தேர்தல் வினோதங்கள்! தெளிவாக முடிவெடுங்கள்!


தேர்தல் வினோதங்கள்,தேர்தல் கூத்துக்கள் என்று தொடர்ச்சியாக இந்திய ஜனநாயகம் தொடர்ந்து முதிர்ச்சி அடையாமலேயே இருப்பதைக் குறித்தும்,. முதிர்ச்சியடைய விடாமல் தடுப்பதில் இந்திய அரசியல்கட்சிகளுடைய பங்கைப் பற்றியும் இந்தபக்கங்களில்  பேசிக் கொண்டு இருக்கிறோம்.

நேரு முதல் அடுத்து வந்த தலைவர்கள் எவரும்,ஜனநாயக நெறி முறைகளைக் கட்டிக் காப்பாற்றவோ, ஜனங்களைத் தயார் செய்யவோ முனைந்ததே இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.ஜனநாயகம் என்பது இங்கே ஒரு கேலிக் கூத்தாகவே ஆரம்பித்து,கேணத்தனத்தின் உச்ச கட்டமாகவே வளர்ந்து கொண்டிருப்பது அதைவிடப் பெரும் கொடுமை.

ந்த வாக்குச்  சீட்டு என்பது என்ன, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் இன்றைக்கும் கூட ஜனங்களுக்கு ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதே இதற்கு சான்று.

து எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறதென்றால், ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசுகிற கட்சிகளுக்குள்ளேயே உட்கட்சி ஜனநாயகம் என்பதோ, கருத்துப் பரிமாற்றம், உறுப்பினர்களுடைய கருத்துக்கு  மதிப்புக் கொடுப்பது என்பதோ அறவே இல்லாமல் போனதுதான்! ஒரு தலைவரைப் பின் பற்றுகிறவர்கள் என்றால், அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் அடிமைகள் என்ற அளவிலேயே மாற்றமடைந்து கொண்டிருப்பதுதான் இங்கே பெரும்பாலான அரசியல் கட்சிகளுடைய யோக்கியதை!

நம்பிக்கை, விசுவாசம் என்பதற்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் இருப்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் இங்கே கட்சித்தலைவர்கள், தொண்டர்களுடைய யோக்கியதையும் இருக்கிறது.

இந்த வீடியோவைப்பாருங்கள்! இந்திய ஜனநாயகம், என்ன மாதிரித் தலைவர்களை உருவாக்குகிறது என்பதைப் பாருங்கள்!



சினிமாவில் கேப்டன் என்று அழைத்து விட்டார்களாம்! எவனோ போக்கத்த நாடி ஜோதிடன், உனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருகிற யோகம் இருக்கிறது என்று விட்ட பீலாவை நம்பி இந்த நபரும் அரசியல் களத்தில் குதித்துவிட்டார்! தனிக்கட்சி ஆயிற்று! அப்படி ஒன்றும் தெளிவாகப் பேசுகிற ஆளும் இல்லை!தெளிவான கொள்கை, பார்வை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை! ஆனாலும், ஜனங்களுடைய பலவீனத்தை நாடி பிடித்துத் தெரிந்து வைத்திருப்பதில், ஒரு எம் எல் ஏ ஆகவும் ஆகிவிட்டார். இரண்டு கழகங்களையும் பிடிக்காதவர்கள், ஏதோ ஒரு வேகத்தில் இந்த ஆளுக்கு வாக்கு அளித்துவிட, நாற்பத்தொரு சீட் கிடைத்த போதை இன்னும் தெளியவே இல்லை போல இருக்கிறது.


தினமணி  தலையங்கம்:  தேர்வல்ல, திணிப்பு!

First Published : 30 Mar 2011 02:26:15 AM IST


மிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்கள் மீதான எதிர்ப்பு முன்னெப்போதும் இல்லாதவகையில் பல இடங்களில் பல விதமாக வெளிப்பட்டது. இது எப்போதும் எல்லா தேர்தல்களின்போதும் நடப்பதுதான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அவ்வாறாக ஒதுக்கிவிடும் அளவுக்கு நீர்த்துப்போன எதிர்ப்புகளாக இவை இல்லை.

