சிறந்த சரவெடிப் பதிவர் விருது !

சரவெடிய என்னமா வெடிச்சேன்னு பெருமிதமா வால்பையன்!
ரசித்துக் கேட்கும் பதிவுலக நண்பர்கள்


தமிழ்ப் பதிவுலகில் இப்போதைக்கு ரொம்ப சூடாகப் போய்க் கொண்டிருக்கும் தலைப்பு கடவுள் நேற்று முளைத்த காளானா, இல்லை அதற்கும் முந்தியா?

பட்டிமன்றமெல்லாம் வெறும்வெட்டி மன்றம் தான்னு எந்த நேரத்துல எழுதினேனோ தெரியலை சாமிகளா, எதுக்கு வெட்டி மன்றமாப்போகணும், சரவெடி கொளுத்திப் போடுகிற வேட்டு மன்றமாக ஆக்கிடலாமேன்னு , சரவெடியை கொளுத்திப் போட்டு, நல்லாச் சூட்ட கிளப்பினாருய்யா நம்ம வால்பையன்!

இங்கே, அங்கேன்னு இன்னும் சரம் சரமா வெடிச்சுட்டிருக்கிற இந்த நேரம், இன்னும் எங்கெல்லாம் வேட்டுச் சத்தம் கேக்கப் போகுதுன்னு சஸ்பென்ஸ் இன்னும் தீரலே!

பாவம் தமிழ் ஓவியா ஐயா, கஷ்டப்பட்டு, கட் அண்ட் பேஸ்ட் வேலையெல்லாம் பண்ணி இப்பத்தான் ரொம்ப சமீபத்துல 1930, 1940 வாக்குல பெரியார் பேசினதையெல்லாம் தூசு தட்டி மூவாயிரம் பதிவை நெருங்கிக் கின்னஸ் சாதனை செய்ய இருக்கும் நேரத்துல, வந்தாரய்யா வால் பையன்! இவர் கொளுத்திப்போட்ட சரவெடியில, சாதனை கொஞ்சம் தள்ளிப்போச்சு!

நம்ம வால்ஸ் ஒரு கொலைவெறியோட தான் களத்துல இறங்கிட்டாருன்னு பாத்தா, அவரு ரொம்ப நிதானமா கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாரு! பின்னூட்டமிட வந்த மக்கள் தான் யார்தலையை யார் பிய்க்கிறதுன்னு தெரியாம ரொம்ப சூடாகிப் போயி, ஏற்கெனெவே மழையில்லாம அனல் காத்து இன்னும் கொறையலே, பதிவுலகம் ரொம்பவே களை கட்டிப் போச்சு!

ஆக, நம்ம வால்பையனும் ஒரு வாலானந்தா ரேஞ்சுக்கு வந்தாச்சு!

பின்னூட்டம் போட வந்தவங்கல்லாம், இடமில்லாம, அவங்கவங்க பதிவிலேயே மிச்சம் மீதி இருக்குற பொட்டு வெடியை வெடிச்சிட்டிருக்கும் இந்த சூடான நேரத்துல,

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!

தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரது சார்பாகவும், வால்பையன் ரசிகர் மன்றம், வால்பையன் நற்பணி இயக்கம், சார்பாகவும்

வால்பையன் திரு அருணுக்கு
சிறந்த சரவெடிப் பதிவர்
விருதை வழங்கி அன்னார் இந்த சாதனையைத் தொடர்ந்து செய்து வர வேண்டிக் கொள்கிறோம்!

அட, இந்தப் பரபரப்புல, என்ன கேட்டோம், என்ன பதில் வந்தது, எது சரியானதுங்கரதை கொஞ்சம் மறந்தே போயிட்டோம்ல? கடவுள்ன்கிறது நேத்து முளச்சதா இருந்தா என்ன, முந்தாநா முளச்சதா இருந்தா என்ன! அத்தத் தெரிஞ்சு இன்னா செய்யப் பூரோம்னு நெனச்சுக்கினுருக்கீங்க? தெரிஞ்சுபோச்சுதுன்னா, அப்புறம் எதைவச்சுப் பதிவுகளில் பத்த வைக்கிறது? அப்புறம் நம்ம தமிழ் ஓவியா ஐயா என்னத்தச் செய்யறதுன்னு தடுமாறிப் போயிட மாட்டார்?

அதுக்கோசறந்தான்......


பட்டாசு வெடிக்கிற சூடு அடங்குவதற்குள்ளாகவே விருதை வழங்க வேண்டும் என்ற அவசரத்தில்,விருதுக்கான லோகோவை டிசைன் செய்ய முடியவில்லை![தெரியவில்லை என்று கூட வைத்துக் கொள்ளலாம், செந்தழல்ரவி சார் , கொஞ்சம் லோகோ தயாரித்து வால்பையனுக்கு அனுப்ப முடியுமா, ப்ளீஸ்?

6 comments:

  1. அவ்வ்வ்...

    நெட்ல தான் தேடி தரவேணும் :)..லக்கியிடம் கேட்டால் கிடைக்கலாமோ ?

    ReplyDelete
  2. எப்படியெல்லாம் தலைப்பை பிடிக்கிறாங்கப்பா!?! இப்படி ஒருத்தரை உசுப்பேத்தி உசுப்பேத்தியே..... ம்ம்... கலக்குங்க!!

    ReplyDelete
  3. தலைப்பு வைப்பதில் உங்களை மிஞ்ச முடியுமா, ஜெகநாதன்:-)

    வால்பையன் கூறியது...
    //மைனர் குஞ்ச தான் ஸ்ரீதர் சுட்டுபுட்டாரே!//
    இதில இருந்து ​பெறப்படும் நீதி(கள்): மைனர்குஞ்சுக்கு சாவே கிடையாது.. அல்லது ஸ்ரீதருக்குச் சுடவே தெரியாது!

    இப்படி உங்க பதிவுல நீங்க அடிச்ச சிக்சர் தான், இந்த விருது வழங்குவதற்கு மூல காரணமே! உங்களுக்கும் வேண்டுமானால், "நன்றாக உசுப்பேத்தி விடும் பதிவர்" விருது வால்பையன் ரசிகர் மன்றத்தின் சார்பாகக் கொடுத்து விட ஏற்பாடு செய்து விடுகிறேன்!

    போதுமா!

    ReplyDelete
  4. விருது koduththa, vaangiya iruvarukkum vaalththukkal.....

    ReplyDelete
  5. சார்! போட்டோ எங்க புடிச்சிங்க!
    அங்க வரவேயில்லைன்னு சொன்னிங்க!

    விருதுக்கு நன்றி!
    யாராவது லோகோ செஞ்சு கொடுங்கப்பா!

    ReplyDelete
  6. மதுரை வலைப் பதிவர்கள் கூட்டத்திற்கு நான் வர வேண்டும் என்று நினைத்து, ஆனால் வரவில்லை என்பது உண்மைதான்!

    இது வந்தவங்க, அவங்க வலைப்பக்கங்களில் ஏற்றியிருந்ததைச் சுட்டது!

    இப்ப நானே லோகோ தயார் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டேன்.லோகோ ரெடியானவுடன் சுடச் சுட அனுப்பிவைக்கிறேன்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!