சும்மா வந்ததில்லை இந்த சுதந்திரம்!


இங்கே இணையத்தில் நிறையப்பேர் சுதந்திரத்தைப் பற்றி அவர்களுடைய பார்வையில் பட்டதை எழுதியிருக்கிறார்கள்! அவர்களுக்காக ஒரு படக் கதை!

சுதந்திரம் என்பது தோட்டம் தான்! பூச்செடி வைத்துப் பூக்கள் மலர்வதோ.
களர்நிலமாக்கி ஒன்றுக்கும் உதவாமல் செய்வதோ உன்கையில் தான் இருக்கிறது!
தோழர் கே. வரதராஜனுக்குத் தயிர் வடை மீது கொள்ளைப் பிரியம்! அதே மாதிரி, அடிக்கடி பிரியமாகச் சொல்வது, ஒரு ஆங்கிலப் பழமொழியை:, "நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டில் ஏறிச் சென்றே நரகத்துக்கும் போகலாம்!"

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணங்களை நினைத்துப் பார்க்கிறபோது தோழர் வரதராஜன் சொல்கிற இந்த ஆங்கிலப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. முந்தைய பதிவில், சும்மா வந்ததில்லை இந்த சுதந்திரம் என்ற தலைப்புக் கொடுத்தபோதே, சுமைகளோடு வந்தது தான் இந்த சுதந்திரம் என்ற அர்த்தமும் தொக்கி நின்றதை உங்களில் பலர் சரியாகக் கவனித்திருக்கக் கூடும்!

ஜஸ்வந்த் சிங், பி ஜெ பி கட்சியில் முக்கிய தலைவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இவருக்கும் வசுந்தரா ராஜேக்கும் நடந்த நீயா நானா போட்டியில், ஆடுகள் மோதிக் கொண்ட போது நரி சௌகரியமாக வழிகிற ரத்தத்தைக் குடித்த கதையாக காங்கிரஸ் சத்தமே இல்லாமல் ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப் பற்றி விட்டது நினைவிருக்கலாம்.சொந்த மாநிலத்தில் போட்டியிட்டால், எதிர் கோஷ்டி உள்வேலை செய்து கவிழ்த்துவிடும் என்பதால், மனிதர் நாடாளுமன்றத் தேர்தலில் டார்ஜிலிங் தொகுதியில் நின்று ஜெயித்திருக்கிறார், ஏதோ ஞானோதயம் வர அறுநூறு பக்கங்களில் ஒரு புத்தகமும் எழுதி வெளியிட்டிருக்கிறார். பாகிஸ்தானின் சிற்பியாகக் கருதப்படும் முகமது அலி ஜின்னாவின் கதையை எழுதியிருக்கிறார் .புத்தகத்தின் மையக் கருத்தாக, ஜின்னாவை ஒரு வில்லனாகவே சித்தரித்த வரலாற்றுத் தவறைப் பற்றி பேசியிருக்கிறார்.

இப்போது சொல்ல வருகிற முக்கியமான விஷயம், கண்மூடித்தனமாக இருப்பவர்கள் கூட சமயத்தில் உண்மையைத் தொட்டுப் பேசி விடுகிறார்கள் என்பது தான்! என்னதான், தனிநபர் ஆளுமை, அதிகாரம், கவர்ச்சியின் கீழ் உண்மைகளைப் போட்டு மறைத்து வைத்தாலும், அத்தனை தடைகளையும் மீறி, உண்மை ஒருநாள் வெளிப்பட்டு விடுகிறது என்பது தான். ஆசிய ஜோதி என்றும், சாச்சா நேரு என்றும்,அழைக்கப் பட்ட ஒரு ஒரு தனிநபரின் சொந்த பலவீனங்கள், பிடிவாதங்களால், இந்த தேசம் இன்றைக்கும் பல இடியாப்பச் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சிக்கல்களைத் தீர்க்கத் தெரியாதவர்களையே மறுபடி மறுபடி தேர்ந்தெடுத்து, பிரச்சினைகளை மேலும் பெரிதாக்கி அவதிப பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஊழல் செய்வதில் இருந்து, பாராளுமன்ற ஜனநாயகம் வரை எல்லாவற்றிலுமே பிரிடிஷ்காரனைக் காப்பி அடித்துக் கொண்டிருக்கிற ஒரு தேசம், அவனிடத்தில் இருக்கும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களையும் சேர்த்துக் காப்பி யடிக்கத் தெரியாமல் இருப்பது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

