Saturday, August 15, 2009

சும்மா வந்ததில்லை, சுதந்திரம்! அல்லது, சுதந்திரம் இலவச இணைப்பு அல்ல!


இன்று சுதந்திர தினம்.

அரசுத் தொலைக் காட்சியில், கோட்டையில் கொடி பறப்பதையும், பெருகி வரும் ஊழலைப் பற்றிக் கவலைதெரிவித்துக் குடியரசுத் தலைவராக பிரதீபா படீல் உரையாற்றுவதைக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள்.

சினிமா நடிகர், நடிகைகளின் பேட்டியோடு, சிறப்புத் திரைப் படங்களையும் ஒளிபரப்பி, "இன்றைய நிகழ்ச்சிகள் முழுதும் பாருங்கள்! சுதந்திரத்தைப் போற்றுங்கள்!" என்று போட்டி போட்டுக் கொண்டு தனியார் தொலைக் காட்சிகள், ஏற்கெனெவே மழுங்கிப் போயிருக்கிறவனை இன்னமும் மழுங்கடித்துக் கொண்டிருப்பார்கள்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒரு அலுப்பு, சுதந்திர தினம் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமையில் வந்து தொலைத்து, ஒரு நாள் 'லீவு போச்சே!' என்று ஏதோ வடை போச்சேன்னு காக்கைகள் கரைகிற மாதிரிக் கரைந்துகொண்டிருப்பார்கள்.

பதிவர் ஒருவர் தனது பதிவில் கனவுகாணலாம் வாங்கன்னு சுதந்திரத் திருநாள் செய்தி எழுதுவார். இலவச இணைப்பாகப் போன வருஷம் நான் விடுத்த செய்தி இங்கே என்று சுட்டியும் கொடுப்பார்.

ஆக சுதந்திரம் என்பது, அவரவர் சாமர்த்தியத்திற்கேற்ப அடுத்தவனை முட்டாளாக ஆக்குவது அல்லது என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தம் கொள்ளப் படுவதாகக் குறுகிப்போய் விட்டது இல்லையா?

சுதந்திரம் என்பதை எப்படியெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறோம்!

வெள்ளத்தனைய மலர் நீட்டம் - மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு.

இப்படி ஒருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டுப் போனது செலக்டிவாக மறந்து போய்விடும். அய்யன் திருவள்ளுவருக்கு நூற்று முப்பத்து மூன்றடிக்குச் சிலைவைத்து விட்டது போதாதா?சிரமப்பட்டு, ஆவர் எழுதிய ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் படித்துக் கொண்டிருக்க வேண்டுமா என்ன?

ஆனால், இப்படியெல்லாம் அருமை தெரியாமல் இருந்துவிடுவார்களோ, எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்றோ இருந்துவிடாமல், வீராவேசத்தோடு சுதந்திரப் போராட்டத்தில் ஆயிரம் ஆயிரம் தியாகிகள் பங்கேற்றார்கள், ஜனங்களைத் திரட்டினார்கள், "ஆயிரம் உண்டிங்கு சாதி-இதில் அந்நியன் வந்து புகல் என்ன நீதி?"என்று, சொந்தச் சகோதரர்களுக்குள்ளே பஞ்சாயத்துப் பண்ண வரும் நரிகளையும், அடக்குமுறையைக் கையிலெடுத்த அந்நிய அரசையும் எதிர்த்துப் போராடினார்கள்.

பிரிட்டிஷ் சாம்ராஜியத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று எந்த நேரத்தில் சொல்ல ஆரம்பித்தார்களோ, அப்போதே அஸ்தமனமும் ஆரம்பமாகிவிட்டது. சந்தையைப் பிடிப்பதில் வியாபாரிகளுக்குள்ளே நடந்த சண்டையில், நரிகளைப் போல, பிரித்து ஆளுவதையே தங்களுடைய மூலதனமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, தோற்றுப் பின்வாங்க வேண்டி வந்தது. ஆண்டுவந்த பகுதிகளுக்குச் சுதந்திரம் வழங்க வேண்டிய நிர்பந்தமும் வந்தது.

