கு இவர் உபதேசம் செய்தால் எடுபடுமா?

  .       
டாக்டர் சுப்ரமணியன்  சுவாமி மீது எந்த நேரத்தில் எப்படி மாறுவாரோ என்று நண்பர் ஜோதிஜிக்கு சந்தேகம்! ஆனால் சுவாமி மாதிரி சிலருடைய தேவை இந்திய அரசியலில் எப்போதுமே  இருந்துவருகிறது என்பது என்னுடைய வாதம். இந்த செய்தியையே எடுத்துக் கொள்ளுங்கள்! பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நிரந்தரத்தடையாக மாற்றலாமா என்று பாகிஸ்தான் யோசிப்பதாக. ஏர் இந்தியாவுக்கு இதனால் 575 கோடி ரூபாய், எரிபொருள் செலவு கூடுதலாக சுமை! அதேபோல வான்வழியைப் பயன்படுத்த தடை விதித்ததனால் பாகிஸ்தானுக்கும் 360 கோடிரூபாய் வருவாய் இழப்பு! வறட்டு இழுப்பு ஆசாமிகளுக்கு எப்படிப் புரிய வைப்பீர்கள்? மேலே வீடியோ 7 நிமிடம்! பாருங்கள்!  



கராச்சி குஜராத்தின் கட்ச் பகுதிக்கு மிக நெருக்கம். இங்கே படத்தில் கராச்சி துறைமுகம் இந்தியாவின் முந்த்ரா துறைமுகத்துக்கு (ஒரு தனியார் துறைமுகம்) மிகப்பக்கத்தில்  என்பதை ஒரு குத்துமதிப்பாகப் புரிந்து கொள்ள உதவியாக 
  
அரேபியக்கடல் பிராந்தியம் நமது கரையில் இருந்து 200 கிமீ   நமது கட்டுப் பாட்டுக்குள் வருவதைப் பயன்படுத்தி கராச்சி துறைமுகத்துக்கு போய்வருகிற வழியை அடைத்து விடலாமே  என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் சுவாமி!  ஏற்கெனெவே குற்றுயிரும் குலையுயிருமாகத் தவித்துக் கொண்டிருக்கிற பாகிஸ்தான் பொருளாதாரத்தை சுத்தமாக முடக்கி வைத்து விடுகிற யோசனை இது!             



சீதாராம் யெச்சூரி இன்னமும் பழைய நினைப்பிலேயே இருக்கிறார் போல! உடல்நலம்பாதிக்கப்பட்ட கட்சிக்காரர் ஒருவரை சந்திக்க ஜம்மு காஷ்மீர் போக அனுமதி வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்தார்! உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, அனுமதி எதற்காக வழங்கப் பட்டதோ அதற்குமட்டுமே பயன்படுத்த வேண்டும். போய்வந்த விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அரசியல் செய்யக்கூடாதென்றும் சேர்த்துச் சொல்லி இருக்கிறது. உச்சநீதிமன்றத்துக்கெதிராக வலது கம்யூனிஸ்ட் கட்சி D ராஜா கொந்தளித்திருக்கிறார். இங்கே விவாதத்திலும் கொந்தளிக்கிறார்கள்! ராகுல் காண்டி மூக்குடைபட்டு நிற்பதைப் பார்த்தபிறகும் கூட இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதை ஏன் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்? உங்களுக்காவது புரிகிறதா?        

Post Script ஆக First Things First ::  

தினசரி அரசியலைத் தொட்டுப் பதிவுகள் எழுதிக் கொண்டு இருப்பதில் வாசிப்பவருக்கு அலுப்பு வந்துவிடுகிறதே! எழுதுகிற உங்களுக்கு அலுப்பு வராதா? இப்படி என்னை யாரும் கேள்விகேட்கவில்லைதான்! ஆனால் காங்கிரசையே தொடர்ந்து தாளித்துக் கொண்டிருக்கக் கூடாதென்று கமென்ட் கட்டளைகள் வந்ததுண்டு.அந்தமாதிரி பதிவுகளில் அலுப்பு அடைகிறவர்கள் இந்தப்பக்கம் வருவதை நிறுத்திக் கொள்கிறார்கள் அப்படி ஒரு சாய்ஸ் அவர்களுக்கு இருப்பதால்   இந்தக் கேள்விக்கு, குறிப்பிட்டு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.