உதாரணமாக, இரண்டாம் உலகப் போர் மூண்ட சமயம், கோமாளி மாதிரி இருந்தாலும், கொஞ்சம் செயல் படவும் தெரிந்த ஒருத்தரை, வின்ஸ்டன் சர்ச்சிலைப் பிரதம மந்திரியாக்கினார்கள். போர் முடிந்தது, சர்ச்சிலுக்கு இன்னுமொருதரம் பிரதமராக ஆசை இருந்தது. பிரிடிஷ்காரனுக்குத் தெளிவும் இருந்தது, இந்த மாதிரிக் கோமாளியை ஆட்சியில் நீடிக்க விட்டால் நாடு தாங்காது என்று, தோற்கடித்து வீட்டுக்கு மரியாதையோடு அனுப்பி வைத்தார்கள். அது ஏன் நமக்கு இன்னமும் தெரியவில்லை?


Jinnah -- India, Partition, Independence


பேட்டியில் புத்தகத்தைப் பற்றிப் பேசும்போது ஜஸ்வந்த் சிங் சொன்னது இது:

Karan Thapar: How seriously has India misunderstood Jinnah?

Jaswant Singh: I think we misunderstood because we needed to create a demon.

Karan Thapar: We needed a demon and he was the convenient scapegoat?

போதிமரம் இல்லாமலேயே, நம்மூர் அரசியல் வாதிகளுக்கு, அவ்வப்போது ஞானோதயம் வந்து விடுகிறது. அந்த நேரங்களில், மறந்துபோன, அல்லது மறக்கடிக்கப் பட்ட உண்மைகளையும்பேசிவிடுகிறார்கள்!

இந்தப் புத்தகத்தை, உள்ளூர்க் கடைகளுக்கு வந்து சேர்வதற்கு முன்னாலேயே, பரபரப்புச் செய்தியாக்கும் வழக்கமான மார்க்கெட்டிங் தவிர, ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து சிஎன் என் - பி என் லைவ் தொலைக் காட்சியில் கரன் தபார் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பேட்டி அளித்திருப்பதன் தொகுப்பை நேற்று மாலை தான் படித்தேன். இன்று காலையில், நேற்று புத்தக வெளியீட்டின்போது ஏழு பேர் கொண்ட குழு புத்தகத்தை அறிமுகப் படுத்தி அல்லது விமரிசனம் செய்ததைப் பற்றியும், வழக்கம் போல ஆர் எஸ் எஸ், ஜஸ்வந்த் சிங்குடைய கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்ன செய்தியையும் படித்தேன்.

பூனை இளைத்தால், எலி வந்து எங்கேயோ தட்டிஆட்டைக்கு வர்றியான்னு கேக்குமாம். அதே மாதிரி, தொடர்ந்து இரண்டு முறை தோற்றால், ஏற்கெனெவே தோற்று நொந்தவனை இன்னும் நூலாக்கும் வேலை எப்போதுமே நடக்கும். பி ஜெ பியிலும் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஜஸ்வந்த் சிங் ஒருபக்கம் புத்தகம் எழுதி, அதைப் பரபரப்புச் செய்தியாக்கிவிட்டு, கமுக்கமாகி விட்டாரென்று செய்திகள் வரும் வேளையில், வசுந்தரா ராஜேவும் அத்வானி வீட்டு வாசல் முன்னால் தனக்கிருக்கும் ஆதரவை நிரூபித்து விட்டு, கட்சியின் முடிவை மீறுகிற எண்ணமே இல்லை என்று பவ்யமாகச் சொல்லி, ராஜ்நாத் சிங்கின் மூக்கை உடைத்திருக்கிறார்.

இதைச் சொல்லும் வேளையில், பி ஜெ பி அரசியல் உள்விவகாரங்களிலோ, நடப்பு அரசியலைப் பற்றி விவாதிக்கவோ,முற்படவில்லை. வால்பையன் மாதிரி, நிறையப்பேர், இங்கே வரலாறு என்பதே கட்டுக் கதை, நம்முடைய வரலாற்றையே என்றைக்கோ எவனோ எழுதி வைத்திருப்பதில் இருந்து தான் தெரிந்துகொள்ள முடிகிறது என்றெல்லாம்சொல்லிவிட்டு, அவ்வளவுதான் என்று போய்விடுகிறார்களே, அவர்களுக்காக, ரொம்ப இல்லை ஜென்டில்மேன், சும்மா ஒரு எழுபது வருடங்களுக்குள் நடந்ததையே நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே, அப்புறம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே 'வாலொடு' முன்தோன்றிய மூத்த குடி மக்களுடைய வரலாற்றை எப்படிப் புரிந்து கொள்வது -வெறுமனே கேட்டுவிட்டுப் போவதற்காக மட்டும் அல்ல, கொஞ்சம் யோசிப்பதற்காகவும் கூட!