கடந்தகாலத்தில் நடந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கொஞ்சம் முயற்சி, வாசித்தல் இதெல்லாம் தேவையா என்றிருப்பவர்களுக்காக, இங்கே சுருக்கமாக.

நாடு பிரிவினையாவதை காந்தியுமே விரும்பவில்லை. ஆனால், அவரது பிரியத்திற்குப் பாத்திரமாக இருந்த நேரு அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. பிரிவினையை ஒப்புக் கொண்டு, ஆகஸ்ட் பதினான்காம் தேதி நாட்டுக்கு விடுத்த முதல் செய்தி, "இந்தியா இந்த நாளுக்காக, விதியோடு செய்துகொண்ட ஒப்பந்தம்...." என்று ஆரம்பித்தது. பதினைந்து வருடங்களுக்குப் பின்னால், சீன ஆக்கிரமிப்பின்போது, அக்சாய்ச்சின் பகுதியைச் சீனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதைப் பற்றி சர்வ அலட்சியமாக 'ஒரு புல் கூட முளைக்காத கட்டாந்தரை' என்று அதே நேரு பாராளுமன்றத்தில் சொல்ல முடிந்தது.

அதே நேரம் திருச்சி வானொலியில், விடுதலைப் போராட்டத்தில், காந்தியின் வருகைக்கு முன்னால், தீவீரமாகப் போராட்டத்தை நடத்தியவர்களுள் ஒருவரான ஸ்ரீ அரவிந்தர் உரையாற்றியதும் நடந்தது. அகண்ட பாரதத்தைத் தன்னுடைய தாயாகவே வழிபட்ட தேசபக்தரான ஸ்ரீ அரவிந்தர், அரசியலில் இருந்து ஒதுங்கி ஆன்மீக சாதனையில் ஈடு படுத்திக் கொண்டிருந்த வேளையிலும் கூட, வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு முன்னால், சர் ஸ்டாஃபொர்ட் கிரிப்ஸ் கமிஷனின் பரிந்துரைகளில், சாதகமான அம்சம்கள் நிறைய இருக்கிறது, ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அன்றைய காங்கிரஸ் தலைமைக்குச் சொன்னபோதிலும், காங்கிரஸ் தலைமை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னால் நாடு பிரிவினைக்குள்ளாவதற்கு முன்னோடியாகவே காங்கிரஸின் நிராகரிப்பு அமைந்து போனதில் ஸ்ரீ அரவிந்தருக்கு மிகுந்த வருத்தமே.

ஆனாலும், ஆகஸ்ட் பதினான்காம் தேதி, திருச்சி வானொலியில் அவர் ஆற்றிய உரை இப்படி ஆரம்பிக்கிறது:

August 15th, 1947 is the birthday of free India. It marks for her the end of an old era, the beginning of a new age. But we can also make it by our life and acts as a free nation an important date in a new age opening for the whole world, for the political, social, cultural and spiritual future of humanity. August 15th is my own birthday and it is naturally gratifying to me that it should have assumed this vast significance. I take this coincidence, not as a fortuitous accident, but as the sanction and seal of the Divine Force that guides my steps on the work with which I began life, the beginning of its full fruition. Indeed, on this day I can watch almost all the world-movements which I hoped to see fulfilled in my lifetime, though then they looked like impracticable dreams, arriving at fruition or on their way to achievement. In all these movements free India may well play a large part and take a leading position. The first of these dreams was a revolutionary movement which would create a free and united India. India today is free but she has not achieved unity. At one moment it almost seemed as if in the very act of liberation she would fall back into the chaos of separate States which preceded the British conquest. But fortunately it now seems probable that this danger will be averted and a large and powerful, though not yet a complete union will be established. Also, the wisely drastic policy of the Constituent Assembly has made it probable that the problem of the depressed classes will be solved without schism or fissure.

But the old communal division into Hindus and Muslims seems now to have hardened into a permanent political division of the country. It is to be hoped that this settled fact will not be accepted as settled for ever or as anything more than a temporary expedient. For if it lasts, India may be seriously weakened, even crippled: civil strife may remain always possible, possible even a new invasion and foreign conquest. India’s internal development and prosperity may be impeded, her position among the nations weakened, her destiny impaired or even frustrated. This must not be; the partition must go.