ழக்கமாக இத்தகைய எதிர்ப்புகள், வாய்ப்புக் கிடைக்காத ஒரு நபரின் தனிப்பட்ட கூக்குரலாக இருக்கும். அதுவும்கூட மெல்ல ஓய்ந்துபோகும். ஆனால், இந்தத் தேர்தலின்போது இத்தகைய எதிர்ப்புகள் போராட்டமாகவும், சில இடங்களில் வன்முறைக் களமாகவும் மாறியது. சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் மாறியது. தமிழ்நாட்டில் பரவலாக எல்லா தொகுதிகளிலும், எல்லா கட்சிகளிலும் இத்தகைய போக்கு காணப்படுகிறது.

.தி.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, கூட்டணிக் கட்சிகள் தங்கள் தொகுதிகள் பறிபோனதற்காக ஆலோசனை நடத்த திண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு முழுவதும் பல வேட்பாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. அ.தி.மு.க.வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வந்தபோது, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நபர்களில் சிலரது பெயர்கள் எடுக்கப்பட்டிருந்தன. எதிர்ப்புக்குப் பலன் இருந்தது.

.தி.மு.க. பட்டியலில் தூத்துக்குடி தொகுதியைப் பொறுத்தவரை மூன்று முறை வேட்பாளர் பெயர் மாறியது. இது வெறும் கட்சித் தலைமைக்கு ஏற்பட்ட குழப்பம் மட்டுமே அல்ல. கட்சித் தொண்டர்களின் கொதிப்பைக் கருத்தில் கொண்டதால் ஏற்பட்ட மாற்றம் என்றும் கருத இடம் இருக்கிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலும் அதிருப்திகள் இருந்தன. ஆனால், பட்டியல் மாற்றப்படவில்லை. அக்கட்சித் தொண்டர்களும் சில இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்து, குரல் எழுப்பியது எதிர்க்கட்சியின் தொலைக்காட்சிகளோடு முடிந்துபோயின. வழக்கமாக இந்த விவகாரங்கள் தொலை பேசியிலேயே சரிக்கட்டப்படும். இப்போது போட்டி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வது வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப் படையாக வேண்டுகோள் விடுத்து, அறிக்கை வெளியிடும் நிலைமை ஏற்பட்டது.

ச்சபட்சமான களேபரம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலின்போதுதான் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் உருவ பொம்மையை எரிக்கும் அளவுக்கு வெறுப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. மாற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய முடியாத படிக்கு என்னவெல்லாமோ நடந்தது.

ம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட இதில் விதிவிலக்கு அல்ல. ஒரு தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதைய எம்எல்ஏ களத்தில் இறங்கியதால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள். இருப்பினும் அவர் போட்டி வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார்.

கேரள மாநிலத்தில், முதல்வர் அச்சுதானந்தன் பெயரே வேட்பாளர் பட்டியலில் இல்லை. அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்திய பிறகுதான் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்கிற நிலைமை.

ம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி கழகங்கள் வரையிலும் கட்சித் தலைமைகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அப்பகுதித் தொண்டர்களின் தேர்வாக இல்லை. கட்சித் தலைமை அல்லது குழுவின் தேர்வாக இருக்கிறது. தலைமை அறிவித்தால் அவருக்காக அந்தப் பகுதியில் உள்ள தொண்டர்கள் வரவேற்றுப் பணியாற்ற வேண்டும் என்கிற மனப்பான்மைக்கு எதிரான குரல்தான் எதிர்ப்பு மனோபாவமும், போட்டி வேட்பாளர்களும்!

ட்சியில் தீவிரமாகப் பணியாற்றாத ஒருவரை வேட்பாளராக வலிய அறிவித்தால் எதிர்க்கிறார்கள். உள்ளூர் நபராக இல்லை என்றால் எதிர்க்கிறார்கள். மிகை பலம் படைத்த கட்சித் தொகுதியை கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்தால், நாங்கள் என்ன இலவு காத்த கிளிதானா என்று கேட்டு எதிர்க்கிறார்கள். இவை ஒருவகையில் ஆரோக்கியமான அரசியலுக்கு ஒரு வெள்ளோட்டம் எனலாம்.

ரு தொகுதியில், குறிப்பிட்ட கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் முதலில் அந்தத் தொகுதியில் உள்ள கட்சிக்காரர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் ஏற்படுமேயானால், ஒரு கட்சித் தலைமை தனது மனைவி, மகன், மைத்துனர், மாப்பிள்ளை, பேரன் என்று நெருங்கிய உறவினர்களுக்குத் திடீரென ஓர்இரவில் வாய்ப்புகளை வழங்கிவிட முடியாது அல்லது தலைமைக்கு நெருக்கமானவர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்து, பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்து விடவும் முடியாது. ஒருகட்சித் தலைமை தன்னிச்சையாக வேட்பாளரைத் தேர்வு செய்யும் போக்குக்குத் தடை ஏற்பட்டால் மட்டுமே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மெரிக்காவில் இத்தகைய உள்கட்சி ஜனநாயக முறை நடைமுறையில் இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்வில் ஒருவர் போட்டியிட்டால் முதலில் அவர் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்றால்தான், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதனால் அவர் தனக்கான செயல்திறன், சொந்தச் செல்வாக்கு இல்லாமல் பிறப்புரிமையால் பெறும் வாய்ப்பாக இருக்காது. அல்லது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என்பது அதிர்ஷ்டத்தால் அமையாது.

ந்திய அரசியல் கட்சிகளிலும் அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் உருவாகும் என்றால், உண்மையான அரசியல்வாதிகள் மட்டுமே களத்தில் எஞ்சி நிற்பார்கள். அவர்கள் கட்சிக்குள் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவைப் பெற்றவர்களாக இருப்பார்கள். உள்ளூர் கட்சித் தொண்டர்களுக்கே பிடிக்காத ஒரு நபரை மக்களிடம் திணிக்கும் ஜனநாயக வன்முறை நடக்காது.

ப்படித்தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் தலையங்கம் ஒரு யோசிக்கப்படவேண்டிய அம்சத்தை வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. தேர்தல் முறையில் இருக்கும் குழப்பங்களை, அரசியல் கட்சிகளில் செய்யவேண்டிய களையெடுப்பை,படிப்படியாக ஜனங்களாகிய நாமே செய்ய முடியும்! வலியுறுத்த முடியும்!

இந்தப்பதிவில்
நண்பர் சிவா ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

\\
திமுக அதிமுகவை விட இந்தமாதிரி நேற்று முளைத்த காளான்களை அப்புறப்படுத்துவது எளிது, உடனே செய்யப்படவேண்டியதும் கூட! \\
எப்படி அப்புறப்படுத்துவது, கூப்பிட்டு 41 சீட்டு கொடுக்கறாங்க..சரி இது போன்ற காளான்களால் வரும் ஆபத்தை அப்புறம் பார்ப்போம்.
திமுக,அதிமுக என வளர்ந்த சுயநல அரசியல் பண்ணும் விஷ விருட்சங்களை எப்படித்தான் அழிப்பது அல்லது அடக்குவது?

அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு சேவைஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))

அங்கே சொன்ன பதில் இது.

மிகவும் எளிது சிவா! ஸ்டெப் பை ஸ்டெப்பாகத் தான் இப்போதுள்ள தேர்தல் முறையில், இதை செய்ய முடியும்!

கொஞ்சம் பொறுமை, ஒரு தெளிவான பார்வை இருந்தால், இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே, இந்த விஷ விருட்சங்களை வேரோடு சாய்க்கலாம்.

Process of elimination! ஒரு மருத்துவர் கையாளுகிற மாதிரித் தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஒரு மனிதனுக்கு வியாதி! ஒரே நேரத்தில், மூன்று நான்கு கோளாறுகள். தேர்ந்த மருத்துவன் செய்வது ஒரே நேரத்தில் அத்தனை கோளாறுக்கும் மருந்து கொடுப்பதல்ல. இருப்பதிலேயே அதிகமான கோளாறுக்கு மருந்து, நோய் எதிர்ப்புச் சக்தி பெறக் கொஞ்சம் டானிக் மாதிரி வைத்தியம். பிரதானமான கோளாறை குணப்படுத்திவிட்டால், மிச்சமிருப்பதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மாதிரி மருத்துவம் இருக்கும்.

இப்போது அகற்றப்பட வேண்டிய பிரதானமான விஷ விருட்சம் எது என்று நினைக்கிறீர்கள்? என் பார்வையில், திமுக, அதிமுக இரண்டுமே இல்லை! அது காங்கிரஸ் தான்! இந்த நாட்டில், ஜனநாயக நெறிமுறைகளைக் குழிதோண்டிப் புதைத்து, ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது காங்கிரஸ் தான்.ஆக, முதலில் அகற்றப்பட வேண்டியது காங்கிரஸ் தான்!

காங்கிரஸ், இங்கே தமிழக சட்ட மன்றத் தேர்தல்களில் பிரதானம் இல்லையே என்கிறீர்களா? காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்! இப்போது ஒரு வழி கிடைப்பது தெரிகிறதா? இதை செய்கிற அதே நேரம், களையெடுக்கும் வேலையும் தொடங்குகிறது! பாமக, தேதிமுக, விசி, ஜாதிக்கொரு சங்கம் என்பதுபோய், அதிலும் ஏகப்பட்ட பிரிவுகள் இவை அத்தனையையும் ஆரம்ப நிலையிலேயே கில்லி எறிவது தான் அது! விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டதை முற்றிலும் வெட்ட நாளாகலாம்!ஆனால், விஷ விருட்சங்களை வெட்டவே விடாமல் அதைப் பாதுகாத்து நிற்கும் சந்தர்ப்பவாதக் காளான்களை அகற்றுவதில் என்ன தடை, தயக்கம் இருக்க முடியும்?

அடுத்து முக்கியமான உங்கள் சந்தேகம்....!

//
அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு சேவைஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))//

ஸ்மைலி போட்டுக் கேட்டாலும், இல்லை என்பதுதான் என்னுடைய பதில். இவர்கள் இதுவரை என்ன சேவை செய்து கிழித்துவிட்டார்கள்?

வாக்களிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட!
வாக்களிப்பது எவருக்கு என்பதில் தெளிவாக இருங்கள்!
வாக்குகள் விற்பனைக்கல்ல! தன்மானத்தை ஒருபோதும் விற்கமாட்டோம்!

ஒரு நல்ல மாற்றம் வர வேண்டுமானால்.......!

காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள்!

விஜயகாந்த், விசி, பாமக, சாதிக்கு நாலாக முளைத்திருக்கிற சங்கங்கள், கட்சிகள்   போன்ற ஒட்டுண்ணிகள், காளான்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்!



 

2011 தேர்தல் களம்:மாற்றத்துக்குத் தயாராகுமா தமிழ்நாடு?


தினமணி தலையங்கம்:என்ன உறவோ, என்ன பிரிவோ!

First Published : 29 Mar 2011 04:19:48 AM IST



ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஆளும்கட்சியும் எதிர்க் கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பதுதான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

மக்கள்தொகையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இல்லாத நிலையில் வாழும் நாட்டில், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் மட்டுமே பயனடையும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு கடைப்பிடிக்குமேயானால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துத் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருவேறு பொருளாதாரக் கொள்கைகளை உடையவையாக இருந்தால் மட்டுமே தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்.
 

 இந்தியாவில் 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகளை அகற்றி சுலபமாக அந்நிய முதலீட்டுக்கும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தவும் முனைந்தது. அன்றுமுதல் பல விபரீதங்கள் இங்கே அரங்கேறி வருகின்றன. முறைகேடுகளுக்கும், மெகா ஊழல்களுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சர்வசாதாரணமாக சில நிறுவனங்களும் தனி நபர்களும் கொள்ளையடித்துக் கொள்வதற்குத்தான் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உதவி இருக்கின்றன என்கிற அச்சமும் சந்தேகமும் ஏற்படுகின்றன.

 காங்கிரஸ், ஐக்கிய கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஆட்சிகள் மாறினவே தவிர, காட்சிகள் மாறவில்லை. ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி சமீபத்திய "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வரை இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்திருக்கும் ஊழல்களின் மொத்த மதிப்பு, இந்தியாவின் ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வரவை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் இங்கே நடக்கக் கூடாததெல்லாம் நடக்கிறது. எந்தவிதக் கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் மக்கள் வரிப்பணமும் தேசத்தின் வளங்களும் கொள்ளை போகின்றனவோ என்கின்ற அச்சம் எழுகிறது.

அவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் ஒரு கபட நாடகம், ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படாமல், மக்கள் மன்றத்தின் கவனத்தைக் கவராமல் காதும்காதும் வைத்ததுபோல அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக எல்லாத் தளங்களிலும் நெருக்குதல் கொடுக்கும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஒரு மிகப்பெரிய தர்ம சங்கடத்திலிருந்து அரசுக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது. ஆனால், நடந்திருப்பது அதுதான்.

சில ஆண்டுகளாகவே, குறிப்பாக, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தே எப்படியாவது ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா பிரச்னைக்கு ரியதாகத் தொடர்ந்து வருகிறது. அதாவது, தன்னிடம் இருக்கும் ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறது அரசு. அப்படிச் செய்தால் பல கோடி தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்காகப் பங்களிப்பாக நல்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து விளையாடிவிடக் கூடும் என்கிற நியாயமான அச்சம் எழத்தானே செய்யும்.

வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததும், அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்கள் போட்ட முதலை இழந்த சரித்திரத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்கிற விபரீத யோசனை ஏற்கப்பட்டால், பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பினாமி நிறுவனங்களின் பங்குகளில் அது முதலீடு செய்யப்பட்டு கபளீகரம் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி தவறுகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்கிறோம் என்று இதற்கு அரசு பதில் அளிக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் ""டிராய்'' ஒழுங்காற்று ஆணையம் இருந்தும் "ஸ்பெக்ட்ரம்' என்கிற பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கவில்லையா என்று பதில் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் அந்த மசோதாவை நிறைவேற்றப் போதுமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கவில்லை. நிலைமையைச் சட்டெனப் புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் பட்டாச்சார்யா, மசோதாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவைத்தலைவரின் அனுமதியும் பெற்றுவிட்டார்.

எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்க வேண்டும்?

மசோதாவைத் தோற்கடிப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடாதுதான். ஆனால், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைவது தடுக்கப்படாவிட்டாலும் அந்த முயற்சி ஒத்திவைக்கப்படும். யார் யாரிடம் பேசினார்களோ, யார் யாருக்கு வழிகாட்டினார்களோ தெரியாது, அரசுக்கு ஆதரவாகப் பிரதான எதிர்க்கட்சி வாக்களித்து, மன்மோகன் சிங் அரசைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. உடனடியாக மசோதா சட்டமாக்கப்பட்டுவிடாது என்றாலும், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதால், இனி சட்டமாக்குவது எளிதுதானே.

இதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்!

சென்ற பதிவில் ஒரு பட்டதாரிப் பள்ளி ஆசிரியர், ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார், "நீ எழுதியிருக்கிறது ஏதாவது உனக்கே புரியுதா?" இங்கே படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிற பகுதிக்கே, சாதாரணமான விஷயங்களைக் கடப் புரிய வைக்கப் படாத பாடுபடவேண்டியிருக்கிற அவலத்தை இந்த பள்ளி வாத்தியார் மேம்போக்காக பதிவை மேய்ந்து விட்டு எழுப்பியிருந்த இந்தக் கேள்வி காட்டுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது இன்று இணையத்தில் காலையில் படித்த இன்றைய தினமணி நாளிதழ் தலையங்கமுமே கூட, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கிற விதமாக இருந்ததில் அதிக ஆச்சரியம் ஏற்படவில்லை.

நம்மில் பெரும்பாலானோர் பலவிஷயங்களில் பலதருணங்களில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்! இப்போது தினமணி தலையங்கத்தில் சொல்லியிருக்கிற விஷயம்.............!

ஆளும் கட்சியாக இருப்பவர்களும், எதிர்க்கட்சியாக இருப்பவர்களும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கைகள், கோட்பாடுகள், அரசீயல் நிலைபாடுகள் இருக்கக் கூடாது என்று ஆரம்பிக்கிற இந்தத்  தலையங்கம், அப்படி இருந்தால் மட்டுமே "தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்" என்று முத்தாய்ப்பாகச்சொல்கிறது பாருங்கள், அங்கேதான் ஒரு அடிப்படையான கோளாறு இருப்பது தெரிகிறதா?.இப்போது நாம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிற பல சீரழிவிற்குக் காரணமாகவும் இந்தக் கோளாறு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

நேரு சோஷலிசம் பேசினார். ஆனால் அது அல்நாஷர் கதையில் வருகிற வெறும் பகற்கனவாக மட்டுமே இருந்தது.அவருக்குப் பின்னால்,சொற்பகாலமே பதவியில் இருந்தாலும்,ஒரு அடிப்படை மாற்றத்தை செயலில் காண்பித்த பிரதமராக லால்பஹதூர் சாஸ்திரி இருந்தார் என்பதையே நமக்கு நினைவு படுத்திக் கொண்டாக வேண்டிய தருணம் இது. சாஸ்திரியும் காங்கிரஸ் காரர்தான்! நேரு மாதிரியே, அவரும் சோஷலிசம் என்பதை ஏற்றுக் கொண்டவர்தான்! ஆனால், நேருவிடம் இல்லாத அசாத்தியத் துணிச்சல்,முதுகெலும்பு அவரிடம் இருந்தது. வெறும் வார்த்தைகளில் சோஷலிசம் பேசிக் கொண்டிருக்காமல், நடை முறைக்கு எது உதவும் என்பதில் ஒரு தெளிவு இருந்தது.

நேருவைச் சீனப் பூச்சாண்டி பயமுறுத்தியது போல சாஸ்திரியை பயமுறுத்தவில்லை! 1965 இந்திய பாகிஸ்தானியப் போரில் ஒரு  தெளிவான துணிச்சலான அரசியல் முடிவை சாஸ்திரி எடுத்தார், ஜெயித்தார்! சீனா, போரில் தலையிடுகிறவிதத்தில் பயமுறுத்திய போது அதற்கும் பதிலடி கொடுக்கிற விதத்தில் நிமிர்ந்து நின்றார்! சீனப் பூச்சாண்டி எடுபடவில்லை! சாஸ்திரி, நேரு, தலைமைப் பண்பு  என்ற குறியீட்டுச் சொற்களில் இந்தப் பக்கங்களில் தேடிப் பாருங்கள், நேற்றைய வரலாறு கொஞ்சம் பேசப் பட்டிருப்பதைப் படிக்கலாம்.

இந்த தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தவர்கள். ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற சாஸ்திரியின் முழக்கம், பசுமைப் புரட்சிக்கு முன்னோட்டமாக இருந்தது என்பதையும் இன்றைக்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பதாலேயே எப்போதுமே அடித்துக் கொள்கிற கட்சிகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையையே தினமணி தலையங்கம் மறந்துவிட்டுப் பேசுகிற மாதிரித்தான் எனக்குப் படுகிறது. ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிக்கு ஒரு பொறுப்பான இடம், அங்கம் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் சீரழித்து ஊழல்மயமாக்கிய இந்திய அரசியலில், எதிர்க்கட்சி என்றால் எதிரிக் கட்சி, கொள்ளையில் மறைமுகக் கூட்டாளி என்ற மாதிரியாகிப் போனது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்தத்தலையங்கம் பேசுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

நேருவிடம் ஆயிரம் குறைகள் காண முடிந்தாலும், சில நல்ல அரசியல்ப
ண்
பாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். உதாரணமாக, வேண்டாத மருமகன் "பெரோஸ் காண்டி" (இந்திராவின் காதல் கணவர்!) நேருவை எரிச்சலூட்டுவதற்காகவே சில விஷயங்களைப் நாடாளுமன்றத்தில் பேசினாலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பிரசுரிப்பதில், விமரிசிப்பதில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர் கொண்டுவந்த திருத்தம், பெரோஸ் காண்டி திருத்தம் என்றே அழைக்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஒரு உதாரணத்துக்கு சொல்ல முடியும்.ஆனால், அரசியல் நெறிகள், நாடாளுமன்ற நடைமுறைகள், மரபுகள், பத்திரிக்கை சுதந்திரம், நீதித்துறையில் குறுக்கீடு, ஜனாதிபதி பதவியை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மட்டுமே பயன்படுத்தியது என்று வரிசையாக அரசியல் சீரழிவுகள், ஊழல்கனின் ஊற்றுக்கண்ணாகவே இந்திராகாந்தி இருந்தார், அவரது வாரிசுகளும்அவரை மிஞ்சுகிற விதத்தில்தான் இருக்கிறார்கள் என்பது இந்தப்பக்கங்களில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற விஷயம்.

இந்த தேசத்தின் விடிவுகாலம், காங்கிரசைத்தூக்கி எறிவதில்தான் இருக்கிறது!அப்படியானால், அதற்கு  மாற்று, பாரதீய ஜனதா கட்சிதான் என்று சொல்வதாக அர்த்தமில்லை. காங்கிரஸ் கட்சி அறுபதாண்டுகளில் அடைந்த சீரழிவை, பிஜேபி ஒரே ஒருதரம் ஆளும் கட்சியாக இருந்தபோதே கெட்டுச் சீரழிந்துவிட்டது என்பதைத்தான், தினமணித் தலையங்கத்தில் எப்படி இவர்கள் மறைமுகமாகக் கூட்டாளிகளாகிக் கொள்வார்கள் என்று காட்டுவதாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்!

இப்போதிருக்கும் தேர்தல் முறை அயோக்கியர்களுக்குமட்டுமே சாதகமானது. இதை சொல்வதில் எந்தத்தயக்கமும் எனக்கில்லை. இப்போது, உடனடித்தேவை தேர்தல் சீர்திருத்தங்கள் தான்!ஆனால், எல்லா அமைப்புக்களையும் ஊழல்மயப் படுத்தியிருக்கும் அரசியல் கட்சிகள் விடுவார்களா என்ன? எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்கக் கூட வழியில்லை, ஆனால், ஏதோ ஒரு கொள்ளியைவைத்துத் தலையைச் சொறிந்துகொள்கிற மாதிரியான சுதந்திரம் மட்டுமே இருக்கிறது.

அதனால் தான் கொழுந்துவிட்டு எரியும் கொள்ளியை விட்டு, கொஞ்சம் குறைந்துபோன கொள்ளியாக ஒருவித சாமர்த்தியம் லாவகத்தோடு நம்மைத் தொல்லைப்படுத்தவே அவதாரம் அரிதாரம் எடுத்திருப்பவர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியிருக்கிறது.


காங்கிரசையும், அதன் கூட்டாளிகளையும் வருகிற தேர்தலில் புறக்கணிப்பது முதல் வேலை!

என்ன சொல்கிறீர்கள்?கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!