இணையத்துப்பக்கம் வர்றதே, நமீதாவின் சைசு என்ன, நயன்தாரா லேட்டஸ்டா இப்ப யாரோடு சுத்தறாங்க, பிரபுதேவாவோட ஊட்டுக்காரம்மா எப்படி அன்பான மிரட்டல் விட்டிருக்காங்க இதெல்லாம் தெரிஞ்சுக்கத்தான்!
பெருசு நீ வேற சரித்திரம் வரலாறுன்னு டரியலாக்கினே.....ன்னு கோபப் படறவங்க இங்கேயே அபீட்டாயிக்கலாம்.

இதுவரை ஆகாமையா இருக்கப் போறீங்கன்னு முனகறதுக்கு எனக்கு இன்னமும் ஒரு முரளி மனோகர் கிடைக்கவில்லை! அதனால நேரடியாவே விஷயத்துக்கு வந்துடுவோம்!

/பிரிட்டிஷ் சாம்ராஜியத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று எந்த நேரத்தில் சொல்ல ஆரம்பித்தார்களோ, அப்போதே அஸ்தமனமும் ஆரம்பமாகிவிட்டது. சந்தையைப் பிடிப்பதில் வியாபாரிகளுக்குள்ளே நடந்த சண்டையில் [உலகப் போர்களில்], நரிகளைப் போல, பிரித்து ஆளுவதையே தங்களுடைய மூலதனமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, தோற்றுப் பின்வாங்க வேண்டி வந்தது. ஆண்டுவந்த பகுதிகளுக்குச் சுதந்திரம் வழங்க வேண்டிய நிர்பந்தமும் வந்தது.

கடந்தகாலத்தில் நடந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கொஞ்சம் முயற்சி, வாசித்தல் இதெல்லாம் தேவையா என்றிருப்பவர்களுக்காக, இங்கே சுருக்கமாக./

இப்படிப் போனபதிவில் பார்த்தோம், இல்லையா?

ஒன்றை நினைவில் வைத்துக் கொண்டு மேலே படியுங்கள். மொகலாயர்கள் படையெடுத்துக் கோவில்களை மட்டும் தான் இடித்தார்கள். சொத்துக்களைக் கொள்ளையடித்தார்கள். படைஎடுப்பவர்கள் எல்லோருமே செய்வது தான் அது. கிட்டத் தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக, மொகலாயர்கள், இந்த நாட்டில் கணிசமான பகுதியை மட்டுமே ஆண்டுவந்த போதிலும், இந்த நாட்டில் மிக பெரிய கலாச்சாரச் சீரழிவையோ, ஒட்டுமொத்தமான வரலாற்று அழிவையோ அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக, காலப் போக்கில் சமரசமான வழியையும் தேடியதும் நடந்தது. ஆங்காங்கே,சிறு மோதல்களும் நடந்துகொண்டுதான் இருந்தன. ஆனாலும், பிரதேசங்களாகவும், குறுநில மன்னர்களாகவும், ஜாகீர்தாரர்களாகவும், பழமொழி பேசுபவர்களாகவும் இருந்த பாரதம், உணர்வில் ஒன்றாகவே இருந்தது. இந்த மண்ணில் பிறந்தவர்கள் அனைவருடைய உயிர்த் துடிப்பாகவும் இருந்தது.

வசதி படைத்தவன் தர மாட்டான்-அவனை
வயிறு பசித்தவன் விட மாட்டான்
இப்படிப் பாட வேண்டிய அவசியம் இல்லாமலேயே, இருப்பதை ஊரோடும் உறவோடும் பகிர்ந்துண்ணும் பழக்கம் பாரம்பரியமாகவே இருந்தது.

போர்த்துக்கீசியக் கடலோடிகளாகச் சில காட்டுமிராண்டிகள் இந்த மண்ணில் கிறித்தவத்தோடு ஊடுருவினார்கள். அப்புறம் டச்சு, பிரிட்டிஷ் என்று வியாபாரம் செய்கிற போர்வையில் ஒரு கூட்டம் நுழைந்தது. இப்படி நுழைந்தவர்களில், குள்ள நரி போலத் தந்திரமாக, இங்கேயிருந்த ஆடுகளை முட்டி மோதவிட்டு, சுகமாக ரத்தம் குடித்துக் கொண்டிருந்த வித்தை ஆங்கிலேயனுக்கு சாத்தியப் பட்டது.

அடிமையானோம்.

குள்ள நரி போல, தந்திரமாக இங்கிருப்பவர்களை பிரித்து வைக்கவும், இரண்டு பக்கமும் தோழன் போல நடித்து, இரண்டுபக்கத்தையும் ஏமாற்றி அடிமைப் படுத்தவும், கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்த ஆங்கிலேயனுக்குத் தெரிந்திருந்தது என்றால், மிக அற்பமான காரணங்களுக்காகக் கூட எதிரியிடம் விலை போக இங்கே சில புல்லுருவிகளும் இருந்தது, மறைக்க முடியாத விஷயம். துரைமார்களுக்கும், துரைசாணிமார்களுக்கும் இடுப்பு வேட்டியை அவிழ்த்துப் போட்டு நடைபாதை விரிப்பாக்கி, சுகம் கண்டு கொண்டிருந்த வெட்கம் கேட்டவர்களும் இங்கே இருந்தார்கள்.

ஒருபக்கம் பைபிளும், இன்னொருபக்க சாதீய முரண்பாடுகளும், குள்ளநரிக்குச் சாதகமாக இருந்த அதே நேரத்தில், பாபர், அவுரங்கசீப் என்று செத்துப்போன, முடிந்துபோன எதிரிகளோடேயே சண்டைபோடுவதாக நினைத்துக் கொண்டு,சொந்தச் சகோதரர்களாக வாழவேண்டிய மக்களிடையே பிளவையும், பிரிவையும் உண்டாக்க ஒரு கும்பல்உள்ளூரிலேயே தயாராகிக் கொண்டிருந்தது.அந்தப்பக்கமும் நாம் மைனாரிடி, நமக்குப் பாதுகாப்பு இல்லை, நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற மாதிரி ஆசாமிகள் உருவாகி விஷமங்களைச் செய்துகொண்டிருந்ததும் நடந்தது.

குள்ள நரிக்குக் கொண்டாட்டம் தான் இல்லையா? அதுதான் நடந்தது.

தொடர்ந்து பேசுவதற்கு முன், ஸ்ரீ அரவிந்தர் வழங்கிய,சுதந்திர தினத்தை ஒட்டித் திருச்சி வானொலியில் ஒலிபரப்பப் பட்டசெய்தியின் இந்தப் பகுதியை, மறுபடி படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:

"But the old communal division into Hindus and Muslims seems now to have hardened into a permanent political division of the country. It is to be hoped that this settled fact will not be accepted as settled for ever or as anything more than a temporary expedient. For if it lasts, India may be seriously weakened, even crippled: civil strife may remain always possible, possible even a new invasion and foreign conquest. India’s internal development and prosperity may be impeded, her position among the nations weakened, her destiny impaired or even frustrated. This must not be; the partition must go.

Let us hope that that may come about naturally, by an increasing recognition of the necessity not only of peace and concord but of common action, by the practice of common action and the creation of means for that purpose."


ஸ்ரீ அரவிந்தர் உரையிலிருந்து, முழுவதும் படிக்க, போன பதிவில் காணக் கிடைக்கும்.

8 comments:

 1. :-))))))) முதல் வருகை.... அமர்க் காலமாவே இருக்கு உங்க பக்கம்.....

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி. இதுவரை நடந்த அமர்க்களமே போதும். போதும் என்றாகிவிட்டதல்லவா?
  வாருங்கள், கொஞ்சம் அமைதியாக யோசிப்போம்!

  ReplyDelete
 3. In your post, the most interesting part is the quote from Arbindo:

  "But the old communal division into Hindus and Muslims seems now to have hardened into a permanent political division of the country. It is to be hoped that this settled fact will not be accepted as settled for ever or as anything more than a temporary expedient. For if it lasts, India may be seriously weakened, even crippled: civil strife may remain always possible, possible even a new invasion and foreign conquest. India’s internal development and prosperity may be impeded, her position among the nations weakened, her destiny impaired or even frustrated. This must not be; the partition must go.

  Let us hope that that may come about naturally, by an increasing recognition of the necessity not only of peace and concord but of common action, by the practice of common action and the creation of means for that purpose."

  There appears to be a contradiction between what you write and what Arbindo says.

  You are harsh on muslims and christians: You call them barabarians (காட்டுமிராண்டிகள்) and cunning foxes (குள்ள நரிகள்). Arbindo says that the divide between religious groups should be merged. It should not last as a perament one. It should be temporary only. Only then, India can progress.

  In other words, Arbindo has a large heart to accomodate different religious people; and want them to cohabit in mutual harmony. He accepts a plural society. If not, you can quote some other passage where he calls muslims and christains, kaatumiraandikal and foxes.

  What is your opinion on that?

  (In VP's blog, you have harped on my two nicks. I have explained why I had dropped one and retained the other, in my blog - www.myownquiver.blogspot.com)

  ReplyDelete
 4. நெருஞ்சி முள்! அல்லது கத்தி மீன்!
  இப்படி கூப்பிடுவதற்கே ஒரு மாதிரி இருக்கிறது!
  ஆனாலும், பழைய தமிழ்ப் புலவர்களின் நகைச்சுவையாக படித்து ரசித்ததில் இப்படி வரும்:
  "பத்து ரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை வாங்கித் தேய்!"
  நெருஞ்சி முள் குத்திவிட்டதே என்று அவஸ்தையோடு கேட்ட ஒரு புலவருக்கு இன்னொரு புலவர் சொல்லிக் கொடுத்த வழி இது. பத்துரதன்-தசரதன், புத்திரன்-ராமன், மித்திரன்-சுக்ரீவன், சத்துரு-வாலி, அவன் பத்தினி-தாரை, காலை வாங்கி என்பது இங்கே தாவில் இருக்கும் காலை வாங்கினால், தரை. தரையில் தேய் சரியாகப்போய்விடும் என்பது இதற்கு அர்த்தம்.

  இன்றைக்கு,இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்கப் பேசினால் பைத்தியக்காரப் பட்டம் தான் கிடைக்கும்- இலக்கியவாதி என்றோ புலவர் என்றோ அல்ல.

  அதே மாதிரி, சொல்ல வந்ததை நேரடியாகவே, தமிழிலேயே கேட்டிருந்தீர்களானால் இவ்வளவு முன்னுரைக்கு அவசியம் இருந்திருக்காது.

  முதலில், நீங்கள் ஆவலோடு தெரிந்துகொள்ள விரும்பின விஷயம், வால்பையனுடைய பதிவில் தமிழ் வாத்தியார் மாதிரி, நீங்கள் இலக்கணப் பிழையெல்லாம் காட்டி பேசினது. கருத்து முக்கியம், இலக்கணம் அதற்கப்புறம் தான் என்று தான் அங்கே அந்தப் பின்னூட்டம். அப்படித் தமிழ் வாத்தியாராக திருத்தம் செய்ததிலேயே இலக்கணப் பிழை ஒன்று இருந்ததையும் தான் சுட்டிக் காட்டினேன்.

  ReplyDelete
 5. நெருஞ்சிமுள், அல்லது கத்தி மீன்!
  அப்புறமாக, என்னுடைய பதிவில் சிலவார்த்தைகள் கடுமையாக இருப்பதாகவும் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள். முஸ்லிம்கள் மீதும் கிறித்தவர்கள் மீதும் மடுமையாக வார்த்தைகளைச் சொல்லியிருப்பதாக ஒரு கருத்தை நீங்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

  ஆயிரம் வருட வரலாற்றை, அறுநூறு வார்த்தைகளுக்குள் சொல்ல முற்படும் போது, எது உச்சமோ அதில் அழுத்தம் கொடுத்திருப்பது உங்களுக்குக் கடுமையாகத் தெரிந்தால், அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

  போர்த்துக்கீசியக் கடலோடிகள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதும், ஆங்கிலேயர்கள் ரொம்ப நியாயவான்கள் போல நடித்து, பூனைகளுக்கு அப்பம் பிட்டுக் கொடுத்த கதைபோல, இங்கே இருந்தவர்களுக்குள்ளேயே, எப்படியெல்லாம் பிரித்தாளும் தந்திரங்களை கைக் கொண்டார்கள் என்பது கண்முன்னாலேயே, அவர்கள் எழுதி வைத்துப் போனதில் இருந்தே அறியக் கிடைக்கிற வரலாறு. குள்ளநரி தந்திரமாக, வஞ்சகமாகச் செயல்படுவோரைக் காலம் காலமாகச் சித்தரிக்கும் உருவகம், இதில் எங்கே கடுமை வந்தது? அப்படியே, கடுமை என்றே வைத்துக் கொண்டாலும் பொய் எங்கே இருக்கிறது?

  அடுத்து, ஸ்ரீ அரவிந்தர் சொன்னதில் இருந்து நான் முரண்படுவதாகவும், ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். பதிவை நீங்கள் முழுமையாகப் படிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. உங்களுடைய கவனமெல்லாம், இந்தப் பதிவை விமரிசிப்பது அல்ல, வால்பையன் பதிவில் என்னுடைய பின்னூட்டத்தைப் பற்றிப் பேசுவதும், அதுபற்றி உங்களுடைய பதிவில் நீங்கள் சொல்லியிருப்பதைச் சொல்லி அங்கே வந்து பார் என்பதில் தான் இருந்தது இல்லையா? வருகிறேன், படிக்கிறேன்.

  இந்தப் பதிவில் நான் கடுமையான கருத்தைச் சொல்லியிருப்பது, முஸ்லிம்களைப் பற்றியோ, கிறித்தவர்களைப் பற்றியோ அல்ல, இன்னமும் பாபர் காலத்து, கஜினி, கோரி முகமது காலப் படையெடுப்புக்களை மட்டுமே பேசிக் கொண்டு இருப்பவர்களை மட்டுமே.

  ஸ்ரீ அரவிந்தருக்குப் பெரிய இதயம் இருந்தது என்று நீங்கள் சர்டிபிகேட் கொடுத்திருப்பதை, இன்றைய தியானத்தில் ஸ்ரீ அரவிந்தரிடம் சேர்த்து விடுகிறேன்!

  ReplyDelete
 6. நெருஞ்சிமுள் என்ற கத்திமீன் மறுபடி இரண்டு பின்னூட்டங்கள் அனுப்பியிருக்கிறார். அவர் வேண்டியபடி அவருடைய வலைப் பக்கங்களிலும் போய்ப் பார்த்தாயிற்று. இதற்குமேல் அவருடைய வலைப்பதிவு, பின்னூட்டங்களைப் பற்றிப் பேசுவது நேரத்திற்குப் பிடித்த கேடு என்று கருதுவதால், பின்னூட்டங்களை, மட்டுறுத்தியிருக்கிறேன். அவர் அனுப்பிய பின்னூட்டம், ரெகார்டுக்காக என்னுடைய அஞ்சலில் இருக்கிறது.

  ReplyDelete
 7. //நெருஞ்சி முள்! அல்லது கத்தி மீன்!
  இப்படி கூப்பிடுவதற்கே ஒரு மாதிரி இருக்கிறது! //

  Shakespeare asks:

  "What's in a name? That which we call a rose
  By any other name would smell as sweet."

  Will you decide your preference on the basis of a man's name or the shape of his nose?

  If so, we discriminate for trivial reasons.

  ReplyDelete
 8. பெயரில் ஒன்றும் இல்லை தான்.
  ராமன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருமே ராமனாக வாழ்வதில்லை, குறைந்தபட்சம் முயற்சிப்பதுகூட இல்லை என்பது இங்கே எல்லோருக்கும் தெரிந்தது தான்.அப்படிப் பிரித்துப் பார்க்கிற பழக்கம் இல்லை, அதற்கு எனக்கு எந்த அருகதையும் இல்லை.

  பெயரை வைத்து விமரிசிக்க நான் முனையவில்லை. டோண்டு ராகவன், வால்பையன் வலைப்பதிவுகளில் இப்போது இந்தப்பக்கம், அப்புறம் உங்களுடைய இரண்டு பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டுத் தான்,இதற்கு மேலும் இந்தமாதிரிப் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்தேன்.

  நீங்கள் உங்கள் தரப்பை எடுத்துச் சொல்லும் விதத்தில் மாற்றம் செய்யாதவரை, இந்த முடிவிலும் மாற்றம் இல்லை. டோண்டுராகவனிடமும் இப்படித்தான் அனானியாக விவாதித்துக்கொண்டேபோய், அப்புறம் எனக்கும் ப்ளாக்கர் அடையாளம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததை நினைவில் வைத்திருக்கிறேன். இன்னொரு பின்னூட்டம், கொஞ்சம் சமாதானமாக, என்னுடைய பதிவுகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி எழுதியிருப்பதை, அதில் வேறு உருப்படியான விஷயம் எதுவும் இல்லை என்பதால் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!