Let us hope that that may come about naturally, by an increasing recognition of the necessity not only of peace and concord but of common action, by the practice of common action and the creation of means for that purpose. In this way unity may finally come about under whatever form — the exact form may have a pragmatic but not a fundamental importance. But by whatever means, in whatever way, the division must go; unity must and will be achieved, for it is necessary for the greatness of India’s future.
Another dream was for the resurgence and liberation of the peoples of Asia and her return to her great role in the progress of human civilisation. Asia has arisen; large parts are now quite free or are at this moment being liberated: its other still subject or partly subject parts are moving through whatever struggles towards freedom. Only a little has to be done and that will be done today or tomorrow. There India has her part to play and has begun to play it with an energy and ability which already indicate the measure of her possibilities and the place she can take in the council of the nations. The third dream was a world-union forming the outer basis of a fairer, brighter and nobler life for all mankind. That unification of the human world is under way; there is an imperfect initiation organised but struggling against tremendous difficulties. But the momentum is there and it must inevitably increase and conquer. Here too India has begun to play a prominent part and, if she can develop that larger statesmanship which is not limited by the present facts and immediate possibilities but looks into the future and brings it nearer, her presence may make all the difference between a slow and timid and a bold and swift development. A catastrophe may intervene and interrupt or destroy what is being done, but even then the final result is sure. For unification is a necessity of Nature, an inevitable movement. Its necessity for the nations is also clear, for without it the freedom of the small nations may be at any moment in peril and the life even of the large and powerful nations insecure. The unification is therefore to the interests of all, and only human imbecility and stupid selfishness can prevent it; but these cannot stand for ever against the necessity of Nature and the Divine Will. But an outward basis is not enough; there must grow up an international spirit and outlook, international forms and institutions must appear, perhaps such developments as dual or multilateral citizenship, willed interchange or voluntary fusion of cultures. Nationalism will have fulfilled itself and lost its militancy and would no longer find these things incompatible with self-preservation and the integrality of its outlook. A new spirit of oneness will take hold of the human race. Another dream, the spiritual gift of India to the world has already begun. India’s spirituality is entering Europe and America in an ever increasing measure. That movement will grow; amid the disasters of the time more and more eyes are turning towards her with hope and there is even an increasing resort not only to her teachings, but to her psychic and spiritual practice. The final dream was a step in evolution which would raise man to a higher and larger consciousness and begin the solution of the problems which have perplexed and vexed him since he first began to think and to dream of individual perfection and a perfect society. This is still a personal hope and an idea, an ideal which has begun to take hold both in India and in the West on forward-looking minds. The difficulties in the way are more formidable than in any other field of endeavour, but difficulties were made to be overcome and if the Supreme Will is there, they will be overcome. Here too, if this evolution is to take place, since it must proceed through a growth of the spirit and the inner consciousness, the initiative can come from India and, although the scope must be universal, the central movement may be hers. Such is the content which I put into this date of India’s liberation; whether or how far this hope will be justified.

இன்று ஸ்ரீ அரவிந்தருடைய பிறந்த நாள்.
முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நூற்றாண்டை ஒட்டி அளித்த செய்தி. இன்றைக்கு ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் ஸ்ரீ அரவிந்தர் பிறந்தநாளை ஒட்டி வெளியான தரிசன நாள் செய்தி.
மன உருக்கத்தோடு, தன்னுடைய பிறந்த நாளன்று வந்த இந்திய சுதந்திரத்தை, இறைவன் தனக்கு அளித்த பெரும் கொடை என்றே கொண்டாடும் தெய்வப்பெருந்தகை ஸ்ரீ அரவிந்தரை வணங்குவோம்!

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், திரு நா.கணேசன் தினமணியில் வெளியான ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய சொற்சித்திரத்தைச் சுட்டியுள்ளார். இங்கே படிக்கலாம்!

1 comment:

  1. கிருஷ்ணமூர்த்தி சார்!

    இன்று தான் படித்தேன்.. அருமையான கட்டுரை. எனது சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails